Friday, December 12, 2014

இறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)

உன் வேளை சரியில்லையென, வேறுபட்ட மனதோடு சிலர்,

உள் அர்த்தத்தில் வெவ்வேறு விதமாய் சொல்லிச்சென்றனர்.!

நேரங்கள்தான்
 இவையென்று, காலநேரம் பார்க்காமல்,

நேர்த்தியாய் பலர், “நேர்ந்து கொள்ளவும் தூண்டிவிட்டனர்.!
தடுக்கி விழும் போதெல்லாம், தடுக்கி விடும் கோவில்களில்,

தனியாகவிருக்கும் உனை சிறப்பாக பூஜிக்க சில பரிந்துரைகள்,

தப்பாமல் தினம் வந்து, தயங்காமல் என் செவிகளிலே,

தளர்வில்லா பேச்சினிடையில், தவறாமல் வந்தடையும்.!
அத்தனையும் செவிமடுத்து, “நித்தம் நித்தம் உனை மறவாது,

பித்தனைப்போல் சுற்றிவந்து, பலவிதமாய் உன் உரு கண்டும்,

எத்தனைக்காலமாய், ஏங்கி நின்றேன்! உன் இருப்பிடமும் சொல்ல,

இத்தனைக்கும் ஓர்நாள், இன்றுவரை ஏன் எதிர்வந்து நிற்கவில்லை.?
ஆலயம் தொழுவதை அக்கறையோடு செய்து, அனுதினமும் உன்னை

அன்போடு வணங்கி, “அமைவதெல்லாம் உன் அருளால்தான் என

மனதளவில் நம்பி, எதுவும் நயந்து வேண்டாது நீ" தந்ததே போதுமென,

மனதாற இருந்த செயல் மற்றெவருக்கும் தெரியாதன்றோ.?

இவ்வளவும் அறிந்த நீ இடுக்கண் வரும் முன் களையாது,

இருந்தவிடமும் விட்டு நகராது, நான் இத்தனை நாள் கண்ட ஓர்

உருவில் என் எதிரிலும் வாராது, மற்றவர்களோடு மற்றவராய் மறுத்து

உதறுவதும் ஏனோ.? இவ்வுருவிலெல்லாம் நீ இல்லையென்றால்
இறைவா நீ எங்கிருக்கிறாய்….? இறைவா நீ எங்கிருக்கிறாய்….?

இருக்கும் இடத்தை, தெள்ளத்தெளிவாக உணர்த்தாயோ..? என

அரற்றிய குரலுக்கு பதிலாய், அசரீரியாய் மறுகுரல் என் மனதிலிருந்து

அரைகணத்தில் அருமையாகத்தானே விழித்தழைத்தது.!
௬டு விட்டு ௬டு பாயும் உன்னுயிர் ௬ட்டுக்குள்,

௬ர்ந்தே நீயும் பார்த்திருந்தால், என்னுயிரே, உன்னுயிராய்

இயக்கத்தின் அற்புதமாய், இசைந்திருக்கும் அதிசயத்தை,

இன்பமுடன் கண்டுகொண்டு இறைவனாக உணர்ந்திருப்பாய்.!
உன்னையும் அறிந்து கொள்ளாமல், உண்மைதனை புரியாமல்

உன்னுள் குடியிருக்கும் என்னையும் உணரந்து கொள்ளாமல்,

என்னைத்தேடி தினம், எனக்கு தினத்துக்கொன்றாய் பெயர் சூட்டி

என்னையும் துன்புறுத்தி, வாழ்வை எட்டிக்காயாய் திணறடித்தாய்.!
ஆத்மாவும் நானே.! உன்னிலிருக்கும் பரமாத்மாவும் நானே.!

ஆதியந்தம் தொட்டு, உன்னை அகலாதிருப்பவனும் நானே.!

பட்டுவிடும் மேனிக்குள், தொட்டுவிடும் தொலைவிலிருப்பவனை

பற்றிக்கொண்டு வாழாமல், தொலைத்து விட்டழும் தொட்டில்

குழந்தையாய், குமைந்து கொண்டும், குமுறிக்கொண்டும்,

குற்றமுள்ள மனிதனாய், ஏன் குவலயத்தில் வாழுகின்றாய்…? 
இனியேனும், அங்கு இங்கு என்று அலைந்து திரியாமல், உன்

இன்னுயிரை "நானென்று" உணர்ந்து கொண்டு, என்னுயிர்தான்,

அனைத்துயிரும் என்பதையும் புரிந்து கொண்டு, அன்புடனே  

அணைத்து விடு என்னையே.! அருள் பிறக்கும் உண்மையே.!”
ஓடி வந்த குரல் கேட்டு ஒரளவு தெளிவு பெற்றேன்.! நம்முள்

ஒளிந்து கொண்டிருப்பவனும் அவனென்று அறியப்பெற்றேன்.!

இனி விழைந்து தேடி அவனுருவத்தை என்னுள் தக்கவைக்கும்

இன்செயலை விரைந்து செயலாற்ற "அவன்துணை வேண்டினேன்.!

நானடைந்த இவ்வின்பமதை தாமறியச்சொல்லுகின்றேன்.!

தானடைந்தால் போதுமென்று தக்கணமும் எண்ணவில்லை.!
அறிந்தவர் அனைவருமே, தன்னுயிரை தலைவனாக்கி

அனைத்துயிரும்,“அவனே எனும் தத்துவத்தை தலையாக்கி,

அனைவருக்கும் உதவுவதே அவன் சேவை என்று மெய்யாக்கி,

அறிந்தவற்றை பிறர் அறியச்செய்து தலைசிறந்து வாழ்ந்திடுவோம்.

படங்கள்: நன்றி கூகுள்

10 comments:

  1. ஆஹா அருமையான பாடல் அற்புதமான வரிகளோடு அழகி. படங்களோடு இறைவனின் துணை இருக்கட்டும் உங்களோடு.
    இரண்டு பாகமாக போட்டது அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே!

    தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

    இறைவனின் துணையிருக்க வாழ்த்தியமைக்கும், பதிவை ரசித்து பாராட்டியமைக்கும் என் நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. தங்கள் பாடல் கேட்டு இறைவன் வந்திடுவான் ஆசிவழங்க...படமும், பாடலும்..ரம்யம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
      பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும், ஆண்டவனின் அருள் பிறக்கும் என வாழ்த்தியமைக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மூலம் உணர்தல் அவசியமென
    நான் இப்போதுதான் ஒரு பதிவை எழுதினேன்
    நீங்கள் அற்புதமாக மூலத்தை மூளைக்குள்
    சட்டெனப் புரியும் வண்ணம் அருமையாகப்
    பதிவிட்டுவிட்டீர்களே
    சிந்தனையும் அதன் தொடர்ச்சியும்
    சொல்லிச் செல்லும் லாவகமும் அற்புதம்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      என் அழைப்பிற்கிணங்கி, உடனடியாக என் பதிவுக்கு வருகை தந்து, நல்லதொரு கருத்துப்பகிர்வும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தங்கள் ஊக்குவிப்பால்,என் பதிவுகள் மென்மேலும் சிறப்படையும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இறைவனிடம் அணுக்கமாக நெருங்குவது போன்ற சொற்கள், வரிகள். புகைப்படங்கள் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      முதலில் தங்கள் வருகையை நன்றியுடன் வரவேற்கிறேன்.

      தாங்கள் என் வலைதளத்திற்கு முதல் வருகை தந்தமைக்கும், கருத்துப்பகிர்வுடன், ரசித்து பாராட்டியமைக்கும் என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      இனியும் என்வலைதளம் வந்து கருத்திட்டு வாழ்த்துக்களை வழங்கினால் மகிழ்வுறுவேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனியேனும், அங்கு இங்கு என்று அலைந்து திரியாமல், உன்

    இன்னுயிரை "நானென்று" உணர்ந்து கொண்டு, என்னுயிர்தான்,

    அனைத்துயிரும் என்பதையும் புரிந்து கொண்டு, அன்புடனே

    அணைத்து விடு என்னையே.! அருள் பிறக்கும் உண்மையே

    இறைவனிடம் நெருக்கம் கொள்ளும் சொற்கள், அழகிய கவிக்கு பொருத்தமான படங்கள் அருமை.

    இனி தொடர்ந்து வருகிறேன்...

    நட்புக்கள் இணைப்பிற்கான gadget வைக்கலாமே சகோதரி.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே!

    தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், பாராட்டுதலுக்கும், என் பணிவான நன்றிகள்.

    என் பதிவுகளை இனித் தொடர்கிறேன் என்றதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    மற்றபடி தங்கள் ஆலோசனைகளையும் ஏற்று செயல்படுத்தி உள்ளேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete