கடலின் தற்பெருமை….!
“நானின்றி நீ இல்லை..!
என்று அலைகளிடம், பெருமையுடன்
நவின்ற கடலிடம், அலைகள் பொறுமையுடன் சொன்னது…!
“நன்று..!உண்மை..! ஆனால் நீரின்றி அமையாது
இவ்வுலகு..! என்று
நானிலமும் அறிந்த உண்மையை தற்பெருமை இல்லாது,
சற்று
நாவடக்கத்துடன் ௬று! நாற்திசையும் புகழும்
உன்னை…!”
இடி, மின்னல்.....!
“என்ன சத்தம்..?” என்று
கோபத்துடன்
அதிர்ந்து கேட்ட வையகத்துக்கு, வானம்
“உங்களென்று
அமைந்த தீபாவளி போல், வானமாகிய என் தீபாவளி
இதுதானென்று அன்புடன் தெரிவித்தது…..!
முதியோர் இல்லம்..!
“கல்லாலும், மண்ணாலும், சுண்ணாம்பாலும் ஆன வெறும்
கட்டிடங்கள்தானே, நாமனைவரும்..! இதில் தனியாக
அனுதாப
பார்வை உனக்கு மட்டும் ஏன்..?”என்று அங்கலாயித்தது,
அனுபவசாலி
கட்டிடம்..! “ஏனென்றால்,
நீங்கள் தினமும் விரட்டி
அனுப்பும்
சோகங்களை சிரமமில்லாமல் நான் சுமக்கிறேன்..!
என்னால்முடிந்தவரை..!” என்றது அடக்கமான குரலில்
முதியோர் இல்லம்..!
கோலப்போட்டி...!
அமைதியுடன் இருந்த வானத்தில், தீடீரென
ஆயிரம் சண்டைகள்..! மேகங்களும், காற்றும்,
அதிவிரைவில் ஓடிவர, “நான்தான் முதலில்..!”
என்றபடி ௬ச்சலும், குழப்பங்களும் தொடர்ந்து வர,
“ஓ” கோலப்போட்டியா..?” என்றபடி பூமி வரவேற்றது..!
சிலைகள்
பேசிக்கொண்டால்...!
“வீதிகளிலெல்லாம்
ஒரே கோலாகலமாய் இருக்கிறதே..! என்ன
விஷயம்
என்று தெரியுமா..?..ம்.. எனக்கு ஒன்றும் தெரியாதே..! உனக்கு
விபரம்
ஏதாவது தெரிந்தால்தான் சொல்லேன்..! கேட்போம்..!
நம்மை
போலான களிமண் சிலைகளை இன்று கரைக்கிறார்களாம்..!
நல்லவேளை
நாம் தப்பித்தோம்..!” ஒரு கோவிலில் அமர்ந்திருக்கும்
நான்கு
பிள்ளையார் கற்சிலைகள் இரவில் பேசிக்கொண்டன..!
இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்
இன்னும் வளரும்...
Super (from Devakottai)
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.!
சொந்த நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள்.! விடுமுறை
உள்ளவரை, சந்தோசமாக நாட்கள் மெள்ள நகர வாழ்த்துகிறேன்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் இரசிக்கவைக்கு கவிதை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்ட கருத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.! மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.