Monday, April 27, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 10)


முந்தைய பகுதியின் முடிவு

போதுமடா..! சாமி..! நீ மறுபடியும் என்கிட்டேயிருந்து, உன் நன்றி புராணத்தை ஆரம்பிச்சிடாதே..!”’ தாங்க முடியலே..! இப்படி பேசிகிட்டேயிருந்தா, எனக்கு போரடிச்சு, நான் பேசாம அருணாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எங்க அப்பாகிட்டே சம்மதம்  சொல்லிடுவேன்..!என்று கிண்டலாக கார்த்திக் சொன்னதும் அனைவரின் முகத்திலும் சிரிப்பு பூத்தது..!

இன்றைய தொடர்ச்சி..

சில நிமிடங்கள் அவ்விடத்தை அமைதி தழுவியது..!
பிரச்சனைகளை ஒருவருக்வொருவர், மனம் விட்டு பேசினால், எந்தவொரு செயல்களும், நல்லபடியாக நடக்கும் என்பதை புரிந்து கொண்டதால், அந்த நால்வரின் மனங்களும் சற்று அமைதியாக இருந்தன.! மற்றவர்களுக்கு விட்டுத்தரும் இயல்புகளை, அனைவருமே பெற்றிருந்ததால், சுமுகமாக முடியப்போகும் நல்ல விஷயங்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி, கவலைகளை அகற்றி மேலும் சந்தோஷங்களை தரும் என்ற நம்பிக்கை அனைவரின் முகத்திலும் பிரகாசித்தது.
 
சங்கவி சற்று சிரமபட்டு எழுந்தவள், “சரி அப்ப நான் கிளம்பறேன்”! இதற்குள் அப்பா, அருணா வீட்டிலும், உங்க வீட்டிலும், பேசி ஒரு நல்லதோரு முடிவை ஏற்படுத்தியிருப்பார்..! நா அருணாவை அவங்க வீட்டிலே போய் விட்டிட்டு நல்ல தகவலை உங்களுக்கு விரைவில் தெரியபடுத்துறேன்..!  என்றாள் நம்பிக்கையான குரலில்.

சங்கவி..! நா ஒன்னு சொல்லுவேன். நீங்க நான் சொல்றதை தட்டாமல் கேட்கணும்..! என்று தீடிரென ஆரம்பித்த பிரபாவை என்ன..?”வென்பது பார்த்தாள் சங்கவி ..!

நீங்க சொல்லறபடி நானும், அருணாவும் சந்தோஷமா வாழ்கையிலே ஒண்ணு சேர்ந்தாலும், எனக்கும் சரி.!! அருணாவுக்கும் சரி..!! ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும்..! அதனாலே எங்க விருப்பபடி உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சி குடுத்தாதான், எங்களுக்கு சந்தோஷமா, இருக்கும். அதனாலே நீங்கநாசொல்லப் போகும் விஷயத்தை பத்தி கோவப்படாமே பொறுமையா கேட்கனும்என்று பீடிகையுடன் இழுத்தான்.பிரபா..!

சரி கோவப்படலே.! என்ன சொல்லுங்க….? என்றாள் சங்கவி

மறுபடிச் சொல்றேன். நீங்க தயவு செஞ்சு கோபப்படக்௬டாது சங்கவி..! என் மனசுலே தீடிர்னு எழுந்த ஒரு விருப்பம் இது.  அதை தயவு செஞ்சு நீங்க தப்பா நினைக்காமே, நா சொல்றதை புரிஞ்சிக்கனும். உங்கப்பா விரும்பியபடி, இப்ப என் விருப்பபடி நீங்க ஏன் எங்க கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க ௬டாது..? கார்த்திக் உனக்கும் இதுலே சம்மதந்தானே..! என்று பக்குவமாய் பிரபாகர் கார்த்திக்கையும், பார்த்தபடி கேட்டாலும், மற்ற அனைவருமே என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர்.

மீண்டும் மெளனம் சூழலின் இறுக்கத்தை ஆக்கிரமிக்க, சில நிமிடம் கழித்து காரத்திக்தான் அதை கலைத்தான்..!
 
பிரபா..! நீ என்ன புரிஞ்சிதான் பேசுறியா..? இல்லை ஏதோ சொல்லனுமேன்னு சொல்றியா..?

இல்லை கார்த்திக்..! நான் பேசாமே இருந்தாலும், சங்கவி வீட்டிலே அவங்க அப்பா எப்படியும் சங்கவிக்கு திருமணம் முடித்து வைக்க இதே விஷயத்தை மறுபடியும் ஆரம்பிப்பார். எப்படியும் ஆரம்பிக்கும் இந்த பேச்சுனாலே, கொஞ்ச காலம் கழிச்சு, சங்கவி முகம் தெரியாத யார் ௬டவோ, தன் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு, உன்னோடயே, ஒரு தெரிந்த உறவின் துணையிலேயே துவங்கலாமில்லையா? சங்கவியும் உனக்கு ஒருவகையில் உறவுதானே…!  நீங்கள் இருவரும் சரியென்று ஒத்துக் கொண்டு விட்டால், நானே உன் அப்பாவிடம் இதைப்பற்றியெல்லாம் பேசி நல்லபடியாக முடித்து வைக்கிறேன்..!நம் நால்வரும் குற்ற உணர்ச்சி இல்லாமே சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.! என்று பிரபா முடிக்கவும் அருணாவும் அதை ஒரளவு ஆமோதிக்கும் பாவனையில், இருவர் முகத்தையும் பதிலுக்காக ஆவலுடன் பார்த்தாள்..!

கார்த்திக் மெளனமாக இருக்க, சங்கவி சட்டென்று சுதாரித்து கொண்டு புறப்பட எத்தனித்தாள்..! அவள் முகம் இயல்பை மீறி சற்று இறுக்கமானதாக தோன்றிற்று பிரபாகருக்கு. சரி பிரபா…! இப்போ எதுவும் இதைப் பத்தி பேச வேண்டாமே..! உங்கள் அன்பும், பரிவும் யோசனையும் புரிகிறது.  நாளை யோசிச்சு இதைப் பற்றி பேசி ஒரு முடிவை எடுக்கலாம்.…! என்று அழுத்தமான குரலுடன் விடைபெற்ற சங்கவி, “அருணா போகலாமா? என்றவுடன் அருணாவும் சற்று விசனமான முகத்துடன் கிளம்ப, இருவரையும் வழியனுப்பி விட்டு வந்த பிரபா, “கார்த்திக்..! நான் கேட்டது உனக்கு வருத்தமா..? என்றான்.

என்னை விடு பிரபா..! தீடிரென்று அப்படி கேட்டவுடன் அவங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு யோசிச்சு பாத்தியா..? அவங்க முகமே அதை காட்டிக் கொடுத்திடுச்சு.. சங்கடமான குரலில் ௬றினான் கார்த்திக்.

இல்லை கார்த்திக்..!  அவங்க ரொம்ப நல்லவங்க! என் மூலமா அவங்க வாழ்க்கையிலே ஏற்பட்ட குழப்பம் நீங்கி அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கனுமேன்னு, ஒரு பரிதவிப்பிலே அப்படி கேட்டுட்டேன். நீயும் என் நண்பன்தானேங்கிற உரிமையிலே, “நீ ஏதும் தப்பா நினைக்க மாட்டேன்னுநினைச்சு அப்படி அவசரபட்டு என் மனசுலே எழுந்த ஆசையை வெளிப்படுத்திட்டேன். என் கேள்வியிலே ஏதேனும் உன் மனசை கஷ்டபடுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடு. உனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? ..! இப்ப நாம தனியாதானே இருக்கோம்..! என்கிட்டே மனம் விட்டு சொல்லேன்.!   என்று தவிப்பான மனதுடன் கேட்டான் பிரபா.
    
முதல்ல அவங்க தன் சம்மதத்தை சொல்லட்டும்…! அவங்க சம்மதிச்சா, நான் என் வெளி நாட்டு வேலையை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா விருப்பப்படி இங்கேயே ஒரு வேலை தேடிக்கவும் சம்மதிக்கிறேன்..! என்று தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்திய நண்பனை அளவு மீறிய சந்தோஷத்தில் ஆரத் தழுவிக்கொண்டான் பிரபாகர்.


தொடரும்

6 comments:

 1. நல்லது நல்லதே நடக்கட்டும் என நல்ல பெருமாளை வேண்டுகிறேன் கண்டிப்பாக நாளை வருகிறேன் கல்யாணச் சாப்பாடு சாப்பிட.... சுபம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நல்லது நடக்க நல்ல பெருமாளை வேண்டிக்கொண்டு நாளையும் கண்டிப்பாக வருகை உண்டு என நவின்ற தங்கள் நல்ல மனதுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சுபம் நான்தான் போட வேண்டும்.

   என்றும் நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.


   Delete
 2. சங்கவியின் முகம் இறுக்கமானது ஏனோ? தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சங்கவியின் முகம் என்ன காரணத்தால் மாறியது என்பது இன்று இரவே தெரிந்து விடுமே.எத்தனையோ பணிக்கு நடுவிலும் கதையை தொடர்கிறேன் என்றமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இன்று இரு பதிவுகளுக்கும் வந்து படித்து சேர்த்து கருத்திட்டது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது எத்தனையோ பணிக்கு நடுவிலும் கதையை தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு நாளையும் தொடர்கிறேன் என்றதற்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete