கதையின் 3 ம் பகுதி....
மகன் பேரில் சதாசிவம் வைத்திருந்த அளவு கடந்த பாசத்தை முழுமையாக உணர்ந்தவர் பாலு. அவன் படிப்பிற்காக, அவன் விரும்பும் அவனின் பிற தேவைகளுக்காக, தன் சம்பள பணம் போறாத நிலையிலும் தன் மனைவியின் சில நகைகளை விற்றும், தன் அலுவலகத்தில் ஓவர் டைம்மில் வேலை செய்து சம்பாதித்து கொடுத்தும் அவன் மனம் கோணதபடி வளர்த்து ஆளாக்கியவர். அவனும் இவருடைய அன்பை புரிந்து இவரிடம் மிகவும் பாசமாக இருந்ததென்னவோ உண்மைதான். நாளடைவில் தனக்கென்று ஒரு எண்ணங்கள், வாழ்க்கை கனவுகள் என வந்தவுடன் அவனுடைய சுபாவத்தில் சில மாறுதல்கள் வந்ததை பாலு சதாசிவத்திடம் உணர்த்திய போது அவர் அதை மறுத்து மகனுக்காக வாதிடுவார். இது அவ்வப்போது இருவருக்கிடேயே நடக்கும் ஒரு விஷயந்தான்....! ஆனால், இந்த தடவை சொந்தமாக சிரமப்பட்டு, தான் கட்டி வாழ்ந்து வந்த வீட்டை விற்று விட்டு மகன் வேற்றுருக்கு அழைத்து செல்ல போவதையும், சதாசிவம் சாதாரணமாக எடுத்துக் கொண்டது பாலுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மகனின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் சதாசிவமும் உணராமலில்லை. ஆனால் அவரின் இயல்பான பொறுமையும் மற்றவர்களிடம் தன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற வைராக்கிய மனப்பான்மையும், அதற்கும் மேலாக தன் மகனிடம் வைத்திருந்த கள்ளமில்லா அன்பும், மகனை பற்றி யார் குறை கூறினாலும், அவரை எதிர்த்து மகனுக்காக பேச வைத்தது.
இருபது நாட்களுக்கு முன்பு அவனுடைய உடன்பிறந்த தங்கையின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்து நேரில் அழைத்து செல்ல வந்திருந்த அவனுடைய அம்மாவிடம், அதுவும் அவனை வயிற்றில் சுமந்து பெற்ற அம்மாவிடம், "என்னிடம் ஏது அவ்வளவு பணம்...? என்னை நம்பியா அவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டாய்.. ? என்னதான் நான் உன் மகன் என்றாலும் நீதான் பணத்துக்காக அன்றே என்னை விற்று விட்டாயே... ஏன் அந்த பணம் போதவில்லையா?" என்று அவன் தாயின் விசும்பலுக்கிடையே கத்திக்கொண்டிருந்த மகனை சதாசிவம் சமாதானபடுத்தி, தன் தங்கையை தனியே அழைத்து சென்று விபரத்தை கேட்ட போது, "தேவைபடும் அந்த பணம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட நாளில் நிச்சயத்திருக்கும் தன் மகளின் திருமணமே நின்று விடும்.. அதனால்தான் அவன் என் வயிற்றில் பிறந்தவன் என்ற உரிமையில் அவனிடம் கேட்டு விட்டேன். மற்றபடி அவனையும் உங்களையும் சங்கடபடுத்தும் எந்த நோக்கமும் எனக்கில்லை அண்ணா.."என்று அவள் மனம் விட்டு பேசி அழுதவுடன் மனம் கேட்காமல், கொஞ்சமும் யோசிக்காமல் தன் மனைவியின் மிச்சமிருந்த கொஞ்ச நகைகளையும் தன் கைவசம் இருந்த கொஞ்ச பணத்தையும், முதலில் வாங்க மறுத்த, அவளிடம் எடுத்து கொடுத்து "கடனாகவாவது வாங்கிக்கம்மா.. உனக்கு எப்ப முடிகிறதோ, அப்ப திருப்பி கொடு.... நான் கொடுத்தால் என்ன....? உன் மகன் கொடுத்தால் என்ன.....? பெண்ணின் திருமணம் தடைபடாமல் நடக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொள். இப்போதைக்கு என்னிடம் சும்மா இருக்கும் இந்த பணம் கல்யாண செலவுக்காவது உதவட்டுமே... வாங்கிக்கோ.." என்று அவளை சமாதானபடுத்தி கொஞ்சம் வறுப்புறுத்திி கொடுத்ததும், அவள் அதை வாங்கிகொண்டு அவர் காலில் விழுந்து வணங்கி "என் உயிர் உள்ளவரை நீங்கள் செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன் அண்ணா..எப்படியும் எங்காவது வேலை செய்து இதை கடனாக நினைத்து கொடுத்து விடுவேன்.. " என்று மனம் உருகி கூறி விட்டுச் சென்றாள்.
இரண்டு நாட்கள் கழித்து தூக்கம் வராத ஒரு இரவில் தன் அறையிலிருந்து வெளிவந்து ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தபடி, மனதின் விளிம்புகளில் முட்டி மோதியபடி வந்த நினைவுகளை ஒதுக்கி அவற்றையும் அமைதியுற செய்து தன் தூக்கத்தையும் வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில் மகன் கொஞ்சம் சத்தமாக தன் மனைவியிடம் அவன் அறையில் பேசியதை யதேச்சையாக கேட்க நேர்ந்ததும் அவர் உண்மையில் அதிர்ந்துதான் போய் விட்டார்.
"அன்று பார்த்தாயா? என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அம்மாவின் நகையையும், தன்னிடமிருக்கும் பணத்தையும் எடுத்து என்னைப் பெற்ற அம்மாவிடம் தாரை வார்க்கிறார். என்னதான் அவரின் ஒன்று விட்ட தங்கை என்ற உறவானாலும், அவர் சொந்த பையனாக நான் இருந்திருந்தால், இப்படி கொடுக்க முடியுமா... , இல்லை கொடுப்பாரா? வளர்த்தவன்தானே..! இவனிடம் என்ன கேட்பது என்ற எண்ணம்.... . இவர் சொத்தில் எனக்கு என்ன உரிமை என்ற அகம்பாவம்.... அதனாலே, நான் சொல்றதுதான் சரி.. ! நாம் சென்னைக்கு போறதுக்கு முந்தி இந்த வீட்டை வித்துட்டு அவரையும் கூட்டிகிட்டு போறதுதான் நல்லது.. ... இவரை இங்கே விட்டுட்டு போனால் இந்த வீட்டையும் யாருக்காவது எழுதி கொடுத்திடுவாரு....! இருக்கும் இந்த ஒரு சொத்தும் போய் விடும்.... " அவன் பேச பேச அவர் மனது உடைய ஆரம்பித்தது.
தொடர்ந்து வரும்....
என்ன இப்படியொரு அதிர்ச்சி!..
ReplyDeleteபெரும்பாலான குடும்பங்களின் இன்றைய சூழல் பிரதிபலிக்கின்றது..
வணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து சிறப்பான கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம்... உண்மைதான்.. பெரும்பாலான குடும்பங்களில் பாசத்தை விட பணந்தான் உயர்வாக இருக்கிறது.தம் குடும்பத்தை விட்டு அது வேறெங்கும் சென்று விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள். தாங்கள் தொடர்ந்து வந்து கருத்துக்கள் தருவது மகிழ்வாக உள்ளது. இனியும் தொடர்ந்து வந்து கதையை படிக்க வேண்டுகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடைந்த மகனின் பிம்பம். இந்த மாதிரி அதிர்ச்சியை நேரிடையாக தன் காதிலேயே கேட்டு விட்டு சமாளிப்பது அதனினும் கொடுமை. தொடர்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை ரசித்துப் படித்து நீங்கள் தந்த கருத்தை கண்டு மனம் மிக மகிழ்ச்சியடைகிறேன். பிறர் சொல்லி கேட்பதை நம்பாத மனம் தன் காதுபடவே கேட்கும் போது அதிர்ச்சியைதான் சந்திக்கும். ஆனாலும் அபரிதமான பாசம் கண்ணை மறைக்கும் போது மன்னிக்கவும் தோன்றும். இது எல்லா குடும்பங்களில் உள்ள இயல்புதானே...! உங்கள் அன்பான கருத்துக்கள் என் எழுத்துக்கு ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து வரும் கதை பகுதிகளையும் படித்து ரசனையான உங்கள் கருத்துக்களை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சொத்து, நகை, பணம்.. இதைத்தாண்டி ஒரு கட்டத்தில் உறவுகளில் ஒன்றுமே இருக்காதோ..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பல குடும்பங்களில் பல சம்பவங்களை பார்க்கும் போது உங்கள் கருத்துப்படிதான் தோன்றுகிறது. ஆனால் சில குடும்பங்களில்,அன்பான உறவுகளின் மனம் கோணதபடி விட்டுக் கொடுத்தலும், பணத்தை பெரிதாக நினையாமல் சமரசமாய் பேசி அதன்படி நடந்து கொள்வதுமாக இருப்பதையும் காண்கிறோம். கேள்விபடுகிறோம். இவர்கள் உண்மையிலேயே தேவ குணங்கள் பெற்றவர்கள். இவர்கள் வழியே நாமும் பின்பற்ற வேண்டுமெனவும் நம் மனதுக்குள் வைராக்கியம் வருகிறது./வந்திருக்கிறது. நல்லவைதான் என்றும் நிலையாக நிலைத்து நிற்கும்.
உங்கள் நல்ல கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சொந்த மகனே இப்படி எல்லாம் பேசிக் கேட்க நேர்ந்திருக்கிறது சில வீடுகளில். இதில் வளர்த்த மகன் என்றால் சொல்லவே வேண்டாம். வேற்றுமை மனதில் ஏற்பட்டு விட்டால் பின்னால் ஒட்டவே ஒட்டாது. இந்த மட்டும் அவரையும் கூடக் கூட்டிச் செல்ல வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். ஆனால் வீடு விற்ற பணம்? அது பெரியவர் கைகளில் இருந்தால் கடைசி வரை நல்லது. என்னதான் ஆகுமோ தெரியலை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை ஊன்றிப்படித்து உங்கள் மனதில் பட்ட கருத்தாக நல்ல விபரமான முறையில் தெரிவித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
இந்தக் காலத்தில் வசதி, வாழ்க்கை என ஆயிரம் ஆசைகளுடன் வாழ்பவர்கள் பலருக்கும் ஏற்படும் மன பேதந்தான் இது. பெரியவருக்கு உதவியாக நெருங்கிய வேறு எந்த உறவுமில்லை. மேலும் எல்லோர் வாழ்விலும் நடப்பது நடந்துதானே தீரும்.
நீங்கள் தொடர்ந்து வந்து கதைக்கு சிறப்பான கருத்துக்கள் அளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.ஆவலுடன் காத்திருப்பதற்கும் மனம் நிறைந்த நன்றிகள். மேலும் தொடர்ந்து வந்து இந்தக் கதையை சிறப்பாக்க வேண்டுமென விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா மாறி விட்டானே மகன்.:(
ReplyDeleteஎன்ன ஒரு அனியாயம்.
ஆனால் இப்படி எல்லாம் நடக்கவில்லை
என்று சொல்ல முடியுமா.
மருமகள்,மகன் சம்பாஷணையைக் கேட்டவர் மனம் எப்படித்
துடித்திருக்கும்:(
பாவம் சதாசிவம் அவர்கள்.
என்ன செய்யப் போகீறாரோ.
கடவுளே பெற்றவரைச் சோதிக்காதே.
சோகத்தைக் கொடுத்து ஏங்க வைக்காதே.
அன்பின் கமலாமா, உலகத்த்ல் நடப்பதை
எழுதுகிறீர்கள்.
தொடர்கிறேன்.
அருமையான கதைப் போக்கு. சொல்லாக்கம்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களை இன்று பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கதையை மூன்று பகுதியும் படித்து நல்ல கருத்தாக தந்திருப்பது கண்டதும் எனக்கு மனம் நிறைவாகவும் இருந்தது. உங்களைப் போன்றோரின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள்தான் என் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆம். இப்படியான எல்லா நிலைகளும் உலகத்தில் இன்னமும் இருந்து கொண்டுதான் உள்ளது. அன்பு, பாசம்,என மனதில் ஆழத்திலிருந்து அதை உண்மையாக காட்டுபவர்கள், அதை புரிந்து கொள்ளாது, இல்லை விரும்பாது, அவர்கள் மனம் போன பாதையில் இவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் உதாசீனபடுத்திவிட்டு மிதித்து தள்ளி விட்டு செல்பவர்கள் என விதவிதமான மனிதர்கள் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
நீங்கள் இந்த கதையை ரசித்து உங்கள் மனதில் எழுந்த கருத்துக்களை தந்தமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி. தொடர்ந்து என் எழுத்துக்களுக்கும் இந்த கதைக்கும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெற்றவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் இன்று பல குடும்பங்களில் இதுவே நிகழ்கிறது. தொடர்கிறேன்.... மரத்தையும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம்..நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. இன்றும் இதே நிகழ்வுகள் பல குடும்பங்களில் நடப்பது. வருத்தத்துக்குரிய நிகழ்வுதான். என்ன செய்வது... சிலருக்கு பணத்தின் மேல் இருக்கும் மோகம் அதிகமாக உள்ளது. நீங்கள் கதையை நன்கு படித்து விமர்சித்த விதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து வருகை தருவதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. இனியும் தொடர்ந்து வந்து கருத்துக்கள் இட வேண்டும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகனின் நடவடிக்கைகளின் மாற்றங்களை உணர்ந்தாலும் அவரின் நல்ல குணம் அதை ஏற்க மறுக்கிறது.
ReplyDelete//நாம் சென்னைக்கு போறதுக்கு முந்தி இந்த வீட்டை வித்துட்டு அவரையும் கூட்டிகிட்டு போறதுதான் நல்லது.. ... இவரை இங்கே விட்டுட்டு போனால் இந்த வீட்டையும் யாருக்காவது எழுதி கொடுத்திடுவாரு....! இருக்கும் இந்த ஒரு சொத்தும் போய் விடும்.... " அவன் பேச பேச அவர் மனது உடைய ஆரம்பித்தது.//
தேவைகள், சுயநலமாக இருக்கும் போது இப்படித்தான் சிந்திக்க தோன்றும் போலும்.
வயதான முதிய பெற்றோர்களை கொன்று சொத்தை அபகரித்த மகன் மருமகள் பற்றி செய்தியில் காட்டினார்கள். சொந்த பிள்ளைகளே இப்படி செய்யும் போது வளர்த்த பிள்ளையிடம் இதைவிட என்ன எதிர்ப்பார்க்க முடியும்?
அதுவும் சொந்த தங்கை திருமணத்திற்கு உதவியதற்கே இப்படி என்றால் வெளி ஆளுக்கு உதவி செய்தால் என்ன செய்வார் மகன்!
சதாசிவம் என்ன முடிவு எடுக்கிறார் பார்ப்போம்.
தென்னம்பிள்ளையயை தன் பிள்ளையாக நினைத்துக் கொண்டு இருக்கலாம் தன் வீட்டிலேயே . மரம், செடி கொடிகளிடம் பேசிக் கொண்டு அங்கு வரும் பற்வைகளுடன் பேசிகொண்டும், நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்து இருக்கலாம்.
அதற்கும் மகன் விடுவாரா என்று தெரியவில்லை.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/தேவைகள், சுயநலமாக இருக்கும் போது இப்படித்தான் சிந்திக்க தோன்றும் போலும்/
ஆம். நன்றாகச் சொன்னீர்கள். எவருக்குமே தன் சுயநலத்தின் வேட்கையில் பிறர் நலம் கண்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.
/வயதான முதிய பெற்றோர்களை கொன்று சொத்தை அபகரித்த மகன் மருமகள் பற்றி செய்தியில் காட்டினார்கள். /
ஐயோ.. பயங்கரம்... பணத்திற்காக மனிதர்கள் எவ்வளவு கொடுமையான காரியங்களை செய்கிறார்கள். பணம் உடலைத் துறந்து உயிர் போன அடுத்த நொடி நம்முடன் வராது என்பதை புரிந்து கொள்ளாமல், இந்தளவிற்கு ஈனத்தனமான காரியம் செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ...? கொடுமை...
/தென்னம்பிள்ளையயை தன் பிள்ளையாக ... .. மரம், செடி கொடிகளிடம் பேசிக் கொண்டு.....பற்வைகளுடன் பேசிகொண்டும், நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்து இருக்கலாம்.
அதற்கும் மகன் விடுவாரா என்று தெரியவில்லை./
பார்க்கலாம்... எப்போதும் நடப்பது அவர் நினைப்பிற்கும் அப்பாற்பட்டதுதானே...! இந்தக் கதையை ரசித்துப் படித்து உங்கள் எண்ணங்களையும் குழைத்து தந்து கருத்துக்கள் இட்டதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி
தொடர்ந்து வந்து ஊக்கம் நிறைந்த கருத்திட்டு என் எழுத்தை வளமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பல குடும்பங்களில் பணம் தான் முக்கிய "பங்கு"
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/பல குடும்பங்களில் பணம் தான் முக்கிய "பங்கு"/
ஆம்.. உண்மைதான். பணந்தான் பிரதானமான பங்காகி முக்கிய இடத்தை வகிக்கிறது. கதையை ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து கதையினை தவறாது படித்து கருத்திடவும் வேண்டுகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பணம், சொத்து போன்றவை தான் பிரதானமாக இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்! அந்தக் காலத்திலும், எந்தக் காலத்திலும் இப்படியே! கேட்ட சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.
ReplyDeleteமேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம்.. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. இந்த காலத்தில் என்றில்லை.. எந்த காலத்திலும் பணத்துக்குத்தான் மதிப்பு. அதற்காக சொந்த உறவுகள் அன்பை கூட பங்காக்கி பணத்தை கைமாறாக பெற்றுக் கொள்கிறார்கள்.
கதையை ரசித்துப் படித்து தந்த நல்லதோர் கருத்துக்கள் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து முழுகதைக்கும் வந்து கருத்துக்கள் தரவும் வேண்டுகிறேன். உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.