இவ்வுலகத்தில் அன்னை, தந்தை எனவும், மாதா பிதா எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்) தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.
அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும் சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம் சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?
சிறுவயது பருவம் கடந்து வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும் அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல், அப்பா பேச ஆரம்பித்தாலே அறிவுரையாக ஏதாவது (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே! ) சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில், எத்தனை அலட்சியங்களை அவருக்கு பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும் பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.
( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே! எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு? என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே! இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய பதிவொன்றை நான் படித்தேன். அதனால் எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.)
ஆனால், அனைத்து இல்லங்களிலும், இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர் தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.! அவர்களுக்கெல்லாம் என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும் நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.
படித்தமைக்கு நன்றிகள்.
படித்து பிடித்தது.....
*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽ *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ!
உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!
மரணமோ!
உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!
உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிரும்போது!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிரும்போது!
வீட்டில் அப்பா...
சிரித்துக்கொண்டிருக்கலாம்...
புகைப்படத்தில்!!
சிரித்துக்கொண்டிருக்கலாம்...
புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!
பகிர்ந்தேன்!!
பாசம் என்பதற்கு இணை பாசமே. அது யாராக இருந்தாலும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்னை தந்தை இருவரின் பாசங்களுக்கு ஈடு இணை கிடையாது. உண்மைதான்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை அப்பாவுக்கு போலியாக இருக்கத் தெரியாது.
ReplyDeleteபலரும் அப்பாவை புரிந்து கொள்ளும்போது அவர் கண்ணாடிக்குள் சிறையில் இருக்கிறார் புகைப்படமாய்...
நீங்கள் படித்த விடயம் மனதை கலங்க வைத்தது.
நமது இந்நிலையை உணர்ந்தால் எந்நாளும் தந்தையர் தினமே...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் உடனடி வருகைக்கும் விளக்கமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்பாவின் பாசம் என்றுமே வெளிக்காட்டாத உள்ளார்ந்த பாசம்.அதை புரிந்து கொள்ள நாம் தவறிய காலங்கள் திரும்பவும் என்றுமே கிடைக்காத பொன்னான சந்தர்பங்கள் இல்லையா? என் கருத்தை ஆமோதித்து தாங்கள் பதில் கருத்திட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் எழுதியது இதமாக இருக்கிறது.அப்பாவைப்பற்றி எழுதுவோர் குறைவு. ஏனென்று தெரியவில்லை.
ReplyDeleteஅம்மா கண்கண்ட தெய்வம். அப்பா அடுத்த உலகத்து ஜீவனோ என்னமோ? கண்முன்னே இருந்தும் கண்டுகொள்ளப்படாத அப்பாவி.
ஆனால் பொதுவாக பெண்குழந்தைகள் அப்பாவை நினைத்து உருகுகிறார்கள். அதற்குமேல் அப்பாக்களுக்கு வேறென்ன வேண்டும்! ஆனால் அவர் ஆண்குழந்தைகளாகவே பெற்றிருந்தால், அதில் யாராவது ஓரிருவர் இவரைப்பற்றிக் கவலைப்படாமலா போவார்கள்?
வணக்கம் சகோதரரே
Deleteஎன் வலைத்தளத்திற்கு தாங்கள் முதல் வருகை தந்து கருத்து தெரிவித்திருப்பது குறித்து மகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன்.
தந்தையின் பாசம் எப்படி உள்ளார்ந்ததோ, அதே போல்தான் குழந்தைகளுக்கும் தந்தை மீது இருக்கும் பாசமும் என்று சில
சமயம் நினைத்ததுண்டு.(காரணம் அவர் நம் நல் வாழ்விற்காக காட்டும கண்டிப்பாக கூட இருக்கலாம்.)எந்த ஒரு மனிதனும் தான் தந்தையாகும் போது அந்த கண்டிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்வர். நீங்கள் கூறியது போல் பெண் குழந்தைகள் தந்தையிடம் பாசமாகயிருப்பார்கள்.(அவர்கள் வாழ்க்கைபடும் இடத்தின் சுழலைப் பொறுத்து.)மற்றபடி நான் சொன்னது அனைவரும் அப்படியல்ல என்பதே ! வருகைக்கும் கருத்துக்கும் மறுபடியும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்