முந்தைய பகுதியின் முடிவு…
அதோ, அவள் வந்து விட்டாள். அருகில் வர வர அவளுடைய
தீர்க்கமான விழிகளை சந்தித்தவுடன், கற்பனையில் செய்து வைத்திருந்த ஒத்திகைப்
பேச்சுக்கள் சற்று மற(றை)ந்து போன மாதிரி இருந்தது.
இன்றைய தொடர்ச்சி..
“வணக்கம்! உங்களை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ?” இயல்பான
குரலில் சங்கவி ஆரம்பித்தபடி அருகிலிருந்த கற் பலகையில் சுவாதீனமாக அமர்ந்து
கொண்டாள்.
எடுத்த எடுப்பிலேயே தைரியத்துடன் பேச்சை சங்கவி
ஆரம்பித்ததும், இவள் நம் பிரச்சனையை நன்கு புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை பிரபாகருக்குள்
தலையெடுத்தது. இருந்தாலும், “இல்லை! நான் இப்போதான் வந்தேன்!” என்று
தடுமாறியபடி ஆரம்பித்த அவனை நோக்கியவள், “நீங்களும் அமர்ந்து பேசலாமே! சாரி! உங்களை
கேட்காமல், நான் முதலில் அமர்ந்து கொண்டு விட்டேன். நடந்து வந்ததில் கொஞ்சம் கால்
வலித்தது..!” என்றபடி அவள் தன் செய்கைக்கு காரணம் ௬றி குரலில் வருத்தம் காட்டியதும், பிரபாகருக்கு
அவள் மீதிருந்த மரியாதையை இன்னும் சற்று அதிகபடுத்தியது. இத்தனை புரிந்து கொள்ளும்
மனதுடன் இருக்கும் இந்த பெண் என்னையும் நான் ௬றப்போகும் விஷயங்களையும், புரிந்து
கொண்டு எனக்காக விட்டுத் தருவாளா? “இவளிடம் எப்படி ஆரம்பிப்பது? தன்னை சந்திப்பது குறித்து வீட்டில் என்ன சொல்லி
சமாளித்து விட்டு வந்திருக்கிறாளோ? தெரியவில்லை!” தன்னுடன் திருமணம் நடக்கவிருக்கும் இவனுடன் மனம்
விட்டு பேசலாம் என்ற மகிழ்வோடு வந்திருக்கும் இவளிடம், “உன்னை என்
வீட்டில் முடிவு செய்திருப்பது எனக்கு இஷ்டமில்லை. நான் வேறொரு பெண்ணை
விரும்புகிறேன். வாழ்ந்தால் அவளுடன்தான் என் வாழ்வு! என்ற விசயத்தை சொன்னதும், இவளால்
ஏற்றுக்கொண்டு தடுமாற்றமின்றி, அமைதியாக பத்திரமாக வீடு திரும்ப முடியுமா?”என்று ஏகப்பட்ட
கேள்விகள் அலைபாய யோசித்து கொண்டிருந்தவனை, சங்கவியின் குரல் தட்டி எழுப்பியது.
“என்ன
யோசிக்கிறீர்கள்? நீங்கள் என்கிட்டே, ஏதோ முக்கியமா பேசப்போறீங்க”ன்னு, சொன்னதினாலே, நான்
பக்கத்திலிருக்கும் என் தோழி வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்,னு அம்மாகிட்டே
சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். நான் என் தோழியை சந்திக்க இந்த மாதிரி தனியாக
வருவது அம்மாவுக்கு தெரியுமாகையால் தைரியமா அனுப்பி விட்டாங்க. சொல்லுங்க! என்ன
விஷயம்? என்று அவன்
மனதை அளந்தவளாய் அவள் பேசியதும் அவன் வியந்து போனான்.
ஒரு நிமிடம் நிதானித்தவன், வந்து,! நேரடியா
விசயத்துக்கு வந்துடுறேன்! எனக்கு இந்த திருமணத்திலே விருப்பமே இல்லே! எங்க
வீட்டுலே ரொம்ப வறுப்புறுத்திதான் நான் அன்னைக்கு உங்களை பொண்ணு பாக்க வந்தேன்.
அதுக்காக உங்களை மணந்து கொள்ள பிடிக்கக்கவில்லை என்கிற மாதிரி எவ்விதமான தப்பான
அபிப்பிராயமெல்லாம் எனக்கில்லை! என்னோடது என் தனிப்பட்ட வாழ்வு பிரச்சனை! என்னோட
ஆசையிலே எழுந்த கட்டடம். அது என்னன்னா…..! அவன் சற்று இழுத்து முடிப்பதற்குள், அவனை பேச
விடாது அவள் இடைமறித்தாள்.
“நீங்க
அன்னைக்கு வந்தவுடனே உங்க நிலமை எனக்கு புரிஞ்சு போச்சு! உங்க வீட்டுலே உங்களை, வலுக்கட்டாயமா
௬ட்டிகிட்டு வந்திருக்காங்கன்,னு புரிஞ்சுகிட்டேன். உங்க முகமே இந்த திருமணத்திலே
உங்களுக்கு இஷ்டமில்லைன்’னு காட்டி கொடுத்திடுச்சு! ஏன்? யாரையாவது
நீங்க விரும்புறீங்களா? அவங்களை கை விட மாட்டேன்“னு, பிராமிஸ் பண்ணிட்டீங்களா? அதுதான் உங்க
பிரச்சனையா? எதுவானலும் என்கிட்டே தயக்கமில்லாமே சொல்லலாம்!” என்று வார்த்தைகளை, அளந்து அவள் வினாக்களை தொடுத்ததும், அவன்
திகைத்துப்போனான். குடும்பத்தில் உள்ளவர்கள், அவ்வளவு காலம் அவனுடன் நெருங்கி பழகி, அவன் ரத்தமும்
சதையுமானவர்கள், அவன் மிகவும் எதிர்பார்த்து கேட்கக்௬டாதா, என்று தவித்த ஒரு கேள்வியை அவள் எந்தவித
தடுமாற்றமுமின்றி, அவன் மனதை படித்தது போன்று அனாசயமாக கேட்டதும், அவன் மனதில்
அவள் மீதிருந்த மதிப்பு மிகுந்த உயரத்தில் ஏறியது.
.
“எப்படி இவள்
மனதிலுள்ளது எல்லாம் புரிந்தவளாய் பேசுகிறாள்? ஒருவேளை மனவியல் படித்திருப்பாளோ? என்று திகைத்து
ஏதும் சொல்ல தோன்றாமல் பேசாமல் சற்று நேரம் மெளனித்தான் பிரபாகர்.
தொடரும்…
சரி சங்கவி வந்தாச்சு சொல்ல வேண்டியதுதானே நாளையாவது சொல்லட்டும் இல்லை இதுவரை வந்தது நினைவோட்டமில்லையே....
ReplyDeleteஎதற்க்கும் நாளைக்கு வருகிறேன் பார்கிற்க்கு.
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எங்கே..! சங்கவிதான் அவனை எதையும் சொல்ல விடாமல். இடையிடையே பேசிக் கொண்டேயிருக்கிறாளே.! அதையும் மீறி அவனால் அவன் நிலைமையை பட்டென்று உடைக்க முடிகிறதாவென்று பார்ப்போம் நாளைய பதிவில்.
நாளையும் தொடர்ந்து வந்து வாசித்திட வேண்டுகிறேன்.சகோதரரே. நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இவ்வளவு புரிந்து கொள்ளும் சங்கவியை இழக்கலாமா பிரபாகர்? இது உனக்கே நியாயமா? வாழ்க்கையில் சந்தோஷம் எங்கிருக்கிறது என்று தெரியாதவனாயிருக்கியே பிரபாகரா....!!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தன்னுடைய ஆசைக்காக, மகிழ்வுக்காக மற்றவரை புரிந்து கொள்ளாமல் தேடி வரும் சந்தர்பங்களை தவற விட்டு விட்டு, காலம் கடந்த பின் சூரிய நமஸ்காரம் செய்வது மனித இயல்புதானே.
தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றி. நாளையும் வாசித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன்.
நன்றிகளுடன்,
கமலா ஹரிஹரன்.
அடடா...! இன்றும் முடிவு தெரியாமல் போச்சே...!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
\\அடடா...! இன்றும் முடிவு தெரியாமல் போச்சே...!//
நாளை எண்பது சதவீதம் தெரிந்து விடுமென்று நினைக்கிறேன். தெரிகிற மாதிரி கதையின் நகர்த்தலும் இருக்கும் எனவும் நம்பி எழுதுகிறேன்.
என் நம்பிக்கைகாக, நாளையும் தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டால் நன்றிகள் பலவுடன் மகிழ்வடைவேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் சகோதரி பதிவினை காண்பதற்கு!
ReplyDeleteபாரிசில் பட்டிமன்ற தர்பார்
http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் சகோதரரே.!
ReplyDeleteபதிவினை தங்கள் பதிவில் சென்று படித்து விபரம் அறிந்து வந்தேன். மனம் சுமையானது.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
உங்கள் தளத்திற்கும் வந்து விட்டேன் சகோதரி.கதை அருமையாக இருக்கு .
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அருமை என்ற பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து நாளையும் வாசித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன். நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.