கண்ணனின் சிறப்பைக்௬றும், குகைக்கோவில், அல்லது குகை வடிவில் அமைத்தக்கோவில் இங்கு நான் பார்த்த இந்த கோவில்..! கோவர்த்தனா கோவில் என்ற பெயருடன் உள்ளது. சிறப்பான அந்தக் கோவிலின் மத்தியில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி (மலை) யை தன் இடது கையின் சுண்டு விரலால் தாங்கியபடி நின்றிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
தேவகிக்கு மகனாய் பிறந்து, கோகுலத்தில் ஆயர் பாடி சிறுவனாய், யசோதையிடத்தில் பாசமாக வளர்ந்து வந்தார் பகவான் கிருஷ்ண பரமாத்மா. குறும்புகள் பல செய்து அனைவரின் மனம் கவர்ந்து, யாதவர்களின் இடர் களைந்து, தன்னை அழிக்க வந்த அசுர சக்திகளை விளையாட்டுத்தனமாய், சிறிதும் பயமின்றி அழித்து யாதவர்களை வியக்குமாறு செய்வதே கண்ணனின் சிறுவயது லீலைகளாய் இருந்தது.
அவ்வாறு ஒரு தடவை யாதவர்கள் எப்போதும் மழை சுபிஷ்டமாக பெய்ய வேண்டி, யாகங்கள் செய்யும் சமயம், தேவேந்திரனுக்கு அழித்து வந்த மரியாதையை செய்ய மறந்து, அந்தவிழாவை கொண்டாடியதால், கோபமுற்ற தேவேந்திரன், கண்ணின் லீலைகளில் மயங்கித்தான் தன்னை அவர்கள் மறந்து விட்டனர் என்ற எண்ணம் கொண்டு அவர்களை பழி வாங்கும் விதத்தில், பெரு மழையையும் காற்றையும் உண்டாக்கி யாதவர்களை நடுங்க வைத்தான்.! சற்றும் நிற்காமல் சீறிப்பாயும் விதத்தில் மழையும், காற்றும் ஒருசேர கோகுலத்தை அழிக்க வந்த அசுரனின் மனோ பாவத்தில் நர்த்தனமாடியதில்,யாதவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பயிர்கள் மூழ்கின..அவர்களின் ஜீவாதாரமாகிய கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெளியில் தலை காட்ட முடியாமல், யாதவர்கள் அனைவரும் சில நாட்கள் பொறுத்தபின், இனி அது இயலாத செயல் என்பதால், அரக்கர்களிடமிருந்து தன்னையும் காத்துக் கொண்டு, தம்முடைய நலன்களையும் காத்து ரட்சிக்கும், கிருஷ்ணனிடம் அடைக்கலமாயினர்.
கிருஷ்ணா, மாதவா, கோவிந்தா, ஆபத்பாந்தவா, அனாதைரட்சகா, நீ சிறுவனாய் இருந்தாலும், எங்களை ஆபத்துகளிலிருந்து அனேகமுறை காத்திருக்கிறாய்.! இந்தமுறையும் இயல்பாய் இயற்கை அமைதி கொள்ளும் என்று நாங்கள் பொறுத்திருந்தோம்.! இனி அது நடவாத செயல் என்பதை உணர்ந்து கொண்டோம். வீடு வாசலிலிருந்து கால்நடைகள் மற்றைய செல்வங்கள், ஏன் எங்கள் உயிர்களையும் இழந்து விடும் அபாயம் எங்களை சூழ்ந்துள்ளது. வீடு வாசலைக்௬ட காத்துக்கொள்ள நாங்கள் செய்த முயற்சிகள் வீணாகி விட்டன. கால்நடைகளும் வெள்ளத்தில் போக ஆரம்பித்து விட்டன. இனி நீதான் எங்களை காப்பாற்ற வேண்டுமென முறையிட்டார்கள்.
உலகையே படைத்து அதில் வாழும் சகல ஜீவராசிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் பரமாத்மாவாகிய கண்ணனுக்கு தெரியாதா.? இச் சம்பவம் எதனால் எழுந்தது.? இதை எப்படி முடித்து வைப்பது,! என்று அவன் அறியாததா.? யாதவர்களும், “சிறுவன்தானே! இயற்கையை வெல்லும் சக்தியெல்லாம் இவனிடம் ஏது? என்ற சந்தேகத்தினால் தானே, தம்மால் முடிந்த வரையில் செய்து விட்டு பிறகு தன்னிடம் வந்து அடைக்கலமாயிருக்கின்றனர்.! புன்னகையுடன் அனைத்தையும் செவிமடுத்தார் கிருஷ்ணபரமாத்மா...! எல்லாம் அறிவார் பகவான்.! ஆனாலும் "தம்மை நம்பி தம்மிடம் முழுமையாக சரணடைந்து விட்டவர்களை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை.!" தம் பகைவனுக்கே அவ்விதம் அருளும் மனமுடையவராததால், யாதவர்களும், இந்திரனும் உண்மையை உணர விரும்பி, யாதவர்களை தன்னுடன் வருமாறு அழைத்து கொண்டபடி, சீறும் மழையைப் பொருட் படுத்தாமல், பெரும் மலையாய் அகன்று படுத்து கிடக்கும் கோவர்த்தன மலையை நோக்கி நடந்து சென்றார்.
யாதவர்கள் அனைவரும் கையில் கிடைத்த செல்வங்களுடன், மிச்சம் மிகுதியாக இருக்கும் கால்நடைகளுடனும், மனைவி மக்கள் சுற்றம் சூழ ஒன்றும் புரியாமல், கிருஷ்ணனை பின் தொடர்ந்தனர். இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும், தம்செயல், தம்வழி, தம்மால்தான் எதுவும், என்ற ஆணவத்தை மறந்து விட்டு பகவான் வழி காட்டி அழைத்துச் செல்லும் பாதையில்தானே செல்ல வேண்டும். அது ஒன்றுதானே, என்றும் சாசுவதமானது.! அந்நிகழ்வைதான் அவர் நடத்திக்காட்டியபடி, ஒடிச் சென்று அந்த பெரும் மலையை தம் சிறு கையால் எவ்வித சிரமமின்றி பெயர்த்து அம் மலையின் நடு பாகத்தில் தன் இடது கையின் சுண்டு விரல் ஒன்றினால்,அனாசியமாக தாங்கிப் பிடித்தபடி, “வாருங்கள் ! வாருங்கள்! எல்லோரும் இதற்குள் வந்து மழைக்கு அடக்கமாய் நின்று கொள்ளுங்கள்,! மழை முழுவதுமாய் நின்ற பின் வெளியேறலாம்.!” என்று கனிவாய் அழைக்கவும், மழைக்குப் பாதுகாப்பாய் ஒண்டிக் கொள்ள இடம் கிடைத்த மகிழ்வில் எதையும் யோசிக்காமல், யாதவர்கள் ௬ட்டங்௬ட்டமாய், தத்தம் பொருட்களுடன், அந்த மலைக்குள் சரணடைந்தனர்.! அச்செயல் சகல ஜீவன்களும் பரமாத்துமாவாகிய "அவனுள்" அடக்கம் எனும் உண்மையை உணர்த்தியது.
கோபத்தில் கொந்தளித்து போயிருந்த இந்திரன் இதையெல்லாம் பார்த்தான். "கோபம் எப்போது ஒருவனின் கண்ணை மறைக்கிறதோ, அச்சமயம் அவனது ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு முழுவதும் மறைந்து விடும்..!" அந்த இயல்பின்படி கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த இந்திரன், யாதவர்கள் பாதுகாப்பாக காக்கப்படுவதை கண்டான். இது சாமான்யமான ஒரு மனிதனால், அதுவும் ஒரு சிறு வயது பாலகனால், செய்யக்௬டிய செயலல்ல! யாதவர்களின் மேலிருந்த கோபத்திரை படிப்படியாக அகல, பரந்தாமன் கிருஷ்ணாவதாரமாக, பிறந்திருந்த செயல் மறந்திருந்த அந்த அறிவினில் உதயமானது.. பரந்தாமனின் கோபத்திற்கு இன்னும் ஆளாகாமல் தப்பிக்க மழையையும், சுழலும் காற்றையும். நிறுத்தியபடி பெருமானின் பாதார விந்தங்களை வந்து பற்றியபடி சரணடைந்தான். “கண்ணா, பரந்தாமா, தீனதயாளா, நீயார்? என்பதை என் கோபத் தீ மறைத்ததினால், என் மனம் போனபடி நடந்து கொண்டு விட்டேன். என்னை மன்னித்து என்ன தண்டனை வேண்டுமானலும் கொடு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மன்னிக்க மாட்டேன் என்று மட்டும் ௬றி விடாதே.!” என்று கதறியபடி காலில் விழுந்த இந்திரனை பார்த்து கிருஷ்ணர் புன்னகையுடன் ௬றினார். “சரி! மன்னித்தேன். இனி எப்போதும் இத்தவறு செய்யாதே .! யாதவர்களின் வாழ்கைக்கும், வசதிக்கும் வேண்டிய மழையை தருவித்து அவர்களின் வளத்திற்கு பங்கம் வராமல் நடந்து கொள்.!” என்று மன்னித்தருளினார்.
அப்போது தான் கிருஷ்ணர் தன் ஒரு கை விரலால் பெரிய மலையை தாங்கியபடி தங்களை காத்தருளியதை உணர்ந்து கொண்ட யாதவர்கள், பரந்தாமனை ஒரு சிறுவனாக பாவித்ததை மனதாற உணர்ந்தவர்களாய், அவன் துதிகளைச் சொல்லி அவன் காலில் விழுந்து சரணடைந்து மன்னிப்பு கேட்டனர். அவன் புகழ் பாடி அவனை தோளில் சுமந்தபடி கொண்டாடினர். இவ்விதமாக லீலைகளை செய்தபடி யாதவர்களின் நண்பனாக, சுற்றமாக, யாதுமாக பகவான், தான் அவதரித்த நோக்கத்திற்காக அவர்களுடன் வாழ்ந்திருந்தார்..!
இந்த கிருஷ்ணனின், லீலைகளை, நான் பார்த்த அந்த குகை கோவிலின் சுவர்களில் அழகாக ஓவியங்களாய் செதுக்கியிருக்கிறார்கள்..! பெங்களூரில் பசவனகுடி என்ற இடத்தில் இந்த கோவில் உள்ளது. இது குறித்து தகவல்கள் ஏதேனும் ஒரு பதிவில் ஏற்கனவே வெளியாகி யிருக்கலாம். ஆனாலும் என் பதிவிலும் இட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்..
கோவர்த்தனா ஆலயத்தின் கண்ணனின் பெருமைகளை கூறும் குகை ஓவியங்களும், அதன் விளக்கவுரைகளும் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteசிற்பங்கள் அருமை.
இனிய மகளிர் தின வாழ்த்துகள்,
அன்புடன்
கில்லர்ஜி
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அருமை என பாராட்டியமைக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.
என்னை மென்மேலும் எழுத ஊக்குவிப்பதற்கும், நன்றிகள்.
மகளிர் தின வாழ்த்து உரைத்தமைக்கும் என் சிறப்பான நன்றிகள்..
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கோவர்த்தனா குகை ஆலயம் அழகாக இருக்கிறது. கிருஷ்ண லீலைகளின் சிற்பங்கள் கலைநயத்துடன் கண்களுக்கு விருந்தாய் இருக்கிறது. கோவர்த்தனகிரியின் லீலையின் கதையையும் அழகாய் எடுத்துரைத்திருக்கிறீர்கள். அருமை சகோ
ReplyDeleteவணக்கம் சகோதரி..!
Deleteஎன் கருத்தினை ஏற்று உடனடி வருகை தந்து, என் பதிவினை ரசித்துப் படித்து தந்த கருத்துப் பகிர்வுக்கும், அருமை என பாராட்டியமைக்கும். என் உளமார்ந்த நன்றிகள் சகோதரி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பசவனகுடி இதுவரை சென்றதில்லை... அழகான படங்கள் மூலம் சிறிது திருப்தி... நன்றி...
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..
பெங்களூர் வரும் போது பசவனகுடியிலிருக்கும் கோவில்களை தரிசிக்கலாம்..சமயம் ஏற்படும் போது வாருங்கள் சகோதரரே.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சிறப்பான சிற்பங்கள் - படம் எடுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபசவனகுடி குகைக் கோவில் சென்றதில்லை. உங்கள் பகிர்வு மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுதலுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இடைவெளிக்கு பின் தாங்கள் வருகை தந்து என் பதிவை பாராட்டியது மன மகிழ்வை ஏற்படுத்தியது. நன்றி..
உங்களைப் போன்ற பிரபல பதிவர்களின் உற்சாக வார்த்தைகள்தாம், என் எழுத்துக்களை மேலும் மேம்படுத்தும் என நினைக்கிறேன்..மிக்க நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அழகான படங்கள்... நன்றி...
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அழகான படங்கள் என பாராட்டியமைக்கும் நன்றிகள்.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
அழகான சிற்பங்கள் ! அருமையான பதிவு ! எனது வலைப்பூவுக்கும் வரலாமே !
ReplyDeleteவணக்கம் சகோதரி.!
Deleteதங்கள் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களின் வலைப்பூவிற்கும் வருகிறேன் சகோதரி..!
நீங்களும் என் தளத்தை தொடர்ந்தால் சந்தோஷமே..!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.