Wednesday, March 12, 2014

பாசப்பிரிவு


ஈரைந்து   திங்கள்  கருவில்  சுமந்து...

ஈன்ற நாள்  முதலாய்  நெஞ்சில்  சுமந்து...

ஈட்டிய   பொருளனைத்தினையையும்.....

ஈட்டும்    பொழுதத்தனையையும்.......

எனக்காக  மட்டுமே  செலவழித்து......

என்மனம்  விரும்ப    குளிர்வித்து.....

என்    நலம்  சிறக்ககாத்துப்பேண.....

தன்  நலம்  சிறிதேனும்  பேணாமல்.....

தாலாட்டி ,எனைத்  தழுவி    சீராட்டி......

தளர்வின்றி ,   பிறர் மெச்சப் பாராட்ட.....

தயை   செய்த  தாயே! ......

பட்டங்கள்   பல  பெற்று......

பதவிக்கு   சில    கற்று.....

விரைவில்    வளர்ந்த   நான்.....

வாழ்க்கைத்     துணை   கைப்பற்றி.....

வசந்தம்   தேடிச்   செல்லும்  போது ,   உன்.....

விழிகளில்    கருணையையும்   கனிவையும்  கடந்து.....

வார்த்தைகள்  இல்லா  மெளனத்தில்  எழுந்த......

விழி கசிவை   விரல்  கொண்டு  மறைத்துஎன்.....

பிரிவின்   சோகத்தை உன்  சொந்தமாக்கிக்கொண்டு.....

பிறிதொரு   செயல்களில் கவனத்தை ஈர்த்து கொண்டு......

இதுதான்  கடமையென”  மனதை தேற்றி.....

இது போதுமென”   மன  நிறைவெய்தி,    அன்று....

நீ      பட்ட    பெரும்பாடு ,   இன்று......

நீர்  கோத்த    என்     விழிகளில்.......

நிரந்தரமானதுஏனெனில் ,    இப்பொழுது.....

உன்   இடத்தில்    நான்.....

என்  நிலையில்  என்  மகள்.....

காலங்கள்    மாறினாலும்  இந்த......

காட்சிகள்   மாறுவதில்லை,     இதில்.....

கவலை   கொள்ள  ஏதுமில்லை ,   என்றபோதும்.....

கனத்த  இதயம்  ஏற்க  மறுக்கின்றது.......

மங்கையராய்   பிறப்பதற்க்கே..........

மாதவம்   செய்திடல்    வேண்டுமென்றான்....

மங்கையரை   சிறப்பித்த    அந்த மகா கவிஆனால் ஏன்?.....

மங்கையருக்கு   மட்டுமிந்தமாபெரும்.....

மனம் மாற்றும்    மா பதவி?......

மட்டற்ற   பொறுமையுடன்  மங்கையர்  தம்.....

மனதை  மாற்றிக்  கொள்வதால்தான்............

மங்கையரை   சிறப்பித்தானோ? அந்த.....

மாசற்ற    மகா கவிபுரியவில்லை!......

காலங்காலமாய்  இது நடந்தாலும் ......

காலத்தை  வென்று  விட்ட அக்கவியிடம்.....

காரணமும்  கேட்க  இயலவில்லை.......

காரணம்  சொல்லி விளக்க  அந்தக்கவி, மறுபடி.....

காலத்தில்  பிறந்து  வருவான்  என....

கடவுளை  நம்பி   காத்திருப்போம்!

3 comments:

  1. அனைவருக்கும் அன்பான பணிவான வணக்கம்!

    நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் மணத்தை நுகர்கிறேன். மணத்தில் . கலக்க இயலாமல் கடமையும் பொறுப்புமாக கை கால்களை கட்டிப் போட்டு விட்டன .என் இல்லத்திருமணங்கள் இரண்டையும் இனிதே நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு தமிழ் மணத்தின் பக்கம் சிறிது எட்டிப்பார்த்து மணத்தை சிறிது ஸ்வாசித்து மனம் மகிழ மறுபடி வந்துள்ளேன்.

    எனது வருகையை வரவேற்க்கும் அன்பான உள்ளங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் பலகோடி சமர்பிக்கிறேன்.
    நன்றி!... வணக்கம்!...

    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. வரிகளில் உங்கள் ஆதங்கம் புரிகிறது... கடமையை முடித்து விட்ட திருப்தியுடன் இனி தொடர்ந்து பகிருங்கள்... அனைத்தும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு... இ(எ)துவும் கடந்து போகும்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் ஐயா,
      தங்கள் கூற்று உண்மைதான்.. என் ஆதங்கத்தை புரிந்து கொண்டமையுக்கும், தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

      Delete