Sunday, December 29, 2019

இயற்கை சீற்றம்.

2004-ம் வருடத்திற்கு பிறகு எப்போதுமே ஒவ்வொரு வருட கடைசியான டிசம்பர் 26 ம் தேதி மறக்க முடியாத சுனாமி தினம். மக்கள் கண்மூடி அசந்திருந்த அந்த வேளையில், எத்தனை உயிர்களை  கடலரசன் அசுரத்தனமாக பெரும் பசி கொண்டு விழுங்கி ஏப்பம் விட்ட இந்த துக்க நாளை நாமெல்லோரும் அவ்வளவு சுலபத்தில் மறக்கவும் முடியாது.....!விதியை  மன்னிக்கவும் இயலாது.....! 

தற்சமயம் வந்த  கிரஹண செய்திகளை படித்து கேட்டுக் கொண்டிருக்கையில், "இந்த அதி அற்புத கிரஹணத்தால், வெள்ளம். மற்றும் இயற்கை சீற்றங்கள் வரும் என்ற பயம் உண்டாக்கும் வாட்சப் செய்திகளை நம்ப வேண்டாம்..!" என்பதாக ஒருவர் பேசினார். "மக்கள் ஏன் அத்தகைய பதட்டம் தரும் செய்திகளை பரப்ப வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த மாதிரி எச்சரிக்கை செய்திகளை கேள்விப்பட்டதுமே பாதிக்கபட்ட மக்கள் மனதில் ஏற்கனவே பட்ட அவஸ்தைகளும்,வேதனைகளுந்தானே நினைவு வரும். என்றெல்லாம் சிந்தனை வந்தது. 

சுனாமி வந்த பின்பும் நிறைய முறை இதே பயமூட்டும் செய்திகள் உலா வந்தன. ஓரிரு சமயங்களில் "இன்று சுனாமி வந்தாலும் வரலாம்"  என்பதாக சொல்லி அரசு மக்களுக்கு பயனுள்ள வகையில் எச்சரிக்கை கொடுத்து கடலோரத்தில் இருக்கும் அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாத்தாலும், அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரு கலக்கமாகத்தானே இருந்திருக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பழைய நினைவுகள், பிறருக்கு அதை புதிதாக சந்திக்கும் பயம், கவலை, இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு,மேலும்  அதை பார்க்க ஆர்வம் என ஏகப்பட்ட கலவைகளுடன் மக்களின் சூழ்நிலைகள்  இருக்க, சீறிப்பாய்ந்து ஆர்வத்துடன்  வர இருந்த சுனாமி அலைகளும் சற்று அவ்வப்போது எச்சரிக்கையுடன்  பதுங்கிக் கொண்டதும் மிகவும் நல்லதற்கே...! 

அப்போது என் மனஅலைகளுடன் கடல் அலைகளுமாக எழு(திய)ந்தது இது. 


அலைகளின் ஏக்கம்.....



ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் வந்து கரையை
ஆராய்ந்து பார்த்து விட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாகி  கொண்டன. 

என்ன இது?

ஏன் இந்த மாற்றம்?

அன்றாடம் தன் அழகை ரசிக்கவரும்
ஆயிரம் பேர்களில் இன்று
ஒருவர் கூட இல்லாமல்,
ஓய்ந்து இருக்கின்ற கடற்கரை,

சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே,
சூனியமான புல்வெளிதரைகள்,
ஆர்ப்பரிக்கும் தன் சத்தத்தையே சிறிது 
அமிழ்த்தி விடும் ஆரவாரக்கூச்சல்கள்,

எதுவுமின்றி ஏகாந்தநிலையில்

ஏன் இந்த மாற்றம் ?


தனக்கு தானே கேள்விகளை தொடுத்தபடி,
தளர்வின்றி மறுபடியும், மறுபடியும்
மண்ணில் முதல் நாள் பதிந்த
மனிதர்களின் காலடிதடத்தை
அழித்து விட்டு சென்றபடி இருந்தன
அந்த கடலலைகள்.

அதற்கு தெரியவில்லை !
அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து
அதிர்ந்து எழும்பும்
ராட்சத பேரலைகள்
ராப்பகல் என்ற பேதமின்றி
கரையை தொட்டு விட்டு
கடந்து விடும் எண்ணமின்றி
"சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு போய்விடும் 
அந்த அவலச்செயல்களும்,
அதன் கொடூர தாண்டவங்களும்,
அதனின் விளைவால் நிகழ்ந்த
அகோரமான சோகங்களும்,
விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
விபரீதத்தின் விளைவால் எழுந்த
விரக்திகளின் வலியையும்,
விளையாட்டாய் தினமும் வந்து போகும்
அந்த அலைகள் அறியவில்லை.

இன்றும் அந்த அவல ஓசையையும் அதன்
இறுதி அர்த்தத்தையும் உணர்ந்த
காவலர்களின் கட்டளைக்கு பணிந்து
கண்காணாமல் ஒழிந்திருந்த மக்களின்
கலக்கமும், மனப்பதட்டமும்
கடற்கரையை காலியாக்கி விட்ட
சோகம் புரியாமல் மீண்டும் மீண்டும் வந்து
சோர்வில்லாமல் கரையில் மனிதர்களை, 
தேய்ந்த  நிலவொளி வெளிச்சத்திலும்
தேடிப்போனது அந்த கடலலைகள்....

இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.🙏 🌑😎🌙



24 comments:

  1. சுனாமி பற்றிய கவிதையை ரசித்தேன்.    நீங்கள் மொபைலில்தான் இத்தனையையும் செய்கிறீர்கள் என்று சொல்லியிருந்த நினைவு. வியப்பாய் இருக்கிறது.  வியாழன் இரவு முதல் கணினி இணையம் இல்லாததால் என்னால் நண்பர்கள் தளங்களுக்கே வரமுடியாத நிலை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      சுனாமி கவிதையை ரசித்திருப்பதற்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      நானும் என இளைய மகனின் கணினியைத்தான் அவரிடம் எப்படி உபயோகிப்பது என தெரிந்து கொண்டு வலையுலகில் பிரவேசித்து வலம் வந்து கொண்டிருந்தேன். அது பல காரணங்களால் பயன்படுத்த இயலாமல் போய் விட்டதில் இந்த கைபேசியில் இப்போது ஓராண்டு காலமாக எப்படி இயக்குவது என்ற விபரமும் அவர் மூலமாகவே கற்று கொண்டு ஏதோ உங்கள் அனைவரின் பதிவுகளுக்கும் வரப் போக இருக்கிறேன்.நானும் அவ்வப்போது மன மாறுதல்களுக்காக பதிவுகள் எழுதி பதிந்து மனமகிழ்ச்சி அடைந்து வருகிறேன். இதற்கு நன்றி என் மகனுக்குத்தான் முதலில் சொல்ல வேண்டும்.

      தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் என்மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. சுனாமி குறித்த கவிதை நன்று.
    வதந்தியை பரப்புவதில் ஒரு சிலருக்கு ஆனந்தமாக இருக்கிறது இப்படியும் சில பிறவிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சுனாமி குறித்த கவிதை நன்றாக உள்ளது என்று பாராட்டியமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /வதந்தியை பரப்புவதில் ஒரு சிலருக்கு ஆனந்தமாக இருக்கிறது இப்படியும் சில பிறவிகள்./

      உண்மை.. வதந்"தீ"யாக பரவி மக்கள் சலனப்படுவதை பார்த்து ரசிப்பவர்கள்.அதில் அவர்களுக்கென்ன அவ்வளவு சந்தோஷமோ..! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அலைபேசியிலேயே இத்தனையும் செய்யும் நீங்கள் கணினி மட்டும் இருந்திருந்தால் எத்தனை செய்திருப்பீர்கள்? நல்ல கவிதை எழுதும் திறமை, கதைகள் எழுதும் ஆற்றல் எல்லாம் நிரம்பி இருக்கின்றன உங்களுக்கு. ஆனாலும் குடத்து விளக்காக உங்களை நீங்களே மறைத்துக் கொள்கிறீர்களோ? இன்றைய சுநாமி கவிதையும் அதன் உட்பொருளும் அருமை! தொடர்ந்து எழுதுங்கள். எப்போவோ எழுதினாலும் அது நல்ல சத்துள்ளதாக இருக்கணும்னு நினைச்சு எழுதுவதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      கணினியில் தாங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போல் எனக்கு கணினியில் வேலையெல்லாம் தெரியாது. பதிவுகள் எழுதுவது, பதிவிடுவது, கருத்துக்கள் தருவது போன்றவைதான் நான் என் குழந்தைகளிடம் கற்றுக் கொண்டது. பிற வேலைகள் எல்லாம் அறியேன். எழுதியதை தொகுத்து மின்னூலாக்க என்ன செய்ய வேண்டுமென்பதற்கு உங்களை அணுகலாம் என நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். கேட்கத்தான் தயக்கமாக இருந்தது. முடிந்தால் அதை எனக்கு அன்புடன் தெரிவியுங்கள்.

      "தொடர்ந்து எழுதுங்கள்" என்ற தங்களது ஊக்கமிகுந்த கருத்துரைகள் தான் என் எழுத்தை ஜீவன் உள்ளதாக பாதுகாக்கிறது என நம்புகிறேன். தொடர்ந்து வந்து என் எழுத்துக்களை ஊக்கப்படுத்துங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ஆழிப் பேரலையின் விளைவை அறியாதிருக்கும் அப்பாவி அலைகளை அழகாகக் கையாண்டிருக்கின்றீர்கள்....

    அப்படியான சம்பவம் இனியொருமுறை வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆழிப் பேரலையின் விளைவை அறியாதிருக்கும் அப்பாவி அலைகளை அழகாகக் கையாண்டிருக்கின்றீர்கள்/

      ஆம். பார்வைக்கு ஒன்றான மனிதர்களில் பல விதங்களைப் போல், அலைகளிலும் விதங்கள் உண்டல்லவா..! தினமும் நமக்காக வந்து வந்து நம் கால்களை தழுவி நம்மை சந்தோஷப்படுத்தி பார்க்கும் இந்த அப்பாவி அலைகள் சீற்றத்தின் வசப்படும் போது வேறு விதமாக அவைகள் அறியாமலே, இயற்கையாக அவைகளையும், நம்மையும் ஒருங்கே படைத்த ஆண்டவனின் சித்தத்தில் நம்மை படுத்துகின்றன. ஆனால் இப்படியான சம்பவம் இனி என்றுமே நடைபெற வேண்டாமென்றுதான் நானும் அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

      தங்கள் பாராட்டுதலுக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. //அதற்கு தெரியவில்லை !
    அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து
    அதிர்ந்து எழும்பும்
    ராட்சத பேரலைகள்
    ராப்பகல் என்ற பேதமின்றி
    கரையை தொட்டு விட்டு
    கடந்து விடும் எண்ணமின்றி
    "சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்
    சுருட்டிக்கொண்டு போய்விடும்
    அந்த அவலச்செயல்களும்,
    அதன் கொடூர தாண்டவங்களும்,
    அதனின் விளைவால் நிகழ்ந்த
    அகோரமான சோகங்களும்,
    விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
    விபரீதத்தின் விளைவால் எழுந்த
    விரக்திகளின் வலியையும்,
    விளையாட்டாய் தினமும் வந்து போகும்
    அந்த அலைகள் அறியவில்லை.//

    ஆமாம், அதற்கு தெரியவில்லைதான். அலைகளில் விளையாடும் காலகளை பாதங்களை வருடி தழுவி சென்று மகிழ்ச்சி அளிப்பது மட்டுமே அதற்கு தெரியும். பெரிய சூறாவளி அலையால் சுருட்டி உள்ளே இழுத்துக் கொள்வது தெரியவில்லைதான்.


    கடல் அலைகள் நம்முடன் விளையாட ஆசைபடும் தான்.
    சுனாமியால் மக்களின் வரவு இல்லையென்றால் கவலைபடும் தான்.

    பிஞ்சு கால்கள், கொலுசு பாதங்கள், பெரிய சிறிய பாதங்களை பார்த்து இருக்கும் கடல் அலை.

    உங்கள் கவிதை அருமை. சொல்லிய விதம் படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடல் அலைகள் நம்முடன் விளையாட ஆசைபடும் தான்.சுனாமியால் மக்களின் வரவு இல்லையென்றால் கவலைபடும் தான்.பிஞ்சு கால்கள், கொலுசு பாதங்கள், பெரிய சிறிய பாதங்களை பார்த்து இருக்கும் கடல் அலை./

      ஆகா.. தாங்கள் கூறுவதனைத்தும் உண்மைதான்.. மிகவும் நன்றாக ரசித்து கருத்துரைகள் தந்திருக்கிறீர்கள். தங்களுடைய ரசிப்பான கருத்துரைகள் என் மன மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

      கடல் என்றாலே நம்முடன் துள்ளி வந்து விளையாடும் அலைகள்தான் நம்முடைய தோழியர், தோழர்கள் எல்லாமும். தினமும் அருகில் கடற்கரை இருக்கும் ஊரைச்சார்ந்தவர்கள் இல்லை கடற்கரை சார்ந்த ஊருக்கு பயணப்படுகிறவர்கள் கடற்கரைக்கு சென்று காற்று வாங்கி அந்த கடல் அழகை கண் கொள்ளாமல் ரசிப்பது மட்டுமின்றி நாம் கடலின் அலையில் சிறிது நேரமாவது காலை நனைக்காமல் வருவதில்லை.

      அவைகளும் காலை மட்டும் நனைக்காமல், சில சமயம் பொய் கோபம் கொண்டு நாம் எதிர்பாராத சமயம் நாம் அணிந்திருக்கும் உடுப்புக்களையும் நனைத்து விளையாடும். சிலச சமயம் கால் பாதங்களை கூட தழுவாமல் வந்த வேகத்திலேயே நழுவி ஓடி விடும். இப்படி வேடிக்கை காட்டும் கடலலைகள் சிலசமயம் படைத்தவனின் உத்தரவிற்கிணங்கி பிரளயமாக மாறி நம் அழிவுக்கும் காரணமாகிறது. நம் வாழ்வின் ரகசியம் போன்று அது எந்த சமயமென்று நாம் அறியோம்.

      கடலலைகள் குறித்த கவிதை அருமை எனப் பாராட்டியமைக்கும், நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. தொடர்ந்து வந்து ஊக்கமளித்திட வேண்டுகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அழியாத நினைவுகளைக் கொடுத்துச் சென்ற சுனாமி.
    இப்பொழுதும் எச்சரிக்கும் பயமுறுத்தும் புது வீடியோக்கள், எது
    15 வருடத்துக்கு முன் இயற்கை அன்னையைச் சீற்றம் கொள்ள வைத்தது என்று
    உணராமல் மீண்டும் மீண்டும் அவளைச் சீரழிக்கும் மனிதர்கள்.

    நன்மையை நாடுவோம்.அருமையான பதிவு அன்பு கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இப்பொழுதும் எச்சரிக்கும் பயமுறுத்தும் புது வீடியோக்கள், எது
      15 வருடத்துக்கு முன் இயற்கை அன்னையைச் சீற்றம் கொள்ள வைத்தது என்று
      உணராமல் மீண்டும் மீண்டும் அவளைச் சீரழிக்கும் மனிதர்கள்./

      நன்றாக சொன்னீர்கள்.. ஏற்கனவே பட்ட காயங்கள் அழியாத நிலையில் மறுபடியும் அதை நினைவு படுத்தும் விதமாக எதற்கு வீண் வதந்திகள்..! இனி என்றுமே அந்த பேரழிவு வராமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்.

      பதிவுக்கு வந்து கவிதையை ரசித்து அன்புடன் தந்த கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி. தங்கள் அன்பான வருகை எனை ஆனந்தமடையச் செய்கிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நினைக்கும் போதெல்லாம் மனதில் வேதனை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நினைக்கும் போதெல்லாம் மனதில் வேதனை../

      உண்மை.. மறக்க கூடிய சம்பவமா? இந்த வேதனை இனி என்றும் நம் கனவில் கூட தொடரக்கூடாது. பிரார்த்திப்போம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. 2004 டிசம்பர் 26ம் தேதி சுனாமியை எனக்கு மறக்கமுடியாது.

    அன்றுதான் சென்னைக்கு வேலை விஷயமாக பஹ்ரைனிலிருந்து வந்திருந்த நான், காலை 8 (மணின்னு நினைவு)க்கு ஃப்ளைட் சென்னையை விட்டு மேலே ஏறுகிறது. சில நிமிடங்களில் சுனாமி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அன்றுதான் சென்னைக்கு வேலை விஷயமாக பஹ்ரைனிலிருந்து வந்திருந்த நான், காலை 8 (மணின்னு நினைவு)க்கு ஃப்ளைட் சென்னையை விட்டு மேலே ஏறுகிறது. சில நிமிடங்களில் சுனாமி../

      எவ்வளவு வேதனையான சம்பவம். அதை நினைவு கொள்ளும்படியாக தங்களுக்கு நடந்த பிரயாணம்...! எதுவுமே நம் கையில் இல்லையென்றாலும், அதை நினைக்கும் போது வயிற்றில் ஏதோ சங்கடம் நெளிகிறது. சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் இயன்றவரை பிரார்த்தனைகள் செய்வோம்.

      தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஓ அப்போ சுனாமி எப்பூடி வந்ததென நினைச்சுகொண்டிருந்தேன்:)) இப்போதான் காரணம் கிடைச்சது:)).. பிளீனின் ஓவர் வெயிட்டால:)) காத்து கடலைத்தள்ளி.. சுனாமி எழும்பியிருக்குது:))

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இப்போதான் காரணம் கிடைச்சது:)).. பிளீனின் ஓவர் வெயிட்டால:)) காத்து கடலைத்தள்ளி.. சுனாமி எழும்பியிருக்குது:))/

      முதலில் ஒன்றுமே புரியல்லே.. நான்தான் டியூப் ஆச்சே..! ஆனாலும், மிகவும் குறும்பான பதிலுடன் நெ. தமிழரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.மறுபடியும் மற்றொரு குறும்பு பதிலளிக்க அவரும் வருவார் என நினைக்கிறேன். அது (சுனாமி) வருவதென்பதை யாரால் தடுக்க இயலும்.? அத்தனை இடரிலும் அவர் நலமுடன் ஊருக்குப் புறப்பட்டு சென்று வந்ததே மகிழ்வான விஷயம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. அதிராவோட அடுத்த ரெசிப்பி வராமலா போகும். அப்போது பார்த்துக்கொள்கிறேன். ஹா ஹா

      Delete
  9. இப்போஸ்ட் என் கண்களுக்கு தெரியாமல் போய் விட்டதே.. நல்லவேளை இன்றாவது கண்டு கொண்டேன்.

    நானும் பார்த்தேன், 25,26,27 ஆம் திகதி பற்றி பல சாஸ்திரம் சொல்லுவோர் பலவாறு பேசினார்கள் யூ ரியுப்பில். ஆனா அதிலும் சிலர் சொனனர்கள், வதந்திகளை நம்பவேண்டாம், கொஞ்சம் கனத்த நாளாக இருக்கும் கவனமாக இருங்கோ என.
    என்ன இருப்பினும் எல்லாம் பிஸ்னஸ் மயம்... தம் யூரியூப் வியூஸ் ஐக் கூட்டவே இப்படி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      உங்களைத்தான் காணோமே நிறைய வேலைகளின் பிடியில் சிக்கி இருக்கிறீர்களோ..! என மனதை சமாதானமாகி கொண்டாலும், நீங்கள் வருவீர்கள் என்ற என் இன்னொரு மன "பட்சி" சொன்னதை நம்பியபடி ஆவலுடன் காத்துக் கொண்டுமிருந்தேன் தங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.

      ஆமாம்..! தங்கள் கருத்து உண்மைதான்.. வதந்தீக்கள் காட்டுத்தீ போன்றது. நம்ப வேண்டாம் எனச் சொல்லியும் வேகமாக பரவும் ஆற்றல் உடையது.

      / என்ன இருப்பினும் எல்லாம் பிஸ்னஸ் மயம்... தம் யூரியூப் வியூஸ் ஐக் கூட்டவே இப்படி.../

      நீங்கள் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
      கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. //எதுவுமின்றி ஏகாந்தநிலையில்

    ஏன் இந்த மாற்றம் ?//

    எதுக்கு இப்போ சுனாமியையும் ஏ அண்ணனையும் முடிச்சுப் போட்டீங்க?:) ஹா ஹா ஹா.

    அழகாக கவிதை எழுதியிருக்கிறீங்க.. தொடர்ந்து எழுதுங்கோ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /எதுக்கு இப்போ சுனாமியையும் ஏ அண்ணனையும் முடிச்சுப் போட்டீங்க?:) ஹா ஹா ஹா./

      ஹா. ஹா. ஹா. அப்போதே நான் சகோதரர் ஏகாந்தன் அவர்களை சிறிதும் அறியாமல் இணைத்திருக்கிறேனே..!

      தங்கள் கருத்துக்கும், அழகான கவிதை என்ற பாராட்டிற்கும் என் மனம் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete