ஸ்ரீராம ஜெயம்.
*Namaskar.* Sending the rare portrait of SriRama pattabhishekam collected from AYODHYA. We request you to forward this to as many people as you can before Ram Lalla pran prathishtai on 22nd Jan 2024 Please do this as a mission to circulate the blessings of Lord Hanuman and positive vibrations in the society. *Jai Sriram*
அன்பின் மறு உருவமாக
விளங்கியவனே ஸ்ரீராமா...! 🙏.
அருளின் திரு உதயமாக
அவதரித்தவனே ஸ்ரீராமா...!🙏.
கருணையின் பிரதிபிம்பமாக
திகழ்ந்தவனே ஸ்ரீராமா...! 🙏.
கதிரவனின் வழித்தோன்றலாக
தோன்றி,ஆதவனைபெருமையுற
வைத்தவனே ஸ்ரீராமா...! 🙏.
பெற்றோருக்கு மதிப்பளித்து
மகிழ்வுற்றவனே ஸ்ரீராமா...!🙏
ஒரு சொல்,ஒரு தாரமே
வாழ்வில் நிலைத்திருக்குமென
நிரூபித்தவனே ஸ்ரீராமா...! 🙏.
நட்பின் இலக்கணத்தோடு
நன்மைகள் பலவும்
புரிந்தவனே..! ஸ்ரீராமா🙏.
சத்தியத்தின் உதாரணமாக
வாழ்ந்து நின்றவனே ஸ்ரீராமா.!🙏.
அநீதியை அன்பாலும்
அழிக்கலாமென வென்று
காட்டியவனே ஸ்ரீராமா...! 🙏.
சாந்தத்தின் முழு அளவென
பிரதிபலித்தவனே ஸ்ரீராமா..!🙏.
பொறுமையின் சிகரமாக
பூமியில் கோலோச்சி
வீற்றிருந்தவனே ஸ்ரீராமா...!🙏.
தர்மத்தின் பாதையை உலகிற்கு
எடுத்துரைத்தவனே ஸ்ரீராமா...!🙏.
ராம், ராம், ராம், ராம், ராம், ராம்,
என்ற புனிதமான சொல்லுடன்,
எங்களுடன் இயைந்து
எங்கள் உள்ளொளியாய்
கலந்தவனே ஸ்ரீராமா...! 🙏.🙏.🙏.
உன் பாத கமலங்களை
உள்ளன்போடு மறவாது
போற்றித் துதிக்கும் பக்தியை
ஆனந்த பரவசமாக்கி
அனுபவிக்கும் ஸ்ரீராமபக்த
ஆஞ்சநேயரின், ஆசிகளோடு
எங்களுக்கும் உன் அருளமுத
பார்வையிலான பக்தியை
பருக தந்துவிடு ஸ்ரீராமா...!🙏.
ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்...
ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்...
ஸ்ரீராம ஜெயம்... ஸ்ரீராம ஜெயம்...
இன்றைய நன்னாளில் வாட்சப்பில் குறுஞ்செய்தியுடன் வந்த ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துடன், என் மனதில் தோன்றியவைகளையும் எழுத்துருவாக்கி பதிந்திடத் தந்த ஸ்ரீராமபிரானின் பாதங்களை பணிவுடன் பற்றி வணங்குகிறேன். .
பதிவை படித்த என் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள்.
ஜெய்ஸ்ரீராம்.
ஜெயராம்.
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபழைய பட்டாபிஷேக படம் நன்றாக இருக்கிறது.
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கவிதையை போலத்தான் நினைத்து எழுதினேன். அது கவிதையா என ஸ்ரீராம் சகோதரர் வந்துதான் சொல்ல வேண்டும். :)) தங்களின் அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரி. பழைய பட்டாபிஷேகம் படத்தைப் பார்த்ததும் மனதுக்கு பிடித்தமானதாக அமையவே இன்னைய நன்னாளில் ஸ்ரீராமரின் அருளால் இந்தப் பதிவும் பிறந்தது. அயோத்தி ஸ்ரீராம கோவில் வைபவம் தொலைக்காட்சியில் கண்டு களித்தீர்களா? தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.
ராம். ராம். ஜெயராம். ஜெயஸ்ரீராம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அயோத்தி ஸ்ரீராம கோவில் வைபவம் தொலைக்காட்சியில் கண்டு களித்தீர்களா?//
Deleteஆமாம், பார்த்தேன். ராமர் பாடல்கள் மனதில் வந்து போனது ஆனால் உங்களுக்கு உடனே கவிதை வந்து விட்டதே! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நீங்கள் ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்து பூஜை கள் செய்வதை பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா முழுக்க அன்று ராம நாமத்தைதான் கூறிக் கொண்டிருந்தது என நினைக்கிறேன். ராமர் பற்றிய பாடல்கள் பலவற்றை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் பல பாடல்களுடன் அவரை மனம் ஒன்றி வணங்கியிரருப்பீர்கள். மகிழ்ச்சி சகோதரி.
மீள்வருகை தந்து மறுபடியும் எனக்கு ஊக்கமளித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி. அனைத்தும் ஸ்ரீ ராமரின் அருள். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை நன்று. முதலில் உள்ள பட்டாபிஷேகப் படம், அந்தக் காலத்துப் பெண்கள் உடையில்.... அது சரி.... தொலைக்காட்சியில் இராம ஜென்ம பூமி கோவில் ப்ராணப் ப்ரதிஷ்டை பார்த்த விளைவு...கவிதை வெளிப்பட்டுவிட்டது போல.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. அந்த பழைய கால ஸ்ரீ ராமபட்டாபிஷேக படம் என்னை மிகவும் கவர்ந்தது. சீதாப்பிராட்டி அந்தக்கால கல்யாண மணமகள் போல் முழங்கால் மடித்து அமர்ந்திருந்த விதம் மிகவும் நன்றாக உள்ளது. என் திருமணத்தில் இரண்டு தினங்களும் மணமேடையில் இப்படித்தான் அமர்ந்திருந்தேன். அப்போதைய பெண்களை அப்படித்தான் அமரச் சொல்வார்கள். அது ஒரு காலம்.
இது நேற்றிரவு வாட்சப்பில் வந்ததும், கவிதைக்கான வரிகளும் ஸ்ரீராமரின் கருணையால் மனதில் உதித்தது. இன்று தொ. காட்சியில் அயோத்தி கோவில் ப்ராண ப்ரதிஷ்டையை மனமுருக பார்த்ததும் பதிவில் வெளியிடும் ஆவலும், ஸ்ரீராமரின் தயவில் பிறந்தது.
தங்களின் அன்பான ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கள் மகிழ்வை தருகிறது. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராமரைப்பற்றிய தங்களது கவிதை அருமை சகோ.
ReplyDeleteஸ்ரீராமஜெயம்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தாங்கள் இந்த கவிதையை குறித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லாம் ஸ்ரீராமரின் கருணை.நன்றி சகோதரரே.
ஸ்ரீராம ஜெயம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராமர் போற்றி அகவல் நன்று. ஸ்ரீராம ஜெயம்.மனதில் மகிழ்ச்சி வெள்ளமாய் போகிப் பிரவகித்ததை வார்த்தையில் கொண்டு வந்து விட்டீர்கள். இந்த கமெண்ட் ஸ்பாமுக்குப் போகாமல் அங்கேயே நிற்க அந்த ஸ்ரீ ராமன் அருள் புரிய வேண்டும்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கவிதைக்கு நல்ல பொருத்தமான பெயராக அகவல் என வைத்து விட்டீர்கள். மகிழ்வுடனான நன்றி.
இன்று தங்களின் எந்த கருத்தும் எங்கும் போகாமல் ஆவலுடன் ஸ்ரீராமரை காண பத்திரமாக வந்து சேர்ந்து விட்டன இறைவனுக்கும் நன்றி. இருப்பினும், நான் நேற்று இரவே படுக்க போகும் முன் ஸ்பாமில் என்னால் முடிந்த வரை தேடினேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறுவயதில் ஆயிரமோ, பத்தாயிரமோ, அவர்கள் கேட்டபடி ஸ்ரீராமஜெயம் எழுதி காஞ்சி மடத்திற்கு அனுப்பியபோது பிரசாதமும், ஒரு சிறு போற்றி அகவலும் அனுப்பி இருந்தார்கள். "பாற்கடல் பள்ளிகொள் பரமனே போற்றி" என்று தொடங்கும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். முன்பு என் சுறு வயதில் நானும் காஞ்சிப் மடத்திற்காக ஒரு உறவினரிடம் (அவர்கள் சொல்லி எழுதியது) ஸ்ரீராம ஜெயம் எழுதி தந்திருக்கிறேன். ஆனால், அதற்கு உங்களுக்கு பிரசாதமும், போற்றிப் பாடலும் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. ஆரம்ப வரிகளே தேனாக இனிக்கிறது. உங்களுக்கு இப்போதும் அந்தப்பாடல் நினைவில் நிலைத்திருக்கும் என நினைக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. ஸ்ரீராமர் அருள். இரண்டு கமெண்ட்களும் அங்கு நின்று விட்டன. ஸ்ரீராமர் இந்த ஸ்ரீராமுக்கு அருள் புரிந்து விட்டார்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/ஆஹா.. ஸ்ரீராமர் அருள். இரண்டு கமெண்ட்களும் அங்கு நின்று விட்டன. ஸ்ரீராமர் இந்த ஸ்ரீராமுக்கு அருள் புரிந்து விட்டார்!/
ஆம்... உங்கள் கமெண்ட் நல்லபடியாக என் பதிவுக்கு வந்து சேர ஸ்ரீ ராமர் எனக்கும் அருள் பாலித்து விட்டார்.. எல்லாம் அவர் அருள்தான்.! உங்களுக்கு ஸ்ரீராமரின் அருள் எப்போதும் தங்கு தடையின்றி. கிடைக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம பாமாலை நன்று..
ReplyDeleteஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்..
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பாமாலை நன்று என பாராட்டியமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோதரரே.
ஸ்ரீராம ஜெயம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்க ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க கவிதை. பார்த்ததும் உங்களுக்கு டக்கென்று வந்துவிடுகிறதே. பக்தியில்.
ReplyDeleteவார்த்தைகளைத் தொடுத்து மாலை போட்டுட்டீங்க. சின்ன வயசுல ராமஜெயம் எழுதி அதை சுருட்டி மாலை போலச் செய்து இல்லைனா, நோட் புக்ல எழுதி காஞ்சி மடத்துக்கு அனுப்பினா பிரசாதம் வரும். செய்ததுண்டு.
எனக்கு பக்தி ரொம்பக் கம்மி. இல்லைன்னு கூடச் சொல்லலாம்!!!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கமலாக்கா. உங்கள் ஆரோக்கியம் எல்லாம் நன்றாகி மகிழ்ச்சியோடு இருக்க இறைவன் துணையிருந்திடட்டும்.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களது அன்பான பாராட்டுக்கு மிக்எ நன்றி சகோதரி. எனக்கு அப்படி யெல்லாம் டக்கென்று கவிதைகள் வந்து விடுதில்லை. யோசித்து, யோசித்துதான் அதுவும் ஏதோ வரிகள் அமைகின்றன. ஆனால், நம் பதிவுலக சகோதரர்கள் ஸ்ரீராம், துரை செல்வராஜ் அவர்களுக்கு உடனடியாக வார்த்தைகள் அமைந்து நல்ல அழகான கவிதைகள் வருகின்ற ஒரு வரங்களை வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கு முன் நான் ஒரு சாதாரணம்.
நானும் முன்பு சிறு வயதில் ஒரு உறவு வழி காஞ்சிபமடத்திற்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதியது நினைவுக்கு வருகிறது. பல கோவில் கூட ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலை போல் கோர்த்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பக்தியுடன் சாத்துவார்கள்.
உங்களுக்கு பக்தி குறைவென்று யார் சொன்னார்கள்.? எல்லாவற்றிலும் பாஸிடிவாக நினைக்கும் உங்களுக்கும் இறைவனின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது. இறைவனின் நினைப்பு இல்லாமல் எதையும் நல்லவிதமாக நினைக்கும் எண்ணங்களும் வராதே..!
எனக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. ஆரோக்கியம் ஒன்றைத்தான் நானும் இறைவனிடம் தினமும் பிரார்த்தித்தபடி உள்ளேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவைதைப் பாடல் மிக நன்று. வாழ்த்துகள்!
ReplyDeleteதுளசிதரன்
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
பதிவை ரசித்து கவிதை பாடல் நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு என் பணிவான நன்றி. உங்கள் ஊக்கமிக்க வார்த்தைகள் எனக்கு மகிழ்வை தருகின்றன. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.