முருகா சரணம்
முத்துக்குமரா சரணம்.
முக்கண் புதல்வா சரணம்.
கந்தா சரணம்.
கடம்பா சரணம்.
கார்த்திகேயா சரணம்.
கார்த்திகை பெண்களின்
கண்ணானவனே சரணம்.
அறுமுகவா சரணம்.
ஆறு புஷ்பங்களில்
ஆதியில் தோன்றியவனே சரணம்.
பரமனின் குருவே சரணம்.
பார்வதி மைந்தா சரணம்.
மாலவன் மருகா சரணம்
வேலுக்குரியவா சரணம்.
தேவேந்திரன் மருமகனே சரணம்.
தெய்வநாயகி உடனுறையே சரணம்.
நம்பிராஜனின் மருமகனே சரணம்.
வள்ளியம்மை மணாளா சரணம்.
இத்தனை சரணங்களை உன்னிடம்
சமர்பித்தேன். நீ என்னுடன்
சமர் செய்யும் விதியின் யுத்தத்தை
சமப்படுத்தி, சமனப்படுத்தவும்
என்"நேரத்தை"பார்த்து சரி செய்யவும்
"நேரம்" காட்டும் கருவியேதும்
உன்னிடத்தில் இல்லையா?
நேரம் காலமென்ற ஒன்றை
நோக்காது உன் பக்தர்களுக்காக
ஷண்முகா என்ற பெயர் உனக்கு
பொருந்தி போகுமளவிற்கு
ஷணநேரத்தில் என்றும், நீ
சடுதியில் வருபனாயிற்றே..!
என் மனதின் அருகா(ம)யிலும்
என் நினைவின் அண்மை(ம)யிலும்
நீ எப்போதும் இருப்பதால், உன்
பிரியத்திற்குகந்தந்த
மயில் வாகனமேறி, நீ
பிரியத்துடன் வருவதில் வேறேதும்
பிணக்குகள் உள்ளனவோ.?
இல்லையெனில், இயைந்து நீயும்
விரைவினில் வந்திடப்பா.. என்
வினைகளை போக்கிடப்பா.. உன்
வேலுடன் வந்திங்கே என்னை
வினைகளின் போரினிலின்று
வெற்றிக் கொள்ளச் செய்திடப்பா.
"யாமிருக்க பயமேன்"என்றவன்
யாதுமறியாதவனாய் நிற்பதேனோ?
சூதும், வாதும் தெரியாமல், விதியின்
சூழலில் பிணைந்திருக்கிறேன்.
வேலும், மயிலும் துணையென
நாளும், மனதில் துதித்திருக்கிறேன்.
ஆகையால் தவறாது வருவாய்.
நாட்கடத்தாது வந்தருள்வாய். இந்த
ஆயுளுக்குள் உனைக் காணும்
ஆனந்தத்தையும் தருவாய்.
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
முருகா.. முருகா.. போற்றி. போற்றி. 🙏.
இது என் பேத்தி (மகள் வயிற்றுப் பேத்தி) வரைந்த ஓவியம்.அவள் வரைந்த இந்த ஓவியமும் என் பதிவுக்கு (கவிதைக்கு) ஒரு மூலதனம்.இந்தப்பதிவு இறைவனின் அயராத முயற்சிகளின், துணையால் உருவான முன்னூறாவது (300) பதிவு. பதிவுலகிற்கு வந்தவுடன் என் முதல் பதிவும் முருகனின் துணையால்தான் அரங்கேறியது. ஆதலால், முன்னூறுக்கும் அவனையே துணையாக அழைத்தேன். சரியென சம்மதித்து துணை வந்த அவனின் கருணைக்கும், அன்பிற்கும் கைமாறாக இன்னமும் அவனைப்பற்றி நிறைய பதிவுகள் எழுத அவன் துணை எப்போதும் வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொள்கிறேன். 🙏.
இந்தப் பதிவினையும் எப்போதும் போல் படித்துச் சிறப்பிக்கும் என் பாசமான சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகளும்.🙏.
இன்றைக்ஙு கல்கத்தா காளி கோயில் சுவரில் மயிலுடன் கூடிய வேலவனைப் பார்த்தேன்.
ReplyDelete300வது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல திறமையுடையவர் நீங்கள்.
அவனிருக்க அவன் அருளுக்கு ஏது குறை?
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பிரயாணம் நல்லபடியாக இருக்கிறதா? இன்று கல்கத்தா காளியை தரிசனம் செய்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. அம்மன் தரிசனம் சுலபமாக கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.
/இன்றைக்ஙு கல்கத்தா காளி கோயில் சுவரில் மயிலுடன் கூடிய வேலவனைப் பார்த்தேன்/
நல்ல சகுனம். (என் 300 ஆவது பதிவுக்கும், பதிவோடு சேர்த்து எனக்கும், பதிவை படித்த தங்களுக்கும்.) தாயும் மகனுமாய் நம் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன்.
/அவனிருக்க அவன் அருளுக்கு ஏது குறை?/
உண்மை. அவனருள் பரிபூரணமாக எங்கும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன். பிரயாணத்திலும், தங்கள் உடனடி கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீ தேன் 2 ண்டூ ஊஊஊஊ:)
ReplyDelete300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் நலமோடு பல பதிவுகள் போட அந்த வேலோடும் மயிலோடும் இருப்பவரின் ஆசிகள் கிடைக்கட்டும்....
ஊ.கு:
ஆனாலும் அண்ணனை விட்டுவிட்டு தம்பியை மட்டும் அழைச்சிருக்கிறீங்கள்.... எலியார் வந்து கடிச்சிடப்போகிறார்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களது வருகை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். நீங்களும் உங்கள் வலைப்பக்கத்தில் எழுதுவதை தொடருங்கள். உங்களின் அருமையான எழுத்துக்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. அண்ணனை எப்படி விட முடியும்? அவர்தான் நான் பிறந்ததிலிருந்தே என் இஷ்ட தெய்வமாக மனத்துள் அமர்ந்திருக்கிறாரே. மேலும் அவர் இல்லாமல் தம்பியா? இருவரும் எப்போதும் கை கோர்த்தபடிதான் இருப்பார்கள்
/எலியார் வந்து கடிச்சிடப்போகிறார்./
ஆகா... ... எலி என்றதும் நினைவுக்கு வந்து விட்டது. இரு தினங்களுக்கு முன் என்றும் இல்லாத அதிசயமாக ஒரு எலி (இத்தனைக்கும் நாங்கள் இருப்பது 3வது மாடி.) பால்கனி வழியாக கிச்சனுக்குள் எப்படியோ வந்து விட்டது. ஒருவேளை அதை தூதாக அனுப்பியது நீங்கள்தான் போலும். என இன்று உங்கள் கருத்தை படித்ததும் தோன்றுகிறது. ஹா ஹா ஹா. ஆனால், அப்போது நான் முருகன் துதியே பாடி முடிக்கவில்லையே... முன்கூட்டியே எலியார் வீட்டுக்குள் வந்திருக்கிறார் என்றால், அது உங்கள் இருவரின் பிளான்தான். ஹா ஹா ஹா. கண்டிப்பாக அண்ணனுக்கு ஒரு சிதறு தேங்காய் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். கேட்கிறேன். :))
உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆ அப்போ நான் நினைப்பதைப் பிள்ளையாரப்பா செய்கிறார்போலும் ஹா ஹா ஹா இனிக் கன்னாபின்னாவென நினைக்கப்போகிறேன்:)))
Delete/இனிக் கன்னாபின்னாவென நினைக்கப்போகிறேன்:)))/
Deleteஹா ஹா ஹா. அட ராமா..! ஒரு வாட்டி ஒன்னு போல நினைத்த எலியாரின் வருகையே தாங்க முடியவில்லை. இனி "கன்னாபின்னாவென" என்றால், தாங்க முடியாது சாமி.. நினைக்கும் முன் என்னிடம் சொல்லிட்டு நினைங்கோ? எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கலாமில்லையா? ஹா ஹா ஹா.
பேர்த்தியின் கை வண்ணம் மிக அழகு... வாழ்த்துக்கள்... தொடர்ந்து இன்னும் வரையச்சொல்லிக் கேட்டுப் பகிருங்கோ.. அவவுக்கும் ஊக்கமாக இருக்கும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
ஆம். அவளின் ஓவிய பயிற்சிக்கு ஊக்கம் தந்து கொண்டேதான் உள்ளோம். இது போல் நிறைய வரைந்துள்ளாள் . உங்கள் கருத்துக்கும் மகிழ்ச்சி.
எங்கள் இன்னொரு பேத்தியும் மிக அழகாக வரைவாள். இருவரும் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவார்கள். என் பேத்தி வரைந்த இந்த ஓவியத்திற்கு நீங்கள் தந்த வாழ்த்துக்கு அவள் சார்பாக மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல பதிவு __/\__ __/\__ பேத்தியின் திறமை சிறக்க இறைவன் அருளட்டும். 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசாதரணமாக மயில் வாகனதில் தோகை மேற்புறம் விரிந்து இருக்கும், இந்த படத்தில் கீழ்புறம் இருக்கிறது.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நல்ல பதிவென கூறி தாங்கள் தந்த வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி சகோதரி.
ஆம்... அவளது திறமைகள் இறைவன் அருளால் சிறக்க வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொண்டுள்ளேன். அவள் பார்த்து வரைந்த இந்த ஓவியத்தில், மயிலின் தோகை கீழ் புறமாகத்தான் இருந்தது. மேற்புறமிருக்கும் தோகை படத்தையும் வரைய தேர்வு செய்து வைத்துள்ளாள் . பேத்திக்கு அளித்த தங்களது வாழ்த்துக்களும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். இன்னும் இன்னும் வளரட்டும்.
ReplyDeleteஉங்கள் எழுத்துத் திறமைக்கு நீங்கள் சிறுகதைப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளலாம்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களது அன்பான, அக்கறையான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி.
/உங்கள் எழுத்துத் திறமைக்கு நீங்கள் சிறுகதைப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளலாம்./
அந்தளவிற்கு எனக்கு திறமை இல்லையென்பது என் உறுதியான கருத்து, நினைப்பு.,எனினும் உங்கள் வாக்கு பலிக்கட்டும் எனவும் இந்த நிமிடம் பேராசையும் கொள்கிறேன். ஆனால் விதி யாரை ஆசைக்கு உடன்படாமல் இருக்க விட்டு வைத்தது. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இந்தப்பதிவு இறைவனின் அயராத முயற்சிகளின், துணையால் உருவான முன்னூறாவது (300) பதிவு.//
ReplyDeleteஇந்த வரியை இப்படி மாற்றி அமைக்கலாம்.
இந்தப் பதிவு முருகனின் துணையால், அயராத முயற்சிகளால் உருவான முந்நூறாவது பதிவு!
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/இந்தப் பதிவு முருகனின் துணையால், அயராத முயற்சிகளால் உருவான முந்நூறாவது பதிவு!/
ஆகா.. அருமையான வரிகள். இப்படியும் எழுதலாம். இதில் முயற்சி என்பதும் அவனுடைய செயல் என நான் கருதுகிறேன். எனவே பொதுவாக இறைவனின் முயற்சி எனக்கூறி விட்டேன்.
இரண்டாவதாக முருகன் என குறிப்பிட்டு கூறினால் (மேலே பாருங்கள். "அவர் அண்ணனை அழைக்கவில்லையா ..! எலி வந்து கடிக்கப் போகுது என அதிரா சகோதரி பயமுறுத்துகிறார். ஹா ஹா ஹா அதனால் பொதுவாக இறைவன் என கூறி விட்டு விட்டேன்.அதற்கே இப்படி. :))). )தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் வேண்டுதல் பா அருமை.
ReplyDeleteசமர்ப்பித்தேன். சமனப்படுத்தி
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
வேண்டுதல் "பா" நன்றாக உள்ளதென கூறியமைக்கும் வார்த்தையை குறிப்பிட்டுச் சொன்னதற்கும் என் மகிழ்வுடனான நன்றிகள்.உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என் எழுத்தின் குறைகளை உணர்த்தி ஒரளவு நன்றாக எழுத வைக்கும் என நம்புகிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஷண் என்பது ஆறு என்கிற எண்ணைக் குறிக்கும் என்று நினைவு. ஆனால் உங்கள் வித்தியாசமான கற்பனை அதை க்ஷணத்தில் சேர்த்து விட்டது!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/ஷண் என்பது ஆறு என்கிற எண்ணைக் குறிக்கும் என்று நினைவு.
கேள்விப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இருந்தாலும் தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.
ஷண்முகத்திற்கு பொருத்தமான வார்த்தை தேடினேன். நிமிடத்தில்
அது நினைவுக்கு வந்ததால் அதைச் சேர்த்து எழுதினேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதையின் கடைசி வரிகள் நான் எழுதிய ஒரு கவிதையை எனக்கு நினைவு படுத்துகின்றன.!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/கவிதையின் கடைசி வரிகள் நான் எழுதிய ஒரு கவிதையை எனக்கு நினைவு படுத்துகின்றன.!/
என்ன கவிதை அது.? குறிப்பிட்டிருக்கலாமே..! படித்து ரசித்திருக்கலாம். நினைவு வந்தால் குறிப்பிடுங்கள். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேத்தியின் ஓவியம் அருமை. காக்கும் கரங்களை குறியீடாகவும் மயிலையும் அழகாக வரைந்துள்ளார். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
என் பேத்தியின் ஓவியத்தை ரசித்து அவளுக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தந்ததற்கு அவள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி. அவளிடம் கூறுகிறேன் குழந்தை சந்தோஷ மடைவாள்.
ஒன்று கவனித்தீர்களா..! இன்று கந்தன் கருணையால், தங்களது கருத்துக்கள் ஏதும் காணாமல் போகவில்லை. இன்றைய பதிவுக்கு பல கருத்துக்களை எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக தந்து எனக்கும் பேத்திக்கும் வாழ்த்துக்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
300வது பதிவுக்கு வாழ்த்துகள். பேத்தியின் ஓவியம் அருமை.
ReplyDeleteபாராட்டுகள், வாழ்த்துகள். உலக கலைதினத்திற்கு வாழ்த்துகள்.
பேத்தியின் கைவண்ணத்திற்கு ஏற்ப உங்கள் கவிதை மலர்ந்தது அருமை.
வேலும் மயிலும் துணை, நாம் இருக்க பயமேன் என்று சொல்லும் ஓவியம் அழகு.
வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயம் இல்லை மனமே!
கந்தன் வருவான் கவலைகள் போக்குவான்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/300வது பதிவுக்கு வாழ்த்துகள். பேத்தியின் ஓவியம் அருமை.
பாராட்டுகள், வாழ்த்துகள். உலக கலைதினத்திற்கு வாழ்த்துகள்./
உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி. குழந்தையிடம் உங்கள் பாராட்டையும், வாழ்த்தையும் சொல்கிறேன். அவளும் சந்தோஷமடைவாள். அவளிடம் உங்கள் பேரன் கவினின் திறமைகளை பற்றி அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அவளும் கேட்டு புரிந்து கொள்வாள். என்னிடமும், "அவர்கள் உன் ப்ரெண்டா..? கோமதி பாட்டியா" என உங்கள் பெயரைச் சொல்லி ஊர்ஜிதபடுத்திக் கொள்வாள்.
/வேலும் மயிலும் துணை, நாம் இருக்க பயமேன் என்று சொல்லும் ஓவியம் அழகு.
வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயம் இல்லை இல்லை மனமே!
கந்தன் வருவான் கவலைகள் போக்குவான்/
ஆம்.. கந்தன் வரட்டும், கவலைகளைப் போக்கட்டும். காத்திருக்கிறேன். தங்களது நல்லாசிகள் பலிக்கட்டும். உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேத்தியின் கைவண்ணாம் சூப்பர் கமலாக்கா. குறிப்பாக எது வேண்டுமோ அதை சிம்பாலிக்காக அழகாக வரைந்துள்ளார்,. பாராட்டுகள் வாழ்த்துகள்!
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
உங்களைத்தான் காணவில்லையே என எதிர்பார்த்தேன். வந்து விட்டீர்கள். தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
பேத்தியின் ஓவியத்தை ரசித்து அவளுக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தந்ததற்கு அவள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி சகோதரி. அவளிடமும் சொல்கிறேன். சந்தோஷமடைவாள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..
300 வது பதிவுக்கு வாழ்த்துகள் கமலாக்கா
ReplyDeleteஉங்கள் வரிகளில் முருகன் இன்னும் அழகுற ஆஹா!!!!
ஸ்கந்த குரு கவசம் கேட்டது போல் இருந்தது வாசித்து முடித்ததும்.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
தங்களது அன்பான மனமுவந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.
முருகனின் அழகுதான் என் வரிகளுககே அடித்தளம்.
/ஸ்கந்த குரு கவசம் கேட்டது போல் இருந்தது வாசித்து முடித்ததும்./
நானும் எழுதி முடித்ததும் வாசித்து பார்த்தேன். ஆனால், ஸ்கந்த குரு கவசத்தை தந்த சுப்பிரமணியம் என்ற சாந்தானந்தா ஸ்வாமிகள் எங்கே..! இன்னும் உலக பற்றுடன் குடும்பத்தின் மீது ஆசைகளை வைத்துக் கொண்டு உலாவி கொண்டிருக்கும் சாதரண மனுஷியான நான் எங்கே..! ஆனால், நீங்கள் ரசித்துப் படித்தமைக்கு என் அன்பான நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் செவ்வாயன்று எ.பி.யில் என்னுடைய கதைக்கு ஒரு சந்தேகம் எழுப்பியிருந்தீர்கள்.அதன் அடிப்படையில் முடிவில் ஒரு சிறு மாறுதல் செய்து மத்யமரில் வெளியிட்டேன். அங்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் செய்த மாறுதல்: //"சார் இவர்தான் உங்களுடைய புதிய அட்டெண்டர்"
ReplyDelete"குட் மார்னிங்" என்று கை நீட்டிய அந்த புதியவனை வெறித்துப் பார்த்தார் கவின்.
"நீ ராசுவோட பையனா?"
"ஆமாம்"
"உன்னோட சிரிப்பு அப்படியே ராசு மாதிரியே இருக்கு என்ற கவினுக்கு அந்த புதியவனை பிடித்து விட்டது.// நன்றி.
வணக்கம் சகோதரி.
Deleteதங்களின் அன்பான மீள் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.
/உன்னோட சிரிப்பு அப்படியே ராசு மாதிரியே இருக்கு என்ற கவினுக்கு அந்த புதியவனை பிடித்து விட்டது.// /
நீங்கள் இப்போது புதிதாக கதையில் செய்த மாறுதல் வரிகள் சூப்பராக உள்ளது சகோதரி. மத்யமரில் கதையை வெளியிட்டமைக்கும், அங்கு நல்லதொரு பாராட்டை பெற்றமைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தகவலை என்னிடம் சொன்ன உங்களின் நல்ல மனதிற்கு என் பணிவான நன்றி.
தொடர்ந்து தங்களின் புதுமையான பாணியில் பல கதைகளை எபியிலும், உங்கள் தளத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களின் அபாரமான எழுத்தாற்றலுக்கு எப்போதும் என் அன்பான வாழ்த்துகளும், பாராட்டுக்களும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.