மணிக் கொழுக்கட்டை.
இந்த மாவு உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
இனி இனிப்பு கொழுக்கட்டை.
நல்ல பெரிய தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் க. பருப்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு) வெறும் கடாயில் சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு ( மண்டை வெல்லமாக இருந்தால் பெரிய சைசில் ஒரு உருண்டை அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக இருக்கும். ) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக கடலைப் பருப்பை மட்டும் வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும் ருசி நன்றாகவிருக்கும். நான் முக்கால்வாசி இந்த முறையில் செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும் கொழுக்கட்டைகள் செய்யலாம். இப்படியான நாலு விதங்களில் நமக்கு எது சௌகரியபடுகிறதோ அவ்விதம் செய்து கொள்ளலாம்.
இத்தனை விதங்களில் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மேல்மாவையும் பூரணத்தையும் ஒருசேர தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது சிறிது அடம்பிடிக்கும்.
ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம் ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.அல்லது தண்ணீரில் ஊற வைத்த ப. அரிசியை மிருதுவாக அரைத்து அந்த விழுதில் சற்றே நீர்க்க தண்ணீர் கலந்து கடாயில் கிண்டியும் தயாரித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன் சிறிதளவு பொடிஉப்பையும் கலந்து கரைத்துக் கொள்ளவும். பின் அடி கனமான கடாய் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அந்த மாவு கரைசலை விட்டு கெட்டியாக கிண்டிக் கொள்ளலாம்.
நாராயணா... வாசுதேவா... ப்ரத்யும்னா... இதைத்தவிர 5 கமெண்ட்ஸ் போடப்போகிறேன்... எதெது நிற்குமோ.. எதெது வழுக்கி பாதாளத்தில் விழுமோ.... அபயம் கிருஷ்ணா....
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteபதிவிற்கு தங்களின் அன்பான உடனடிவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நாராயணா.. நாராயணா.. நல்லபடியாக இன்று சகோதரர் ஸ்ரீ ராம் அவர்களின் அனைத்துக் கருத்துக்களையும் இங்கு கொண்டு வந்து நிலை நிறுத்தியதற்கு என் பணிவான நமஸ்காரங்கள். நன்றிகள். :)
அப்பாடா..! இன்று உங்கள் கருத்துக்கள் அனைத்தும் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டன. இனி நான் ஏதாவது பதிவு போடுவதற்கு முன்பு எல்லோரின் கருத்துக்கள் (அதிலும் குறிப்பாக உங்களின் கருத்துக்கள் ) நல்லபடியாக அதன் கால்கள் வழுக்காமல் இங்கு வந்தடைய வேண்டுமென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரார்த்தனை செய்து விட்டுத்தான் போடப் போகிறேன். :)) ஏனெனில் நம் பிரார்த்தனைகளுக்கு "அவன்" என்றுமே செவி சாய்ப்பான். உங்களின் அன்பான கருத்துகளுக்கு என் பணிவான நன்றி சகோதரரே.🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா... ஹா... ஹா... நாராயணா என்னும் பாராயணம்...
Deleteஆக, காலையிலேயே படங்களும் விவரணங்களுமாகச் சேர்ந்து காலையிலேயே கொழுக்கட்டை ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்...
ReplyDeleteஅம்மிணி கொழுக்கட்டை கூட கொஞ்சம் வித்யாசமாக செய்வோம். காரம், தித்திப்பு இரண்டும் செய்து பூரணங்கள் தீர்ந்த நிலையில் மிச்ச மாவில் பச்சைமிளகாய் நசுக்கி விட்டு, உப்பு, பெருங்காயம் கொஞ்சம் காரப்பொடி சேர்த்து விதம் விதமான வடிவங்களில் உரு செய்து வேகவைத்து எடுத்து விடுவோம்!
ReplyDeleteஆனாலும் எனக்கு கார கொழுக்கட்டைதான் ரொ....ம்....ப இஷ்டம்... அதற்காக தித்திப்பு பிடிக்காதா என்று கேட்காதீர்கள். அதுவும் ரொம்ப இஷ்டமே.. மணி கொழுக்கட்டைகளை நாங்கள் அம்மிணி கொழுக்கட்டைகள் என்போம். அதுவும் பிடிக்கும். இதுதான் பிடிக்காது, இல்லையா?
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பது போல நாங்கள் வெல்லம், தேங்காய் மட்டும்தான் பூரணமாக வைப்போம். பருப்புகள் சேர்க்க மாட்டோம். ஒவ்வொரு உருண்டையின் நுனியிலும் ஒரு கூர் வைப்போம்!!
ReplyDeleteபடங்களும், அதன் வடிவங்களும் நாவூறச் செய்கின்றன. ஞாயிறும் அதுவுமா காலையில் இப்படி நாவருவியை உருவாக்கலாமா கமலா அக்கா?!!
ReplyDeleteமுருகா... அல்லா... ஜீசஸ்... இப்போதைக்கு ஆறு பின்னூட்டங்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன... காப்பாத்துங்கப்பா..
ReplyDeleteபுத்தம் சரணம் கச்சாமி... பின்னூட்டம் காணாமப் போனா ' அட, போ சாமி!'
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/புத்தம் சரணம் கச்சாமி... பின்னூட்டம் காணாமப் போனா ' அட, போ சாமி!'/
ஹா ஹா ஹா. ஞாயறு அதுவுமாக நன்றாக (விழுந்து, விழுந்து) சிரிக்க வைத்து விட்டீர்கள். அத்தனை கடவுள்களும் இன்று என் பதிவில் (இன்றைய ஞாயறில்) உங்களால் உதயமாகி விட்டார்கள். தெய்வ புண்ணியத்தில் இன்றைய கருத்துக்கள் ஏதும் காணாமல் போகவில்லை. அவர்கள் அனைவருக்கும், உங்களுக்கும் என் பனிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏற்கனவே சமையல் எக்ஸ்பர்ட் ஆனவர்களுக்கான பதிவு என்பதால் படங்களை புதிர் போல இடமாற்றியும், அளவுகளைச் சொல்லாமலும் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கு.
ReplyDeleteபடங்கள் ஆசையைத் தூண்டுகின்றன.
ReplyDeleteஒரு நாள் திருப்பதி பயணம், மறுநாள் ஒரு லட்டும், ஒரு வடையும் சாப்பிட்டதற்கே ஒரு கிலோ ஏறிவிட்டது எனக் கவலைப்பட்டு இரண்டு நாட்களாகப் பாடுபட்டு எழுநூறு கிராம் குறைத்திருக்குறேன். இப்போது மனைவியிடம் பூரணக் கொழுக்கட்டை கேட்கலாமா என யோசிக்க வைக்கிறது.
பெங்களூரில் குல்கந்து கிடைப்பதால் அதனை பூரணத்தோடு கலந்து குல்கந்து கொழுக்கட்டை பண்ணலாமா என யோசிக்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பேரீட்சை பழம் வைத்து கூட இனிப்பு பூரணம் செய்து கொழுக்கட்டைகள் செய்கிறார்கள். நீங்கள் குல்கந்திலா..? செய்து எ. பி சமையல் பதிவுகளில் பகிருங்கள். நாங்களும் செய்முறையை தெரிந்து கொள்கிறோம். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லை நல்லாருக்கும். குல்கந்து மட்டும் கூட வைச்சு செய்யலாம்.
Deleteட்ரை ஃப்ரூட்ஸ், வைச்சும் செய்யலாம். எல்லாமே நாம் விதம் விதமாகச் செய்யலாமா என்று யோசிக்கும் கைவண்ணம்தான் நெல்லை. புகுந்து விளையாடலாம்
தட்டிவிடுங்க!
கீதா
கொழுக்கட்டை பிடிக்கும். ஆனால் காரப்பொடி சேர்க்காதது இஷ்டம். மோதகம் எப்போதும் போல் பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமே செய்வோம். படங்கள் நன்றாக உள்ளன.
ReplyDeleteJayakumar
இரண்டு கொழுக்கட்டைகளுமே நல்லா வந்திருக்கு கமலாக்கா.
ReplyDeleteநானும் மணிக் கொழுக்கட்டை இப்படி உசிலி செய்வதுண்டு. வெறும் மணிக்கொழுக்கட்டை (னீங்க செய்திருப்பது போல) செய்துவிட்டு அதில் தாளித்து தேங்காய் சேர்த்தும் செய்வதுண்டு.
சூப்பரா செஞ்சுருக்கீங்க
கீதா
இனிப்பு பூரணக் கொழுக்கட்டையும் நல்லாருக்கு ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க கமலாக்கா
ReplyDeleteகீதா
படங்களும் நல்லா வந்திருக்கு!
ReplyDeleteகீதா