முந்தைய பகுதியின் முடிவு…
பிரபாகர் கற்சிலையாய் உறைந்து
போயிருந்திருந்தான். தன் மனதில் உள்ளதை சொல்லி அவள் மனதை மாற்றி இந்த திருமணத்தை
நிறுத்திவிடும்படி அவளைக்கொண்டு செய்து விட வேண்டுமென்று, நினைத்துக்கொண்டு
வந்தவனை, தன் மனதில்
உள்ளதை சொல்ல விடாமல், அவள் நினைத்ததை எல்லாம் ௬றி விட்ட மகிழ்ச்சியில், “எந்த
முடிவுக்கும் கட்டுப்படுகிறேன்”, என்பதாய் சொல்லி சந்தோசமாய் திரும்பிச் சென்ற
அவளை போன்ற ஒரு அதிசயமான பெண்ணை சந்தித்த ஆச்சரியத்தில் திக்குமுக்காடி
அமர்ந்திருந்தான்.
இன்றைய தொடர்ச்சி..
“அருணா! நீ என்ன
சொல்றே!” அலுவலக
காண்டின் என்பதையும் மறந்து, பதைபதைத்தபடி கேட்டான் பிராபகர்.
“ஆமாம்! பிரபா!
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்! என்றாள் அருணா லேசாக கண்கலங்கியபடி.
“நீ நம்
காதலைப்பற்றி ௬றி தடுத்திருக்கலாமே! ஏன் சொல்லல்லே?..
“பிரபா!
உங்களுக்கு என் வீட்டு சூழல் தெரியாதது மாதிரி பேசாதீங்க! அப்பாவுக்கு போன தடவை
ஹார்ட் அட்டாக் வந்த உடனே, டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா? எந்த
அதிர்ச்சியையும், அவர் இதயம் இனி தாங்காது! பக்குவமாக சொல்லும்
எந்த ஒரு விசயத்தையுமே இதை கருத்தில் கொண்டு சொல்லவேண்டும் என்றார். அதை மறந்து
நான் எப்படி சடாரென்று என் விருப்பத்தைச் சொல்லுவேன்.!!”எனக்கு அப்பறம்
என் இரண்டு தங்கைகளின் வாழ்க்கையை நினைச்சு பாக்காமே, “நான் ஒருத்தரை
விரும்புறேன், அவரை கல்யாணம் செஞ்சுகிட்டு என் வாழ்க்கையை நான் வாழப் போறேன்”ன்னு எப்படி
பிடிவாதமா சொல்லி அவர் எனக்கு பார்க்கும்
பையனை பார்க்க வரக்௬டாது”ன்னு சொல்லுவேன்..? அந்த நொடியை என் அப்பா தாங்குவாரா..? அப்பாவுக்கு
ஏதாச்சும் ஆயிடுச்சின்னா என் அம்மா நிலைமை..!? நானும் உங்களை மாதிரி குடும்பத்திலே, இருக்குறவங்க
மேலே உள்ள பாசத்தினாலே ஒன்னும் சொல்ல முடியாமே, அதனாலே வீட்டிலே பண்ணற ஏற்பாட்டை தடுக்க முடியாமே
தவிக்கிறேன் பிரபா! நீங்க உங்க வீட்டுலே பேசி சம்மதம் வாங்கி உங்க வீட்டு
பெரியவங்க எங்க வீட்டுலே வந்து பேசினாதான் உண்டு.! நானா எங்க வீட்டுலே சம்மதிக்க
செய்றது சிரமமான காரியம்”ன்னு உங்களுக்கு தெரியாதா..? பொதுவிடம் என்பதினால் நிதானமாக மெதுவான குரலில்
௬றினாலும் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவாள் என அவள் முகம் உறுதிபடுத்தியது.
“அருணா! உனக்கு
மட்டுந்தான் பிரச்சனையா? கடந்த ஒரு மாதமாக எங்க வீட்டு பிரச்சனையையும், உன்னிடம்
சொன்னால், நீ வருத்தப்
படுவாயே என்று சொல்லாமலே, சரி செய்து விட்டு உன்னிடம் சொல்லலாம் என்று என்
மனதிற்குள் வைத்து புழுங்கி தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?” என்று
ஆரம்பித்தவன் முன்தினம் சங்கவியை சந்தித்து பேசியது வரை சுருக்கமாகச் சொன்னான்.
“இவ்வளவு
நடந்திருக்கிறதே பிரபா! ஏன் எங்கிட்டே எதுவுமே சொல்லலே! என்ற அருணா தன் துக்கத்தை
மறந்தவளாய், அவன் மேல் பச்சாதாபம் மிகையாக, “பிரபா என்கிட்ட ௬ட எதுவும் சொல்லாமே எப்படித்தான்
இத்தனை நாள் தாங்கினிங்களோ என்றாள் வருத்தமான குரலுடன்.
“சொல்லியிருந்தா
நீ என்ன பண்ணுவே? உன் அப்பாவை பத்தின கவலையோடு இதுக்கும்
சேர்ந்து கவலைபட்டிருப்பே! நானே
எப்படியாவது சமாளிச்சுட்டு உன்கிட்டே சொல்லலாம்”ன்னு நினைச்சேன். ஆனா, விசயம்
நாளுக்குநாள் முத்திகிட்டே போறது! ஆனா நேத்து அவங்ககிட்டே பேசின பிறகு ஒரு
நம்பிக்கை வந்திருக்கு! நம்ம விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது”ன்னு, தோண்றது!..
என்றான் பிரபாகர் குரலில் சிறிது நம்பிக்கையுடன்.
“ஆனா! உங்க
வீட்டு பணப்பிரச்சனை! உங்க அண்ணா வேலை! இதை காரணம் காட்டி உங்க வீட்டிலே, உங்களை
கட்டாயபடுத்த மாட்டாங்களா..?” மீண்டும் குரலில் சுரத்தில்லாமல் கேட்டாள் அருணா.
“அதுக்குதான்
அவங்க அதான் சங்கவி, ஒரு தீர்வு சொன்னாங்களே! அவங்க பேச்சுலே எனக்கு
நம்பிக்கை இருக்கு! நீ நாளைக்கு உன்னை பெண் பார்க்க வர்றதை தடுக்க வேண்டாம்.! உன்
அப்பாவுக்கும் மனசு தாங்காது! அதே சமயம் வர்ற பையனிடம் தனியாய் பேசி பக்குவமாய்
நம் காதலைப்பற்றி சொல்லி, மேற் கொண்டு பேச்சை வளர விடாமல் எப்படியாவது
தடுத்து விடு! நாளை மறுநாள் நாமிருவருமே சங்கவியை மறுபடி ஒரிடத்தில் வரச்சொல்லி
சந்தித்து நம் காதலை, நம் நிலைமையை, விரிவாகக்௬றி, அவர்களின் சம்மதத்தோடு என் வீட்டின்
பிரச்சனையையும் சரி செய்து, அதன்பின் நம்முடைய வீட்டிலும் நம்
விருப்பத்தைச்சொல்லி சமாளிக்கலாம்…! என்றான் பிராபகர். அப்போதே எல்லாம் முடிந்து
விட்ட நிம்மதியுடன்.
“பிரபா! ஆனா
அவங்க பாவம் இல்லையா”? எத்தனை நம்பிக்கையுடன் உங்களுக்கு சமாதானம்
சொன்னாலும், அவங்க அப்பா அம்மாவின் ஆசைகளுக்காக, சந்தோசத்திற்காக திருப்திக்காக, சம்மதித்திருந்தாலும், அவங்களும் ஒரு
பெண்தானே..! பிரபா, ஒரு பெண்ணோட கனவுகளை சிதைச்சு அதுலே கோட்டை கட்டி
நாம வாழ நினைக்கிறது பெரிய தப்பில்லையா..? “பெண் பாவம் பொல்லாதது” என்பார்கள்.!
அவங்களும்,ஒருத்தரை கல்யாணம் செஞ்சுகிட்டு நாம நல்லா வாழனும்தானே, நினைச்சிருப்பாங்க!
இதுக்கு அவங்க மனப்பூர்வமா சம்மதிப்பாங்களா…? என்று உணர்ச்சியுடன் பேசிக்கொண்டு போனவளை
இடைமறித்தான் பிரபாகர்.
“என்ன நீ..! விட்டா அவங்களையே கல்யாணம்
பண்ணிக்கிங்க”ன்னு சொல்லுவே போலிருக்கே..! அப்படி எங்க வீட்டு நிர்பந்தத்திலேயோ, அவங்க மனசை
எப்படி காயபடுத்துறதுன்னு அவங்களை கல்யாணம் செஞ்சிகிட்டா, நீ
பாவமில்லியா..? உன் பாவம் மட்டும் எங்களை சும்மா விட்டுடுமா..?” கேலியாக கேட்டாலும், சற்று கோபமான
குரலில் கேட்டான் பிரபாகர்.
ஒருநிமிடம் மெளனித்தவள், பிரபா நான்
சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்காத பட்சத்திலே ஒன்னு சொல்லவா? இப்ப இருக்கிற
நிலமையிலே, “நீங்க சொன்ன மாதிரி அப்படியே செஞ்சுகிட்டாலும், தப்பில்லை”ன்னு எனக்கு தோணுது..!”
“ஏய்…! என்ன
விளையாடுறியா..? எப்படி இந்த மாதிரியெல்லாம் உனக்குத் தோணுது..? இப்போது உண்மையிலேயே கோபப்பட்டான் பிராபகர்.
தொடரும்…
ஆஹா கதை திசை மாறிப்போகுதே.... ஏன் இப்படி டென்ஷன் ஆக்குறீங்க உடனே முடிவைச் சொல்லுங்களேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
திசை மாறினாலும் இந்தக்கதை இன்னும் சில பகுதிகளில் முடிந்து விடும். தங்களின் ஆலோசனைபடிதான் மொத்தக்கதை வெளிவராமல், பகுதிகளாக இடம் பெறுகிறது. டென்ஷனோடு படிப்பதற்கு நன்றி சகோதரரே. சற்றே இடை( வெளி ) வேளை விட்டுத் தொடர்கிறேன்..
தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு வாழ்த்த வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ம்...... அடுத்த திசைக்குத் திரும்புகிறது கதை... தொடர்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
திசை மாறிய பறவைகளாக கதைக்கே போரடித்ததால் அடுத்த திசையில் கதை நகர்கிறது. (அப்படின்னா எங்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும். ? என நீங்களனைவரும் கேட்பதற்கு முன்,ஒரு சிறிய இடைவேளை விட்டு நாளை தொடர்ந்து சில பகுதிகளில் முடித்து விடுகிறேன்.)
தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு வாழ்த்த வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மெகா தொடர் போலவா...? ஹிஹி...
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
\\ மெகா தொடர் போலவா...? //
தங்களுக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டதென நினைக்கிறேன்.
மெகா, போர் இரண்டும் ஒரே அர்த்தந்தானே.! ஒரு இடைவேளை யின் முடிவில் தொடர்ந்து, கதையின் பாதி சில நாட்களில் முடிவைக் காணும்.
மறுபடியும், தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு வாழ்த்த வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சூப்பர், மாறும் என்று நினைத்தேன், பார்ப்போம்.
ReplyDeleteசூப்பர், மாறும் என்று நினைத்தேன், பார்ப்போம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
முதலில் பாராட்டிற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி . மாறும் எனறு நினைத்த தங்கள் நம்பிக்கை பொய்க்காது.
எப்படியும் தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு வாழ்த்த வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.