Thursday, October 22, 2015

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 7

இயற்கை….



என் உணர்வினில் உதிக்கும்
கவிதைகளுக்கு  உயிரூட்டவே 
முதலில் என் கண்களுக்கு
"நீ"  தினசரி  உணவாகிறாய்..!





பரிசுகள்.....



இளமையில் வறுமையும், 
முதுமையில் தனிமையும், 
பாபத்தின் பாரபட்சமற்ற
பரிவான பரிசுகள்..


ஆறுதல்....




ஆண்டவனும் அவன் ஆறுதலும்,
ஆண்டுகள் எத்தனை மாறினும்,
எழுதுகோலும் அதன் மசியும் போல
உடன் பிறந்த சகோதரர்கள்ஆவார்கள்.



பொம்மலாட்டம்....





பொய்யும், மெய்யும் கலந்த நூல்களினால்,
எதிரில் வாழும் பிறரை கவர்ந்திழுக்கும்படி,
ஒவ்வொருவரையும், ஒரு பொம்மைகளாக்கி,
இறைவன் தினந்தினம் ஆடும் ஆட்டமாகும்.


வாழ்க்கைச் சிறப்பு....





தன்னை தானே இகழாமல் நேசித்து,
தன்னைப்போல், பிறரையும் பார்த்தறிந்து
தன்னடக்கம் என்றும் மறவாதிருந்தால்.
தானாகவே நம்மை வந்து சரணடைவது..


படங்கள்: நன்றி கூகுள்


இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்

பகுதிகள் – 123456