Monday, October 27, 2014

நான் சொல்லாமல் விட்டது…!


ழகிய வானவில்லென நீ ஒளிர்ந்தால், --- நான்
ஓடும் மழைமேகங்களாகி, உனைச் சூழுவேன்…!

இனிய பாட்டென நீ பரிமளித்தால், --- உனைத்
தொடும் இசையாகி, உன்னுடன் சங்கமிப்பேன்…!

இதம் தென்றலென நீ நகர்ந்தால், --- நான்
பெரும் காற்றாகி, உனை அரவணைப்பேன்..!

புது மலரென நீ மணம் வீசினால், --- நான்
கரும் வண்டாகி, உனைச் சுற்றுவேன்…! 

வட்ட நிலவாகி நீ தண்ணொளி தந்தால், --- உனைத்
தேடும் விண்மீனாகி, வானில் சுடர்விடுவேன்…!

தளிர் கொடியென நீ நடை பயின்றால், --- நான்
படரும் மரமாகி, மண்ணில் வசித்திடுவேன்…! இப்படி

நகமும், சதையுமாய், தேனும், பாலுமாய்,
கண்ணும், இமையுமாய், உடலும், உயிருமாய்,
இன்னும், ஆயிரமாயிரம் உவமானங்கள், உன்னிடம்
இயலும் வரை அற்புதமாய் சொல்லி விட்டேன்…!
      
        “இவ்வளவு  இசைவாய்,
      மனதாலும், மடலாலும்,
    வார்த்தையாலும், வாதத்தாலும்,
    வலியுறுத்தியும், வறுப்புறுத்தியும்,”
      
      இனம்புரியா வேதனைகளுடன்
      இதயம் நொந்து நானிருக்க,
   இன்று நீ மட்டும் என் அருகில் இல்லை..!

இல்லத்தரசியாக நீ வேறொரு இல்லத்தில்..!
இதயத்தரசியாக நீ வேறொரு இதயத்தில்…! ---- காரணம்,
       
     
       இத்தனை இயம்பிய நான்,
இறுதியில் சொல்லாமல் விட்டது "இதுதான்…!"

  
"வாய்ப்பும் வசதியுமென, நீ வாழ்க்கையில் தினம் வளர்ந்திடவே,

                          நான்

வரும் நாளில் பெரும் செல்வத்தை, சேர்த்து தந்திடுவேன்…!"

யற்கையையெல்லாம் உன்னுடன் ஒப்பிட்டு சேர்த்த --- நான்
இயல்பான செல்வத்தை என்னுடன் சேர்க்க தவறியதால்,
ஒராயிரம் ஆசைகளை என்னுள் வளர்த்தும்,
ஒருதலைக் காதல் ஆனது நம் உறவு…!

படங்கள் --- ௬குள்! நன்றி!

10 comments:

  1. ஒருதலைக் காதல் பற்றிய உங்கள் கவிதை அருமை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும், பாராட்டிற்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இல்லத்தரசியாக நீ வேறொரு இல்லத்தில்..!
    இதயத்தரசியாக நீ வேறொரு இதயத்தில்…! -

    ஒரு தலைக்காதல்...... அன்பு கனிவு... அருமை சகோதரியாரே...அருமை.

    வாழ்க வளர்க .
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      தங்கள் வருகைக்கும், அன்புடன் ௬டிய பின்னூட்டத்திற்கும், கருத்துப்பகிர்விற்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.!

      வளர்க என வாழ்த்தியமைக்கண்டு மகிழ்கிறேன்.! நன்றி சகோதரி!

      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஒரு தலைக் காதலில் தனித்தோர் இன்பம்.
    ஒரு ஆண்டுக்குப் பின் என்ன ?
    ஓராயிரம் ஆண்டுகட்குப்பின்னுமது
    ஒப்பற்ற காவியமாகத் திகழலாம்.

    இரு தலைக் காதலோ !!
    இனிக்கும் இருபது நாட்கள்.
    இல்லை என்போருக்கு
    மோகம் முப்பது நாட்கள்.

    பின் என்ன ?
    சொர்கமா என்ன ?


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் முதல் வருகையும், முதல் பின்னூட்டமும், கண்டு நன்றி கலந்த மகிழ்வடைகிறேன்.!

      கவிதைக்கு, கவிதையாலேயே வாழ்த்துக்கள் தந்த தங்கள் கருத்துப்பகிர்விற்கு, என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கவிதை அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும், பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. உணர்வுபூர்வமான அருமையான கவிதை
    முடித்தவிதம் கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்களது வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், நல்வாழ்த்துகளுக்கும். என் இதயம் நிறைந்த நன்றிகள்.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete