Wednesday, May 11, 2011

அம்மா யசோதை அம்மா



மண்ணை தின்ற கண்ணன்
மடிமீது அமர்ந்த போது,
மலர்ந்த முகத்துடன் அவனை
கடுஞ்சொல் கூறாது அன்போடு
கட்டியணைத்துக் கொண்ட
அம்மா,

கோபியர் கோள்கள் பலகூற,
கோபப்படாது சாந்தமாக பதிலுரைத்தபின்,
கோபாலனை பாசமாக கண்டித்து, உன்
கோபத்தை அன்பில் கரையவிட்ட
அம்மா,

கண்ணனை வளர்ப்பதில் பொழுதோடு உன்
கருத்தனைத்தையும் மொத்தமாக செலவிட்டு
நீ இந்த மண்ணில் பிறந்ததே உன் மைந்தன்
கண்ணனுக்காகத்தான் என்று மெய்பித்த
அம்மா!

உன் மகன் விழிசிவந்து
அழப்போகும் தருணத்தில்
அனைவரும் வியக்கும் வண்ணம் உன்,
புன்னகையால் அவன் இதழ்களிலும்,
மென்னகையை தவழ விட்ட தாயே!
யசோதை தாயே!

காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை உன்னில் நான்
காண்கிறேன்!
தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
எனக்காக, உன்,
மடிமீது தலைவைத்து,
மன சாந்தி நானடைய
உன் கண்ணனோடு
ஓரிடம் எனக்கும்
ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!

4 comments:

  1. காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
    கண்மணித் தாயை உன்னில் நான்
    காண்கிறேன்!
    தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
    எனக்காக, உன்,
    மடிமீது தலைவைத்து,
    மன சாந்தி நானடைய
    உன் கண்ணனோடு
    ஓரிடம் எனக்கும்
    ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!//

    அருமை. மிக அருமை.

    எத்தனை வயதனாலும் அன்னையின் மடி தேடும் நெஞ்சத்தின் கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தாங்கள் என் வேண்டுகோளுக்கிணங்கி இங்கு வந்து படித்து அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.

    ஆம் எத்தனை வயதானலும், அன்னையிடம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு மன சாந்தி வருமில்லையா? கருத்துக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அழகிய கவிதை... பழைய போஸ்ட்டோ என செக் பண்ணினேன்... ஒரே நாளில் இரு போஸ்ட்டோ? நீங்க எங்கேயோ போயிட்டீங்க கமலா சிஸ்டர்:)..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      அழகான கவிதை என்ற பாராட்டிற்கு மிக்க நன்றிகள்.

      /நீங்க எங்கேயோ போயிட்டீங்க கமலா சிஸ்டர்:)../
      ஹா.ஹா.ஹா. எங்கேயும் போகவில்லை.. உங்களோடுதான் இருக்கிறேன்.உங்கள் அனைவரின் பதிவுகளில் நீங்களெல்லாம் செய்யும் சாகசங்களுக்கு முன் இது சாதாரணம். இது பழைய யாரும் காணாத போஸ்ட்டுதான்.. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமானவை இருக்கின்றன. கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete