அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். அன்னையின் ஆசிகள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட நவராத்திரி அன்னைகளான முப்பெரும் தேவியர்களின் பாதங்களை இந்த நாளில் பக்தியுடன் போற்றி நமஸ்கரித்து கொள்வோம். 🙏.
கொன்றை தும்பை சூடும்
கோடி விங்கர் பாகமுடையவளே..
மைக்குழலி மங்கை உமையவளே..
வார்க்காது பனியுறையும் வடிவே.. .
பொற்க்கொடியே
அடியேனிடர் தீர்ப்பாய்.. .
புகழுடைய முக்திப்பதம் தருவாய்...
சுத்தமாய் ஜோதியொளி காட்டி
ஜெயமான முக்திப்பதம் தருவாய்....
கணடங்கருத்தாரிடத்தில்
கருணையுடன்
எனக்குறுதி சொல்வாய்....
தண்டம் பணிகிறேன்.
போற்றி. போற்றி. ..
சின்மயானந்த பதம் தருவாய்....
பாதகங்கள் தீரவே என்னைப்
பார்த்திடுவாய் உன்
கருணை விழியால்...
பார்வதி அம்மாவென்
பாவங்களைப் போக்கி...
பரிவுடனே மோட்ஷப்பதம்
அருள்வாய்...
அம்மா... எட்டாத தூரத்திலிருப்பாய்...
எந்தனுடைய மனந்தனில்
எப்போதும் இருப்பாய்...
பக்தாளை தேடி அழைப்பாய்..
பாவங்கள் சேராமல் ஒழிப்பாய்..
துன்பமெனும் பாவக் கடலில் வீழ்ந்து.
தாய் முகம் காணாத பிள்ளை போல்,
புலம்புகின்றேன் கர்ம பூமியிலே...
பெரியோர்கள் தொழுதேற்றும்
பெரிய நாயகியே..
தாயே சரணம். உன்
தாளே சரணம்..
சங்கரியே சரணம்.
மின்னே சரணம்..
மீனாம்பா சரணம்..
மீனாட்சி தேவியே சரணம்...
பொன்னே சரணம்...
பூவே சரணம்..
பொற்பாதமே சரணம்...
சரணம்.. சரணம்.. என்னிடர் தீர்த்து
சாயுஞ்சம் தருவாய்...
அச்சந்துலைப்பாய்..
அருளைப் பொழிவாய்..
அழியாப்பதம் தருவாய்....
தொப்பை வயிற்றான்
தும்பிக்கையாலென்னை
தூக்கியே அக்கரை சேர்ப்பாய்....
சரணமென்றுந்தன்
தாளினை நான் பணிந்தேன்
தள்ளி விடலாமோ...
நெடுநாளாய் உன்னை
நம்பினதெல்லாம்
நிஷ்பலனாய் விடுமோ...
கருணாநிதியே...
கல்யாணி உமையே. .
கதம்பவனஷ்வரியே...
பாசத்தை போக்கி பாவ பயம் நீக்கி
பாத நிழலில் சேர்ப்பாய்..
பஞ்சாட்சரத்தை உபதேசம் செயது
பவபயம் போக்குவிப்பாய்..
தேவியே சங்கரர்
வாமத்தில் விளங்குகின்ற
சேர்வையை தந்தருள்வாய்..
அன்னை உமையே
உன்னை அல்லாமல்
எந்தனுக்கு ஆதாரம் வேறுமுண்டோ...
கமலதள லோஷினி
கதம்பவன வாஷினி
கைவல்ய பதகாரணி...
விஸ்வமெல்லாம் நிறைந்த
விஷ்வேஸர் வாமத்தில்
விளங்கியிருந்த தேவி நீயே..
அந்தரி.. சுந்தரி.. சிவகாமி கனகசபை
ஆதிபராசக்தி நீயே..
சந்ததமும் உன்னை நான்
சரணமென்று நம்பினேன்.
பாவமெல்லாம் போக்கியே
அனவிரதம் கருணா கடாட்சம்
வைத்தெந்தனை
அடிமை கொண்டே ஆள்வாய்.
🙏. ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏
இது எப்போதும் என் சின்ன வயதிலிருந்தே தினமும் சொல்லி வருவது வழக்கம். எங்கள் அம்மா கற்று தந்த பாடல்களில் ஒன்று.எந்த பாடல் வரிசையில் இது உள்ளதென்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக செவ்வாய் வெள்ளிதோறும் மாலை விளக்கேற்றியதும் இதைப்பாடி அனைவரையும் அன்னை பரமேஸ்வரி அருளுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்து கொள்வேன். இந்த நவராத்திரியில் அன்னையின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட இப்போதும் இந்த பாடலை பதிவில் பகிர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏.
பாமாலை நன்றாயிருக்கிறது. இதுவரை கேட்டதில்லை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்து தங்கள். கருத்தை பதிவு செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தேவி பாடல் நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// சத். தத். //
ReplyDeleteஇப்படி வருமா என்று தெரியவில்லை. தத் ஸத் ப்ரம்மார்ப்பண நமஸ்து என்று கேட்ட நினைவு.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம். . எழுத்துப் பிழை வந்து விட்டது. மனதில் இருந்த பாடலை சொல்லி அனைத்தையும் தட்டச்சு செய்யும் போது தவறாக அடித்து விட்டேன் போலிருக்கிறது. திருத்தி விடுகிறேன். பிழையை சுட்டிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தேவி ஸ்லோகம் நன்று தங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பார்வதி தேவியை துதிக்கும் பாடல் நன்றாக உள்ளதென்ற கருததுக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். ,
அருமை...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவு அருமையாக உள்ளதென்ற கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நவராத்திரி வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
ReplyDeleteஅம்மா சொல்லி தந்த பாடல்கள் அருமை. நீங்கள் தினமும் சொல்லி வருவது மகிழ்ச்சி. பாடல்கள் பகிர்வு அருமை.
பிரார்த்தனை செய்து கொள்வோம் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அம்மன் அருள.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். ஆம். இந்த நன்னாளில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்து கொள்வோம். தேவி பாடலை ரசித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேற்று கருத்துரையை பதிவு செய்திருந்தேன்.. எங்கே போயிற்று?..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடாடா தங்கள் கருத்தும் இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்து விட்டதா? வருத்தமாக உள்ளது. போட்ட கருத்துக்கள் மாயமாகி எங்குதான் செல்கிறதோ ? மீண்டும் தாங்கள் சிரமம் பாராது வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தப் பாமாலையை இதுவரையிலும் கேட்டதில்லை...
ReplyDeleteபதிவினில் வைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்களும் இதுவரை கேட்டதில்லையா? இதை எழுதியவரின் பெயர், பாடல் வரிகள் இடம் பெற்ற விளக்கம் அம்மா சொல்லியிருப்பார்கள். ஆனால் எனக்குதான் மறந்து விட்டது. உங்களில் யாரேனும் இதை அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன்.அதனால்தான் என் மனதில் உள்ளதை இங்கு பகிர்ந்தேன்.
பாடலை ரசித்து, கருத்து சொல்லியிருப்பதற்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தெய்வத் தமிழ் தொடர்ந்து வருகின்றது..
ReplyDeleteவாழ்க.. வாழ்க..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/தெய்வத் தமிழ் தொடர்ந்து வருகின்றது../
ஆம். தமிழில் அம்மனை வழிபடும் போது முற்றிலும் பொருள் புரிந்து, மனனம் செய்வதற்கும் எளிதாகத்தான் உள்ளது.
/வாழ்க.. வாழ்க../
தமிழ் வாழ்க. தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பாமாலை ...அம்மன் அருள்
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் வரவு மகிழ்ச்சியை தருகிறது. அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். தங்களின் பாடல் அருமை என்ற அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றாக இருந்தது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அம்மன் பாடலை ரசித்து நல்லதொரு கருத்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் கமலாக்கா. நவராத்திரி ஆரம்பமானதுமே வீட்டில் ஏதோ திருவிழாக் காலம்போல அமளியாக இருக்கும்... டெய்லி படையல் வைப்பது, தேவாரம் பூசை என மனதுக்கு இதமாக இருக்குது.
ReplyDeleteநீங்கள் எழுதியிருக்கும் பாடல் நான் அறிந்ததில்லை, நன்றாக இருக்குது.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நலமா? நீங்கள் கதை படிக்க மறுபடி வருவீர்கள் என காத்திருந்தேன். இங்கு உங்கள் வருகை கண்டதும் மன மகிழ்ச்சி உண்டானது. தங்கள் நவராத்திரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
ஆம்.. வீட்டில் தெய்வீக விழா காணும் இந்த மாதிரி நேரங்கள் எப்போதும் மன மகிழ்ச்சியை தருவதுதான். இங்கு பகிர்ந்த அம்மன் பாடல் நன்றாக உள்ளதென கூறியமைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வலைத்தளம் வாருங்கள். உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் வந்து கருத்துக்கள் தந்து அளவளாவிய காலங்கள் இனிதான வை. என்றுமே மறக்க இயலாது. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.