கண்கள்
வறுமையின் முகத்தில்
இரு கண்கள்…
பரிசல்
வாழ்க்கைக் கரைகளை கடக்க
இன்பம் துன்பம் என்ற நீண்ட
இத்துடுப்புகளின் துணையுடன்
நாட்கள் பரிசிலாக பயணிக்கிறது.
கவலை
மனம் தினமும் சேமித்து வைக்கும்
மரப் பெட்டிகளில், சுகமாக தங்கி
வாழ்ந்து, போராடியும் போக்க முடியாத
வளமான அனுபவம் மிகுந்த கரையான்கள்…
பந்தயம்
தோல்வியில் துவண்டு சோர்ந்த மனதை
தோழமையின் துணையாக தட்டி விட்டு,
"நாளைய வெற்றி உன்னதாக, உன்னுடன்
நானிருப்பேன்" என்னும்
தைரியசாலி நண்பன்..
ஆஹா ஒவ்வொன்றும் புகைப்படங்களுடன் பொருத்தமாய் புதுமொழிக் கவிதைகளுடன் அருமை சகோ....
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
தங்களின் உடனடி கருத்துப் பகிர்வு என் எழுத்துக்களை மேன்மையாக்குகிறது. நன்றி! ஆனால், என்னால் இதுபோல் தங்கள் பதிவுக்கு உடனடியாக வர இயலவில்லை.! வருந்துகிறேன்..இனி முயற்சிக்கிறேன்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அனைத்தும் அருமை... பரிசலும் பந்தயமும் சிறப்பு...
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
கவிதைகளில் பட்டயலிட்டு சிறப்பித்து சொன்னமைக்கு, என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கவிதைகளுக்கு புகைப்படங்களைத் தெரிவு செய்த முறை பாராட்டத்தக்கதாய் உள்ளது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
புகைப்படங்களைத் தெரிவு செய்த முறை நன்றாயிருப்பதாக பாராட்டியமைக்கு என் பணிவான நன்றிகள்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமை. புகைப்படம் மிகவும் பொருத்தம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!
புகைப்படங்கள் கவிதைக்கு பொருத்தமாய் அமைந்திருக்கின்றன என்று சொன்னமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சிறப்பு
ReplyDelete