Thursday, January 2, 2014

ஆத்மாவின் ( ஸ்) வாசம்

ன்னுடனே நீ பிறந்தும்,
என்னுடன்தான் நீ வளர்ந்தும்,
எனதுயிராய் நீ இருந்தும்,
என்றும் உனை கண்டதில்லை.
            சொந்தம் பல அடைய வைத்தாய்!
சொர்க்கமென உணர வைத்தாய்!!
பந்தம் பலவும் அமைய வைத்தாய்!
பாதையைதான் மாற்றி வைத்தாய்!
           பகட்டு வாழ்வில் பலகாலம்
பந்தாக உருண்டபின்படியேறி  நான்
பார்க்கையில், இந்த பயணங்கள் வீணென்று
பாங்காக, பதவிசாய், புரிய வைத்தாய்!
              நரையுடன்திரை விழுந்து, கை
நடுக்கம் வந்தவுடன் சொந்தமது எனை
துறந்து சோகங்களை தந்திட, அத்
துன்பங்கள் மறையுமுன், பந்தங்கள்தான்
துரத்தபக்குவமாயாக்கி வைத்தாய்!

             மலை போல் துயர் வந்து
மனமதனை  வாட்டி வதைத்திட
உடன் பிறந்த உன்னிடத்தில்,
உரிமையுடன் என் குறை இறக்கி,
உணர்த்தி, மனமுவக்கும் உன் மறுசொல் விரும்பி,
உனைத்தேடி நான் வந்தால்,
இளமையுடன்    நீயிருக்க,
நிலமை மாறி நானிருக்க
என்னுடனே  நீ  பிறந்தும்,
  "ஏன்? இந்த பாரபட்சம்?" என,
வெகுண்டெழுந்து  வினவநான்,
வெட்கும் வண்ணம் நீ புன்னகைத்தாய்!
            “ஏன்? இந்த ஏளனம் ? எனை பார்த்து
       என்ற என் கேள்விக்கு,
வந்துபோகும் எனக்கெல்லாம்
வயதாகும் கவலையில்லை, எனக்கென்று ஓர்
வயது என்றைக்குமில்லை, என,
வரிந்து கட்டிக்கொண்டு வாதாட
அதரம் அசைத்து  பேச
ஆரம்பித்தாய் அந்த ஆத்மாவாகிய  …… .” நீ”…..

                 “ வட்டநிலா  பதினைந்து முறை
வான் வெளியில் வட்டமிட்டு சுற்றியபின்,
தேய்பிறையாய்  தேய்ந்த அந்த நிலா
தேகம் பெற்று வரவில்லையா?
                  சொந்த பந்தத்தை இரு சகடையாக்கி,
சுயநலமாய் பலகாலம் சோர்வில்லாமல் சுற்றிய நீ
சுகவீனமடைந்தவுடன் சுற்றிவர இயலாமல்
சொல்லிச் சொல்லி புலம்புகிறாய்.
                         பிறந்தவுடன்  என்மீது பற்றுவைத்து
             பிரியாமல், எனை பார்த்திருந்தால்,
              பார்த்த  உனை  பார்முழுதும் திரும்பி
          பார்க்கும்படி செய்திருப்பேன்.
                        எனக்கிட்ட விதிப்படியே
உன்னுடனே நான் பிறந்தேன்.
உன் ஸ்வாசம் நிற்கும் வரை,
என் ஸ்வாசம் உனதாகும்.
உன் ஸ்வாசம் நின்றவுடன்
என் வாசம் வேறாகும்.
அடுத்தடுத்து  வரும் பிறவிகளில்
ஏதேனும் ஒரு பிறவியில்,
என்னுடன் மட்டுமே நீ வாழ விரும்பினால்,
விதியிடம் ,;எங்களை ஒருபிறவி சேர்த்து வைஎன
விண்ணப்பம் ஒன்று வேண்டுகிறேன்.
மற்றெதுவும் என்னால் ஆகாது என
மறுபேச்சுக்கு  மறுத்த….  நீ …..
மறுபடியும்  மவுனமாகி போனாய்”!

     இதழ் விரித்து  ஏளனமாய் எனை பார்த்து,
இமை திறந்து கனிவாக நீ சொன்னதை
காலத்தில் நான் கேட்டிருந்தால்,
காலனை சிறிது நாள் கட்டாயம் ஜெயித்திருப்பேன்.
               பணபோதைபுகழ்போதை ,இரு
பேய்களாகி பல காலம் எனை சுற்ற,
பாவி நான் உனை பாராமல் பரிகசித்து,
பாராமுகமாய் இருந்து விட்டேன்.
     இனி வரும் பிறவிகளில்,
இத்தவறு செய்யாதிருக்க ,
இறைவனிடம் வேண்டிக்கொண்டு,
 இமை மூடி பிராத்தித்தேன்.

9 comments:

 1. உன்னுடனே நான் பிறந்தேன்.
  உன் ஸ்வாசம் நிற்கும் வரை,
  என் ஸ்வாசம் உனதாகும்.
  உன் ஸ்வாசம் நின்றவுடன்
  என் வாசம் வேறாகும்.//

  வாசம் உணர்ந்தேன்
  ஆழமான கருத்துடன் கூடிய
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தங்கள் வருகையும், கருத்து பகிர்வினையும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் .நன்றி!
   மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 2. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்....
   எனது வலைதளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல் தந்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! இந்த தளத்திற்கு வருகை தந்தமைக்கும் , கருத்து பகிர்வுக்கும் மிக, மிக நன்றி,சகோதரரே!

   Delete
 3. வணக்கம்
  இன்று தங்களின் ஓவியக் கவிதை திரு வெங்கட் ராஜா(ஐயாவின்)தளத்தில் பதிவாக வந்துள்ளது பாருங்கள்.இதோ முகவரி-http://venkatnagaraj.blogspot.com/2014/01/11.html

  ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
  தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
  http://tamilkkavitaikalcom.blogspot.com/
  இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
  பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
  --------------------------------------------------------------------------------------------------------------------------------

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!
   நான் எழுதிய ஓவியக் கவிதைக்கு என்னுடைய வலைத்தளத்திற்கு வருகை தந்து கவிதையின் வெளியீட்டை தெரிவித்தமைக்கும் கருத்துக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

   -கமலா ஹரிஹரன்

   Delete
  2. மேலும், தாங்கள் அனுப்பிய கட்டுரை போட்டி விபரம் கண்டேன், இறைவன் திருவருளால் முயற்சிக்கிறேன்..

   நன்றி,
   கமலா ஹரிஹரன்

   Delete
 4. கவிதை நன்று.
  வெங்கட் நாகராஜ் அண்ணாவின் தளத்தில் புகைப்படத்துக்கான கவிதை படித்தேன்..
  அருமை.... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!
   நான் எழுதிய ஓவியக் கவிதைக்கு என்னுடைய வலைத்தளத்திற்கு வருகை தந்து, கருத்தும் வாழ்த்தும் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

   -கமலா ஹரிஹரன்

   Delete