நீ கற்றது கைமண் அளவு ௬ட இல்லை. ஆனால் கனவு மட்டும் கடலை விட பெரிதாய். ..இன்னும் அதனினும்
பெரிதாய்….ஆகாயம் அளவு இருக்குமா… இல்லை
அதை விடவும் பெருசா..சே! சே! இதுரொம்ப பேராசை.. இது எப்படி சாத்தியமாகும்?
இதை எவ்வாறு நீ சாதித்துக் காட்டுவாய்
? மனசு கேலியாய் குதித்துக்
கொண்டே இடித்துக் காட்டியது.
“நீ கனவில் எப்பவாவது கட்டிய அழகிய கோட்டைகளை ௬ட இடித்து தள்ளி விடட்டுமா?”
என்று தைரியமாக என்னை அணுகி கேட்டது.”
“அதுசரி! இப்ப அதை இடிச்சிட்டு அந்த இடத்திலே
என்ன பண்ண போறே..? இருக்குற இடத்தைஃ பிளாட் போட்டு வித்து பணம் சம்பாதிக்க போறியா? இல்லை யாருக்காவது தானமா எழுதி தந்து போற வழிக்கு புண்ணியம் சம்பாதிக்க போறியா?
அட.. என்னதான் செய்யப் போறே, சொல்லேன்?” என்று சள்ளென்று ஒரு நிமிஷம் கோபப்படவும், மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு, இரண்டு நாளா பேச்சு வார்த்தை
எதுவுமில்லாமே, ஒரே டல்லா
எதுலேயும் பிடித்தம் காட்டாது சோம்பேறியாய் ஆனது.
அப்பறம் வந்த கொஞ்சுண்டு கற்பனைக்கு மதிப்பு கொடுத்து கொஞ்சமா
சாதனையின் முதல் படியருகே இருந்த ரொம்ப தூரத்துக்கு அப்பால் காலை எடுத்து வைத்து, பெற்ற அன்னையிடம்,” எனக்கு சாதனை பட்டியலில் இடம் பிடிக்கனும்னு
ரொம்ப ஆசைம்மா.!” நான்
எப்படியாவது இதில் சாதித்து காட்டுவேனா? சொல்லேன்.! என்னையும் சாதனையிலே சிறந்தவங்கன்னு எல்லோரும் ஏத்துக்குவாங்களாம்மா.?
என்று கேள்விகளாய் கேட்கும் போதும், அந்த மனசு
நகைப்புடன் நையாண்டி பார்வைதான் பார்த்தது.
“நீ திருந்தவே மாட்டியா? எல்லாரையும் மாதிரி,
எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு எப்பவும் போல இருந்து, எப்படியெல்லாம் வாழலாம்ன்னு யோசிக்காமே, எப்ப பாத்தாலும்,
ஏதாவது வித்தியாசமா சாதிக்கனும்! நாலு பேர் பாராட்டனும்! ஏன் இந்த வீபரீத ஆசை உனக்கு?
அதுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டாமா? “ஆசை இருக்கு
தாசில் பண்ண.”! அப்படிங்கிற பழமொழியெல்லாம், உனக்குதானே கண்டு பிடிச்சது.! என்று அதன் மனம் போனபடி
கண்டபடி பேச ஆரம்பிச்சதும், இந்த வாட்டி எனக்கு மூடு அவுட் ஆனது
.
இந்த பாழும் காலம் இருக்கே,! அதுக்கு
யாரையும் கொஞ்சங்௬ட மதிக்கிறது
பிடிக்காது.” நான்தான் கடவுளின் பிரதிநிதி! என்னோட கடமையை நான் பேசாமே பண்ணிகிட்டு போயிட்டே இருப்பேன். உங்களுக்கு எங்௬ட வர்றததுக்கு விருப்பம் இருந்தா வாங்க”ன்னு ஒரு அழைப்பை வச்சிட்டு பின்னாடி நாம வர்றோமா! இல்லையான்னு
௬ட பாக்காமே ஒரு கவலை இல்லாமே ஜாலியா போய்கிட்டே இருக்கும். எப்படியும்
நம்ம பின்னே இவங்க வந்துதான் ஆகனுங்கிறது அதுவே முடிவு பண்ணின மாதிரி ஒரு அலட்சியம்,
அதோட பிடியிலே யாரு சிக்கிருக்கங்க, இவங்க எப்படிபட்டவங்க,
தாங்கற சக்தியெல்லாம் இவங்களுக்கு இருக்கா, இல்லையா
? இவங்களுக்கு கஸ்டத்தை தரலாமா, ௬டாதாங்கற எந்தவித
எண்ணமும் இல்லாமே, நான் என்ன தந்தாலும் அதை ஏத்துகிட்டு பேசாமே,
நான் கை காட்டுற திசையிலே உன் பயணத்தை நீ தொடர்ந்துதான் ஆகனுங்கிற மாதிரி
ஒருஅதிகார மனப்பான்மை. வேறுவழி.? அதுகாட்ற
பாதையிலே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.!
அப்புறம் என்ன! காலத்தோட உருண்டு எழுந்து
(அட! எத்தனையோ அடிகள் வேற பட்டாச்சு! ஐயோ! அப்பா! வலிக்குதே அப்படின்னு
கத்தினாலும், வலியோட அவஸ்த்தையை பத்தியோ, வலிமையை பத்தியோ அதுக்கு கவலையே கிடையாது.) நடுவுலே நின்னு
கொஞ்சம் திரும்பி பாத்தா, நமக்கு பின்னாடி எவ்வளவு பெரிய பாதை.!
இத்தனையுமா கடந்து வந்துருக்கோம்.! எப்படி?
இந்த பாதையிலே சந்தோசமா குதியாட்டம் போட்டு நடந்து வர்றாமே, ஏதோ சிந்தனையுடன்,
பெரிய மேதாவியா ஆகப்போறோம்”னு ஏதோ கோட்டையை பிடிக்கிற
மாதிரி, பொழுதை கழிச்சு இப்படி ஓடி வந்திருக்கோமே.! அப்படின்னு நான் கொஞ்சம் தயங்கி யோசனை
பண்ணும் போது, மறுபடி மனசு வந்து முன்னாடி குதிச்சது.
“பாத்தியா.? அதுக்குதான் அப்பவே சொன்னேன். உன்னை மாதிரி இருக்கறவங்க எல்லாரையும் மாதிரி ஜாலியா இருக்காமே, ஏதோ யோசிச்சு,
யோசிச்சு பெரிசா என்னத்தை சாதிச்சிட்டே!. ஒண்ணுமில்லை.,
நீ எதிர்பார்த்த மாதிரி யெல்லாம் உன்னாலே வர முடிஞ்சதா? என்று பேச ஆரம்பிக்க………
இதோ பாரு.! நா படிச்சதை வச்சுகிட்டு ஏதோ என்
கனவை இப்பத்தான் நனவாக்கி வந்துகிட்டிருக்கேன். அது போதும் எனக்கு.! அப்படி கனவை நிலையான கட்டடமாக்கறதுக்கு,
ரெண்டு தூண்கள் ரொம்ப உதவியா
நின்னு கொஞ்சம் தாங்கிபிடிச்சது.! இப்ப ஏதோ ஊரு உலகத்துக்கு என்னை
தெரியாட்டியும் , ஒரு பத்து பேருக்காவது இந்த பதிவுலகத்திலே என்னை
தெரிஞ்சிருக்கு. அந்த சந்தோஷமும் நிம்மதியும் இந்த பாக்கி இருக்கிற
ஆயுள் முழுக்க போறும்.!அந்தவகையிலே , அன்னிக்கு
எங்க அம்மாகிட்டே சொன்னமாதிரி, ஒரு சாதனையாதான் இது நடந்திருக்கு.
இந்த குட்டி சாதனையை என்அம்மாவுத்தான் நான் பரிசா தரப்போறேன்.
என் அம்மா இப்ப இருந்திருந்தா, என்னோட இந்த சின்ன
சாதனையை பாத்தே “இது எப்படிப்பான்னு” ரொம்ப
சந்தோசபட்டு இருப்பாங்க. ஆனா, அதுக்கும்
நான் கொடுத்து வைக்கலே.! என் குரல் கம்மலில் மனசு நெருடலாய் ஒரு
பார்வை பார்த்தாலும், ஏதும் பேசாது கொஞ்சம் அமைதி காத்தது.
அப்போ உன்௬டவே இத்தனை வருசம் ஓடி வந்திருக்கேனே.! என்னதான் நக்கலா உன்னை பேசினாலும், நீ நினைச்சதெல்லாம்
நல்லபடியா நடக்கனும், நீ எதிர்பாக்கறது எல்லாம் உனக்கு கிடைக்கனும்ன்னு, என் “ மனசுகுள்ளே” வேண்டிக்கிட்டு
உன்௬டவே சுத்தி சுத்தி ஓடிவந்தேனே.! என்னை விட உனக்கு……
“ஆமா, எனக்கு என் அம்மாதான் பெருசு.!
அம்மாங்கிற ஒரு ஜீவன் என்னை சுமந்து பெத்து பாதுகாக்கலைன்னா,
நான் ஏது? என் ௬ட சுத்தி வர்ற நீதான் ஏது?
அதனாலே நீ என்ன நினைச்சாலும் எனக்கு என் அம்மாதான் பெருசு.! இந்த பெருமையும் பரிசும் அவங்களைத்தான் சாரும். அவங்ககிட்ட
அன்னிக்கு சொன்ன மாதிரி, என்னோட இந்த சின்ன ஆசையை இன்னைக்கு “முருகன்” அவர் அருளாலே நிறைவேத்தியிருக்கார். அதுவும் மீண்டும் கனவா போயிட ௬டாதேன்னு, அந்த கனவையே
என் பேரோடும் சுமந்துகிட்டு, என் அம்மாவுக்கு, எனக்கு கிடைச்சிருக்கிற “இந்த நன் நாளை” எப்படியாவது பரிசா தரனும்னு என் உயிரையும் என் பேரோடு கொஞ்ச நாள் தங்க வைன்னு
அந்த “ஆண்டவனை” வேண்டிக்கிட்டு சுத்தி வந்தேன்.
இப்ப புரியுதா? இதை எங்கம்மாவுக்குதான் நா தர விருப்ப
படறேன்னு”, என்றதும் மனசு லேசான முனகலுடன்….
உன் ஆசை சரிதான்! ஆனாலும், நா சொன்னதையெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்தி எழுதுறே.! இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு “பில்டப்பா”ன்னு உனக்கு நிறைய “வெகுமதி” கிடைக்கிறப்போ நீ என்னை புரிஞ்சிப்பே.! என்றபடி புகை மாதிரி தோற்றத்துடன் ஒரு வழியாக கலைந்து போக “அப்பாடா” என்றிருந்தது எனக்கு.
பின்னே என்னங்க.! ஒரு மட்டும் கஸ்டபட்டு எப்படியோ
எழுதி தட்டுத் தடுமாறி ”நூறாவதுபதிவை” அணுகிய இந்த சந்தோஷத்தை என் தாயுடன் பகிர்ந்து கொண்டு, அந்த தாய்க்கு பரிசாக தர நான் நினைத்தது தவறா? அதுவும்
இந்த “அன்னையர் தினத்துக்கு”கென்றே யதேச்சையாய் அமைந்திருக்கும்
இந்தப்பதிவான “நூறை “ என் அன்னைக்குத் தராமல், வேறு யாருக்கு தருவது சொல்லுங்கள்..?
இத்தனையும் தந்த அந்த ஆண்டவனுக்கும், தூணாகி எனை நிமிர்த்திய என் சந்ததிகளுக்கும், என் எழுத்துக்
கட்டடத்தின் உறுதிக்கு உதவியாக வாழ்த்திப் பாராட்டி அந்த உறுதியில்
தொய்வின்றி இத்துனைக்காலம் நான் நிலைத்து நிற்க உறுதுணையாய் வலம் வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும், இதை முதலில் பணிவோடு சமர்பித்து பின் என் அன்னைக்கு இதை பரிசாக்குகிறேன்.
இதில் அன்னையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாய் , எனக்கு என் மகள் அனுப்பிய சில வரிக் கவிதைகளை இத்துடன் அனைத்து அம்மாக்களுக்கும்
சமர்ப்பணமாக்குகிறேன் . இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருந்தாலும்,
எனக்காக மீண்டும் என் பதிவிலும் வலம் வரும் இதை படிக்கும் அனைவருக்கும் பணிவுடன்
என் நன்றியையும் சமர்பித்துக் கொள்கிறேன்.
நன்றி.! நன்றி! நன்றி!
இது
அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது நமக்கு
அம்மா வீடுதான் !
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !
===================
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !
===================
இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
===================
டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
'சமைக்க
முடியவில்லையே'
என்கிற கவலை !
===================
'அம்மா தாயே'
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !
===================
எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு
விட்டேன் '
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================
அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்களை தேய்த்துக்கொண்டே
நகர்ந்து விடு்கிறார்கள்
அம்மாக்கள் !
===================
வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !
===================
பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !
===================
வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா
என்றுதான்
கதவு
தட்டுகிறோம் !
===================
அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !
===================
அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
"எம்புள்ள
பசி தாங்காது! "
#பிடித்திருந்தால்_மற்றவர்களுடன் பகிர்ந்து_கொள்ளுங்கள்...
அனைத்து
அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
கடைசியாக எனக்கு பிடித்த பாடல் ஒன்றை, உங்களுக்கும் பிடிக்குமென்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிஞர் வாலி இயற்றி, இளையராஜா இசையமைத்து, எஸ். பி.
பியின் அருமையான குரலில் மனம் கவர்ந்த பாட்டு. நானாக நானில்லை
தாயே.!
100 வது பதிவுக்கு வாழ்த்துகள். 100 சீக்கிரமே 1000 ஆகட்டும்.
ReplyDeleteஅன்னையர்தின வாழ்த்துகள். கவிதைகளை - குறிப்பாக, 'அப்பா கட்டியிருந்தாலும் அம்மா வீடுதான்' பொருளை - ரசித்தேன்.
பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
வணக்கம் சகோதரரே.
Deleteதாங்கள் முதல் வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கும், பதிவுகள் பெருக வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
மிக்க நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வரிகள் - 100% உண்மை...
ReplyDeleteஅன்னைக்கு ஈடு இணை எது...?
என்றும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்...
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அன்னையர் தின நல்வாழ்த்துகளுக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.
மிக்க நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் 100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎனது இன்றைய பதிவு அன்னையர் தினம். பார்வையிட வாருங்கள்.
வணக்கம் சகோதரி.
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கும், 100 வது பதிவுக்கு வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் அன்னையர் தினம்.பதிவுக்கும் வந்தேன் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
முதலில் அன்னையர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteஅடுத்து 100 வது பதிவுக்கும் வாழ்த்துகள்
விரைவில் 200 வது பதிவுக்கு வர அட்வான்ஸ் வாழ்த்துகள்.
எண்ணப்போக்கை அழகாக அன்னைக்கு சமர்ப்பித்து விட்டீர்கள் அருமை
கவிதை முழுமையும் அருமை அதில்
வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம்
இந்த வரிகள் அருமையிலும் அருமை
தாயை உயர்த்திய காணொளி.
வாழ்க வளமுடன்.
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அன்னையர் தின நல்வாழ்த்துகளுக்கும்,அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்.
படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததையும், காணொளியையும் பாராட்டிமைக்கு நன்றிகள்.
மிக்க நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அன்னையர்தின வாழ்த்துக்கள். தங்கள் கவி ஒவ்வொன்றும் அருமை. அப்பா கட்டிய வீடு என்றாலும், அம்மா வீடு என்று தான் சொல்வேலாம். அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கும், 100 வது பதிவுக்கு வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததை, பாராட்டியமைக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் உரைத்தமைக்கும் நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் !
ReplyDelete=======================================
பொன்மனத்தாள் மென்மனத்தாள் !அன்னை என்னும்
புகழ்மனத்தாள் பூமனத்தாள் ! பொறுமை காக்கும்
புன்னகையாள் புதிருடையாள் ! தெய்வம் போன்று
பொறுமையுளாள் புதுமறையாள் ! இன்னல் போக்கும்
நன்மனத்தாள் நறுமணத்தாள் ! தேவர் போற்றும்
திருமனத்தாள் தீந்தமிழாள் ! ஒப்பீ டற்ற
இன்மனத்தாள் இறைமனத்தாள் ! எல்லாம் ஆகி
இருக்கின்ற அன்னையரே வாழ்க வாழ்க !
முதலில் அன்னைக்கான கவிதை மட்டும் படித்தேன் மிகுதி நாளை
வாழ்த்துக்கள் சகோ
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அன்னையர் தின நல்வாழ்த்துகளுக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.
தாங்கள் பாடிய அன்னையர் தின நல்வாழ்த்துப் பா அருமை! வாழ்த்துக்களுக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அன்னையர் தினத்திற்கு ஏற்ற அருமையான பதிவு. நல்ல ஒப்புமைகள், கருத்துக்கள். தங்களது 100ஆவது பதிவு கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து மென்மேலும் எழுதி சாதனை புரிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்,100ஆவது பதிவுக்கு மகிழ்வடைந்து வாழ்த்துகள் தந்தமைக்கும்.தொடர்ந்து மென்மேலும் எழுதி சாதனை புரிய மனம் நிறைந்து வாழ்த்தியமைக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அன்னையர் தினத்திற்கு ஏற்ற அருமையான பதிவு. நல்ல ஒப்புமைகள், கருத்துக்கள். தங்களது 100ஆவது பதிவு கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து மென்மேலும் எழுதி சாதனை புரிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ. 100 வது பதிவு மேலும் மேலும் தொடர்ந்து 1000மாக பெருகட்டும். அன்னையர்தினத்திற்கான இப்பதிவு நன்று சகோ. கவிதைகள் சூப்பராக இருக்கிறது...படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வரிகள் டச்சிங்...
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதாங்கள் அன்புடன் வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கும்,100 வது பதிவு மேலும் மேலும் தொடர்ந்து 1000மாக பெருக வாழ்த்தியமைக்கும் அன்னையர் தினத்திற்காக வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
படித்ததை பகிர்ந்தேன் அவ்வளவுதான்! பகிர்ந்ததை, பாராட்டியதற்கு மகிழ்ச்சி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் .தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும் ...அருமையான சொல்லாடல் உங்களுக்கும் மனசுக்கும் நிகழ்ந்துள்ளவை....இனிய சகோதரி அம்மா ஈடு இணை இல்லாதவள் என்பதை உணரும் போது தொடமுடியாத நிலையில் இருந்தால் மிகவும் கொடுமை..தான்..100 ஆவது பதிவு 1000 ஆக வாழ்த்துகள்மா.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதாங்கள் அன்புடன் என் தளத்திற்கு முதல் வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கும்,100 வது பதிவு மேலும் மேலும் தொடர்ந்து 1000மாக பெருக வாழ்த்தியமைக்கும் ,என் மனமார்ந்த நன்றிகள்.தாமதமெல்லாம் ஒன்றுமில்லை.! தங்களைப் போன்றோர் என் எழுத்தை ரசித்து கருத்துரையிட்டதே எனக்கு பெரு மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து வந்து கருத்திட்டு என்னை ஊக்குவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ReplyDeleteதாமதாமான வருகைக்குமன்னிக்கவும்.
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்க்கையில் சரித்திரம் படைக்கலாம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்,100ஆவது பதிவுக்கு மகிழ்வடைந்து வாழ்த்துகள் தந்தமைக்கும்.தொடர்ந்து மேலும் ஆயிரம் பதிவுகள் எழுதி சாதனை புரிய மனம் நிறைந்து வாழ்த்தியமைக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்.
தாமதங்கள் ஒன்றுமில்லை.! தங்களைப் போன்றோர் என் எழுத்தை ரசித்து கருத்துரையிட்டதே எனக்கு பெரு மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து வந்து கருத்திட்டு என்னை ஊக்குவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.
நானும் அனைவருக்கும் மிகத் தாமதமாய்தான் பதில் இட்டுள்ளேன். அதற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோறுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
101 வது எப்போ ?
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் மீள் வருகைக்கும் அக்கரையுடன் விசாரித்தமைக்கும். பணிவான நன்றிகள்.
101 வதை வெளியிட்டு விட்டேன். அதன் பின் ஆண்டவன் செயல்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.