Saturday, September 5, 2015

படித்ததில் பிடித்தது...


அரசியலிலும் இது சகஜமப்பா... 

வாட்ஸப்பில் வந்த நகைச்சுவை செய்தியை இங்கு பகிர்ந்துள்ளேன்...

"இயமலோகத்தில் ஒரு நாள்..!

மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள்
மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள்
மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.
மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

மூவரும், மேலோகம் சென்றார்கள்.
அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புண்ணிய
கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கிக் கொண்டு இருந்தார்.
அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம்
அளித்தார். பயந்து கொண்டே இந்த
மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல,
முதல் இருவரையும்
சொர்க்கத்துக்கு போக
சொன்னாரு… இருவருக்கும்
சந்தோஷம் தாங்க முடிய வில்லை.
ஆனால்,
மூன்றாவதாக உள்ளவரை
நரகத்துக்கு அனுப்பிவிட்டார்.

அவருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அவர் யமதர்ம ராஜாவிடம் சென்று  நாங்கள் மூவரும்
மக்களுக்கு தொண்டு
புரிந்துள்ளோம்.  அப்படி
இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த
தண்டனை என்று வினவ, உடனே
யமதர்ம ராஜா அவர்
கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள்
மூவருக்கும் போட்டி
வைக்கிறேன். நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய்
என்று மூன்றாவது நபரிடம்
யமதர்ம ராஜா உரைத்தார்.

நான் உங்கள் மூவருக்கும்
முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.

முதல் போட்டி ஆரம்பம்.

நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று
எழுத சொன்னார்.
 – பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று
எழுத சொன்னார்.
– பாஸ்
பண்ணிவிட்டார்.

நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA
என்று எழுத சொன்னார். அந்த தலைவருக்கு தெரியவில்லை.
பாஸ் ஆகவில்லை.

மறுபடியும் அந்த மூன்றாவது
நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம்
ஒரு சான்ஸ் கேட்டார்.
அதற்கும், அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்.

இது தான் கடைசி சான்ஸ்
என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி.

இரண்டாவது போட்டி
தொடங்கியது.

நபர் 1 – எப்பொழுது இந்தியாவுக்கு
சுதந்திரம் கிடைத்தது ? 1947என்று சொல்லி
பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 – அந்த போராட்டத்தில்
எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள்
என்று கேட்டார்.
அதற்கு அவர் மூன்று ஆப்ஷன்
தந்தார் . 1,00,000 – 2,00,000 – 3,00,000.

2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.

நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய
விலாசம் கேட்டார்.
அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டு
நரகத்தை அடைந்தார்.

கதை சொல்லும் நீதி:
“மேனேஜ்மென்ட் ஸ்கெட்ச்
போட்டுட்டாங்கனா தூக்காமா
விட மாட்டாங்க”"

20 comments:

  1. ஆகா ஆகா முடிவே பண்ணிய பிறகுதான் கேள்விகள் ஆரம்பிக்கின்றன அசத்தல் சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை இங்கும் வந்து போங்க
      http://soumiyathesam.blogspot.com/2015/09/blog-post.html

      Delete
    2. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. எடுத்த முடிவை உறுதியாக்கிய பின் கேட்கும் வீண் கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை எப்படியோ கண்டு பிடித்து சொன்னாலும் அதுவும் வீண்தானே.? ஆனாலும் அந்த கடைசி கேள்வி கொடுமை..

      தாங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கும் விரைவில் வருகிறேன்.
      தொடர்வதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அசத்தல் கடி கேள்விகள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வந்து கருத்திட்டால், என் எழுத்துக்கள் சிறப்புறும்.
      நானும் தங்கள் வலைத் தளம் இனித் தொடர்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. உண்மைதான். கேள்விப் பட்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      ஏற்கனவே இதை கேள்விபட்டுள்ளீர்களா.? இருப்பினும் இங்கும் இதை படித்தற்கு.நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. “மேனேஜ்மென்ட் ஸ்கெட்ச்
    போட்டுட்டாங்கனா தூக்காமா
    விட மாட்டாங்க”" .. உண்மை (தூங்காம? தூக்காம?)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தூங்கியிருந்தா, அந்த 3 வதுஅரசியல் வாதியும் மாட்டிக்காமே தப்பித்திருக்கலாமே.! விதிதான் வேறு என்ன.?

      தொடர்வதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  5. கதை சொல்லும் நீதி:
    “மேனேஜ்மென்ட் ஸ்கெட்ச்
    போட்டுட்டாங்கனா தூக்காமா
    விட மாட்டாங்க”" ஹாஹாஹா!!! செம!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வந்து ஊக்குவித்தால், மேலும் மகிழ்வடைவேன்..
      நானும் தங்கள் வலைத்தளத்தை இனி தொடர்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  6. விடைத் தேடிய பின்னால் தான் வினாவேவா?
    அருமையான நீதி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      ஆம். முடிவான விடை உருவானதும் வந்ந வினாக்கள்...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  7. ஆஹா இப்பவே இதெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் போலயே....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அதனால்தான் "களவும் கற்று மற" என்று சொன்னார்களோ.?
      எதற்கும் முன்னெச்சரிக்கையாக படித்ததை மறந்து விடாமல் "செல்ல" வேண்டும் .

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  8. ஆமால்ல... ஸ்கெட்ச் போட்டுட்டா தூக்காம விடமாட்டானுக...
    ரசித்தேன் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் பதிவை ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  9. தங்கள் தளத்தில் நட்புக்கள் இணைவதற்காகன விட்ஜெட் வையுங்களேன் அக்கா... புக்மார்க் பண்ணி வச்சி... பெரும்பாலும் மறந்து விடுகிறேன். என்றாவது ஒருநாள் ஞாபகத்தில் வந்து மொத்தமாக வாசிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      கணினி எனக்குப் புதிது தற்சமயம்தான் கற்று வருகிறேன். தாங்கள் ௬றியபடி நட்புகளின் அண்மைய பதிவுகள் என்பதை என் மகனின் உதவியுடன் என் தளத்தில் இணைத்தேன். .அதுவல்லவா தாங்கள் ௬றுவது.?

      "நட்புக்கள் இணைவதற்காகன விட்ஜெட் ' என்னவென்று சற்று விபரமாக ௬றினால், அதை இணைக்க முயற்சிக்கிறேன் .ஆலோசனைக்கு நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  10. வணக்கம் சகோதரரே.

    முதலில் என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

    தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    வெறும் ஹா... ஹா..தானா.? இருப்பினும் ரசித்து சிரித்தமைக்கு மகிழ்வுடன் நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்..

    ReplyDelete