Saturday, January 13, 2018

தை மகள் வருகை

வணக்கம் வலையுலக நட்புறவுகளே!

அனைவருக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.




தைமகளின் வருகை.....


தங்க மகள் போன்ற தை மகளாம்,
தளிர் நடை பயின்று வந்தாளாம்.
பூமித்தாயின் இன்முகம் காட்டிய
பாசமிகு  வரவேற்றலில், குளிர்வூட்டும்
புன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.
பொங்கும் மங்கலம் இனியென்றும்
எங்கும் எதிலும் தங்குமென பூரித்து
மனமகிழ்வு  கொண்டாளாம்.

பசுமை செறிந்த செடி கொடிகளையும்,
பழுத்து நிறைந்த பழவினங்களையும்,
பூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,
பரவசமாக  பார்த்ததுமே, இத்தனையும்,
பூமித்தாயாம் எனதன்னை எனக்காக  
தந்த சீதனமென  பெருமையுடன் நின்றாளாம்.

தாயின் ஏனைய  செல்வங்களை,
தனித்தே சென்று சந்தித்துப் பேசி
நலம் நவின்று விட்டு வருவோமென,
துள்ளும் நடையில்  சுற்றி வருங்கால்,
பழையன  முற்றிலும் களைந்தகற்றி,
புதியன மட்டிலும்  புதிதாய் படைத்து, தன்
வரவுக்கு கட்டியமாய்  பல வண்ணங்களையும்
வார்த்தெடுத்து வைத்திருப்பதும், கண்டு

மங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,
மதிமுகம்  கொண்ட  பண்பான பெண்டிரையும்,
கொஞ்சிடும் அழகில்  மழழைகள் அனைவரையும்,
விஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த
வீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு

புத்தம் புது துகில்களை மாந்தர்களும்
பூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,
புதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,
தித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,
திகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,
களிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,
களமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு

பொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,
பொங்கும் மங்கலம்  இனியென்றும்,
எங்கும்  எதிலும் தங்கி நிற்கட்டுமென
வாயார வாழ்த்திச் சென்றனளாம்.



பொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.











8 comments:

  1. அருமையான பொங்கல் கவிதை நன்று
    பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரே

      தங்கள் வருகைக்கும். வாழ்த்துக்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
      இவ்வினிய நாட்களில் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  4. அழகான பொங்கல் கவிதை சகோதரி. தங்களுக்கும் குடுமத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      தங்களுக்கும், இவ்வினிய நாட்களில் என் அன்பான வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும். இனிய அழகான பொங்கல் கவிதை கூறி பொங்கவ் வாழ்த்துக்கள் சொன்னமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள்.
      இவ்வினிய நாட்களிவ் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete