Sunday, May 31, 2015

நட்பை தேடி...

வணக்கம் நட்புறவுகளே.!மூன்று வாரங்களாக வலையில் உலாவ இயலாமைக்கு முதலில் மன்னிக்கவும்..

இராமாயணத்தில், இராமர் கடலை கடந்து யுத்ததிற்குச் செல்ல அனுமான், ஜாம்பவான், சுக்ரீவன் போன்றவர்கள் பாறைகளைக் கொண்டு பாலம் அமைத்து உதவிகள் செய்த போது அணில்களும் தன் பங்காக சிறு சிறு கற்களை சிரமத்துடன் புரட்டிப் போட்டு இராமனிடம் நற்பெயர் வாங்கி சிறப்புற்றதாம். அதன் அடையாளமாக இராமர் தன் நன்றி கலந்த அன்பை தெரிவித்து, அதை தன் கையில் ஏந்தி பாசமாக அதன் முதுகில் தடவி சிரமத்தை குறைத்து ஆசுவாசபடுத்திய காரணத்தால்தான், அணில்களின் முதுகில் அவர் கை விரல்களின் தடமாக மூன்று கோடுகள் உள்ளன, என இன்றளவும் அந்தக் ௬ற்று நம்ப படுகிறது. அது மாதிரி தமிழை சிறப்பிக்கும் வகையில் வலையுலகில் சிறப்புற பயணித்து வரும் பெரும் ஜாம்வான்களிடையே அதே தமிழ் மேல் உள்ள சிறு ஆர்வத்தால், நானும் ஒரு அணிலாக உலாவிக் கொண்டிருக்கிறேன் என்பதை 2014 டிசம்பரில் அணிலாக நான் என்ற என் பதிவில் சுட்டிக் காட்டியிருந்தேன். அந்த அணிலின் கடமைகள்இன்னமும் சிறிது காலம் அணிலாக நீ வந்தால் சுற்றி வந்தால் நன்று.” என அன்பான கடமையுணர்வோடு எச்சரித்ததால் கடமையை கருத்தில் கொண்டு மீண்டும் காணாமல் போய் விட்டேன். மன்னிக்கவும்.

ஆயினும் வலையுலகில் சகோதரத்துவ உறவோடு என்றும் இருக்கிறேன் என்ற எண்ணம் இந்தஅணிலுக்கும்ஒரு நிறைவான மன உற்சாகத்தை எந்நாளும் தந்து கொண்டேயிருக்கிறது. அது என்றும் குறையாமலிருக்க அந்த ஆண்டவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். அடிக்கடி காணாது போய் நடுநடுவே எட்டிப் பார்க்கும் என்னை (இந்த அணிலை) மறவாதிருக்கும் அன்புள்ளத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்
நான் படித்ததில் பிடித்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
இதை ஏற்கனவே நீங்கள் படித்து அறிந்திருந்தாலும், எனக்காக மீண்டும் படிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.


"விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்."


படங்கள்: நன்றி கூகுள்

26 comments:

 1. உண்மைதான் ...அனைவருக்கும் புரியும்தான் ..நொடி பொழுது மட்டுமே ....எல்லோரும் தாமதிக்காமல் இருந்தால் எல்லோருமே நீல் ஆரம்ஸ்டாங் ஆகிவிடுவார்களே ...இந்த ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை ...உலகம் ...இது எல்லாம் பார்க்கும் போதுதான் ஏன் இப்பிறவி என்று நினைக்க தோன்றுகிறது ? அமையிதியாக மக்கள் வாழும் இடங்களில் குண்டு போட்டு விட்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஓட வேண்டுமே என்பதும் என்ன நியாயம்? இது சாதரணமாக ஒருவர் சராசரி ஜீவனம் செய்கிறார் என்றால் , அவரது வாழ்வை களேபர படுத்திவிட்டு ....நீங்கள் நொடி பொழுது தாமதித்தாலும் எல்லாம் போய்விடும் என்று சொன்னால் அவர் என்ன செய்வார் ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் முதல் வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் சொல்லியிருப்பதெல்லாம் உண்மைதான். நொடிப் பொழுது தாமதிப்பதும் விதியின் செயல்தான் என எண்ணுகிறேன். இதில் நம் முயற்சி ஏதும் இல்லை.என்பதுதான் என் கருத்தும். படித்ததைப் பகிர்ந்தேன். அவ்வளவே.! கருத்திட்டமைக்கு நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. ஒரு மிக நல்ல செய்தியோடு மீண்டும் வந்திருக்கிறீர்கள்.
  தொடருங்கள்.

  ஆர்ம்ஸ்ட்ராங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பது கூடுதல் செய்தி!


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   \\ஆர்ம்ஸ்ட்ராங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பது கூடுதல் செய்தி!//

   தகவல் தந்தமைக்கு பணிவான நன்றிகள்.

   அனைவருக்கும் தாமதமாக பதில் இடுகிறேன். தயவு செய்து அனைவரும் மமன்னிக்கவும்.

   Delete
 3. அருமையான பதிவோடு மீண்டும் வந்து இருக்கீங்க சகோதரி. அப்படியே எனது பக்கமும் வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் பக்கமும் தொடர்ந்து வருகை தருவேன். தாங்களும் என்னைத் தொடர்ந்திட அன்போடு வேண்டுகிறேன்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. மீண்டும் அருமையான தொடக்கம்...

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தொடர வாழ்த்தியமைக்கும் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. அணில் வேலை முடிந்து அப்பப் வலைதளம் வந்தாலும் உங்கள் பாதை அருமை சகோ, வாழ்த்துக்கள்.
  பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
  தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
  அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
  எத்துனை அழகாக சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கருத்துரைக்கு பதில் தாமதமாக இடுவதற்கு மன்னிக்கவும்..

   படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. தயக்கம் வெற்றியை பாதிக்கும் என்று சொன்னமைக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான முதல் வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோரின் வருகை என் எழுத்துக்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது. கருத்துரைக்கு பதில் தாமதமாக இடுவதற்கு மன்னிக்கவும்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. நல்லதொரு விடயத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி சகோ தொடரட்டும் இவ்வகை பதிவுகளும்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
   தொடரட்டும் இவ்வகை பதிவுகளும் என மனதாற வாழ்த்தியமைக்கும் நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.


   Delete
 8. இலக்கியச் சுவை சொட்டும்
  சிந்திக்கவைக்கும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என் தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு என் எழுத்துக்களை செம்மையாக்குவதற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. சிறிய விடுமுறைக்குப் பின் அதிகமான செய்திகளுடன் பதிவு. தொடருங்கள். தொடர்கிறோம்.
  நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என் தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு என் எழுத்துக்களை செம்மையாக்குவதற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.

   தங்கள் தளத்திற்கும் வந்து படித்து ரசித்து கருத்துகள் இட்டேன். தங்கள் கருத்துரைக்கு பதில் தாமதமாக இடுவதற்கு மன்னிக்கவும்.. நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
  நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.//

  உண்மை தான் சகோ.

  நிறைய நாட்கள் கடந்தபின் வந்து அருமையான பதிவு ஒன்றை வழங்கி இருக்கிறீர்கள். நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோரின் தொடர் வருகை என் எழுத்துக்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது. நான் படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.கருத்துரைக்கு பதில் தாமதமாக இடுவதற்கு மன்னிக்கவும்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. தங்கள் சொந்தக் கதையை விட ஒருநிமிடக் கதையின் ஆழம் பிடித்திருக்கிறது ,,,அடிக்கடி வந்து அள்ளிக் கொட்டுவதைவிட இதுகூட நல்லாத்தான் இருக்கு நெஞ்சில் பதியும் படியாய் !

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உண்மையைதான் சொல்லியிருக்கிறீர்கள்.! என் தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு என் எழுத்துக்களை செம்மையாக்குவதற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. அட எவ்வளவு அருமையாக தயக்கம் பற்றியும் அது முன்னேற்றத்திற்கு எவ்வளவு பெரிய முட்டுக்கட்டை என்பதையும் இதை விட அழகாக விளக்க முடியுமா என்ன அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான முதல் வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோரின் வருகை என் எழுத்துக்களுக்கு உற்சாகத்தைத் தரும் என திடமாய் நம்புகிறேன்.

   நான் படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.தொடர வாழ்த்தியமைக்கும் பணிவான நன்றிகள். கருத்துரைக்கு பதில் தாமதமாக இடுவதற்கு மன்னிக்கவும்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. வணக்கம்
  சொல்லிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு தன் நம்பிகை தரும் பதிவு பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நான் படித்ததை பகிர்ந்தேன். பகிர்ந்ததை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.
   தங்கள் கருத்துரைகள் என் எழுத்தை செம்மையாக்குமென நம்புகிறேன். நன்றி.!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete