நிலா, நிலா. அழகு நிலா..
இது மூன்றாம் பிறையில்
முத்தெனவே முளைத்து வந்த நிலவு.
பொதுவாக மூன்றாம் பிறை
பார்க்கச் சிறந்தது. ஆயினும்,
பார்வையில் படாமல்
பார்ப்பதரிது என எண்ண வைப்பது.
மேல் திசை காதல் பார்வையால்
மேக குவியலில் முகம் மறைத்து
மேகங்களுடனே நகர்ந்து, தன் மனது
மோகத்தையும் வெளி காட்டாது
மறுநாள் நாலாம் பிறையில், தன்
மனதை வெளிப்படுத்த எவ்வித
தயக்கமின்றி, தடங்களின்றி அது
உற்சாகமாய் உதித்து வருவது
உலகறிந்த விஷயமாகும்.
இப்படி காணக் கிடைக்காதது அன்று
இவ்வாறாக கண்களில் பட்டது.
ஆழ் கடலில் உறங்கச் சென்ற
ஆதவனின் வெப்பத்தில்
கசிந்துருகி கனிந்துருகி, அந்த
நீலக்கடலின் நிறம் பெற்று
நிறம் மாறியதோவென
நினைக்க வைத்த வானம்.
எப்போதும் தன்னிலை உணர்ந்து
தன்னை அரவணைத்துச் செல்லும்
தன் நண்பனான மேகப்
பொதிகளை காணாததால் தன்
பொலிவினை சிறைப்பிடித்து
தன் காதலை தங்குதடையின்றி
தக்க வைத்து விட்டார்களே என்ற
நாணம் கொண்டு நீலவானத்தின்
போர்வைக்குள் மறைந்தெழுந்து
ம(மு)கிழ்ந்திருந்த நிலவு.
நாணும் நிலவும் ஒருவித அழகு.
நாணம் பெண்களுக்கும் ஒரு அழகு.
அம்புலியும் அழகும் இணைந்த
அதிசயத்தால் "நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
என்ற பாடலும் உதித்ததோ ?
எத்தனை நிலவு பாடல்கள்..
அத்தனையும் நிலவின்
அசையாத சொத்துக்கள்.
நிலவிருக்கும் வரை நம்
நினைவிலிருந்து நீங்க மறுக்கும்
நிதர்சனமான வைரங்கள்.
நிலா பாடல்களை நித்தமும் ரசித்து நினைவு கூர்பவருகளுக்கு நிலா சார்பில் எனது வாழ்த்துகளும், நன்றிகளும். 🙏.
நிலாக்கவிதை அருமை. படங்களும் அழகாக எடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் பாராட்டுகளுக்கு ம் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூன்றாம்பிறை கண்ணில் பட்டால் நல்லது என்பார்கள். ஆனால் கண்ணிலேயே படாது! நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு படுவார்கள் என்று பயமுறுத்துவார்கள். அது நன்றாக கண்ணில் மாட்டும்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். அதனால்தான் மூன்றாம் பிறை பார்ப்பதரிது என சொல்லியுள்ளேன். நாலாவது வேண்டுமென்றே கண்ணில் படும்.
ஆமாம்.. நாய் படும் பாடென்றால், வீதியில் அலைய நேரிடுமோ? நாமும் அன்று அதை பார்க்க வேண்மென்றாலும், அது எப்படியோ கண்களில் பட்டு விடும். இன்று இதில் பகிர்ந்தது மூன்றாம் பிறை. அது கண்ணில் பட்ட மகிழ்வில் பிறந்தது கவிதை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவு ஒரு பெண்ணாகி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், நிலாவே வா, நிலவுப்பெண் முகம் காட்டும், மண்ணில் வந்த நிலவே, ஆயிரம் நிலவே வா, நிலவு தூங்கும் நேரம், நிலவே முகம் காட்டு, வா வெண்ணிலா, வெண்ணிலா வானில், வெண்ணிலா வாடுது, வெண்ணிலவுக்கு வானத்தப் பிடிக்கலையா, வெண்ணிலவே வெண்ணிலவே, பால்நிலவு நேரம், வெண்ணிலா என்னோடு இங்கு, வெள்ளி நிலவே வெள்ளி நிலவே, நிலாக்காயுது, வெள்ளி நிலாவினிலே,
ReplyDeleteசட்டென மனதில் வரிசையாக வந்த சில நிலாப் பாடல்கள்!
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நிலாப் பாடல்கள்தான் எத்தனைப் பாடல்கள் உள்ளன. கடகடவென தங்களுக்கு நினைவில் வந்ததை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. அதில் நம் பாடும் நிலா பாடியதே அதிகம். மொத்தத்தில் நிலா பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். தங்கள் கருத்திற்கும், பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நீலக்கடலின் நிறம் பெற்று
ReplyDeleteநிறம் மாறியதோவென
நினைக்க வைத்த வானம். //
ஆமாம், அப்படித்தான் நினைக்கவைத்தது.
உங்கள் கவிதையும், நீல வானில் நிலவின் படங்களும் அருமை.
//எத்தனை நிலவு பாடல்கள்..
அத்தனையும் நிலவின்
அசையாத சொத்துக்கள்.
நிலவிருக்கும் வரை நம்
நினைவிலிருந்து நீங்க மறுக்கும்
நிதர்சனமான வைரங்கள். //
ஆமாம், அனைத்தும் முத்துகள், வைரங்கள் தான்.
"நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா " பாடல் உங்கள் படத்துக்கு பொருத்தமாக இருக்கும்.
முத்துக்கள்
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
கவிதை, மற்றும் படங்களை ரசித்தமைக்கு என் அன்பான நன்றி சகோதரி.
ஆம் நீங்கள் கூறுவது போல "நீலவான ஓடையில்" என்ற பாடல் இந்தப்பதிவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். எனக்கு தோன்றவேயில்லை. நீங்கள் அழகாக பதிவுக்கு ஏற்றபடி பொருத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.
நான் மோகன் பாடல்கள் நினைவுக்கு வர அதில் ஒன்றை பதிந்து விட்டேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் பகிர்ந்த பாடலும் இனிமையான பாடல், கேட்டு ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நான் பகிர்ந்த பாடலையும் ரசித்து கேட்டதற்கு என் அன்பான நன்றி சகோதரி.
இன்று மதியம் நேரமே கிடைக்கவில்லை. இப்போது அமர்ந்து பதில் கருத்துக்கள் தருகிறேன். நாளை எங்கேனும் வெளியில் செல்லும் வேலைகள் வந்து விடும். அதனால் சற்று உறக்கத்தை தியாகம் செய்து தட்டச்சு செய்கிறேன். தாமதமான பதில்களுக்கு அனைவரும் மன்னிக்கவும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நவ்ல பாடல் பகிர்வு. மோகனுக்கு பயங்கர லக். இளையராஜா சூப்பர் பாடல்களினால் அவர் காட்டில் மழை. வா வெண்ணிலா சூப்பர் பாடல்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். நல்ல பாடல். மோகன் அவர்களின் படப் பாடல்கள் எல்லாமே ரசிக்கும் பாடலாகத்தான் அவருக்கு அமைந்து வெற்றியை தேடித் தந்துள்ளது. அதுவும் நம் "பாடும் நிலா" அவர்களின் குரல் வளம் அவருக்கு சரியானபடி ஒத்து வந்து அவர் வெற்றி வாகை சூட ஒத்துழைத்தது. பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலா கவிதை வரிகளும் படங்களும் அழகு
ReplyDeleteவிரக தாபத்தில் இருப்பவர்களுக்குத்தானே நிலாவைக் கண்டதும் கவிதை ஊற்றெடுக்கும்.
பரவாயில்லை நிலவின் அழகு உங்களிடமிருந்து கவிதையை வரவழைத்துவிட்டது
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
கவிதையையும், படங்களையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நிலாவை எந்த வயதிலும் மன விகல்பமின்றி ரசிக்கலாம். அதற்கு ரசனை மட்டும் இருந்தால் போதும்.
அன்று நீல வானத்தில் நிலவின் அழகுதான் அதுவும் மூன்றாம் பிறையின் அழகு என் மனதில் கவிதையை உருவாக்கியது. கவிதையை ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலா படங்களும் கவிதை வரிகளும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
நிலா படங்களையும், கவிதையையும் படித்து ரசித்து பாராட்டுதல்கள் தந்தது என் மனதிற்கு மிகவும் மகிழ்வை தந்தது. தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலவுக் கவிதை முயற்சி பாராட்டத் தக்கது. ஆயினும் கவிதை சற்று நீண்டதாகத் தென்படுகிறது. அவ்வப்போது ஏதாவது எழுதுங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கவிதை நன்றாக உள்ளதென்ற பாராட்டிற்கு என் பணிவான நன்றி. தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துரைகள் கண்டிப்பாக அவ்வப்போது என்னை எழுத வைக்கும். எழுதுகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாடறிந்த நிலவுக்கு
ReplyDeleteநல்லதொரு பாட்டு..
நிலவே வா வா
வந்து முகங்காட்டு..
நல்லதொரு நடையில்
நற்றமிழ் அமுதில்
ஆயிரங் கவிகள் உனக்காக
அத்தனை நலமும் எமக்காக..
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
நல்லதொரு கவிதை..
மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கருத்துரை தங்களது அருமையான கவிதை வாயிலாக பாராட்டுக்களுடன் எனக்கு கிடைத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் கவிதை அருமை. தங்களது அன்பான ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே
தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நிலா படங்கள் சூப்பர் கமலாக்கா. ரொம்ப அழகா வந்திருக்கு கமலாக்கா.
ReplyDeleteஉங்க கவிதை வரிகளும் நல்லா இருக்கு.
//நிலவிருக்கும் வரை நம்
நினைவிலிருந்து நீங்க மறுக்கும்
நிதர்சனமான வைரங்கள். //
நிலவு எங்கும் போகப் போவதில்லையோ கமலாக்கா...அது இருக்கும் நாம்தான்...
வா வெண்ணிலா பாட்டு சூப்பர் பாட்டு. இளையராஜா வின் இசை.
கீதா
நிலவைப் பற்றிய பாடல்கள் நிறைய உண்டே.
Deleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி
கவிதையை ரசித்தமைக்கும், பாடலை ரசித்தமைக்கும் மிக்க மகிழ்வுடனான நன்றி.
நிலவு எங்கும் போகாது.. ஹா ஹா ஹா. இங்கு நாம் என நான் சொல்ல வந்தது. இப்போதைய நாம் மட்டுமில்லை. மொத்தத்தில் மக்களாகிய " நாம்". ஹா ஹா ஹா
அப்போதைய மோகன் பாடல்கள் மிகவும் பிடித்தமானது. அதுவும் இளையராஜா அவர்களின் இசை, மற்றும் எஸ். பி. பி அவர்களின் குரல் வளம். இந்த மூன்றும் சேர்ந்ததால், இந்த நிலவு பாடலை பகிர்ந்தேன். மற்றபடி நிலவு பாடல் நிறைய உள்ளனவே.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நான்தான் உங்கள் இருவருக்கும் பதில் கருத்து தர மிகவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலவு கவிதை வரியும், படங்களும் அருமை.
ReplyDeleteபாடல் அருமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன்.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே
கவிதையையும் பாடலையும், படங்களையும் ரசித்து விட்டு தாங்கள் தந்த கருத்துக்கு மிக்க மன மகிழ்ச்சியடைந்தேன்.
ஆம். பாடல் வெகு அருமையான பாடல். ரசித்தமைக்கு மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்கு வீட்டின் பல வேலைகளின் காரணமாக உடனே வந்து கருத்து தர இயலவில்லை. தாமதமாக பதில் கருத்து தருகிறேன். மன்னிக்கவும் சகோதரரே. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலவை அழகாக படம் பிடித்து, அருமையாக கவிதையும் எழுதி விட்டீர்கள். சூப்பர்!!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகையும், கருத்துப் பகிர்வும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துகளை தொடர்ந்து தாருங்கள். தங்களின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.