அன்னமய்யா என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளின் நித்திய திருக்கல்யாணத்தை வர்ணித்தும், ஊஞ்சலில் பெருமாளை வைத்தும் பாடிய இப்பாடல் மனதை கவரும் ஒன்று. நடிகர் நாகார்ஜுன் அப்படியே அந்த அன்னமாச்சார்யா கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்திருப்பார். அவரின் நடிப்பில் இந்தப் படத்தை பன்முறை நான் பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிக்கும் தேன். இதில் இறையருள் பெற்ற அன்னமாச்சார்யா அவர்கள் இயற்றிய கீர்த்தனைகள் பலவும் இடம் பெற்றுள்ளது. பாடகர் எஸ். பி. பி அவர்களின் இனிய கம்பீரமான குரல் அந்தப் பாடல்களுக்கு நல்ல வளமாக இருந்து இனிய தேனின் சுவைகளை அதிகரிக்கச் செய்கிறது. சிறந்த நடிப்பு, இனிமையான பாடல்கள் என இப்படத்தில் அனைவருக்குமே ஸ்ரீமன்நாராயணன் பக்தியை ஒரு வரமாகவே தந்திருக்கிறார். 🙏.
ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ.🙏 .
இதே படமே தமிழிலும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் வந்துள்ளது. கீழே உள்ள இந்தப்பாடல தமிழ் பாட்டு . இதுவும் எஸ். பி சரண் அவர்கள்தான் இனிமையாக பாடியுள்ளார். இதையும் பக்திபூர்வமாக கேட்டு ரசிக்கலாம்.
நீங்களும் இந்தப்பாடல்களை அனேக முறைகள் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இங்கும் கேட்டு மகிழ வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 🙏. அனைவருக்கும் நன்றி🙏.
ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ. 🙏.
வணக்கம் சகோ
ReplyDeleteநான்கு காணொளி பாடல்களும் கேட்டேன் ரசனையான மெட்டு இசைக்கு மொழி பேதமில்லை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் முதலில் வந்து நல்லதொரு கருத்தாக தந்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி.
ஆம்.இசைக்கு மொழி பேதம் இல்லை. பாடல்கள் நன்றாக இருப்பதாக சொன்னதற்கும், நான்கையும் கேட்டு ரசித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமாச்சார்யா படம் வந்தபோது ஒருமுறை பார்த்திருக்கிறேன். பாடல்களும் கேட்டிருக்கிறேன். அவரது அதிரடிப் படங்களும், காதல் படங்களுமே பார்த்த கண்களுக்கு நாகார்ஜுனை அப்படிப் பார்க்க வியப்பாக இருக்கும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நீங்களும் அன்னமய்யா திரைப்படம் பார்த்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. இப்படத்தின் பாடல்களை கேட்காமல் இருக்க முடியுமா? பிடித்த பாடகரின் பாடல்கள் ஆயிற்றே.. அதிரடி படங்களில் அவர் நடித்திருந்தாலும், பக்தியுடன் கூடிய தன் நடிப்பை இந்தப்படத்தில் வெளிப்படுத்தும் போது, அதை ஒரு நடிப்பாக எண்ணாமல் இருக்கச் செய்தது அவரின் திறமையாக நான் கருதுகிறேன். நான் பலமுறை இந்தப்படத்தை பார்த்தும், மீண்டும், பார்க்கும் போது, புதிதாகவே பார்ப்பது போல கண்களையும், மனதையும் உருக வைத்த சில படங்களில் இதுவும் ஒன்று. பாடல்கள் அனைத்தும் கேட்டு கேட்டு ரசித்தவை. அதனால்தான் இங்கும் பகிர்ந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டாவது படம் சில காட்சிகள் மட்டும் பார்த்திருக்கிறேன். ஒரு சில பாடல்கள் கேட்டிருக்கிறேன். இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா பாடல் எனக்கு சங்கராபரணம் படத்தின் 'சங்கரா.....' பாடலை நினைவு படுத்தும். இந்தப் பாடல்தான் என்னுடன் பணிபுரியும் என் நண்பரின் ரிங்க்டோன். அந்த ஆரம்ப வரிகளை ஒரு நாளைக்கு பத்து தடவைக்கும் மேல் கேட்கும் வாய்ப்பு அதனால்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த இரண்டாவது படம் வேறு கதையாயினும், அதே நடிகர், மற்றும் சில சம்பவங்களில் அன்னமைய்யா படத்தின் சாயல்கள் தெரிவதினால் அவ்வளவாக இந்தப்படம் வெற்றியடையவில்லை என்றார்கள். ஆனாலும், வெங்கடேச பெருமானின் மேல் எழும் பக்தியில் இந்தப் படத்தையும், நான் பலமுறை பார்த்து ரசித்தேன். சமீபத்திய மஹாபாரதத்தில் கிருஷ்ணனாக நடிப்பவர் இதில் வெங்கடாஜலபதியாக நடித்திருக்கிறார். வேடமும், அந்த நடிப்பும் அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தின் பாடல்களும் பக்தி வெள்ளத்தில் நீந்த வைப்பவை.
சங்கராபரணம் திரைப்படம் பெற்ற வெற்றிக்கு காரணம் பாதிக்கு மேல் எஸ். பி. பி. யால்தான் என நினைக்கிறேன். அதிலும் அத்தனைப் பாடல்களும் அமிர்தம். அதில் இசைபக்தி என்றால் இதில் தெய்வ பக்தி. ஒரே நாளில் பலமுறை இந்தப்பாடலின் முதல் வரியை கேட்டு ரசிக்கும் தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தப் பாடல்களை இன்றுதான் முதல்முறையாக்க் கேட்கிறேன்.
ReplyDeleteமுதல் பாடல் மனதை உருக்கும்விதமாக அமைந்துள்ளது.
தியாகையா படம் பார்க்கணும் என்று பல காலமாக நினைத்திருக்கிறேன். அன்னமாச்சார்யா படமும் அடுத்த படமும் கூட பார்க்கணும்.
நல்ல பக்திப் பாடல்களைப் பகிர்ந்துகொண்டது சிறப்பு
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தாங்கள் இந்தப் பாடல்களை இப்போதுதான் கேட்டு ரசிப்பது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த படங்கள் வந்து நிறைய வருடங்கள் ஆகி விட்டனவே ..! ஆயினும் இப்போது மனம் உருக்குவதாக உள்ள பாடல்களை கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி.
தியாகய்யா படமும் நான் இன்னமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டுமென நினைத்துள்ளேன் நீங்களும் உங்களுக்கு முடிந்தது இந்தப்படங்களை பாருங்கள். உங்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
இன்று இங்கு பகிர்ந்த இந்தப் பாடல்களை கேட்டு ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரரே. .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரு மாத்த்திற்கான 300ரூ டிக்கெட்டுகள் 16 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன இப்போதெல்லாம்.
ReplyDeleteஅன்னமாச்சார்யா காலத்தில் நிதானமான தரிசனம் அவருக்குக் கிட்டியிருக்கும்.
திருப்பதி பாடசாலையில் படிக்கும் மாணவன் என்னிடம் சொன்னான். கோவிட் நேரத்தில் மலையில் யாருமே இல்லை. நேராக சந்நிதிக்குச் சென்று, பூசைகளை அரைமணி நேரத்துக்குமேல் அமர்ந்து பார்த்தேன் என்றான் (தினமும்)
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/ஒரு மாத்த்திற்கான 300ரூ டிக்கெட்டுகள் 16 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன இப்போதெல்லாம்./
தகவலுக்கு நன்றி. ஒருமாதத்திற்கு முன்பே நம்மை தயார் செய்து கொள்ளும் பயணத்தில் எப்போதுமே அங்கு ஒரு விநாடியான தரிசனந்தான். அதிலும் நம் பதட்டத்தில் கண்களின் முன்னே பூர்வ ஜென்ம பாவங்களின் திரை வேறு வந்து விழுந்து விடும்.
அன்னமய்யா போன்ற நல்லோரின் புண்ணியங்கள் அவர்களை இறைவனுடன் நீண்ட நேரங்கள் உறவாடச் செய்து அவரோட இரண்டற கலக்கச் செய்து விடும். அன்னமய்யா இறைவனை உணர்ந்த அந்த நாளிலிருந்து தினம் ஒரு கீர்த்தனைகளாக இறைவனுக்கு பாமாலைகள் பாடி சாற்றியுள்ளார். அந்தப் பாடல்களில் கொஞ்சந்தான் நமக்கு கிடைத்துள்ளனவாம். அது போல் நம் மனமும் இறைவனோடு கலந்து விட எண்ணுகிறது. அதை அந்த இறைவனும் நினைக்கும் காலம் வர வேண்டுமே...! அப்போதுதானே அது சாத்தியமாகும். அதற்கு இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? நாராயணா.. 🙏.
/திருப்பதி பாடசாலையில் படிக்கும் மாணவன் என்னிடம் சொன்னான். கோவிட் நேரத்தில் மலையில் யாருமே இல்லை. நேராக சந்நிதிக்குச் சென்று, பூசைகளை அரைமணி நேரத்துக்குமேல் அமர்ந்து பார்த்தேன் என்றான் (தினமும்)/
அந்த மாணவர் கொடுத்து வைத்தவர். தகவல் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த நேரத்தில் அவரை வயதில் சிறியவராயினும் மானசீகமாக வணங்கிக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
ReplyDeleteநான்கு பாடல்களையும் கேட்டு ரசித்தேன். அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள் பிடித்தமானவை.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தாங்கள் நீண்ட நாட்கள் கழித்து என் வலைத்தளத்திற்கு வந்து பதிவை ரசித்து தங்கள் கருத்தை தந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. (நானும் நீண்ட இடைவெளிகள் விட்டு அவ்வப்போதுதான் பதிவுகள் போடுகிறேன்.)
தங்களுக்கும் அன்னமய்யா கீர்த்தனைகள் பிடித்தமானது என்பதை அறிந்து மகிழ்வு கொள்கிறேன். எனக்கும் இதில் வரும் பாடல்கள் மனதிற்கு நிறைவை தந்தது. அதனால்தான் பகிர்ந்து கொண்டேன். நீங்கள் வந்தது பாடல்களை ரசித்து கேட்டதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பாடல்கள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிவை ரசித்து இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்து நல்லதொரு கருத்தாக தந்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///மெய்யுருக வைக்கும் கானங்கள்///
ReplyDeleteஎனக்கொரு டவுட்டூஊஊஊஊஉ.. அதென்ன ஈசியாச் சொல்றீங்க மெய்யுருகும் என:)) மெய் உருகினால் என்னாகும் தெரியுமோ ஹா ஹா ஹா:)
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் பொன்னான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி. (அதென்ன பொன்னான என கேட்காதீர்கள். ஏனெனில் பதில் எனக்கு தெரியாது. ஏதோ என் மனதில் பட்டதை இப்படி எழுதி விடுகிறேன். :)) )
/எனக்கொரு டவுட்டூஊஊஊஊஉ.. அதென்ன ஈசியாச் சொல்றீங்க மெய்யுருகும் என:)) மெய் உருகினால் என்னாகும் தெரியுமோ ஹா ஹா ஹா/
ஹா ஹா ஹா. தங்கள் டவுட்டை எனது பதில்களால் குழப்பி ஓட வைப்பதே என் விருப்பம். ஹா ஹா ஹா .
நமது வாழ்க்கையில் இந்த உடல் பொய். உயிர் மெய். இந்த உடல் எனும் பொய் காலப்போக்கில் அழிந்தாலும் உயிரெனும் மெய் அழியாது அது பாட்டுக்கு அடுத்தடுத்து என பயணப்பட்டுக் கொண்டேயிருக்கும். அந்த மெய் எனப்படும் உயிரானது இந்தப்பாடல்களின் வரிகளையும், இசையையும், ஆழ்ந்து கிரஹித்து கொண்டு அதன் தொடர்பாக எழும் பக்தி எனும் பரவச நதியில் பாதரசமாக உருகும் வகையாக அமைந்துள்ளது என்பதை மெய்யாகவே (உண்மையாகவே) உணர்ந்ததால் (மெய்யுருக்கும்) மெய்யுருகும் கானங்கள் என்று தலைப்பாக எழுதினேன்.
நிறையவே நான் குழம்பி தங்களையும் கொஞ்சம் குழப்புகிறேனோ?:))) மெய்யாகிலுமே (இப்போது இதன் அர்த்தம் உண்மை) இந்த தத்துவங்களை தேம்ஸ் ஆசிரமத்தில்தான் பயின்றேன் என்பது தங்களுக்கும் நினைவிருக்கும் என நினைக்கறேன்:))
அட.. ..எ. பியில் தங்கள் கருத்தின் பதிலால், இன்றிரவு தேம்ஸ் நதியை நினைக்கும் போது நித்திரை வராததால், பொழுதை போக்குவதற்காக இந்த தத்துவங்களை பயின்ற ஆசிரம நினைவுகள் வருகிறது. :) ஹா ஹா ஹா
தங்கள் வருகைக்கும் அன்பார்ந்த பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைவான நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆவ்வ்வ்வ் மெய் எனில் உடல் எனத்தானே சொல்வார்கள்... மெய்யானது உயிர் என சூப்பராகச் சொல்லித் தப்பிட்டீங்க்ள்... :) ஹா ஹா ஹா பின்ன அதிராவுடன் சேர்ந்தால் எல்லோரும் ஞானியாகிடுவினம்:).. விடமாட்டேனெல்லோ ஞானி ஆக்காமல்:)) ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்...
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஹா ஹா ஹா. மெய் எனில் உடல்தான். ஆனால், உடல் பொய்யாகும் போது உயிர் நிலைத்து நிற்கும் மெய்தானே...! . அதனால்தான் உயிர் உருகும் பாடல்கள் என்பதை மெய்யுருகும் பாடல்கள் எனப் பகிர்ந்தேன். கரெக்ட்தானே.. இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?
/பின்ன அதிராவுடன் சேர்ந்தால் எல்லோரும் ஞானியாகிடுவினம்:).. விடமாட்டேனெல்லோ ஞானி ஆக்காமல்:)) /
ஹா ஹா ஹா அதுதான் இன்றே எங்களையும் பாதி ஞானி ஆக்கி விட்டீர்களே... கங்கை புதல்வியாகவும் ஆகி விட்டீர்கள். உங்கள் பதிவே ஒரு சுவாரஸ்யம். அதிலும் உங்கள் பதிவுக்கு வரும் கருத்துரைகள் லயத்தோடு சேரும் தாளங்கள். ஆனால்,
இன்னமும் அங்கு என் கருத்துரைகள் வந்து சேர்ந்தபாடில்லை.
தங்கள் மீள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமையா என்றொரு படமோ? பாட்டைப் பார்க்க எனக்கு தமிழை விட தெலுங்குப்பாட்டுத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு...
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
இந்தப் படம் வந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. தெலுங்கில்தான் முதலில் வந்து பிரபலமாகியது. பின்புதான் தமிழில் டப்பிங்.
ஆம்.. இதில் தமிழை விட தெலுங்கு பாடல்கள் நன்றாக இருக்கும். முக்கால்வாசி நம் பாடும் நிலாவின் பாடல்கள். அவரின் குரல்வளம் அப்படி. ஈர்க்கும் சக்தியை கொண்டது.
தங்களது அன்பான அத்தனை கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கடசிப்பாட்டு இதுவரை கேட்டதில்லை, நன்றாக இருக்கு...
ReplyDeleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
இந்த படங்களின் பாட்டுக்கள் ஒன்றிரண்டை தவிர்த்து அனைத்துமே நன்றாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமயா படம் பார்த்ததில்லை, கமலாக்கா. ஆனால் பாடல்கள் அன்னமாச்சார்யா பாடல்கள்...நாகார்ஜுனா வை அன்னமாச்சார்யா என்று ஏனோ மனம் ஏற்கவில்லை.
ReplyDeleteஅன்னமாச்சார்யா பாடல்கள் கேட்பதுண்டு எம் எஸ் பாடியவை...ரொம்பப் பிடிக்கும்.
நீங்கள் இங்கு பகிர்ந்திருப்பதை நாளை கேட்கிறேன் அக்கா நாளை மீண்டும் வருகிறேன்
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நீங்கள் இன்னமும் இந்தப் படம் பார்த்ததில்லையா? இது வந்து நிறைய வருடங்கள் ஆன பழையபடமாயிற்றே..!
பொதுவாக திரைபபடங்களில் நடிப்பவர்களை அந்தந்த பாத்திரமாக நினைப்பது சற்று சிரமம்தான். ஆனால் அந்த குறிப்பிட்ட அந்தந்த கதாபாத்திரங்களை மனத்துள் நினைத்தபடி இவர்களை பார்த்து ரசிக்கலாம். ஏனெனில் அந்தந்த கதாபாத்திரங்களை என்றுமே நம் மனத்திரையில் தவிர்த்து அவர்களை வெளியே காண முடியாதல்லவா?
இந்த இரண்டு படங்களிலுமே நாகார்ஜுனா அவர்கள் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
எம். எஸ் அவர்களின் குரல் வளத்தில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். நீங்கள் அனைத்தையும் கேட்பதற்கு மகிழ்ச்சி. சங்கீதம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதை அறிவேன்.ஆனால், நான் சங்கீதத்தில் எந்தளவிற்கும் தேர்ச்சி இல்லாதவள். இந்த படப்பாடல்கள் தெய்வீகமான வகையில் என்னை கவர்ந்தினால் இதை இங்கும் பகிர்ந்தேன்.
/நாளை மீண்டும் வருகிறேன்/
பகிர்ந்த பாடல்களை கேட்டு விட்டு நாளை வரும் உங்களுக்காக காத்திருப்பேன் சகோதரி. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓம் நமோ வெங்கடேசாய... சீனறீஸ் சூப்பரா இருக்கு... மொத்தத்தில நல்ல படப்பாடல்கள்தான் ஆனா ஒன்று.. எல்லாம் கிமு காலத்தையதுபோலும்.. ஹையோ மீ ஓடிடுறேன் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊ.....ஊஊஊஊஊ:)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/ஆனா ஒன்று.. எல்லாம் கிமு காலத்தையதுபோலும்/
அடாடா...! என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்.? படத்தை பார்த்து விட்டு முடிவெடுங்கள். கி. முவில் ஹதிராம் என்பவர் ஏது.? அவரே (இயேசுவே) இல்லையே..! தங்கள் அத்தனை கருத்துக்கும் நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமய்யா..
ReplyDeleteதமிழை விட தெலுங்கு படம் வசன உச்சரிப்பில் நன்றாக இருக்கும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். தெலுங்கில் இப்படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மனது உருகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கிறது. தமிழ் சட்டென புரிந்தாலும், தெலுங்கில் பார்க்கும் போது ஒரு வித்தியாசமான பக்தி உணர்வை பெறுகிறோம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமய்யா
ReplyDeleteகடைசிக் காட்சிகளில் உருக்கி விடுவார் உருக்கி..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. இதில் நாகார்ஜுனா அவர்களின் நடிப்பு மெய்யுருகும் வண்ணம் இருக்கும். கடைசி காட்சி நெஞ்சை விட்டு அகலாதது. அந்தப் பாடலும் அருமையாக இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பக்த ராமதாசு..
ReplyDeleteஇந்தப்படமும் நன்றாக இருக்கும்..
மொகலாயக் கொடுங்கோலனிடம் ராமதாசர் சித்திரவதை படும் காட்சிகளில் அழுதிருக்கின்றேன்..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆமாம்.. நானும் இன்னமும் பக்த ராமதாஸ் படத்தை பார்க்கவில்லை. அந்த நேரத்தை "அவன்" இன்னமும் தரவில்லை எனலாம். அதிலும் இவர் நடிப்பு நன்றாக இருக்குமென கேள்வி. தங்கள் மனதை உருக்கும்படியாக இந்தப்படம் அமைந்திருக்கிறது என படித்தவுடன் படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. இறைவன் அந்த சந்தர்ப்பத்தை விரைவில் அருளட்டும். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான்கு காணொளிகளையும் கண்டு, பாடல்களூம் கேட்டேன் கமலாக்கா. ஹதிராம் என்ற பக்தர் பெயர் டக்கென்று கண்ணில் ஹல்திராம் என்று வாசிக்க.....ஹிஹிஹிஹி...எப்பவும் சாப்பாடு நினைப்புதான்!!! ஹூம் அப்படி இருக்க எங்க பக்தி....சாமிக்கு வைச்சாலும்...எப்படா வாய்க்கு எட்டும்னுதான் என் மனசு. அந்த அளவுதான் என் பக்தி....இறை ஈடுபாடு எல்லாம்!!!!!!!!!!!
ReplyDeleteதெலுங்கு, தமி பாடல்களை ரசித்தென். அதுவும் முதல் இரண்டும் நம்ம தலைவர்...எனக்கு ஆச்சரியமான விஷயம் கர்நாடக சங்கீதம் கற்காமலேயே நிலா இப்படி பாடுகிறாரே என்று!!!! அவர் குரல் ரொம்பவே இளம் குரம் அன்னமயா வில்.
அடுத்த படம் ..இப்படியும் படம் வந்திருக்கா என்று கூடத் தெரியாது. சரண் குரல் அவர் அப்பா குரல் போலவே இருக்கிறது.
ஸ்ரீராம் டக்கென்று வித்தியாசம் கண்டுபிடித்துவிடுவார்!!!!
தாஸேட்டன் பிள்ளை குரலும் கூட தாஸேட்டன் போலவே இருக்கிறது..ஆனால் கண்டுபிடித்துவிடலாம்..
ரசித்தேன் கமலாக்கா பாடல்களை
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நாளை பாடல்களை கேட்டு விட்டு வருகிறேன் என்ற சொல் தவறாது அது போலவே பாடல்களை கேட்டு ரசித்து விட்டு தந்த கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.
/ஹதிராம் என்ற பக்தர் பெயர் டக்கென்று கண்ணில் ஹல்திராம் என்று வாசிக்க.....ஹிஹிஹிஹி...எப்பவும் சாப்பாடு நினைப்புதான்!!! ஹூம் அப்படி இருக்க எங்க பக்தி....சாமிக்கு வைச்சாலும்...எப்படா வாய்க்கு எட்டும்னுதான் என் மனசு. அந்த அளவுதான் என் பக்தி....இறை ஈடுபாடு எல்லாம்!!!!!!!!!!!/
ஹா ஹா ஹா. எனக்கும் அப்போதெல்லாம் சிறிய பக்தி தான் சகோதரி. எப்போதும் குடும்பம், கணவர், பிள்ளைகள், உறவுகள் என இவர்களை மட்டுந்தான் சிந்திக்கத்தெரியும். இவர்களுக்கு உழைக்கவே 24 மணி நேரங்கள் பத்தாமல் போனது. இதில் இவளுக்கு எந்த கோவிலுக்குப் போவது, எந்த இறைவனை விடாமல் நமஸ்கரிப்பது என்பதை பற்றி எப்படி சொல்லித் தருவது என அந்த இறைவனே சொல்லித் தர இயலாமல் குழம்பியிருப்பார். இப்போது வயதாகும் போது அனுபவங்கள் இறைவனை அருகிலேயே காட்டித் தருகின்றன. அவர் மேல் நம்பிக்கை வைக்கும் போது மனதின் கவலைகளை சற்றே மறைய வைக்கின்றன. இன்னமும் இந்த அளவுக்குத்தான் என் பக்தி.
நம் பாடும் நிலாவின் எந்த பாடல்கள்தான் புகழ் பெறாமல் போனது. இசையை முறைப்படி கற்க வில்லையென அவரே சொல்லியிருப்பதை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் குரல் இன்னமும் எத்தனை காலங்கள் ஆனாலும் மறையாது இருக்குமென்பது அவர் பிறப்பிலேயே வாங்கி வந்த வரம்.
தாங்கள் பாடல்களை ரசித்து கேட்டிருப்பது எனக்கு மகிழ்வாக உள்ளது தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Geetha Sambasivam has left a new comment on the post "மெய்யுருக வைக்கும் கானங்கள். ":
ReplyDeleteஇப்போத் தான் இதை எல்லாம், பார்க்கிறேன், கேட்கிறேன். எனக்கு நினைவில் இருக்கும் ஒரே தெலுங்குப்படம் சமீபத்தில் சில ஆண்டுகள் முன்னர் பார்த்த எஸ்பிபி, லக்ஷ்மி நடித்த படம் ஒன்று. பெயர் நினைவில் இல்லை..மற்றபடி அதிகம் தெலுங்குப் படங்கள் பார்த்தது இல்லை. மலையாளப்படங்கள் பார்த்திருக்கேன். இந்தப் பாடல்களும் காட்சியும் ரசிக்கும்படி இருக்கின்றன. நாகார்ஜூனாவின் நடிப்பை எல்லாம் பார்த்தது இல்லை. விளம்பரங்களோடு சரி. அவர் வரும் விளம்பரங்கள் ரசிப்பேன். இந்தப் படம் கிடைத்தால் பார்க்கிறேன்.
மேலே உள்ள என்னோட கருத்துரை வெளியாகலை. ஆனால் பின் தொடரும் கருத்துகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இதைத் தேடிப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். :)
Deleteவணக்கம் சகோதரி
Deleteவாங்க. வாங்க. நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நானும் தெலுங்கு படங்கள் என வந்தது/ வருவது எதையும் பார்ப்பது கிடையாது.வீட்டில் குழந்தைகள் தெலுங்கு, மலையாளம் என புதிதாக வருபனவற்றை விடுமுறை நாட்களில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பார்ப்பது பெரும்பாலும் இரவில்தான். நானும் அவர்களுடன் பார்க்க அமர்ந்தால், பாதியிலேயே எனக்கு தூக்கம் வந்து விடும். கதை நன்றாகப் போனால் ஒவ்வொரு நாள் விழித்திருந்து பார்ப்பேன். நாங்கள் திரை அரங்கத்திற்குப் போய் பார்த்ததை விரல் விட்டு எண்ணலாம். குழந்தைகள் போவார்கள்.
தொலைக்காட்சியில் தெலுங்கு சானலில், இந்தப்படம் முன்பு அடிக்கடிப் போடுவார்கள். ஒவ்வொரு தடவையும் எனக்கு புதிதாக பார்ப்பது போல் எனக்கு இருக்கும். அவ்வளவு நல்ல படங்கள். இன்னமும் பக்த ராம்தாஸ் பார்க்கவில்லை. அதிலேயும் நடிகர் நாகார்ஜுனா மனதை உருக்கும் வண்ணம் பக்தியாக நடித்ததிருப்பார் என்கிறார்கள். நீங்கள் கூறும் அந்தப் படம் நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. எனக்கும் படத்தின் பெயர் நினைவில் உள்ளது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை. :))
இன்று நீங்கள் இந்தப்படங்களின் பாடல்களை கேட்டு ரசித்தமைக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியும், நன்றி களும். உங்களுக்கு . சௌளகரியபடும் போது படங்களை பார்த்து ரசியுங்கள். உங்களுக்கும் இந்தப்படங்களை மிகவும் பிடித்துப் போகுமென நினைக்கிறேன். தங்களின் ரசனையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஏனோ இப்படி கருத்துரைகள் பதுங்கிப் போகின்றன. நீங்கள் மிகவும் சிரமப்பட்டு தேடி இழுத்து வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி. நீங்கள் இப்படி கொண்டு வந்து தரவில்லையானால், எனக்கும் இந்த கைப்பேசியில் அப்படியெல்லாம் விபரமாக பார்த்து அறிய தெரியாது. தங்கள் கருத்துக்கும், அதை மீண்டும் என் பதிவில் வந்தடைய செய்த முயற்சிக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிக்கும் இனிய கானம்...
ReplyDeletehttps://www.scientificjudgment.com/
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. இனிக்கும் கானம். கேட்க கேட்க திகட்டாதவை இறைவனைப் பற்றிய பாடல்கள் அல்லவா?.. தங்கள் அன்பான வருகைக்கும், நல்லதொரு கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி. தாங்கள் தந்த சுட்டிக்கும் சென்று பார்க்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்னமாச்சார்யா படம் பார்த்து இருக்கிறேன், பாடல்கள் கேட்டு இருக்கிறேன். இன்று மீண்டும் கேட்டேன். முன்பு இதில் சில பாடல்களை பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநாகார்ஜுனா நன்றாக நடித்து இருப்பார்.
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நீங்கள் அன்னமாச்சார்யா படம் பார்த்திருப்பதற்கும், அதில் பாடல்களை கேட்டு ரசித்திருப்பதற்கும் மகிழ்ச்சி. நல்ல பக்தி உணர்வை தூண்டும் படம். இன்று இங்கும் மீண்டும் பாடல்களை கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. நாகார்ஜுனா இந்த இரண்டு படங்களிலும் நன்றாக கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருப்பார்.
ஆம்.. இதில் இரண்டாவதாக வரும் படத்தில் ஒருபாடலை முன்பு பகிர்ந்திருந்தேன். நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். நன்றி.
தங்களளின் நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. இந்த கருத்துக்களை இதுநாள்வரை நான் கவனிக்கவில்லை அதனால் பதில் கருத்து அளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏதோ ஒரு சேனலில் இந்த அன்னமயா படத்தை அடிக்கடி போடுவார்கள். ஆனால் நான் ஒரு முறைதான் பார்த்தேன். என்னால் மீசை வைத்துக் கொண்டு, சட்டைப் போட்டுக் கொண்டிருக்கும் அன்னமாசர்யரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருமுறைதான் பார்த்தேன். அந்தப் படம் பார்த்ததில் நான் கற்றுக்கொண்ட விஷயம்: திருப்பதி மலையே சாளகிராமம், ஆகவே அதில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது என்பது.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம் தெலுங்கு சேனலில் இந்தப் படத்தை முன்பு அடிக்கடி பார்த்துள்ளேன். மாறுபட்ட கதாபாத்திரங்கள் என்று வரும் போது அந்தந்த வகையில் நன்றாக நடிப்பவர்களில் நாகார்ஜுனா நடிப்பும் அடங்கும். அவர் நடித்த மற்ற திரைப்படங்களை கூட நான் அவ்வளவாக பார்த்ததில்லை. அவர் தந்தை கூட முன்பு சில தமிழ் படங்களில் நடித்ததை பார்த்துள்ளேன். படம் பெயர்தான் குறிப்பிட்டுச் சொல்ல நினைவில்லை.
ஆம். காலில் இருக்கும் செருப்பை அவர் கழற்றி உதறிய பின் அவருக்குள் எழும் பிரம்மானந்தமத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
தங்களின் நல்லதொரு கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி. தங்களின் கருத்தை நான் இதுநாள்வரை கவனிக்கவில்லை. அதனால் பதில் கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
ReplyDeleteஉங்கள் வலைத்தளங்களில் பார்க்க முடியவில்லையே!
நலம் தானே? வீட்டில் எல்லோரும் நலம் தானே?
ஊருக்கு எங்கும் சென்று விட்டீர்களா? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. தங்களின் இந்தக் கருத்தை இப்போது நீங்கள் எ. பி சொன்ன பிறகுதான் இங்கு வந்து பார்க்கிறேன். தங்களின் ஆறுதலான பதிலையும் இப்போதுதான் எ. பியில் பார்த்து வந்தேன். உங்களின் அன்பான கருத்து என் மனதிற்கு ஆறுதலை தந்தது. ஒரு உடன் பிறந்த சகோதரி போன்ற உங்களின் அன்பிற்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவளாக இருப்பேன்.
இப்போது என் மகள் நலமாக உள்ளாள். அவருக்கு தீடிரென உடல்நல குறைபாடு ஏற்பட்டதும் மனம் கலங்கி விட்டேன். உங்கள் ஆறுதல் மொழிகள் என் மனதிற்கு அமைதியை தருகின்றன.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
https://mathysblog.blogspot.com/2023/08/2_9.html#comment-form
ReplyDeleteபத்துமலை இராண்டாம் பதிவை உங்களுக்கு உங்கள் டேஸ்போர்ட் காட்டவில்லையோ? ஆடிகிருத்திகை அன்று போட்டேன்.
வீட்டில் எல்லோரும் நலம் தானே ?
நேரம் கிடைக்கும் போது பதிவை பாருங்கள்.
வணக்கம் சகோதரி
Deleteஅனைவரும் நலம் சகோதரி. ஆடி கிருத்திகையன்று இந்தப்பதிவை பார்க்கவில்லை. ஆனால் மறுநாள் பார்த்தும் உடன் வர இயலவில்லை. பின் பத்துமலை முருகன் மூன்றாவது பதிவுக்கு வரும் போது இரண்டாவது இன்னமும் படிக்கவில்லையா எனத் தெரிந்ததும் அன்று மாலையே படித்து தாமதமாகவும் கருத்தும் தந்து விட்டேன். இதையை இப்போதுதான் பார்க்கிறேன். அந்தளவுக்கு சோம்பேறி ஆகி விட்டேன். ஏனோ நிறைய எழுத வேண்டுமெனவும் நினைக்கிறேன் இயலவில்லை. தாமதமாக இதற்கும் பதில் தருவதற்கு மன்னிக்கவும். தாங்கள் அன்பான வருகை தந்து நினைவூட்டடியதற்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்ன கமலாக்கா சகோதரி,
ReplyDeleteஅதிரா இல்லை என்ற கவலையில புதுப் போஸ்ட் போடேல்லையோ?:) ஹா ஹா ஹா
வணக்கம் அதிரா சகோதரி
Deleteநலமா? எப்படியிருக்கிறீர்கள்? உங்களை இங்கு கண்டதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
/அதிரா இல்லை என்ற கவலையில புதுப் போஸ்ட் போடேல்லையோ?:) ஹா ஹா ஹா/
ஹா ஹா ஹா. உண்மையிலேயே ஆமாம் என்றுதான் சொல்வேன். சந்திரனுக்கு போய் விட்டு நீங்கள் பத்திரமாக திரும்பி வருகிற வரை எனக்கு கவலைதான். இனி தங்களை கண்டதும் எனக்குள் உற்சாகம் பிறந்து விட்டது. போடும் புது போஸ்ட்டுக்கெல்லாம் (போட்டால்) கருத்துடன் வரும் தங்கள் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன். என்னை மறவாதிருக்கும் தங்களின் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய. பாடல்கள் பகிர்வு. கேட்டு மகிழ்ந்தோம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
இனிய பாடல்களை கேட்டு மகிழ்ந்து ரசித்து கருத்து சொன்னதற்கு நானும் மிக்க மகிழ்வடைந்தேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.