Saturday, January 3, 2015

தமிழன்னைக்கு செய்யும் தொண்டு



புத்தாண்டில்  புதுமைகள்  பல  புகுத்தும்  புரட்சிகளை,  என்னிடமிருந்து
புகுந்தே  புறப்படும்,  பிரமானங்கள்  பலவற்றை, பிரயாசையுடனும்
இறைவனின்  துணையுடனும்,  எடுத்தாள  மனம்  விரும்பினாலும்,
இதுவொன்றையாவது,  இறுதி வரை தக்கவைத்து கொள்ள அந்த
இறைவனின் திருவடியின்  துணை வேண்டி பிரார்த்திக்கிறேன்.


தமிழில் நல்லதோர் அறிவைப் பெற்றிடுவோம்

தமிழின் தணியாத ஆர்வத்தை, ஊட்டிடுவோம்

தமிழில் என்றும் இயற்றிடவே, கற்றிடுவோம்

தமிழின் கொடுக்கும் ஈகையைப், பரப்பிடுவோம்

தமிழில் உயர்ந்ததால் உலகத்தையும், அளந்திடுவோம்..

தமிழின் பழமைதனை ஊக்கமாய், செப்பிடுவோம்….

தமிழில் நம்முடைய எண்ணமதை, வடித்திடுவோம்
.
தமிழின் நிரந்தர ஏற்றமதை, நிலைபெறச்செய்திடுவோம்…..

தமிழில் உண்டாகும் ஐயத்தை, ளைந்திடுவோம்

தமிழின் குல ஒற்றுமையை, பறைசாற்றிடுவோம்..

தமிழில் புகழ் ஓங்கியதால், பெருமை கொண்டிடுவோம்

தமிழின் சிறப்பான ஔடதத்தால்பிணிகளைத் தீர்த்திடுவோம்….

தமிழில்  இஃத்தொன்றால், செய்யும் செயல்களனைத்தும்

தமிழன்னைக்கு செய்யும் தலையாய கடமையென்று,

தப்பாமல் தரணிக்கு தவறின்றி நாம் உணர்த்திடுவோம்.


படம் ..௬குள்....நன்றி...!

12 comments:

  1. ஆஹா, ஆஹா ஆத்திச்சூடி கண்டேன்
    அதிலும் ஆரவாரம் கண்டேன்
    அருமை அருமை சகோதரி
    தொடரட்டும் இதுபோலவே பதிவுகள்
    நிற்கட்டும் படிப்போரின் நினைவுகள்

    வாழ்த்துகளுடன் கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்களின் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தங்களின் ஊக்கமிக்க கருத்துரைகள், என் எழுத்தை மென் மேலும் தொடர வாய்ப்பளிக்கிறது. நன்றி..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமை... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தங்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆஹா அற்புதம்

    ஆழமாக யோசிக்கிறீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ரசிக்கும் முறையில் அழகான உணர்த்தல். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தாங்கள் பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கும், என் பணிவான நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும், என் உளம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அருமையான ஆத்திசூடி,,,
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம்!

    அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
    இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
    நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
    பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

    எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
    சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
    தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
    பொங்குகவே பொங்கல் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகை தந்தமைக்கும், தமிழால் கவி பாடி, பொங்கல் வாழ்த்தினை மனம் மகிழ்வுற தந்து சென்றமைக்கும், என் பணிவான நன்றியையும், மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete