Friday, April 24, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 7)

முந்தைய பகுதியின் முடிவு

ஏய்…! என்ன விளையாடுறியா..? எப்படி இந்த மாதிரியெல்லாம் உனக்குத் தோணுது..? இப்போது உண்மையிலேயே கோபப்பட்டான் பிராபகர்.

இன்றைய தொடர்ச்சி..

ஒரு நிமிஷம் கோவபடாமே, நான் சொல்றதை கேளுங்க பிரபா! என் வீட்டிலும் சரி! உங்க வீட்டிலும் சரி! நம்மளை நம்பி நாலு பேர் இருக்காங்க! சங்கவி சொன்ன மாதிரி, நம்மை இத்தனை நாள் வளர்த்து விட்டவங்களுக்கு, பிரதி உபகாரமா, நாம என்ன செஞ்சோம்..? அவங்க ஆசைகளை மதிச்சு நடக்காமே, அவங்க எதிர்பார்ப்புக்கு மரியாதை தராமே, நம்ம சுயநலத்தை மட்டுமே மனசுலே வச்சிகிட்டு, அவங்களை எதிர்த்துகிட்டு வாழ்ந்து என்னத்தை சாதிக்க போகிறோம்..? நம்மை பெத்தவங்களுக்காக, நம்ப ஆசையை தியாகம் செஞ்சு அவங்களை சந்தோசபடுத்தக் ௬டாதான்னு, எனக்குத் தோணறது..! நம்ப ரெண்டு பேர் நிம்மதிக்காக, சந்தோசத்துக்காக நம்மை சுத்தி இருக்கறவங்க நிம்மதியெல்லாம் பறிக்கனுமான்னு, தோணறது..! பேசாமே நீங்க உங்க வீட்டுலே பண்ணிண ஏற்பாடுபடி சங்கவியை திருமணம் செஞ்சுகிட்டு உங்க வீட்டுலே உள்ளவங்களை சந்தோசபடுத்துங்க..! அதுதான் நல்லதுன்னு எனக்கு படுது..! என்றவள் மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் நீர் தழும்ப தடுமாறினாள்.

பேசி முடிச்சிட்டியா.? இன்னும் பாக்கி இருக்கா..? நீ இப்ப ரொம்ப குழம்பி போயிருக்கே.! நாளைக்கு, பிரச்சனையை எப்படியாவது சால்வ் பண்ணிட்டியானா, அப்பறம் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை..! புரியிதா..? வீணா, அவங்க பாவம், இவங்க பாவம்ன்னு மனசை போட்டு வருத்திக்காதே..! எல்லாம் நல்லபடியா நடக்கும்..! என்று அவளை தேற்றி வீட்டுக்கு அனுப்பினாலும், நாளை என்ன நடக்கப் போகிறதோ..! என்ற கலக்கம் பிரபாகரின் முகத்திலும் அப்பட்டமாக ஒட்டிக்கிடந்தது.

மறுநாளுக்கு மறுநாள் காலை அலுவலகம் வந்த பிரபா, அருணாவின் வரவுக்கும், அவள் வீட்டின் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளவும் ஆவலோடும், அலுவலக வேலையில் கவனமின்றி ஏதோ செய்து கொண்டிருந்தான். அவள்  வந்து நல்ல செய்தி சொன்னதும்  சங்கவியை அதே இடத்துக்கு வரச்சொல்லி, அருணாவுடன் சென்று தங்கள் நிலைமையை விளக்கினால், சங்கவி புரிந்து கொண்டு தங்கள் காதலை ஆமோதித்து பிரச்சனையை தீர்க்க ஒருவழிகாட்டுவாள்.  அன்று அவளிடம் பேசிய பிறகு தன் மனதில் எழுந்த முடிவின்படி சங்கவி மிகவும் நல்லவள் என்ற எண்ணம் அத்தனை கவலையிலும் சிறு சந்தோஷம் தந்தது. அவளையும்  வேறு  நல்ல இடம் பார்த்து  திருமணம்  செய்து கொள்ள வறுப்புறுத்த வேண்டும்.”  இப்படி ஏதேதோ எண்ணமிட்டபடி சுவரில் இருந்த மணியை பார்த்தவனுக்கு  இந்த  அருணா ஏன் இன்றும் வரவில்லை ? இன்றும் விடுமுறை எடுத்து விட்டாளா ? என்ற சிந்தனை எழுந்தது. வழக்கபடி அருணா வரும் நேரம் தாண்டியதும் அவனின் மனக்கவலைகள் சிறகடித்து பறக்கத் துவங்கின. அந்த நேரம் அலுவல பணியாள் ஒருகடிதத்தை கொண்டு வந்து அவனிடம் தந்து விட்டு அகன்றான்.

அன்புள்ள பிரபாவுக்கு,

உங்களை சந்தித்து நேரடியாக பேசும் தைரியம் எனக்கில்லை! ஆதலால் இக்கடிதத்தில், என் உள்ளத்தின் தவிப்பை உணர்த்துகிறேன். நேற்று அப்பா பார்த்திருந்த அவர்கள் வீட்டிலிருந்து பெண் பார்த்து விட்டு சென்றனர். நீங்கள் சொன்ன மாதிரி, “நான் ஒருவரை விரும்புகிறேன். அதனால் இத்திருமணத்திற்கு தங்கள் ஒப்புதலை அளிக்காமல், என்னை பிடிக்கவில்லை என்று மட்டும் ௬றி விடுங்கள்.என்று நேற்று என்னை பெண் பார்க்க வந்தவரிடம், தனிமையில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்ட போது, எத்தனையோ எடுத்துக் ௬றியும், அவர் மீண்டும் பிடிவாதமாக, கேட்டதற்கிணங்கி உங்களைப்பற்றிய விபரங்களையும், நம் திருமணத்தில் எழுந்த சிக்கல்களையும் விவரித்து ௬றினேன். அப்படியும் அவர் என்னைப் பிடித்திருப்பதாக, என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு மேற் கொண்டு பேசலாம்என்பதாக சொல்லிச்சென்று விட்டார். அப்பாவும் அவருடைய அப்பாவுடன் விரைவில் பேசி என் திருமணத்தை முடித்து வைக்கும் ஆவலில் இருக்கிறார். அவர்கள் எல்லோரும் சென்றபின் நான், “எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் அப்பாஎன்று அப்பாவிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னவுடன், “என் மரணத்திற்குள், என் ஒரு மகளையாவது நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து பார்த்து விட நினைக்கிறேன்,! உனக்கு நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால், எனக்கு ஏதாவது ஒன்று ஆனாலும், உன் இரு தங்கைகளின் வாழ்க்கையை நீயும், மாப்பிள்ளையும், முன்னின்று இருந்து நல்லபடியாக பார்த்துக் கொள்ள  வசதியாய் இருக்குமென்றும், அதனால் இந்த இடத்தை நீ தயவு செய்து தட்டிக் கழிக்காதே..! அப்புறம் என்னை உயிரோடு பார்க்க முடியாது..!என்று  என்னென்னவோ சொல்லி என்னைப்பேச விடாமல் செய்து விட்டார். வேறு வழியில்லை…! நான் ௬றியது மாதிரி நாம் இருவரும் நம் பெற்றோரின் சொல்லை மதித்து நம்வாழ்க்கைப் பயணத்தை துவங்கவேண்டியதுதான்..! அதுதான் நம்மை பெற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்…! அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால், அதிலாவது நம்விருப்பம் நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும். இனி என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம். என் வேலையை விட்டு விடும்படி, அப்பா சொல்லிவிட்டார். வேறு வழியின்றி நான் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுப்பு எடுத்துள்ளேன். எனவே இனி என்னை அலுவலகத்தில் எதிர்பார்க்க வேண்டாம்..! இத்தனை நாள் நாம் பழகிய பழக்கத்திற்காக, உள்ளத்தில் தூய்மையாக நேசித்த அன்புக்காக முடிந்தால் இக்கடிதத்தை படித்தவுடன், கிழித்து எறிந்து விடவும்..! உங்களிடம் கடைசியாக நான் வேண்டும் உதவி அது ஒன்றுதான்..! அதை மட்டும் தயவு செய்து நிறைவேற்றி, உங்கள் வீட்டில் பேசி முடித்திருக்கும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, உங்களை பெற்றவர்களின் மனங்குளிர, புது வாழ்வில் பழையதை மறந்து, வாழ வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்…!

இனி என்றுமே
நேரிலோ, கைபேசியிலோ, என் முடிவை தெரிவிக்க,
தைரியமில்லாத அருணா


அருணா தனக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தை, படித்து முடித்த பிரபாகர் அதிர்ச்சியில் உறைந்து போனான்


தொடரும்

8 comments:

  1. அச்சச்சோ... பாவம் பிரபா... ஆனால் நல்ல முடிவுதான்! காதலுக்கு மரியாதை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் முதல் வருகை தந்து, கருத்துப்பகிர்வு தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரபாவுக்கு பாவபட்டு விட்டு, சங்கவியை மணந்து கொள்ள அருணா பரிந்துரைத்தது நல்ல முடிவு என்கிறீர்களே...! அருணா அந்த முடிவை எடுத்ததுதான் காதலுக்கு மரியாதையா. ?

      சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அய்யய்யோ... இதயத்தை கிழித்து ஏறிய முடியாதே...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதயத்தை ௬ட கிழித்து தைத்து விடலாம். ஆனால் காதல் கோட்டை தகர்ந்து விட்டால் மீண்டும் சேர்க்க முடியாதே!
      நாளை நடப்பதை ஆண்டவனின்றி யாரறிவார்.?

      சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆஹா கதை வேற ரூட்டுல போகுதே.... விதி யாரை விடும். பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மை..! இந்த விதிதான் சகோதரரே.. நம்மையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. போற ரூட்லே போனாலும், விதி பழைய ரூட்டுக்கே அழைத்து வந்தால் நலம்..இல்லையா.?

      சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சூழலுக்கு ஏற்ற முடிவு போல, பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நடக்கும் சூழல் மாறி அனைவரின் மனம் போல நல்லதே நடந்தால் மகிழ்ச்சிதான். உண்மைதானே சகோதரி.! நம்புவோம்.

      சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete