Thursday, March 19, 2015

ஒற்றுமை உபதேசம்...

எட்டுப் பறவைகள் நாங்கள். தினமும்,
எட்டும் வரையிலும்  வானில் சிறகடிப்போம்..
எட்டி வைக்கும் உறவில்லை நாங்கள்எங்களில்
எட்டிக்காயாய் எவரையும் வெறுத்ததில்லை.. நாங்கள்,

உண்ணும் உணவுக்கு ஏதும் பஞ்சமில்லை.. மற்ற
உடமைகள் எதுவும் கை விலங்கில்லை எமக்கு....
பட்டினிதான் இன்று என்றந்த நிலைவரும் போதும்.
பகிர்ந்துண்டு வாழும் நல்ல பக்குவ மனமுண்டு எமக்கு.. 

பேதங்கள்  என்றுமில்லா வாழ்விங்கு கண்டு,      
பேரின்பமாய் வாழ்ந்த  தாய் தந்தை  வழி சென்று,
முன்னோர் சுட்டிய  பாதையை மறவாதுமனதினிலே
முகஞ்சுழிப்பும்மற்றும் முணுமுணுப்பும்  ஏதுமின்றி,

மரங்களுடன்மட்டில்லா பசும் காடுகளை, நீங்களெல்லாம் 
மனத்தகத்தில்  கழிவிரக்கம்  சிறிதன்றி, சுயநலப்போர்செய்து
மதியின்றி கசடிதுவே என நினைத்து தினம் களைந்தும் ,
மறுவாழ்வும் எமக்குமுண்டு என ஐயமின்றி வாழுகிறோம்

பிறப்பெய்தும் பல உயிரை படைத்ததும் அவன் செயலே…! இதில்
பிரிவென்ற பல தவறை செய்வதும் நம் வினையே.! இயற்கையும்
பிறவிதான் என்பதை  ஒருபோதும் மறக்காமல், வேதனைகள்
பிறரையும் வருத்தும் என ஒரு நொடியேனும் நினையுங்கள்

ஒற்றுமையின்  வலிமையை  அன்றொரு நாள் மனிதனுக்கு,
ஓங்கிச் சொன்னது எங்கள் இனம்அறிவுகள் ஆறிருந்தும்,
ஒற்றுமையில்லா  பிரிவுகள்பிரச்சனை பிரசவித்த மனபேதங்களும்
ஓங்கிப் பெரிதாக, காடென்றும் மேடென்றும் பாராமல்,

தனியாகிப் போனது உங்கள் இனம்தடையென்றும்,
தவறென்றும்தறிகெட்டு  நாங்கள்  ஒன்றாகி  சூழ்ந்தால்,
வானம் இருண்டு விடும்.. பூமியும் அரண்டு விடும்.. ஆனால்
வார்த்தையிலேனும் அவ்விதமாய் ஏதும் சொல்லோம்.. ஏனெனில்,
  

ஒற்றுமையை தீயதாக்கி வஞ்சம் தீர்க்க எங்கள் மனம்
ஒரு பொழுதும்  நிச்சயமாய் ஒப்பவில்லை.. மாறாக,
ஒற்றுமைக்கு எங்கள் கதைகள், இன்னும் ஏதேனும்
ஒன்றிரண்டு உள்ளதென்றால், உங்கள்  குலம் சிறப்புறவே,
  
தனிமை பெரும் தடங்கலென்று, தத்துவமாக அதைச்சொல்லி,
தனித்துப்போகும் தவறதனை திருத்தி, தாவரம் அழிக்காத பண்பைக்௬றி,
தப்பாமல் எங்களின் நிலையுணர்த்தி, எங்கள் வம்சமும் இனி அழியாது,
தரணியில் நாம் பிறந்த பயனை ஒருமையாக்கி இனி வாழுவோம்..!
  
பறவைகளின் உபதேசம் வீணென்று பரிகாசங்கள் ஏதும்,
பகன்றிடாமல், பகலிரவு என்றும் பார்த்திடாமல், பலமாய்
யோசித்து பலன் பெறுங்கள்…! ஒற்றுமையின் வலிமைகள் மீண்டும்
யோசனைகளுடன் சிறந்திருக்க படைத்தவனை தினம்  நாங்கள் யாசிக்கிறோம்! எங்கள் சிறகுகள் என்ற  மலர் கொண்டு  பூஜிக்கிறோம்...


படங்கள்: நன்றி கூகுள்

25 comments:

  1. ஆஹா சிறப்பான படங்களுடன் அழகான வார்த்தைகளில் வடித்த கவி.
    தொடருங்கள் கவிதையை தயக்கம் ஏன் ? கவிதை வடிக்க....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்...படங்களை பாராட்டியதற்கும், வரிகளை ரசித்தமைக்கும், நன்றி கலந்த மன நிறைவில் மன மகிழ்கிறேன்.. நன்றி...!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...
      ரசித்துப்படித்து, படித்தேன், ரசித்தேன் என கருத்திட்டிருப்பது மகிழ்வைத்தருகிறது. கருத்துக்களை தொடர்ந்தால் நானும் மகிழ்வேன். நன்றி....

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அருமை... ரசித்தேன்... மகிழ்ச்சியில் பறந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் அருமை என பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே..!

      \\ரசித்தேன்... மகிழ்ச்சியில் பறந்தேன்..// என்ற பாராட்டுதலுக்கு நானும் சந்தோசக்கடலில் மிதந்தேன்..உளமார்ந்த நன்றிகள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  4. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி, என் தளம் வந்து அன்புடன் அதைச் சொல்லி சென்றமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      தங்களுடைய கருத்துக்கள் என் எழுத்தை வளமாக்கும் என நம்புகிறேன்...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      இன்றைய வலைச்சரத்தில் என் அறிமுகம் கண்டு என்தளம் வந்து வாழ்த்துக்கள் உரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      நன்றியுடன்,
      கமலாஹரிஹரன்.

      Delete
  6. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்கள் ! கவிதையும் மிக அருமை. தொடருங்கள் நானும் உங்களை தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

      வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும், இனி என் பதிவுகளை தொடர்கிறேன் என்றதற்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோதரி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அருமை... அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், கவிதை அருமை என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      தங்களின் கருத்துக்கள் என் எழுத்துக்களை மென்மேலும் மேன்மையாக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் தொடர வேண்டுகிறேன் நன்றிகள்....

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. The birds that fly in a formation of symetry kindles such noble thoughts that we mortals can hardly emulate.
    Koodi vaazndhaal kodi nanmai
    For ourselves and all those with whom we are privileged to live
    I thought of singing at least the first few stanzas
    But let me wait for your permission
    Continue your journey with added zeal and enthusiasm
    Subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ௬டி வாழ்ந்தால் கோடி நன்மை எனும் கருத்தை நானும் ஏற்கிறேன்.
      வரிகளை ரசித்து கருத்திட்டமைக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம்
    சகோதரி

    படத்துடன் கவிதை ஆலவட்டம் பிடிக்கிறது... மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்க்ள தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் தாமதமாகத்தான் கருத்துக்கு பதில் தந்துள்ளேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. இரண்டு வாரம் ஆகி விட்டதே....... பதிவுகளை காணோமே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தாங்கள் மறு வருகை தந்து என்னைப்பற்றி விசாரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் விஷேசங்களினால் என்னால் இந்தப் பக்கம் வந்து பதிவிடவோ, அனைவரின் பதிவுகளுக்கும் கருத்துக்கள் ௬றவோ இயலாமல் போய் விட்டது. நேற்று தங்கள் பதிவொன்றிக்கு கருத்திட்டு என் வருகை தாமதத்திற்கு காரணம் சொல்லி வந்தேன். மற்ற பதிவுகளையும் மற்றும் அனைவரின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து கருத்திட்டு வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான பகிர்வு.

    ஒற்றுமை மட்டும் இருந்துவிட்டால் மனிதகுலம் முன்னேறி விடுமே.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் அருமை என பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். தன் பகுத்தறிவால், ஒற்றுமையை வளர்த்துக் கொண்டால் மனித குலம் நிச்சயம் முன்னேறியிருக்கும்.. பறவைகளிடமும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அன்பு சகோதரி.!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தாங்கள் என்தளத்திற்கு வருகை தந்து கவிதையால் சித்திரையின் வரவிற்கு அழகு செய்து எனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துரைத்து சென்றதற்கு என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete