மேக நாதன் ..
மேகங்களில் ஒழிந்து மறைந்து
வேகமாக மாயமாகி போரிடுவதால்
மேக நாதன் என்னும் பெயர்
சந்தேகமின்றி நிலைத்து போனதோ..
அசுரகுல பிள்ளை எனினும்.
அவனின் நல்லமனம் உன்னிடமும்
அதிகமாக அருகி தங்கிப் போனதை
அவனி உள்ளளோர் நன்குணர்வர்.
சித்து பல கற்று தேர்ந்து நீ
இந்திரஜித்து எனும் புகழ் பரப்பியும்
இங்கேயுன் மேகம் கண்ட ஆசையினால்,
மாயவித்தையை மறுபடி காட்டிட
மாறி மாறி வந்தனையோ...
மெளனமாய் இருந்த மேக நண்பனை
மெளனம் கலைத்து பேசி பார்த்து
தோற்றுப்போனதில், அழகான
ஊஞ்சலில் அமர வைத்து
ஆசையாய் ஆட்டியபடியே
அழகு பார்த்து கோபம் தீர்த்த
காற்றுத் தோழனின் அதீத கவனிப்பில்
சற்று மனமுருகி கரைந்தே
போனான் மேக நண்பன்
வெளிச்சம் காட்டும் கண்ணாடியாம்
சூரியனை பாதரசம் துடைத்து நிமிடத்தில்
மங்கிப் போகச் செய்தது மழை மேகம்
மேகக் குழந்தைகளைஅன்புடன்
தாலாட்டி சீராட்டியதால் வானம்
அன்னை என்ற அந்தஸ்தை
அதிசுலபமாய் பெற்றுக் கொண்டது.
எங்களின் ஒவ்வொரு நிலையிலும்
எழிலான ஒவ்வொரு வண்ணங்கள்.
இவை இயற்கை எமக்களித்த பரிசுகள்.
இப் பரிசினை, உங்கள் முன்னே
பார்வையாக்கினோம்... உங்கள்
படமெடுக்கும் அவாவை எங்கள்
உள்ளம் உணர்த்தி போனதினால்.....
தன்னிடம் இருப்பதை பகிரவும் ஒரு
தயாள குணமும் வேண்டுமென்றோ...
விரிந்து பரந்த இவ்வுள்ளம் எங்கள்
வானத்தாயிடம் நிதமும் பெற்ற சீதனமாம்.
இது வான வீதியின் அழகில் மயங்கி நான் எடுத்தப் புகைப்படங்கள். சுமாராகத்தான் வந்திருக்கிறது... அதற்கேற்றவாறு ஜோடியாக கை கோர்த்து கொண்டு வர்ணனைகள், இலக்கணக் கவிதை, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என்ற எதிலும் சேராத ஒரு தத்து பித்து கவிதையாக உருவெடுத்து உங்கள் முன், (அதற்கு முன், என் முன்) உருவெடுத்து நிற்கிறது. பொறுமையோடு சகித்து கொள்வோர்க்கு
🙏
நன்றி.
=====*=====
கண்ணில் படும் காட்சிகளை படமெடுக்காமல் இருக்க முடிவதில்லை. கலையும் மேகங்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை. காற்றால் கலைக்கப்படு முன் பல்வேறு காட்சிகளை அவரவர் கண், கற்பனைக்கேற்றவாறு காட்டியே செல்கிறது!
ReplyDeleteஅழகான "புகை"ப்படங்கள்.
ஆவ்வ்வ் மேகங்களே பாடுங்களே.. பாடல் இப்போ ஸ்ரீச்ராமுக்கு நினைவு வந்திருக்குமே:))
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
நம்மனதில் உதிக்கும் கற்பனைக்குதான் அளவேது. பாராட்டுதலுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக அதிரா சகோதரி..
Deleteமேகங்கள் குறித்து சகோதரர் ஸ்ரீராமுக்கு நினைவு வராத பாடல்களா? அவருக்கு அத்தனை மேகப் பாடல்களும் நினைவின் முன் நின்றிருக்கும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதை விட அருமையா எடுக்க முடியுமா என்ன? முதல் இரு படங்கள் எனக்கு நம்ம ஆஞ்சியைப் போல் தோன்றியது. அடுத்தடுத்த படங்களும் அருமை. உங்கள் வர்ணனையும் அருமை! இங்கேயும் காவிரியில் நேத்திக்குத் தண்ணீர் விட்டு திருச்சிக்கு வந்தாச்சு. மாடிக்குப் போய்ப் படங்கள் எடுக்கணும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்களுக்கு ஆஞ்சியைப்போல் தெரிகிறதா? தாங்கள் சொன்ன பிறகு எனக்கும் அதே மாதிரி தெரிகிறது.
மாடியில் போய் நின்றாலே காவிரி தெரியுமா? ஆற்றங்கரை அருகாமையா?
தங்களின் பாராட்டுதலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களுக்கேற்ற கவிதை வரிகள் ரசிக்க வைத்தன... வாழ்த்துகள் சகோ தொடர்ந்து கவிதையும் முயற்சியுங்கள்.
ReplyDeleteதலைப்பு ஸூப்பர் (இதன் காரணம் ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு புரியும்)
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
தலைப்பை ரசித்தமைக்கும் நன்றி. காரணம் எனக்கு புரியவில்லை. விளக்கமளித்தால்,விபரமாக புரியும்.
வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மேகம் படங்கள், மேகநாதன் கவிதை எல்லாம் அருமை.
ReplyDeleteமேகத்தில் தோன்றும் உருவங்களை பார்ப்பது எனக்கும் மிகவும் பிடிக்கும்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
மேகங்கள் உருவ மாற்றத்தை கண்டு ரசிக்க தங்களுக்கும் பிடிக்குமா? மிகவும் மகிழ்ச்சி சகோதரி. அழகான ரசனைகள் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.. . இல்லையா?
தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தேன்...
ReplyDeleteஎனது மனதில் இருந்த அந்த குணமும் இந்தப் பதிவில் வந்து விட்டதே...! (?)
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
தங்கள் மனதிலிருக்கும் அந்த குணம்தான் (பதிவர் விழாக்களை சிரமங்கள் பாராது முன்னின்று சிறப்புற நடத்தியதன் மூலம் அனைவரது பாராட்டுகளிலும் வெளியாகியதே... ) அனைவரும் அறிந்தாயிற்றே.. ஹா ஹா ஹா ஹா. தங்கள் நல்ல மனம் என்றும் வாழ்க..
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இராட்சத கழுகு தன் இறக்கைகளை விரித்துப் பறப்பது போல் காட்சி அளிக்குது எனக்கு.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
/இராட்சத கழுகு தன் இறக்கைகளை விரித்துப் பறப்பது போல் காட்சி அளிக்குது எனக்கு./
தாங்கள் சொன்ன பின் எனக்கும் அவ்வாறே தெரிகிறது. எல்லாம் நம் மனதின் கற்பனைதானே.. தங்களின் கற்பனைக்கும், மீள் வருகைக்கும் மிகவும் நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆவ்வ்வ் முதல் 4 படங்களும், ஒரு தாய்ப்பறவை குஞ்சுக்கு உணவு கொடுப்பதுபோலவும் இருக்கு, இன்னொரு கற்பனையில் பார்த்தால் யனையின் தும்பிக்கையால் குட்டியானையை தொடுவது கிஸ் பண்ணுவது போலவும் இருக்கு ரொம்ப அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்களின் வளமான கற்பனையும் மிகவும் அழகாக உள்ளது.
/இன்னொரு கற்பனையில் பார்த்தால் யனையின் தும்பிக்கையால் குட்டியானையை தொடுவது கிஸ் பண்ணுவது போலவும் இருக்கு/
இதுவும் தங்களின் சிறப்பான ரசிப்புத் தன்மையை காண்பிக்கிறது. படங்களை ரசித்துப் பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏனைய படங்களில் சில, அடர்ந்த மரங்கள் நிற்பதைப்போல இருக்கு. இப்படியான படங்கள் போடும்போது இலக்கமிட்டுப் போட்டால், அதுபற்றிப் பேச ஈசியாக இருக்குமெல்லோ..
ReplyDeleteஆஹா கவிதையில கலக்குறீங்களே.. கலக்குங்கோ கலக்குங்கோ.. இப்படிக்கு கவிஞர் அதிரா:).
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/ஏனைய படங்களில் சில, அடர்ந்த மரங்கள் நிற்பதைப்போல இருக்கு./
ஆம்.. அது அடர்ந்த மரங்கள்தான். ஒரு பார்க்குக்கு சென்றிருந்த போது மழை மேகம் சூழ்ந்திருந்ததை பார்த்து எடுத்தேன். மற்றவை எங்கள் வீட்டிற்கு அருகாமையில் எடுத்தது.
கவிதையில் தங்கள் போலெல்லாம் வருமா? பதிவுலகில் அனைவரது கவிதைக்கு முன்பும் நான் கால் தூசிக்கும் ஈடாக மாட்டேன். ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். மிகவும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களும், கவிதையும் சிறப்பு. தொடரட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
படங்களை ரசித்து பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை வளமாக்குமென நம்புகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
1.கரு மேகங்களுக்கு பின்னே கவிங்கன்..
ReplyDeleteஒளிந்து நிற்கிறான்
8. கடலில் மட்டுமா அலை..
வான் மேகத்திலும்..
எல்லா படங்களும் ஆஹா அற்புதம்..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்களது கவிதைகள் மிக அருமை. கருத்துக்களை கவிதையாக தந்திருக்கும் தங்கள் கவித்துவம் மிகுந்த ரசனைக்கு மிக்க நன்றிகள்.
தங்கள் பாராட்டுக்களை கண்டு மனம் மிக மகிழ்வடைந்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் அழகு.
ReplyDeleteஅதற்கேற்ற உங்கள் வரிகளும் சிறப்பு. தொடரட்டும் பகிர்வுகள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
படங்களை ரசித்தமைக்கும், தொடரட்டும் பகிர்வுகள். என்று வாழ்த்தியமைக்கும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
துளசி: படங்கள் அத்தனையும் அழகு சகோதரி! அதற்கான உங்கள் வரிகளும் மிகவும் ரசனை மிக்கவை. ரசித்தோம்...
ReplyDeleteகீதா: கமலாக்கா செமையான படங்கள். ரொம்பவே அழகா எடுத்திருக்கீங்க. இதிலென்ன உங்களுக்கு ரொம்பவே ஃபீலிங்க்!! அதற்கான உங்கள் கவிதைகளும் நல்லாவே இருக்கு.
முதல் நான்கு படங்களிலும் மூக்கு நீளமான விலங்கொன்று, ஓடி வரும் தன் குட்டியயை இரு கைகளும் நீட்டி அணைக்கத் தயாராக இருப்பது போல் உள்ளது.
5,6,7 படங்களில் மேக தேவதை வந்து கூம்பு போன்ற மலையும் உச்சியை முத்தமிடுவது போல் உள்ளது...
8, 9 வது படங்கள் கடுவாய் போன்ற ஒன்று மேகங்களை வாயைப் பிளந்து உறிஞ்சி விழுங்க எத்தனிப்பது போல் உள்ளது..
அப்புறம் ஹப்பா இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு அமைதி என்பது போல் வானம் அமைதியாய் நிர்மலமாய்,,,காட்சியும் மரங்களும் அழகாய்....ரொம்பவே ரசித்தோ ம் அக்கா
கீதா
வணக்கம் சகோக்கள் இருவருக்கும்..
Deleteஅன்புடன் என் தளம் வந்த தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
படத்துக்கு படமென, அனைத்துப் படங்களை ரசித்து அதற்கேற்ப வரிகளையும் புகழ்ந்த தங்கள் இருவருக்கும்
என் மனம் நிறைந்த நன்றிகள்.
ஒவ்வொரு படத்திற்கும் தங்களது கற்பனை விமர்சனத்தை மிகவும் ரசித்தேன். இங்கு மழை வரும் முன் என்னை ரசிக்க வைத்த வானத்தில் எடுக்கப்பட்ட படங்கள். அதில் ஒவ்வொருவரது கற்பனைகளும், விதவிதமாய் மிளிருகின்றன. நன்றி அனைவருக்கும். நீங்களும் ரசித்ததற்கும், மன நிறைவாக வந்து பாராட்டியதற்கும் என் அன்பான நன்றிகள்.
மிக மிக நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மேகநாதன் நல்ல தலைப்பு பெயர்!!!! அருமை அக்கா..
ReplyDelete(மேகநாதன் என்றதும் நம்ம கில்லர்ஜி நினைவுக்கு வந்துட்டார். அவர் இப்படித்தானே பெயர் கொடுப்பார் ஹா ஹா ஹா ஹா)
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், தலைப்பு நன்று என பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/மேகநாதன் என்றதும் நம்ம கில்லர்ஜி நினைவுக்கு வந்துட்டார். அவர் இப்படித்தானே பெயர் கொடுப்பார்/
சகோதரர் பழைய பதிவுகளில் "மேக நாதன்" இடம் பெற்றுள்ளாரா? அவரும் தலைப்பு சூப்பர்.. இது பற்றி சகோதரர் ஸ்ரீராமுக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். அதனால்தான் கேட்கிறேன். அவரது பழைய பதிவுகளில் இப்பெயர் இடம் பெற்று பிரபலமாயிற்றா என...
நான் இலங்கை மன்னன் இராவணனின் மகன் மேகநாதனைக் குறித்து ஏதோ கதைத்து விட்டேன்.ஹா ஹா ஹா.. மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மேலூர், மேலாளர் மேகநாதன்
Deletehttp://engalblog.blogspot.com/2018/09/blog-post_18.html?m=0
Delete