அண்டங்களை ஆட்சி செய்பவன்
ஆறுமுகத்தவனின் அண்ணனவன்
அகிலத்தை காத்து ரட்சிப்பவன்
அன்பிற்கு மட்டுமே அடங்குபவன்
ஐய்யனாம் முழுமுதற் கடவுளை
ஐயமின்றி மனதாற தொழுவோமாக..!
வலையுலக சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
சில காரணங்களால் உங்களையெல்லாம் வலையுலகத்தில் தொடர்ந்து இனிதாக உரையாட இயலாமல் போய் விட்டமைக்கு மன்னிக்கவும். இனியேனும் தொடர்ந்து எழுதி வலையில் பயணிக்கவும், எழுத்தெனும் சுவாசத்தை இடையறாது சுவாசிக்கவும் அவனருளையே எப்போதும் பணிவுடன் வேண்டுகிறேன்.
இவ்வினிய விநாயக சதுர்த்தியில் விநாயகர் அகவல் பாடி அவனருளை நாமனைவரும் பெறுவோமாக.!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.!
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு)
அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
நன்றி... படங்கள்... ௬குள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
ReplyDeleteவிநாயகர் அகவலை மனத்திற்குள் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் படித்தேன்!
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் என் மனம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
.
விநாயகர் அகவலை மனத்திற்குள் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் படித்தது கண்டு மனம் மகிழ்ந்தேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோ நலம்தானே ? பதிவின் நீளத்தை புரிந்து கொண்டேன் காரணம் விநாயகர் அகவல் அருமை.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சகோ
வணக்கம் சகோதரரே.
Deleteநலமே.! தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவின் நீளத்தை விநாயகர் அகவலால் புரிந்து கொண்டமை கண்டு மனம் மகிழ்ந்தேன்.
தங்களுக்கும் என் மனம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .
சகோதரரே.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteதாங்கள் ௬றியபடி சென்று பார்த்து விபரங்கள் அறிந்தேன். நான் சாதாரணமானவள். தாங்கள் குறிப்பிட்டபடி சாதனைகள் ஏதும் என்னால் நிகழ்த்தப்படவில்லை.என்ற பெருங்குறை என் மனதில் இருந்தமையால், கையேடு படிவத்தில் நான் எப்படி..? என்று இத்தனை நாள் வாளாவிருந்து விட்டேன். ஆனால் தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக கருதி அன்புடன் இன்று சுட்டிக் காண்பித்ததை கண்டு மனம் நிறைந்த நன்றியுடன்,பெரும் மகிழ்வும் அடைந்து விட்டேன். புதுக்கோட்டை பதிவர் விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாவிடினும், அதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும், விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பாக விழா அமைய பாடுபடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்ள். நன்றி...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
விநாயகர் படங்கள் எல்லாம் அருமை. என் வலைப்பூ பக்கம் உங்களை காணோமே ஏன் ? நேரம் கிடைக்கும் போது வாருங்கள் சகோதரி.
ReplyDeleteவணக்கம் சகோதரி,
Deleteநலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் கொஞ்ச நாட்களாகவே முன்பு போல் வலைபக்கம் வர முடியவில்லை. இப்பொழுதான் வந்து அனைவரின் பதிவுகளையும் படித்து ஒன்றிரண்டுக்கு கருத்திட்ட வண்ணம் இருக்கிறேன். கண்டிப்பாக தங்கள் தளத்திற்கும் வந்து விடுபட்ட பதிவுகளை படித்து கருத்திடுவேன் நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோ !
ReplyDeleteதங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன்
வணக்கம் சகொதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
காலம் தாழ்த்தி வந்தது ஒரு பொருட்டல்ல, எல்லா காலங்களும் வாழ்த்துக்குரியவைதான். என்னை மறவாமல் என தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
இதில் வருந்த ஏதுமில்லை சகோதரரே. நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான தொகுப்பு, நான் தான் தாமதமாக வந்துவிட்டேன்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு, அதிலும் அந்த செம்பருத்தி பூ,,,,,,,,
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாமதங்கள் என்றுமே ஒரு பொருட்டல்ல. என்னை மறவாமல் என் தளம் வந்து பதிவை ரசித்தமைக்கு என் நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமை... அருமை....
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து என் தளம் வந்து கருத்திடுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.