Friday, January 1, 2016

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2016வணக்கம் நட்புறவுகளே.!

கடமைகளை நிறைவாக முடித்து இன்றுதான் கணினி முன் வந்தேன். "எல்லோருக்கும் கடமைகள் இல்லையா? இருப்பினும் அனைவரும் வலையுலக சொந்தங்களை விட்டு விடாமல், தொடர்ந்து எழுதுவதும், கருத்திடுவதுமாக அதையும் ஒரு கடமையாகக் கருதி செயல்பட்டு வரவில்லையா? நீ மட்டும் வித்தியாசமாக கடமைகள்என்ற பெயரிட்டு எப்போதாவது எட்டிப்பார்ப்பது உன் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது."  என மனசாட்சி வேறு குத்திக்காட்டுகிறது. என்ன செய்வது.? மனதின் அந்தக் ௬வலை மெளனமாக ஏற்றுக் கொண்டவளாய், மீண்டும் வலையில் பிரவேசிக்க முயற்சிக்கிறேன். சரியா.?


என் மகனின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. என் மகனின் திருமணத்திற்கு பாசத்துடன் என் தளம் வந்து வாழ்த்துரைத்த அனைத்து சகோதர, சகோதரிகளின் அன்பு செஞ்சங்களுக்கும்  மனம் நிறைந்த களிப்புடன் ,  நன்றிகள் பல ௬றக் கடமை பட்டுள்ளேன்.
        

                                                         
                          நன்றி…. நன்றி…..நன்றி….


என் மகனின் திருமண நாளை நினைவு வைத்துக்கொண்டு அன்றைய தினம் ( நவம்பர் 18) ஒரு சகோதர பாசத்துடன் மீண்டும் என் தளம்  வந்து  வாழ்த்துப் பரிசளித்த சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்களுக்கு மறுபடியும் என் நெஞ்சம் நிறைந்த மகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                             
                  
             நன்றி….நன்றி சகோ....வலையுலகின் ஒரு ஓரத்தில் சுற்றி வரும் என்னையும் மறவாது என்னைபாச மிகுந்த சகோதரிஎன்ற அறிமுகத்துடன், சகோதரர் திரு. கில்லர்ஜி துவக்கி வைத்தகடவுளைக் கண்டேன்.” தொடர் பதிவோடு சுற்றி வர, பத்ததோடு ஒருவராக என்னையும் அழைத்திருந்த சகோதரர் திரு. பரிவை குமார் அவர்களின் அன்பான அழைப்பைக் கண்டு உண்மையில், திகைப்புடன் ௬டிய மகிழ்வடைந்து போனேன். “என்னால் இதுவெல்லாம் சாத்தியமா? என்ற திகைப்புடன், வலைதளத்தில் என்னையும் அன்பாக, பாசமாக ஒரு உறவாக நினைவு வைத்திருக்கிறார்களே என்ற பெருமிதத்தில் மிகவும் மனம் மகிழ்வடைந்து போனேன். என்னையும் உங்களில் ஒருவராக மதித்தழைத்த சகோதரர் பரிவை குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                               
                            மிக்க நன்றி. சகோ....


வலையுலகமும், வலையுலக உறவுகளும் மட்டுமின்றி, உலகில் வாழும் அத்தனை உயிர்களும் நலமே வாழ அந்த ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு , என்னால் முடிந்த போது கண்டிப்பாக அந்தப் பதிவை எழுதுகிறேன் ( நான்தான் அனைவரும் மறந்து விட்ட  அத்தொடரின் கடைசியாக இருப்பேன் என்ற போதும்…. இருப்பினும், கடவுளைக்காண எனக்கும் மிகவும் விருப்பமென்பதினாலும்….) எனவும் ௬றிக் கொள்கிறேன்.


 இந்த கடந்த வருடம் எத்தனையோ நிகழ்வுகளினூடே,சோதனையாக கடும் மழையினால் ஏற்படுத்திய வெள்ளச்சேதங்கள், தமிழக மக்களுக்கு உண்டான கடும் சோதனைகளை கண்டு, கேட்டு மனது பதைக்கிறது. இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல..! ஆண்டவனுக்கும் சில நேரம் வஞ்சம் தீர்த்து மகிழும் மனம் இருக்கிறதோவென அனைவரையும் புலம்ப வைத்து விட்டது. வலியச்சென்று மனித நேயத்துடன் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,மனதாற நன்றிகளையும், உளம் நிறைந்த வாழத்துக்களையும் தெரிவிக்க நாம் கடமைபட்டுள்ளோம்.  ௬டிய விரைவில் மறுபடி நிலைமை சீரடைந்து மக்கள்  பழையபடி தங்கள் பழைய நிலைய அடைய மனதாற பிரார்த்திப்போம். இனி "இது போன்ற சோதனைகளை எக்காலத்திலும் எவருக்கும் தந்து விடாதே!" என்று மன்றாடிக் கொண்டபடி இப்புவியில் இனி பிறந்த இப்புத்தாண்டில்  அனைவரும் நலமே வாழவேண்டுமென இறைவனிடம் நம்       விண்ணப்பங்களையும் சமர்பிப்போம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டான 2016 வளங்களை மட்டும் கொண்டு சிறப்பாக அமைய என் மனமார்ந்த வேண்டுதலுகளுடன் ௬டிய, வாழ்த்துக்கள்..

                வாழ்க நலம்....வளர்க மனித நேயங்கள்...
.

15 comments:

 1. மிகவும் அருமை !  வளர்பிறை வண்ணம் போலே
  வாழ்மனை சிறக்க மக்கள்
  இளமையின் பூரிப் பாக
  எழிலுற நெஞ்சம் எல்லாம்
  அளவிலாச் செல்வம் சேர்த்தும்
  அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
  வளமுடன் வாழ்க வென்று
  வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் !

  ReplyDelete
 2. அருமையான எண்ணப்பகிர்வு. நடை நன்று. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  ReplyDelete
 3. சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அன்புள்ள சகோதரி,
  வணக்கம்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
  நட்புடன்,
  புதுவைவேலு

  ReplyDelete
 5. நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 7. வணக்கம் சகோ தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், புதிய தம்பதியினருக்கும் எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்.
  என்னையும் பதிவில் குறிப்பிட்டமை அறிந்து மகிழ்ச்சி
  கடவுளைக் கண்டு பேசிய விடயங்கள் அறிய ஆவலுடன் நானும்....

  ReplyDelete
 8. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

  ReplyDelete
 13. வணக்கம் அக்கா...
  தங்களுக்கு இந்த ஆண்டு சகல சௌகரியத்தையும் கொடுக்கட்டும்.
  என்னையும் குறிப்பிட்டிருந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. வணக்கம்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete