Saturday, March 7, 2015

அம்மா



அம்மா…!


ம்மா அங்குமிங்கும், டென்சனாய் பறந்து கொண்டிருந்தாள். நாலு மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து வருவதாக தகவல் நேற்றே வந்து விட்டது. அம்மா அந்த எண்ணத்தில் நேற்றிலிருந்தே முழ்கி விட்டாள். இன்று மதிய உணவு முடிந்ததிலிருந்தே, வருபவர்களுக்காக, இனிப்பு கார வகைகளை தயாரிப்பதிலிருந்து ,பூ ,பழம்,இத்யாதி வாங்கி வர வெளியிலும், அலைந்து கொண்டே, நடுநடுவே வீட்டிலும் அனைவரையும் விரட்டியபடி காலில் சக்கரம் இல்லா குறையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்..! “ஏம்மா .! இப்படி? கொஞ்சம் ௬லாதான் இரேன்.! என்றான் சந்துரு.

னக்கென்னடா தெரியும்.! அந்த காலத்தில் இப்படி கல்யாணம் பேசி முடிக்க வருகிறார்கள் என்றால், வீடே அமர்க்களப்படும். பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, என்று உறவுகள் சூழ அன்றே கல்யாண களை கட்டி விடும். பெண்ணை கட்டிக்கொடுத்து கண்ணாற வாழ்றதை பாக்கறது என்றால் சும்மாவா.? நீ அப்படியே நின்னுகிட்டு இருக்காமே, அந்த சேரையெல்லாம் அப்படி சோபா பக்கத்துலே வரிசையா போடு. ! அவங்க வீட்டுலேயிருந்து எத்தனை பேர் வர்றாங்களோ? நேத்து பேசும் போது எப்படியும் ஆறு பேர் கண்டிப்பான்னு அவங்க வீட்டிலே சொன்னாங்க.! இன்னைக்கு ௬ட ரெண்டு பேர் சேர்ந்திருக்கலாம்.! என்ற அம்மா பதிலெல்லாம் எதிர்பாராமல், காற்றினும் வேகமாக வாசல் பக்கம் சென்றாள். வாசலில் நின்று கொண்டிருந்த அப்பாவை ஏதேனும் வேலை வாங்கத்தான் இருக்கும்என சந்துரு லேசாக சிரித்துக் கொண்டான். 

அம்மா எப்போதுமே இப்படித்தான்.! இந்த கல்யாண பேச்சுகள் ஆரம்பித்தலிருந்து, ஒவ்வொரு தடவையும் கேசரியும், பஜ்ஜி அல்லது வடைகளாக பண்ணி வைத்துக் கொண்டு அவர்களை நல்ல நேரத்தில் வரவேற்பதிலிருந்து, வந்து பார்த்து விட்டு போன பின், அவர்களின் விருப்பத்தை அப்பாவை விட்டும், தானும் நாசூக்காய் பல தடவை கேட்ட பின் அவர்கள் ஒத்து வரவில்லை யென்றால், “போகிறது! அவர்ளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் பண்ண கொடுத்து வைக்கவில்லை.!” என்று சாமாதானம் சொல்லியபடி வேறு இடத்தில் பேச ஆரம்பித்து விடுவாள். சந்துரு ஒவ்வொரு தடவையும் சொல்லி பார்த்து விட்டான். “சாதரணமாக இரும்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணாதேவென்று.” அம்மா கேட்டால்தானே! 

உள்ளிருந்து தங்கை சியாமளா அலங்கார தேவதையாய் எட்டிப் பார்த்தாள். வெளியிலிருந்து அதே பரபரப்புடன் வந்த அம்மாவிடம், “அம்மா.! நான் எப்படி இருக்கிறேன்.? இது போதுமா? இன்னும் கொஞ்சம்…” என்றதும் சந்துரு பொறுமை இழந்தவனாய், “போதாது! பேசாமே ப்யூட்டி பார்லருக்கு போய் கல்யாண பெண் மாதிரியே மாறி வா!” என்றான் சற்று கடுப்பாக.

பாரும்மா.! இவனுக்கு என்ன வந்தது.? என்னை எப்படி கிண்டல் அடிக்கிறான் பாரு! என்று பதிலுக்கு அவள் கத்த, “சந்துரு! அவளை ஏன் வம்புக்கு இழுக்கிறே.! ஆமா நீ ஏன் இப்படியே இருக்கே.! நீ முதல்லே நல்ல டிரஸ் பண்ணிட்டு வா.! அவங்க வர்ற நேரம் ரெடியா இருக்க வேண்டாமா.? என்று அம்மா பதிலுக்கு பேச ஆரம்பிக்கும் போதே வீட்டு ஃபோன் அடித்தது.

அப்பா எடுத்துப் பேசியதில், “கல்யாணம் பேச வருகிறவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சற்று தொலைவுக்கு அப்பால் இருப்பதாகவும், எப்படி வர வேண்டுமென விபரமாக வழி கேட்கவும், அப்பா சொல்லி முடித்ததும், அம்மா பரபரப்பின் உச்சிக்கே போய்விட்டாள்.

சந்துரு.! சீக்கிரம் டிரஸ் மாத்திகிட்டு வா.? என்னங்க வாசல்லே போய் அவங்களை வரவேற்க ரெடியா நில்லுங்க.! நானும் இப்ப வந்திடுறேன். சியாமளா.! கொஞ்சம் என் ௬ட கிச்சனுக்கு வா, உனக்கு ஒரு சின்ன வேலை.! என்றவளாய் பதினாறு வயது பெண் மாதிரி உள்ளே ஓட, சந்துரு வேறு வழியின்றி ஆடையை மாற்ற தன் அறைக்கு நகர்ந்தான்.
  
ஆச்சு.! வந்தவர்கள் வந்து, பார்த்து பேசி, அம்மாவின் கைமணமான பஜ்ஜி, காப்பியை புகழ்ந்து கொண்டாடி, வீட்டை சுற்றிப் பார்த்து இன்னும் ஒரு அறை கட்டியிருக்கலாமே, எப்போது வாங்கினீர்கள்.? என்ற மாதிரியெல்லாம், பொதுவாக பேசி, சொந்தங்களின் ஊரைக் கேட்டு, அந்த ஊரில்தான் என் ஒன்று விட்ட அண்ணா இருப்பதாகக் ௬றி, ஓ அவரா..? நல்லா தெரியுமே..! என்று அவரை நினைவு ௬ர்ந்து, முடிவில் நாம் ஒருவருக்கொருவர் நெருங்கி விட்டோம்.! ஏற்கனவே பாதி சொந்தமாகி விட்டோம். இனியும் எதையும் தள்ளிப்போடாமல் திருமணத்தை முடித்துக் கொண்டு, இன்னும் நெருங்கிய சொந்தமாகி விடுவோம்..! என்ற ரீதியில் பேசிச் சென்று பத்து நாட்களாகி விட்டது. அதன் பிறகு அவர்கள் வீடு சென்று பத்திரமாக சேர்ந்தாக வந்த தகவலோடு, அதன் பிறகு ஒரு பேச்சில்லை.! தொடர்பில்லை..!

என்னங்க..! அவர்களுக்கு ஃபோனை போட்டு பதிலை கேளுங்க.! வந்து பாத்திட்டு போய் பத்து நாளாச்சு.! இப்படி தகவல் சொல்லாமே இருக்காங்களே..!” என்னத்தான் செய்றது ..? என்று அம்மா அப்பாவிடம் வருத்தத்துடன் அங்கலாய்பாய் பேசிய அன்றைய தினம் சந்துருவும் விடுமுறையில் வீட்டிலிருந்ததால், சற்றுகோபத்துடன் கத்த ஆரம்பித்தான்.

அம்மா.! ஏம்மா இப்படி செய்றே.? இதை வேலையா போச்சு உனக்கு.! இப்படி கஸ்டப்பட்டு கல்யாணத்திற்கு யார் அழுகிறார்கள் இப்போது.? இப்படி பேசி, பேசி உங்களையும் தாழ்த்திக் கொண்டு,.. என்று முடிக்கும் முன், அம்மா அவசரமாய் அருகில் வந்து அமர்ந்தபடி, “சந்துரு..! அப்படியெல்லாம் பேசாதேடாகல்யாணங்கறது புனிதமான பேச்சு. இதில் அழுகை, கஸ்டம் அப்படியெல்லாம் சொல்லாதே.! உங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறது எங்க கடமையில்லையா..? என்றாள் லேசாக கண் கலங்கியபடி.

சரிம்மா..! அதுக்காக நாம ஏன் இப்படி மாறணும். பொதுவா பொண்ணுங்க வீட்டிலேதான், இப்படி ஒரு எதிர்பார்ப்பு, பயம், அவசரம் எல்லாம் இருக்கும். இங்கே எல்லாம் மாத்தியிருக்கே.? இதுவே சியாமளாவுக்கு நாம இப்படியெல்லாம் நடந்திண்டிருந்தா சரி..!

காலம் மாறிப் போச்சு சந்துரு! நாம இவ்வளவு மாறுதலா இருந்துமே,  இங்கே நம்ம பொண்ணை வாழ அனுப்பலாமா? வேண்டாமான்னு, அவங்க வீட்டுலே எப்படி யோசிக்கிறாங்க பாரு..? மாறி வர்ற இந்த கால கட்டத்திலே, அவங்க அவங்களே தங்களுடைய இஸ்டத்துக்கு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிற, அதை சுதந்திரம்னு சொல்லறதா? இல்லை பக்குவமன்னு சொல்லறதான்னு தெரியாத ஒருநிலை வந்தாச்சு.! இன்னும் நம்ப வீட்டுலே, உன் அப்பா வழியிலும் சரி! என் வழியிலும் சரி! எங்க அப்பா, அம்மா பேச்சை மதித்து அவங்க காட்டிய பாதையில்தான் எங்க வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு குறைவுமில்லை.! அதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் இது வரைக்கும் எங்க பேச்சை எதுக்கும் தட்டாமே வளர்ந்து வர்றீங்க.! அப்படியிருக்கும் போது உங்க இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கையை அமைக்க வேண்டியது எங்க கடமையில்லையா..? இரண்டாவது, உனக்கும் நான் அம்மாதான்!. சியாமளாவுக்கு பண்ற மாதிரி உனக்கும் செஞ்சு வரப் போற பொண்ணை தேடறதல்லே என்ன தப்பு.? எப்படியோ உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைச்சு சியாமளிக்கும் நல்ல இடத்திலே அமைஞ்சுடுத்துனா, நாங்க நிம்மதியா இருப்போம்.! என்னங்க நா சொல்லறது நியாந்தானே.? என்று நீண்ட விளக்கத்துடன் அப்பாவையும் தன் பக்கம் நியாயம் சொல்ல அழைத்தாள் அம்மா.

பாசம் மிகுந்த தன் அம்மாவை பார்த்தபடி, தங்கள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென துடிக்கும் அந்த இரு உள்ளங்களின் அன்பை மறுத்து ஏதும் சொல்ல முடியாத மனமுடன் அமைதியாயிருந்தான் சந்துரு..! இவள் மட்டுமில்லை.! இந்த உலகத்துலே பிறந்த ஒவ்வொரு பெண்ணும், வளர்ந்து பெரியவர்களானதும், தன் பாசம் முழுவதையும் தன் குழந்தைகளுடன் பங்கிட்டு அவர்களுக்காகவே வாழ்ந்து சந்தோசமடைகிறார்கள். அந்த மனோபாவத்தை, பக்குவத்தை அவர்கள் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.. என்ற சிந்தனை அவன் மனதில் ஓடியது. ௬டவே, தன் அம்மாவின் குணத்திற்கு ஏற்ற மருமகளும், மருமகனுமாய், வந்து அமைய வேண்டுமே, என்ற ஆதங்கமும் வந்து சேர்ந்து கொள்ள. அந்த தாயின் பாசத்திற்காக அதை சுமூகமாக நிறைவேற்றி வை.. எனக் கடவுளிடம் வேண்டும் போது, அப்படித்தான் நடக்கும்! என்ற நம்பிக்கை கீற்றும் அவன் மனதில் உதயமானது.

வணக்கம்...

அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! மகளிர்தினப் பதிவாக அன்னையரைப்பற்றியா...? என எண்ண வேண்டாம்..
அனைத்து மகளிரும், ஒரு அன்னையராவது இயற்கைதானே..!
மகளி(ன்)ரின் சிறப்பே அன்னை என்ற வார்த்தையில்தானே அடங்கி உள்ளது..

நன்றி
 

   படங்கள் ------- ௬குள்.!  நன்றி.! 
 

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மகளிர் தினவிழாவை அழகாக கல்யாணவீடு போல் அலங்கரித்து வந்தவர்களுக்கு கேசரி, பஜ்ஜியோடு அழகான விருந்து கொடுத்து விட்டீர்கள். மகளிர் தின வாழ்த்துகள்.

    குறிப்பு – கேசரி சேசரி என்று இருக்கிறது மாற்றவும், தவறைக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்க...
    கில்லர்ஜி

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே.!

    தாங்கள் உடன் வருகை தந்து, படித்து கருத்திட்டதோடு, மனதாற பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

    மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

    நாளைக்குள் பதிவை வெளியிடும் அவாவில், கேசரியில், மாற்றம் நிகழ்ந்து விட்டது. தற்சமயம் நல்ல கேசரியாக மாற்றி விட்டேன்.

    தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. அம்மாவின் சிறப்பை சொல்லிக் கொண்டே இருக்கலாம்...

    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      உண்மைதான். அம்மாவின் சிறப்புக்களை எத்தனை முறை வர்ணித்தாலும் திகட்டவே செய்யாது.

      மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் சகோதரரே..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அம்மாவின் அன்பு,தவிப்பு,பாசம்,நேசம் என அனைத்தையும் அழகாய் சொல்லி விட்டீர்கள் சகோ. அருமையான கதை மகளிர் தினத்திற்கு.
    மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..!

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

      அருமையான கதை மகளிர்தினத்திற்கு என்று ௬றி, மகளிர் தின வாழ்த்துக்கள் தந்தமைக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அம்மாவின் சிறப்பு சொல்லும் சிறப்பான பகிர்வு.

    கடைசியில் இருக்கும் படம் - மனதைத் தொட்டது....

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      மனதைத் தொட்டப் படத்தை கண்டு பாராட்டியமைக்கும், எனக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ௬றியமைக்கும் மிக்க நன்றி...

      என்றும் நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete