Thursday, July 26, 2018

இயல்பு...

பிறப்பு என்பது சகஜமெனில் இறப்பும் இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டுமே இறைவனால் நிர்ணயக்கபட்டவை.  என்றுமே அவனுடைய ஆளுமைக்கு உட்பட்டவை. எத்தனையோ விஞ்ஞான மாற்றங்கள் வந்திருப்பினும் , இவைகளில் எந்த வித மாற்றமுமில்லை. அந்தந்த நொடிப் பொழுதில் ஜனன மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 "மரணத்தின் சோகம் தாக்கிய ஒரு வீட்டில் உறவுகள் அழுது கொண்டிருப்பதை கண்ட பட்டினத்தார் "எதற்காக இவர்கள் அழுகிறார்கள்? இறந்த ஒரு பிணத்தைச் சுற்றி , நாளை இறக்கப் போகிற பிணங்கள் இப்படி அழலாமா?  என்று கேட்டாராம்." அவரின் ஞானம் தீடீரென முற்பிறவியின் கர்ம வினையால் உதித்தது.  அந்த ஞானம் நம்முள் தோன்ற  எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அப்படியே எடுத்தாலும், அதற்கென ஒரு வேளையும், பொழுதும் ஆண்டவன் நமக்கு அமைத்து தர,  நாம் எத்தனை பிறவிகளில் எவ்வளவு புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ?

திருக்குறளில் நிலையாமை அதிகாரத்தில் அழிந்து போகும், செல்வம், பொருள் போன்றவற்றுடன் இறப்பையும் குறித்து திருவள்ளுவனார் கூறியுள்ளனவைகளில் சில...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்......   உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

ஆனால்,  எத்தனையோ விதங்களில் சான்றோர்கள் இறப்பை பற்றி கூறினும் நம்மனம் பக்குவமடைய இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும். அது ஒன்றை உலகில் நமக்கு சாசுவதம். . 

இன்னமும் எத்தனையோ மகான்கள் இறப்பை மனதாற ஏற்றுக்கொள்ளச் சொல்லி அவர்களுடைய செய்கைகளி னாலும், உபதேசத்தினாலும், ஞான மார்க்கத்தில்  நம்மை வழி நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள். மனது பக்குமடையுமாறு நிறைய புராண கதைகள் கேட்டும், படித்தும் வளர்ந்துள்ளோம்.. ஆனாலும், இறப்பினால் ஏற்படும் பிரிவை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. .

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும், அடுத்த நொடிப் பொழுதை பற்றி கவலையுறாது, சந்தோஷத்தை தரும் பிறப்புகளும், வருத்தத்தை தரும் இறப்புகளும் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் வீட்டின் மகிழ்வுகளும், இழப்புகளும், என்றுமே முறையே சிறந்தது, கொடுமையானது  என்ற மனோபாவம் நிறைந்த சுயநல, பச்சாதாபத்தில் ஒவ்வொரு மனித மனங்களும் சுழன்று, முடிவில் அவற்றின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை சந்திக்கின்றன.

நம் விருப்பங்களும், அதன் விளைவாய் "அவனி" டத்தில் வைக்கும் விண்ணப்பங்களும் மட்டுமே நம்முடையதன்றி, நடப்பதனைத்தும் "அவன்" செயல்....

சென்ற சனியன்று காலை என் பெரிய நாத்தனார், எங்கள் குடும்பத்தில் மூத்தவர், (ஒரு வருடமாகவே உடல்நிலை முடியாமல் இருந்தார்.) இவ்வுலகை துறந்து விட்டதாக செய்தி வர, ஏற்பட்ட மன வருத்தத்துடன் என் வலையுலக உலா பயணம் தடைபட்டது.  அவரின் நினைவுகளில், என் பதிவில் வந்த கருத்துக்களுக்கும் உடனே  பதிலளிக்க இயலவில்லை என்பதையும், (நேற்று, இன்றாகத்தான் பதில் கருத்திட முடிந்தது.) அனைத்து வலைத் தளங்களுக்கும் வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் இட முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும்....

27 comments:

  1. மிகவும் வருந்துகிறேன் அம்மா...

    வலையுலகை விட்டுத் தள்ளுங்கள்...

    முதலில் உங்கள் மனம் ஆறுதலடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நெருங்கிய உறவின் இழப்பிலிருந்து மனம் மீள கொஞ்ச நாளாகும். ஆனால் அதுவும் கடந்து போய்விடும். உங்கள் மனம் விரைவில் இயல்பு நிலைக்கு வர எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நாளை பட்டினத்தார் குருபூஜை அதைப்பற்றி பதிவு போட்டு இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    பதிவின் பின் பகுதியை படித்தபின் தான் குடுமபத்தின் பெரியவர் நாத்தனார் இறைவனடி சேர்ந்தது அறிந்தேன்.
    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மன ஆறுதலை இறைவன் தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நெருங்கிய உறவினரின் மறைவு தாங்க முடியாதது தான். ஆனாலும் வேறு வழியில்லை. தாங்கித் தான் ஆக வேண்டும்.

    உங்கள் மனம் ஆறு்தல் அடைய எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. தங்களது உறவினரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களை தெரிவிக்கிறேன். மரணம் தவிர்க்க இயலாதது.

    பட்டிணத்தார் பாடலில் "பணத்தைச் சுற்றி" பிணத்தைச் சுற்றி என்று மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.
      மாற்றி விட்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  6. எமது இரங்கல்கள்.

    ஒருவர் மறைந்த செய்தி அறிந்தவுடன், இதைப்பற்றி அவரிடம் பேசாமல் போய்விட்டோமே, இதைக் காண்பிக்கலையே என்றெல்லாம் தோன்றுவதைக் கவனித்திருக்கிறீர்களா?

    பிரசவ வைராக்யமும், மசான வைராக்யமும் குறைந்த ஆயுள் கொண்டவை அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.
      உண்மையான வார்த்தைகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஓ இப்போதுதான் பார்க்கிறேன்... எல்லோர் மனதும் அமைதி பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இறப்பை பற்றி நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் சரி. மிகச் சமீபத்தில் எங்கள் மாமா இறந்து போனார். வயதாகி விட்டது. கடைசி இரு மாதங்கள் கொஞ்சம் சிரமப்பட்டார். அதிகம் கஷ்ட்டப்படாமல் சென்று விட்டார் என்று தோன்றினாலும், அந்த வெற்றிடம் நிரப்பப்பட முடியாதுதான்.
    சிறுவயதில் ஊருக்கு வரும்பொழுதெல்லாம் எங்களை டவுனுக்கு அழைத்துச் சென்று சோன் பப்டி, ரோஸ் மில்க், லாலா கடை மிட்டாய் என்று வாங்கித் தருவார். தீருவையாறு அசோகாவை எங்களுக்கு அறிமுகப் படுத்தியது எங்கள் மாமாதான்.
    ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் எண்ணெய் தேய்த்து குளித்தால் கையில் நன்கு உலர்ந்த துண்டோடு காத்திருப்பார். அதனால் ஈரம் போக தலையை துவட்டி விடுவார். இப்படி பல நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. நீக்கமற நிறைந்த நிலை நினைவிற்கொண்டே
    நிலையற்ற வாழ்க்கையில் கடமையாற்றுவோம்
    வேதாத்திரி மகரிஷி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள், அஞ்சலிகளும். நெருங்கிய இழப்பிலிருந்து மீள்வதற்கு காலம் வழிவகுக்கும். உங்கள் குடும்பத்தார் எல்லோரது மனதும் அமைதிபெற எங்கள் பிரார்த்தனைகள்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோக்கள் இருவருக்கும்

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. என்னதான் வயதாகி இருந்தாலும் மூத்தவர் ஒருவரைப் பிரிவது என்பது கஷ்டம் தான். இந்தத் துயரத்தில் இருந்து நீங்கள் மீண்டு வரப் பிரார்த்தனைகள். இறந்த ஆன்மா நற்கதி அடையவும் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. யார் என்ன சொன்னாலும் இறப்பு,இழப்பு சோகம் தான்.
    வள்ளுவரே வாசுகியைப் பிரிந்து வருந்தினதைப் படித்திருக்கிறேன்.

    மனிதராகப் பிறந்த பிறகு எல்லாவற்றையும் அனுபவிக்கத் தான் வேண்டும்.
    காலம் .Take care ma.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      அன்பும், ஆறுதலும் இதமளித்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. விபரம் கூறியதும், அனைவரும் என் மீது கொண்ட அன்பினால், வந்து ஆறுதலாக பல வார்த்தைகள் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது. பழையபடிக்கு நானும் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

    அனைவரும் தந்த ஆறுதலுக்கு மறுபடியும் நன்றிகள்.

    ReplyDelete
  14. உள்ளத்தைத் தொடும் சிறந்த பதிவு
    உள்ளம் அமைதி பெறத் தளத்திற்கு வரலாம்

    ReplyDelete