Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏. 

53 comments:

  1. கிருஷ்ணர் நிஜமாகவே பேசினாரா என்கிற உணர்வு வர எழுதி இருக்கிறீர்கள்.  படங்கள் பிரமாதம்.  பட்சணங்கள் அமர்க்களப்பப்படுத்தி இருக்கிறீர்கள்.  அருமை.  உங்களுக்கும் கிருஷ்ணனுக்குமான உரையாடல் பிரமாதம்.   ஆமாம்...   அவன்தானே "மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடிகொடிகளை நானே"  என்கிறான்!  சொன்னவன், சொல்பவன், கேட்பவன், செய்பவன் எல்லாம் தானே என்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம்... நீங்க சொன்னதைச் சொன்னது கண்ணதாசன் அங்கிளாச்சே... கண்ணன் சொல்லலியே

      Delete
    2. கண்ணன் சொன்னதா தாசன் சொல்லியிருக்கார்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      கண்ணனுக்கும், எனக்குமான நடந்த உரையாடலை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      /சொன்னவன், சொல்பவன், கேட்பவன், செய்பவன் எல்லாம் தானே என்கிறான்./
      உண்மை.. அவன்தான் சர்வ இடங்களிலும் வியாபித்து இருப்பவன் ஆயிற்றே...! அதிலென்ன சந்தேகம்..!

      அன்புடன் தந்த கருத்துக்கும் வாழ்த்துக்களும். பாராட்டுக்கும் மனமுவந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      கண்ணன் மக்களின் மனதிற்குள் இருப்பது உண்மை யெனில், கவிஞர் கண்ணதாசனை அவ்வாறு சொல்ல வைத்ததும் கண்ணன்தானே..! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கிருஷ்ணர் பிறந்தவுடனே வசுதேவருக்கும், தேவகிக்கும் மட்டும் உண்மையான உருவில் காட்சி அளித்து அடுத்துச் செய்ய வேண்டியதைச் சொன்னாராம். அது போல் உங்களிடமும் வந்து பேசி இருக்கிறாரே! உண்மையிலேயே கிருஷ்ணர் வந்து இதைச் சொல்லி இருப்பதால் தான் நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள். அத்ருஷ்டம் தான் உங்களுக்கு! பக்ஷணங்களும் பார்க்க அழகாகவே இருப்பதால் ருசிக்கவும் நன்றாகவே இருந்திருக்க வேண்டும். தாமதமானால் என்ன? எப்போக் கொடுத்தாலும் பிடித்ததைச் சாப்பிடலாமே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உடனடி வருகை தந்து பதிவை ரசித்துப்படித்து கருத்துக்கள் தந்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /கிருஷ்ணர் வந்து இதைச் சொல்லி இருப்பதால் தான் நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள். /

      உண்மைதான்.. நேற்று இரவு எட்டு மணிவரை இந்தப்பதிவை எழுதும் எண்ணமே தோன்றவில்லை. தினமும் கிருஷணரை பார்க்கும் போதெல்லாம் எழுத வேண்டுமென நினைப்பேன். பிறகு நான் எடுத்த படங்கள் ஏதும் அவ்வளவாக சரியில்லை.இந்த வருடம் செய்த பட்சணங்களும் அவ்வளவாக சரியாக வரவில்லை.. (காரணம் மனதில் அமைதியில்லை) இதைப் போய் சிலாகித்து எப்படி எழுதுவது என்ற தளர்ச்சி வந்து விடும். ஆனால் நேற்று ஒரு தீடிரென எழுந்த ஒரு அவா.. இரவு பதினொன்று மணிக்குள் பதிவெழுதி தேர்வு செய்து படங்களையும் இணைத்து விட்ச் செய்தது. அது நானல்ல..! கண்டிப்பாக அவனருள் தான்..! அவன்தான் என்னை ஊக்குவித்து இந்தப்பதிவை எழுத வைத்து உங்களுக்கு காண்பித்தான். இது ஒரு அற்புதமான இறைசக்தி.. எல்லாப் பாராட்டுகளும் கிருஷ்ணருக்குத்தான்..நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எங்க அம்மா வீட்டில் அவலைக் களைந்து அத்துடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய்ப் பொடி சேர்த்துத் தான் வைப்போம். சாப்பிடுகிறாப்போல் இருக்கணும் என்பார்கள். அதோடு பெரியவங்க அன்றிரவு விரதம் முடித்து சாப்பிடும் உணவாகவும் அது இருக்கும். ஆனால் மாமியார் வீட்டில் அவலையும், வெல்லத்தையும் இங்கே நீங்க வைத்திருக்கிறாப்போல் தான் வைக்கணும் என்று சொல்லிவிட்டார்கள். கல்யாணம் ஆனதும் முதல் கிருஷ்ண ஜயந்தியில் அவலைக் களைந்து வைத்து விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். :))))) இது கிருஷ்ணனுக்கு நெஞ்சை அடைக்காதோ? எப்படிச் சாப்பிடுவான் என்று நினைத்துக் கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. கீதா சாம்பசிவம் மேடம்... கண்ணன் சிறுவன் தானே... முதலில் எல்லாப் பட்சணங்களையும் சாப்பிட்டுவிட்டு பாயசத்தைக் குடிப்பான்.

      அவலையும் வெல்லத்தையும் துணியில் முடிந்து வைத்துக்கொள்வான். பிறகு திரும்பவும் இனிப்பு சாப்பிடணும்னு ஆசை வரும்போது, அவலைக் களைந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவான். அப்போது பட்சணங்கள் கிடைக்காதில்லையா?

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் அவலை ஊறவைத்து வெல்ல அவலாக செய்து எப்போதும் வைப்பேன். சிலசமயும் இந்தமாதிரி. இந்த தடவை ஆன்லைனில் வாங்கிய வெல்லம் ஒரே கறுப்புக்கலர். வேறு டக்கென்று வாங்கவும் இயலவில்லை அதனால் வெல்லச்சீடைகளும் கொஞ்சம் கறுப்பு கலராக வந்து விட்டது. எல்லாமே சாஸ்த்திரத்திற்குதான் பண்ணினேன். (இந்த தொற்றினால் அடிக்கடி கடைகளுக்கு முன்பு போய் வர முடியவேயில்லை.) அதே போல் மாவும் மடியாக வீட்டிலேயே தயார் செய்துதான் பட்சணம் செய்வேன். இந்த தடவை பாக்கெட் அரிசி மாவுதான். அதனால்தான் அவைகளை பதிவில் வெளியிட யோசனை செய்தேன்.ஆனால் கிருஷ்ணனே வெளிப்படுத்தி விட்டான்.

      பொதுவாக அவலை நனைத்தால்தான் மடி.. உங்கள் மாமியார் வீட்டில் ஏன் அப்படி செய்ய விடவில்லையென வியப்பு வருகிறது.

      நான் வீட்டு பூஜை செய்த பின் ஸவாமிக்கு பால் கூட சூடாக நேவேத்தியம் செய்ய மாட்டேன். அவனுக்கும் பொறுக்கும் சூட்டில்தான் ஆற்றி வைப்பேன். அவனுக்கும் வாய் சூடினால் பொசுக்குமில்லையா?

      தங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. கிராமத்தில் இருந்தவரை அவல் மாமியார் வீட்டிலேயே இடித்து ஏற்பாடு செய்வார். பின்னால் நகரங்களுக்கு வந்ததும் நிலங்களையும் விற்றதும் வாங்கிய அவல் தான். அதையும் களையாமல் தான் வைக்க வேண்டும் என்று கட்டாயமாய்க் கூறுவிடுவார். மாற்றினால் கோபம் வரும். அப்படியே பழகி விட்டது. ஆனால் கிருஷ்ணன் இதை எப்படிச் சாப்பிடுவான் என நினைச்சுப்பேன். :)))))

      Delete
    4. பக்கத்தில் போய் வாங்கும்படியான கடைகள் இங்கே இருப்பதால் மளிகை சாமான்கள், காய்கறிகள், பால் போன்ற அன்றாடத் தேவைகள் ஓடிவிடுகின்றன. இப்போ 2 நாட்களாகப் பால் பூத் திறக்கவில்லை. கோபுர வாசலில் போய் வாங்கி வருகிறார். மற்றபடி பிரச்னைனு எதுவும் இல்லை. நாங்க ஆன்லைனில் எதுவுமே இன்று வரை வாங்கியதில்லை. இனிமேலும் வாங்குவது சந்தேகமே! பொருளைப் பார்த்துத் தான் வாங்கினால் அவருக்குப் பிடிக்கும். ஆகவே ஆன்லைன் வர்த்தகமே இல்லை.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      மீள் வருகை தந்து இப்படி பேசுவது எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது.

      இங்கு நல்ல கடை கண்ணிகளுக்கு செல்ல வீட்டிலிருந்து சுமார் ஒரு கி. மீ செல்ல வேண்டும். நாங்கள் பொதுவாக சனி ஞாயறுகளில் மாலை வெளியில் செல்லும் போதே வீட்டுக்கு தேவையான முக்கால்வாசி சாமான்கள், காய்கறிகள் என வாங்கி வந்து விடுவோம். ஏதாவது முக்கியமானவை மட்டும் ஆன்லைன் வர்த்தகமாக இருந்திருக்கிறது. பால் பாக்கெட் தினமும் வீட்டில் வந்து போட்டு விடுவார்கள்.( அப்படி ஏற்பாடு.) இப்போது இந்த கொரோனா வந்த பின் வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் எந்த கடைகளுக்கும் வெளியில் செல்வதே இல்லை. எல்லாமே ஆன்லைன் வர்த்தகந்தான். அதுவே (நாங்கள் இருப்பது மூன்றாவது மாடி) நாங்கள் சாமான்களை கீழே சென்றுதான் எடுத்து வர வேண்டும். பாலும் இப்போது அப்பார்மெண்ட் காம்பவுண்டு வாசலில் வைத்து விட்டுப் போகிறீர்கள். அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. வணக்கம் சகோதரி

      அம்மா வீட்டில் இருந்த வரை அவல் இடித்துதான் நைவேத்தியம். அதன்பின் நீங்கள் சொன்னபடி நிலங்கள் விற்பனை ஆனதும் நெல் வரவு நின்று போனது. அரிசி கடைகளில் வாங்கித்தான்.. அதன் பின் அவல் தயாரிப்பும் போய் வாசலில் நெய்கார அம்மா விற்று வரும் அவலை வாங்கினோம். குசேலர் கொடுத்த அவலை அப்படியே மென்று தின்ற கிருஷ்ணருக்கு நம் வீட்டு அவல் ஒரு சவாலா? தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இப்போதுதான் திருப்தியாக உள்ளது. நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்." என்கிறான் அதே சிரிப்புடன் அந்த யசோதை பாலகன்.///அருமையான பதிவு அன்பு கமலா.
    இத்தனை அழகாய் ஒரு அருமைக் கற்பனை.'
    கண்ணனுடன் நாங்களும் மயங்கினோம்.
    கண்ணன் அழகு. பட்சணங்கள் ருசியும் வண்ணமுமாக

    படங்கள் ஒளிவிடுகின்றன. அந்தக் குஞ்சுப் பாதங்கள் தான்
    எத்தனை கொஞ்சுகின்றன.
    குட்டி அகல் விளக்குகள் அழகுக்கு அழகு சேர்த்து கிருஷ்ணனின்
    புன்னகையைப் படம் பிடிக்கின்றன.
    சகோதரி உங்கள் பக்தியின் பெருமை ஈர்க்கிறது.
    உரலுடன் கட்டுண்ட கண்ணனைப்
    போல் மனம் பதிவை விட்டு நகர மறுக்கிறது.
    மிக நன்றிமா.
    அவன் தான் காக்க வேண்டும்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்குத்தான் பதிலளிக்க தாமதமாகி விட்டது. தயை கூர்ந்து மன்னிக்கவும். பதிவை படித்து கண்ணனின் பேச்சுகளில் மயங்கி ரசித்து கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோதரி.

      /உரலுடன் கட்டுண்ட கண்ணனைப்
      போல் மனம் பதிவை விட்டு நகர மறுக்கிறது. /

      ஆகா நல்ல உவமானம்... அன்று அவன் என்னை எழுத வைத்த போது. அதே நிலைமை எனக்கும்... அவன் அன்பு கட்டளைக்கு கட்டுண்டு இரவு அமர்ந்து மூன்று மணி நேரத்தில் தீடிரென எழுதினேன். இப்போது நினைத்தாலும் அவனருள் வியக்க வைக்கிறது. அவன்தான் அனைத்தையும் (இந்த வைரஸையும்) மாயையாய் அகற்றி எல்லோரையும் காக்க வேண்டும். அன்பான கருத்துக்களுக்கும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள் சகோதரி. அனைத்துப் பாராட்டுகளும் அவனையே சாரும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நானும் இன்று வேகமாக வந்து விட்டேன் நமது அருமை செல்ல கண்ணை காண ...

    எல்லாம் அவன் செயல் ...நாம் என்ன என்ன நினைத்தாலும் அவன் நமக்கு எது நன்மையோ ...எது தேவையோ அதையே செய்வான் ...இந்த பிறவிக்கு உயிர் தந்த நம் தந்தையே நமக்காக இத்தனை யோசிக்கும் போது அவனுக்கு என்ன செய்ய மாட்டானா ...


    கண்ணனின் பாதங்களும் , பட்சணங்களும் பார்க்க பார்க்க அழகு ..

    செல்ல கண்ணன் சிரிக்கிறான் ...அழகாய் ...அன்பாய் ...மகிழ்வாய்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எல்லாம் அவன் செயல் ...நாம் என்ன என்ன நினைத்தாலும் அவன் நமக்கு எது நன்மையோ ...எது தேவையோ அதையே செய்வான்/

      உண்மைதான் சகோதரி. நமக்கென்று உள்ளதை அவன் என்றும் நல்லதாக்கி தருவான்.

      நீங்கள் உடனேயே வந்து கருத்துகள் தந்து விட்டீர்கள். எனக்குத்தான் பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      பதிவை பாராட்டி கருத்துக்கள் தந்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ரிப்பன் பகோடா, குலாப் ஜாமூன், வெல்லச்சீடை,(அல்லது சிறிதாக இருப்பது உப்புச் சீடை, பெரிதாக இருப்பது வெல்லச் சீடையா) வடை, மனோகரம், பாயசம் மனதைக் கவர்ந்தன.

    கண்ணன் சிரிப்பு மனதைக் கொள்ளை கொண்டது.

    சின்ன வயதில் எங்களை, இரவு பன்னிரண்டு மணிக்கு எழுப்பி, பெரியவங்க பூஜைலாம் முடிந்ததும் கையில் பட்சணங்கள் தந்தது நினைவுக்கு வருகிறது.

    நல்ல பதிவுக்குப் பாராட்டுகள். இதோ பிள்ளையார் சதுர்த்தி வருகிறதே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவையும், பட்சணங்களையும் கண்டு தரிசித்து பிரசாதம் எடுத்து (கண்(ணனால்)ணால்) உண்டு மகிழந்தமைக்கு என் அன்பான நன்றிகள்.

      படசணங்கள் சுமாராக வந்திருந்தன. ஆனால் அவனுடைய பிரசாதம் என்பதினால் சுவையாக இருந்தன. எப்போதும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ, இல்லை அன்று காலையோ ஆரம்பிப்பேன். இந்த தடவை அது நடக்கவில்லை. அன்று காலை டிபன், சமையல் என முடித்து விட்டு, ஆரம்பிக்கும் போதே மணி மூன்று ஆகி விட்டது. அவனுக்கும் அவசர படசணங்கள்தான். நேரம் இல்லாமல் போகவே பட்சணங்களும் சுருங்கி விட்டது.

      /சின்ன வயதில் எங்களை, இரவு பன்னிரண்டு மணிக்கு எழுப்பி, பெரியவங்க பூஜைலாம் முடிந்ததும் கையில் பட்சணங்கள் தந்தது நினைவுக்கு வருகிறது. /

      ஆம் அந்த காலத்தில் கொஞ்சம் கிருஷ்ணர் பிறந்த நேரத்தில் பண்ண வேண்டும் என்பதற்காக லேட்டாகத்தான் பண்ணுவார்கள்.

      இதுவே பூஜைக்கு மணி ஒன்பதை தொட்டு விட்டதில், வீட்டில் அனைவரும் அவசர வேறு படுத்தினார்கள். எப்படியோ என்னை இந்த பதிவெழுத வைத்த இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      அடுத்த சதுர்த்தியையும் என்னப்பன் விக்னேஷ்வரன் எழுத வைத்தால் எழுதலாம்.. பார்க்கலாம்.
      தாமதமாக பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கொரோனா காலத்தில் இந்த மாதிரி விஷேசங்கள் மனதிற்கு நிச்சயம் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் கண்டிப்பாக கொடுக்கும்.... தமிழகத்தில் இருந்த வரை கிருஷ்ண ஜெயந்தி பூஜை பலகாரங்கள் எனக்கு வரும் அது இங்கே வந்த பின் மிஸ்ஸிங்க்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கொரோனா காலத்தில் இந்த மாதிரி விஷேசங்கள் மனதிற்கு நிச்சயம் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் கண்டிப்பாக கொடுக்கும்/

      ஆமாம் போன வருடம் எங்களுக்கு பண்டிகை ஏதும் கிடையாது. இந்த வருடம் கொரானாவுடன் பண்டிகையும் ஒவ்வொன்றாக கழிகிறது. நமக்கு தேவைப்பட்ட சாமான்கள் வாங்குவதுதான் கடினமாக உள்ளது.

      உங்கள் அன்பான கருத்துகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். பதிலிடுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கிருஷ்ணருடன் பேசியதற்கு வாழ்த்துகள்.
    படங்கள் அனைத்தும் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் வாழ்த்துகளும் மகிழ்ச்சியை தந்தது. தாமதமாக பதில்கள் அனைவருக்கும் தந்து வருகிறேன். மன்னிக்கவும். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கிருஷ்ணார்ப்பணம்...

    கிருஷ்ணருடன் கொஞ்சம் அளவளாவியதுடன் அதனை அழகாக பகிர்ந்து கொண்டது சிறப்பு. படங்கள் அனைத்தும் சிறப்பு. பக்ஷணங்கள் பார்க்க நன்றாக இருப்பது போலவே சுவைப்பதற்கும் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிகிறது!

    தொடரட்டும் பதிவுகள் - முடிந்த போது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை நன்றாக படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      பட்சணங்கள் பார்க்க சுமாராக எனக்கு தோன்றினாலும், நைவேத்யம் செய்த பின் அனைத்துமே சுவையாக இருந்தன.

      /தொடரட்டும் பதிவுகள் - முடிந்த போது/

      உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கு நன்றி. அப்படித்தான் மாதத்திற்கு ஒருமுறை பதிவு எழுதுகிறேன். அப்படி இட்ட பதிவுகளுக்கு நீங்கள் அனைவரும் உடனே வந்து தரும் கருத்துக்களுக்கு முடிந்த போது பதிலும் எழுத தாமதமாகிறது.. அதற்கும் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நைவேத்யத்தில் வெண்ணையைக் காணோம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் என் பதிவுக்கு தந்த முதல் வருகை கண்டு மிக மன மகிழ்ச்சி எய்துகிறேன்.

      நைவேத்தியத்தில் வெண்ணெய் இருக்கிறதே... வெளியில் ஆன் லைனில் ஆர்டர் பண்ணி வரவில்லையென்பதால், கொஞ்சம், ஆடைத்தயிர் எடுத்து குலுக்கி கடைந்ததில் பாட்டில் இருக்கிறது. கிருஷ்ணருக்கு கையில் தானே எடுத்து சாப்பிட பிடிக்குமென்பதால், அப்படியே மோருடன் வைத்து விட்டேன். தங்கள் அன்பான கருத்துக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இந்த அன்பு அசர வைத்தது அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      உங்கள் பதிவுக்கு இனிதான் வரவேண்டும், உடனடியாக பதில் தராததற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      உங்கள் பதிவுக்கு கூட நான் இன்னமும் வர இயலவில்லை. வருகிறேன். கருத்துகளுக்கு பதில் தருவதற்கும் தாமதமாகி விட்டது வருந்துகிறேன். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. பக்தி மயமான பதிவு...
    உங்களது வீட்டிற்கே வந்து கண்ணனைத் தரிசித்து பிரசாதம் பெற்றுக் கொண்டதைப் போல் இருக்கிறது...

    சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பக்தி மயமான பதிவு என்ற பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

      தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கண்ணனை தரிசித்து பிரசாதங்கள் பெற்று கொண்டதைப் போன்ற உணர்வுடன் பதிவை ரசித்ததற்கு மனம் மிக மகிழ்ச்சியாக இருந்தது.தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. பக்தி மயமான பதிவு..

    உங்களது வீட்டிற்கே வந்து ஸ்ரீ கிருஷ்ணனைத் தரிசித்து பிரசாதம் பெற்றுக் கொண்டதைப் போல் இருக்கிறது...

    சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்...

    ReplyDelete
  14. ஹை கமலாக்கா கிச்சாவுடன் உரையாடல் அருமை. ரொம்ப ரசித்தேன். கவலைப்படாதீங்க அந்தக் கிச்சாவுக்குத் தெரியாதா என்ன உங்களைப் பத்தி. அவர் ஒன்னும் கோபித்துக் கொள்ள மாட்டார்!!!!

    கோலம் செமையா இருக்கு.

    இரு கிச்சாக்களும் ரொம்ப அழகா இருக்காங்க அதிலும் அந்தக் குட்டிப்பயல் கண்கள் ரொம்ப அழகு காருண்யம், ஏதோ சொல்வது போல..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கும் கிருஷ்ணருக்கு ம் நடந்த மானசீக உரையாடலை ரசித்து கருத்துக்கள் இட்டதற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      /அந்தக் குட்டிப்பயல் கண்கள் ரொம்ப அழகு காருண்யம், ஏதோ சொல்வது போல../

      ஆமாம்.. நானும் மிகவும் ரசித்தேன். என் இளைய மகன் அந்த குட்டி கிச்சாவை இந்த தடவை வாங்கி பூஜை செய்ததாக கூறி படங்கள் அனுப்பியிருந்தார். அதைத்தான் இங்கு பகிர்ந்தேன்.

      தங்கள் அன்பான கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள் பல...
      பதிலளிக்க தாமதமாகி விட்டது வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கிச்சா கால் கோலம் அழகா போட்டுருக்கீங்க. எனக்கு என் மாமியார் சொல்லிக் கொடுத்தது அவர் அப்பா சொல்லிக் கொடுத்ததாக...

    ஒரு தட்டில் அரிசி மாவு அரைத்த மாவு வைத்துக் கொண்டு இரு கைகளின் விரல்களையும் உட்புறம் மடக்கிக் கொண்டு தம்ஸ் அப் காட்டுவது போலன்னு கட்டை விரல் மடிந்திருந்தாலும் ஒகே.

    இப்ப கையின் கீழ்ப்பகுதியை அப்படியே தட்டில் வைத்து தரையில் பதிக்க வேண்டும். ஒன்று வலது மற்றொன்று இடது...மாற்றி மாற்றி பதித்து நுனியில் விரல் டாட்ஸ் வைத்தால் போதும் .

    பட்சணங்கள் ஆஹா நாவூறுது கமலாக்கா...

    சூப்பர் சூப்பர்!!

    கிச்சா எஞ்சாய் செஞ்சிருப்பார்!!

    நல்லாருக்கு கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம்.. அரிசிமா அரைத்த கோலம் போடும் போது நீங்கள் சொல்வது போல் போடலாம். துணியில் முக்கி எடுத்துப் போட்டாலும் கோலங்கள், கிருஷ்ணர் பாதங்கள் அழியாமல் அப்படியே இரண்டு நாட்கள் இருக்கும். ஒரு வேளை மறுநாள் வரை இருக்கும் அவர் பாதங்களை யாராவது மிதித்து விட கூடாதே என்றோ என்னவோ, எங்கள் அம்மா கோல மாவிலேயே போட்டு பழக்கி விட்டார். அன்று இரவு பூஜைகள் முடிந்ததும் மறுநாள் காலையில் பாதங்களை கையினால் துடைத்து விட்டு பெருக்கி விட வசதியாக இருக்கும்.

      பதிவையும் பட்சணங்களையும் ரசித்ததற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கிருஷ்ணருடன் உங்கல் உரையாடலுடன் பதிவு சிறப்பு.

    படங்களும் அருமை

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவையும், படங்களையும் ரசித்துப் படித்து/பார்த்து தந்த நல்லதொரு பாராட்டுகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ. தாமதமாக பதிலளித்தமைக்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் //////அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்." என்கிறான் அதே சிரிப்புடன் அந்த யசோதை பாலகன்.//

    யசோதை பாலகன் சொன்னது அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    வாசல் கோலம் , கண்ணன் பாதம் எல்லாம் அழகு.
    கண்ணனுக்கு வைத்த பட்சணங்கள் எல்லாம் அருமை.
    அதுவும் நம் ஊர் மனோகரம் ! கண்ணனுக்கு மிகவும் பிடித்து இருக்கும்.
    உங்கள் வீட்டு குட்டி கண்ணன் (பேரன்) எதை முதலில் எடுத்து உண்டான்?

    வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களை எடுத்துக் கொள்ள சொல்வார்கள் பலகாரங்களை அந்த குழந்தை எதை எடுக்கிறதோ என்று எல்லோரும் ஆவலாக பார்ப்போம் எங்கள் வீட்டில்.

    என் மகன் முதலில் இனிப்பு வெல்லச்சீடைதான் எடுத்தான்.
    என் பேரன் முறுக்கு எடுத்தான் முதலில்.

    தீப ஓளியில் கண்ணன் உள்ள படம் அழகு.

    பூஜை அறையில் இரண்டு தலைகள் கீரிடத்தோடு நாக்கை நீட்டிக் கொண்டு இருப்பது நாகபஞ்சமிக்கு செய்தவையா?

    பதிவு மிக அருமை.
    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவையும், படங்களையும் ரசித்து படித்து தந்த பாராட்டுகளை கண்டு என் மனம் உற்சாகமடைந்தது. இந்த தடவை அந்த யசோதை பாலகன்தான் என்னை இந்தப் பதிவு எழுத வைத்தான். மேலே நான் கூறிய பதில்களை பாருங்கள். இந்தப்பதிவு கண்ணால் வந்தவை. அதை நீங்கள் அனைவரும் வந்து சிறப்பித்து பிரசாதங்களை எடுத்துக் கொண்டு பாராட்டியது எனக்கு பெருமகிழ்வாக உள்ளது.அத்தனை பாராட்டுகளும் ஸ்ரீ கிருஷ்ணரையே சாரும்.

      /என் மகன் முதலில் இனிப்பு வெல்லச்சீடைதான் எடுத்தான்.
      என் பேரன் முறுக்கு எடுத்தான் முதலில்/

      எங்கள் வீட்டு பேரனுக்கும் இதுதான் விபரமறிந்த கிருஷ்ண ஜெயந்தி விழா. அவனுக்கும் வெல்லச்சீடைதான் பிடித்தது. அவனுக்கு இனிப்பென்றால் உயிர்.

      /பூஜை அறையில் இரண்டு தலைகள் கீரிடத்தோடு நாக்கை நீட்டிக் கொண்டு இருப்பது நாகபஞ்சமிக்கு செய்தவையா?/

      இல்லை சகோதரி. அது பிள்ளையார். குழந்தைகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியில் சென்ற விநாயகர் சதுர்த்தியன்று தந்தார்கள். அது அழகாக இருக்கவே அப்படியே இருபக்கமும் வைத்திருக்கிறார்கள்.

      பதிவை ரசித்து தாங்கள் ஒவ்வொன்றிக்கும் தந்த கருத்துகள் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். எனக்குதான் வழக்கம் போல் பதில்கள் தர தாமதமாகி விட்டது வருந்துகிறேன். மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. ஆஹா கமலாக்கா நலம்தானே.. எப்பூடி இருக்கிறீங்கள்? இந்த அப்பாவியை நினைவிருக்குதோ?:)).. கிருஸ்ணர் ஏன் இந்தப் போஸ்ட்டைப்போடத் தாமதமாக்கினார் எனத் தெரியாது எனத் திகைக்க வேண்டாம்ம்.. லேட்டாகப் போட்டதும் அதிரா.. இல்லை இல்லை அப்பாவி அதிரா வந்திடுவா என்பதனாலதானாக்கும்...

    அழகிய கால் பாதங்கள்.. அச்சு வச்சுப் போட்டதைப்போல இருக்குதே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா? நீங்கள் எப்படி உள்ளீர்கள்? உங்களை மறக்க இயலுமா? உங்களை பதிவுலகில் காணவில்லையே ஏதோ வேலைகள் போலுமென அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தங்கள் உயிர் நண்பியும் நீங்கள் நலமென எ.பியில் ஒரு தடவை கூறியிருந்தார். அப்போதுதான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது. இப்போது சகோதரர் கில்லர்ஜி பதிவில் தங்களைக் கண்டதும் நலம் விசாரிக்க ஓடிவரலாமென நினைக்கும் போது, என்னே ஆச்சர்யம்..! நீங்களே என் வீட்டில்.. மகிழ்வின் உச்சிக்கே சென்று விட்டேன்.

      உண்மைதான்... ஸ்ரீ கிருஷ்ணர் எனக்குள் வரவைத்த தாமதம் புரிகிறது. அவர் சம்பந்தபட்ட பதிவை படிப்பதற்காக உங்களையும் கூடவே இன்று கைப்பிடித்து அழைத்து வந்து வலையுலகில் இறக்கி விடவேண்டி நான் பதிவுகள் எழுத தாமதமாக்கியிருக்கிறார். நீங்கள் வலையுலகம் வந்ததும் என்னை மறக்காமல் என்னை வந்து விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      கண்ணனின் பாதங்கள் அச்சுதான் சகோதரி. முன்பெல்லாம் ஒவ்வொரு வருடங்களும் நானேதான் கால் பாதங்கள் வரைவேன். இப்போது சிரமமாக இருப்பதால் அச்சில்தான் பாதங்கள் வைக்கிறேன். வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கண்ணனின் பாதங்கள் அச்சாக இருக்குமோ எனத்தான் நானும் நினைத்தேன். கேட்க யோசனை! அதிரா கேட்டுவிட்டார்! :) நான் கைகளாலேயே குட்டிக் குட்டிப் பாதங்கள் போடுவேன். சின்னச் சின்னது!

      Delete
  19. புல்லாங்குழல் ஊதும் கிருஸ்ணர் அழகோ அழகு, குழல் ஊதும் கிருஸ்ணர் சிலை வீட்டில் வைக்கக்கூடாது என்றெல்லாம் முன்பு மிரட்டினார்கள் எங்களை... இதனால சிலைகள் வைத்துக் கும்பிடுவதற்கே எங்களுக்குப் பயம், ஆசையில ஒரு குட்டி சிவலிங்கம் வாங்கினோம், அதையும் இப்போ குட்டி செம்புகொண்டு மூடி வைத்திருக்கிறோம்.. எதற்கெடுத்தாலும் பயமுறுத்துகிறார்கள் நம் மக்கள்...

    பூஜை அறை மிக அழகாக இருக்குது, பட்சணங்கள் நாவூற வைக்குதே... குட்டிக் குழந்தைக் கிருஸ்ணர் மிக அழகு... நாங்கள் கிருஸ்ண ஜெயந்தி கொண்டாடிப்பழக்கமில்லை...

    ReplyDelete
    Replies
    1. //குழல் ஊதும் கிருஸ்ணர் சிலை வீட்டில் வைக்கக்கூடாது// - இந்த நம்பிக்கை உள்ளவர்களைக் கண்டிருக்கிறேன். அவங்க சொல்லி எனக்குமே குழல் ஊதும் கிருஷ்ணர் சிலையை வாங்க மாட்டேன். அது வீட்டில் இருந்தால் செல்வத்தை ஊதி ஊதி போகும்படி பண்ணிவிடுவார் என்று சொல்வாங்க. அப்படில்லாம் கிடையாது என்றாலும், எதுக்கு வம்பு என்று என் மனதில் தோன்றிவிட்டது. ஹாஹா.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      குழலூதும் சிலை வீட்டில் வைத்துக் கொள்ள கூடாது என்று நான் கேள்விப்பட்டதில்லை. நடராஜர் சிலையோ படமோ கூடாதென்பார்கள். அதற்கும் சகோதரர் நெல்லை சொல்கிற மாத்ரி பொருளாதாரம் ஆடி விடும் என்ற கருத்து உண்டு. ஆனால் எங்கள் வீட்டில் அந்த சிலையும், படமும் இருக்கிறது. சிலை கொலுவில் வைத்திருந்தேன். படமும் பூஜையறையில் இருந்தது. ஒன்றும் தெரியவில்லை. எல்லாமே அவரவர் வாங்கி வந்த விதிப்படிதான் நடக்கும். அதில் மாறுதல் ஏதுமில்லை. தங்கள் வருகைக்கும். மீள் வருகை தந்த சகோ நெல்லை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. வணக்கம் அனைவருக்கும்..

    அன்புடன் இன்று என் பதிவுக்கு வந்து ஸ்ரீ கிருஷணரை தரிசித்து பிரசாதங்களை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். அனைவரின் கருத்துக்கள் கண்டு நான் மிகவும் மகிழ்வடைந்தேன். இன்று அனைவருக்குமே பதில் தர இயலவில்லையாததால், அனைவருக்கும் நாளைக்குள் பதில் கருத்துகள் தந்து விடுகிறேன். அதுவரை இந்த சகோதரியை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  21. கிருஷ்ணன் படமும், கோலமும், குட்டி கிருஷ்ணன் காலடியும் வெகு அழகு. கிருஷ்ணன் உங்களை எழுத வைத்து விட்டான் பாருங்கள். லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கும் பதிவு அருமை. இந்த ஊரில்(பெங்களூரில்) கிருஷ்ணனுக்கு பிரியமான  நாவல் பழம் கிடைப்பதில்லை.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி..

      கண்ணன்தான் இந்தப்பதிவை உருவாக்கினான். உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை.

      /இந்த ஊரில்(பெங்களூரில்) கிருஷ்ணனுக்கு பிரியமான நாவல் பழம் கிடைப்பதில்லை. /

      ஆமாம் சகோதரி.. அந்தப் பழம் மட்டும் நம் தமிழ் நாட்டில் கிடைப்பது போல் கிடைக்கவில்லை. ஒரு தடவை என் கணவர் எங்கோ கிடைத்ததென்று அலைந்து திரிந்து வாங்கி வந்த நாவல் பழமும் அங்குள்ள சுவை போன்று இல்லை.

      உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  22. பிள்ளையார்... பதிவுலாம் போடாதீங்கன்னு சொல்லிட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா. அவர் அப்படியெல்லாம் சொல்வாரா? அவர்தானே எனக்கு இந்த பதிவுலகில் அடியெடுத்து வலம் வர துணையாக இருப்பவர்.. (தவிரவும் எனக்கு இதில் சந்தேகங்களை போக்கி, நான் ஆரம்பத்தில் வலைத்தளம் வர உதவியாக இருந்தவர் விநாயகரின் மற்றொரு பெயர் கொண்ட என் இரண்டாவது பிள்ளையும் கூட.) ஸ்ரீபிள்ளையார் அருள் பரிபூரணமாக கிடைத்து விட்டால் அடுத்த நொடி பதிவு தயாராகி விடும். அவர் பதிவு வெளிவர இன்னமும் முழுதாக பெர்மிஷன் தரவில்லை. அதாவது நான் இன்னமும் முழுதாக எழுத நேரம் ஒதுக்கித் தரவில்லை என நினைக்கிறேன். பதிவை குறித்த உங்களது அன்பான எதிர்பார்ப்பு எனக்கு விரைவில் எழுத உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete