Sunday, July 14, 2019

அம்மையப்பர்..

அருள் மிகும் நெல்லையப்பர்.
ஓம் நமசிவாய...

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க



இன்றைய தேரோட்ட நிகழ்வு.

நெல்லையப்பர் ஸ்தல வரலாறு, தன் பக்தருக்காக நெல்வேலி அமைத்து நெல்லையப்பர் பெயர் வர காரணமாக ஈசன் நடத்திய திருவிளையாடல்கள் என அனைத்துமே நாம் அனைவருமே அறிந்ததுதான்.

இன்று நெல்லையப்பர் ஆனி தேரோட்ட விழா அமர்க்களமாக நடந்துள்ளது. இன்று இருக்கும் இடத்திலிருந்து தேராட்ட விழாவை கண்டு ரசித்த போதும், சிறு வயதில் தேரோட்டத்திற்கு சென்று ஓடும் தேரையும், நெல்லையப்பரையும், காந்திமதி தாயாரையும் சேவித்தது மலரும் நினைவுகளாக மலர்கிறது. அதன் பின் எத்தனையோ முறை நெல்லை சென்ற போதெல்லாம் அம்மையப்பன் தரிசனம் கண்டிருந்தாலும், தேரோடும் நேரத்தில் நான் அங்கு ஓடாத நேரங்கள் வருத்தத்தை தந்துள்ளது.

சென்ற வருடம் தேர்த் திருவிழா முடிந்த ஒரு வார காலத்திற்குள் சில வேலைகளுக்காக நாங்கள் நெல்லை பயணம் செல்ல வேண்டிய "நிலை." அப்போது கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த போது, கோவில் வாசலில் ஓடிக் களைத்திருந்தாலும் "நிலை" வந்து சேர்ந்த பெருமையுடன், என்றும் "நிலையான" புகழுடன்  நின்றிருந்த தேரையும் அதன் அழகையும் கண்டு வணங்கி வந்தேன். அந்த நினைவுகள் இன்றும் மனதில் மணம் வீசும் பூக்களாக பூத்தன.

அன்று  எடுத்த  சில புகைப்படங்கள்...
















இன்று ஒரு வருடங்கள் கழித்து இன்று நெல்லையப்பர், காந்திமதி அருளினால் என பதிவை அலங்கரிக்கின்றன.
கண்டுகந்த  அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றிகளும். 🙏.