Pages

Wednesday, June 13, 2018

நினைவுகள்....


         கூட்டுக் குடும்பங்கள் சிறந்ததெனினும், தற்போதைய சூழ் நிலைகளில் நம்மால் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொருவரின்  வேலைகள், கனவுகள்,  கற்பனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், அவசியங்கள் போன்றவை விரிந்து பரந்து  உலகளவு வியாபித்து விட்டது. நெருங்கிய உறவுகளே எப்போதோ சந்தித்து கை குலுக்கி கொள்கிறோம். அவசியமானதை கைபேசியில் பேசி,  கணினி திரையில் மனசுக்கு தோன்றும் போது பார்த்துப் பேசி உறவுகளை தொடர்பில் வைத்துள்ளோம்.  அதுவும் என்று நம் நினைவிலிருந்து கழன்று கொள்ளுமோ தெரியவில்லை. 

இதை எழுதும் போது என் பெற்றோர் (1973ல் இருக்குமென நினைக்கிறேன்.)  மதுரையில் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது, திருமணத்தில் சந்தித்த மற்றொரு உறவுகாரர்கள் அவர்கள் வீட்டுக்கு அழைத்ததின் பேரில் அங்கு செல்ல சம்மதித்து அவர்கள் வீட்டுக்கு சென்றார்களாம். 

அது மிகப் பெரியவீடு  வீட்டில் நான்கைந்து அண்ணன், தம்பிகள். அவர்களின் மனைவிகள் ஆளாளுக்கு மூன்று நான்கு குழந்தைகள், மனைவிகளின் சொந்தங்கள். கணவர்களின் உறவுகள் என வீடே ஒரு கல்யாண மண்டபமாய் கலகலத்துப் கொண்டிருந்ததாம்.... அண்ணன் தம்பி குழந்தைகள் ஜாடையில் ஒருவரை ஒருவர் ஒத்துப் போனதில்,  எத்தனை அறிமுகப்படுத்தியும், அவர்களை புரிந்து கொள்ள சற்று  கடினமாக இருந்ததாம். 

அவர்கள் என் அப்பா வழி உறவு என்றாலும், என் பெற்றோருக்கு அனைவரும் அவ்வளவாக  அறிமுகமில்லை. என் அப்பாவுக்கு அவர்களின் பெற்றோர் ஒன்று விட்ட வழி உறவுகள்.. அவர்கள வறுப்புறுத்தி அழைத்ததினால் இரவு தங்கி விட்டு மதியம் திரும்பி விட்டனர். மதிய சாப்பாடு பந்தி போல அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்களாம்.  பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருந்தது என வந்த பின் அவர்களின் உறவின் பெருமையை சொல்லி, சொல்லி என் அப்பா அதிசயித்து கொண்டே இருந்தார்.

கிட்டதட்ட 30,  35 பேருக்கு தினமும் சமையல் செய்து பறிமாறி, வீடு வாசல் சுத்தம் செய்து,  ஒவ்வொருவரும் அத்தனைப் பொழுதும்  அந்த குடும்பத்துக்காகவே கழித்து, நாட் கிழமை என்று பண்டிகை காலங்களையும் வரவேற்று,  இதில் எந்த  விதமான மனஸ்தாபத்துக்கும் இடம் தராமல் புன்னகைத்து மன மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டு, "எப்படித்தான் இவர்கள்" என நாங்கள் அந்த உறவின் பெருமையை  நினைத்து வியந்து போனது இன்னமும் என் நெஞ்சில்  பசுமரத்தாணி போல உள்ளது.

இன்று கணவன் மனைவி அவர்களின் குழந்தைகள், அதற்கு மேல் ஒரு உறவு என்றாலே அந்த வீட்டை ஒரு அதிசய பொருளாக பார்க்கிறார்கள்.  காலம் மாறி விட்டது.  நான் முதலில் சொன்ன காரணங்கள் கூட்டுக்குடும்ப வேர்களை தாக்கி  அந்த மரங்களை செல்லரிக்க செய்து  வீழ்த்தி விட்டன.

அந்த பெருங்குடும்பத்தை நானும் பார்க்க வேண்டுமென அம்மாவிடம் எத்தனையோ முறை அவர்களைப்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை.. வாழ்க்கைப் படகு திசைகள் மாறி பயணித்துதானே போகும். நினைவுகள் மட்டும் வருத்தமான சுமைகள், மகிழ்வான சுமைகள்  என சுமைகளை சுமந்து கொண்டு படகுடனே பயணிக்கும். 

(வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.)

அன்று  நடக்காத ஒன்றை,  தெரியாத முகங்கள் ஏற்படுத்திய  உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும்  உறவின் பெருமையை அறிய வைக்க  இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம்  அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும்  எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது.  இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து)  ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.

என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு  பதிலளித்து  எனக்கு புன்னகைக்க ம‌ட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும்  உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. )  இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு  சிரிக்க கற்றுக் கொண்டேன்.   ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்பிக்கிறேன். 


அனைவரைப் பற்றியும் வலைத்தள உறவுகள் பற்றியும் என் குடும்பத்திலுள்ளவர்களிடமும்  கூறியுள்ளேன். நல்லவர்களை பற்றி சிறப்பாக கூறுவது இயல்புதானே. என் வலைத்தள எழுத்துகளுக்கு உதவியாய் இருக்கும் என் குழந்தைகளிடமும் கூறியுள்ளேன். ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன்.  எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது....

படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

47 comments:

  1. ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீயும் இன்றுதான் முதலாவதா... முதன் முதலா வலது காலை எடுத்து வச்சு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க சகோதரி..தங்களின் முதல் வருகையை ஆனந்தத்துடன் மலர் தூவி வரவேற்கிறேன்.. தங்கள் வரவு நல்வரவாகுக... வருகை தந்தமைக்கு மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி..

      Delete
  2. கூட்டுக் குடும்பம் என இருக்கும்போது அதன் தலைமை... பொறுப்பெடுத்து நடத்துபவர் நன்றாக இருப்பின்.. கூட்டுக் குடும்பம் சந்தோசமாகப் போகும்.. ஆனா அது இக்காலத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. கூட்டுக் குடும்பத்தில் வளரும் ஒரு பிள்ளையால மட்டுமே இன்னொரு கூட்டுக் குடும்பத்தில் போய் வாழ முடியும்.. என்பது என் கருத்து.

    தனியே வளர்ந்திட்ட பிள்ளைகள் அஜஸ்ட் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... கொஞ்சம் சுயநலமாக வளர்ந்திருப்பார்களெல்லோ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /கூட்டுக் குடும்பம் என இருக்கும்போது அதன் தலைமை... பொறுப்பெடுத்து நடத்துபவர் நன்றாக இருப்பின்.. கூட்டுக் குடும்பம் சந்தோசமாகப் போகும்.. ஆனா அது இக்காலத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது./

      உண்மைதான்.. வழி நடத்த ஒரு மாலுமி இல்லாவிடில் கூட்டுக் குடும்ப கப்பல் பயணிப்பது மிகவும் சிரமம். இக் காலத்தில் அது சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் விட்டது.

      /தனியே வளர்ந்திட்ட பிள்ளைகள் அஜஸ்ட் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... கொஞ்சம் சுயநலமாக வளர்ந்திருப்பார்களெல்லோ/

      அழகாக கூறியுள்ளீர்கள். நிறைய பேருடன் வளரும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் கொஞ்சமாவது அவர்களுடன் வளரும்.
      நல்லதொரு கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இதைக் கொஞ்சம் பாருங்கோ..

    https://www.youtube.com/watch?v=_C2jBwNB_CA

    ReplyDelete
  4. கூட்டுக்குடும்பம். நீங்கள் சொல்லி இருக்கும் அந்தக் குடும்பம் போல சேர்ந்து இருக்கவேண்டும் என்று நானும் நினைப்பேன். என் சிறுவயதுக் கனவு அது. இப்போது விவரம் வந்துவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இழுக்கும் இந்த உறவுப்பிணைப்பில் அது இப்போது சாத்தியமில்லை என்று புரிந்தது. என் மகன்கள் அவர்கள் குடும்பம் என்று சேர்ந்திருந்தாலே பெரிதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கூட்டுக்குடும்பம். நீங்கள் சொல்லி இருக்கும் அந்தக் குடும்பம் போல சேர்ந்து இருக்கவேண்டும் என்று நானும் நினைப்பேன். என் சிறுவயதுக் கனவு அது/

      என் கனவும் அதுதான். ஆனால் அமையவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஒரு மச்சினர் (அவரையும் அண்ணா என்றுதான் அழைப்பேன்) குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அதன் பின் வேலை மாற்றல் காரணமாக ஒன்று சேரவே இயலவில்லை. மற்ற இரு அண்ணாக்களும் நான் வரும் போதே தனியாகத்தான் இருந்தார்கள். கனவுகள் என்றுதான் பலித்திருக்கிறது?
      நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. என்னவோ சொல்லிக்கொண்டு வருகிறீர்களே என்று பார்த்தால் நம் குடும்பத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான். வெவ்வேறு நாடு வெவேறு இடம், முகம் தெரியாத உறவுகள் என்றாலும் அன்பாலேயே இணைந்திருக்கிறோம். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு, இல்லை இல்லை நமக்கு இன்னும் உற்சாக டானிக்காய் அமையும். கடைசி பாரா வரிகள் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்துள்ளன. அது எதற்கு இப்போது?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /என்னவோ சொல்லிக்கொண்டு வருகிறீர்களே என்று பார்த்தால் நம் குடும்பத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான். வெவ்வேறு நாடு வெவேறு இடம், முகம் தெரியாத உறவுகள் என்றாலும் அன்பாலேயே இணைந்திருக்கிறோம். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு, இல்லை இல்லை நமக்கு இன்னும் உற்சாக டானிக்காய் அமையும்./

      கூட்டுக் குடும்பங்களை குறித்து எழுதும் போது தற்சமயம் கூட்டுக் குடும்பமாய் இயங்கி வரும் "எங்கள் ப்ளாக்" கையும் குறிப்பிட வேண்டுமென்று தோன்றியது. ஏனெனில் அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கத்தினர் அல்லவா? அந்த சமயத்தில் என் குடும்பத்தை சொல்வது போன்று பெருமையடைந்தேன். தங்கள் அன்றாட பணிகளின் நடுவே, எங்கள் நளபாகங்களையும், கதை களத்தையும் மற்றும் கருத்துக்களின் சிறப்புகளையும் ஊக்குவித்து செய்யும் பணியும், தலைசிறந்த ஒன்றாயிற்றே... அதுவும் ஒரு கூட்டுக்குடும்ப தலைவரின் கை வந்த கலையாக எனக்குப்பட்டது. அதனால் தங்கள் அனுமதியை கூடப் பெறாமல், "எங்கள ப்ளாக்"கை குறிப்பிட்டேன். அதை உற்சாகமாக ஆமோதித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      கடைசி பாராவும் என்னுள் எழுத வேண்டுமென்று உதித்ததுதான். அதை சாதாரணமாகதான் எழுதினேன். என்றாயினும் ஒர்நாள் அதை சந்தித்து தானே ஆக வேண்டும்.

      கர்ணன் படத்தில் "மரணத்தை பற்றி கலங்கும் விஜயா" அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆத்மாவிற்கு அழிவேது..அது அழிவில்லாதது..

      தங்களது ஊக்கமிகு கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பொதுவான, பெரிய காம்பௌண்ட் சுவருடன் ஒரு பெரிய இடம் வாங்கிப் போடவேண்டும். அதில் தனித்தனி போர்ஷன் போல (தேவைப்பட்டால் தனி கிச்சன் கூட. இது பிற்பாடு தோன்றிய எண்ணம்) ஒவ்வொரு போர்ஷனிலும் ஒவ்வொரு ஜோடி, அவர் மக்கள்...

    பொதுவான ஹால். அதில் எல்லோரும் கூடமுடியும். சமையல் பொது. சமைப்பது ரொட்டேஷனில்.. ஒருவருக்கு உடம்பு சரி இல்லை என்றாலோ, ஒரு குடும்பம் ஊர் செல்லவேண்டும் என்றாலோ சேர்ந்திருப்பதால் தைரியமாக இருக்கலாம்.

    இப்படி ஓர் கனவு இருந்தது. வசதிகளும் வரவில்லை; வாய்ப்புகளும் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வட மாநிலங்களில் இப்போதும் இருக்கு! அங்கெல்லாம் பரம்பரையாகவே இம்மாதிரி வாழ்க்கை தான். அப்பா, அம்மா தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பிள்ளை குடும்பத்துக்கும் ஒரு போர்ஷன். தனித் தனிச் சமையல், அப்பா, அம்மா விரும்பினால் தனியாக சமைத்துக் கொள்வார்கள். இல்லை எனில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பிள்ளை வீட்டில்! மொத்த வருமானத்தையும் அந்த அந்தக் குடும்ப நபர்களுக்கு ஏற்றவகையில் பிரித்துக் கொடுப்பார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பொதுவில் நடக்கும். இப்போதும் அப்படிச் சேர்ந்து இருந்தாலும் வருமானம் தனித் தனியாக வைத்துக் கொள்வதாகக் கேள்விப் பட்டேன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      வட மாநிலங்களில் கூட்டுக்குடும்பம் இன்னமும் இருக்கிறதென்று நானும் கேள்விபட்டுள்ளேன். பெரியவர்களை பார்த்ததும் சட்டென காலை தொட்டு ஆசிர்வாதம் பெறுவது இதெல்லாம் அவர்களின் பழக்கமும் கூட.. மிகவும் அருமையாக அவர்களின் நிலை குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      /பொதுவான ஹால். அதில் எல்லோரும் கூடமுடியும். சமையல் பொது. சமைப்பது ரொட்டேஷனில்.. ஒருவருக்கு உடம்பு சரி இல்லை என்றாலோ, ஒரு குடும்பம் ஊர் செல்லவேண்டும் என்றாலோ சேர்ந்திருப்பதால் தைரியமாக இருக்கலாம்.

      இப்படி ஓர் கனவு இருந்தது. வசதிகளும் வரவில்லை; வாய்ப்புகளும் வரவில்லை/

      மிகவும் அழகாக நான் என மனதில் கட்டியுள்ள கோட்டையை விவரித்துள்ளீர்கள். எனக்கும் இப்படிபட்ட எண்ணங்கள் உண்டு. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அந்த வருத்தமும் எனக்குள அமிழ்ந்திருக்கிறது. என்ன செய்வது? எது கொடுப்பினையோ அதுதானே கிடைக்கும். கிடைத்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. ஸ்ரீராம் ஹைஃபைவ். இதே கருத்தைத்தான் எபி யில் கூட கூட்டுக்குடும்பம் கேள்வி பதிலில் சொல்லியிருந்த நினைவு.

      எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சாத்தியமில்லை இப்போதைய காலக்கட்டத்தில்

      கீதா

      Delete
  7. குடும்பத்தில் அதிரா போன்ற ஞானி, பெரியவர்கள் முதல் என்போன்ற குழந்தைகள்வரை ஒற்றுமையாய் இருந்தால் சந்தோஷத்துக்கு குறைவில்லை அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /குடும்பத்தில் அதிரா போன்ற ஞானி, பெரியவர்கள் முதல் என்போன்ற குழந்தைகள்வரை ஒற்றுமையாய் இருந்தால் சந்தோஷத்துக்கு குறைவில்லை அல்லவா?/

      ஹா.ஹா ஹா ஹா உண்மை.. இப்படிபட்ட அழகான குடும்பத்தில் ஏது குறை.. ஞானியும், கடவுளும் மிக அருகாமையில் ஒன்றாகத்தானே இருப்பார்கள். எனவே "குறை ஒன்றும் இல்லை" பாடலை பாடத் தோன்றுகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. /// என்போன்ற குழந்தைகள்வரை///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ ஹையோ கமலா சிஸ்டர் என் கையை விடுங்கோ என்னைத்தடுக்காதீங்கோ:)).. உங்கட புளொக்கில் வச்சே இப்பவே டீக்குளிக்கிறேன்ன்ன்ன்:)) இதை எல்லாம் படிக்கவோ இந்த உசிர் இன்னும் என் உடம்பில இருக்குதூஊஊஊஊஊ:))

      Delete
    3. தேநீர்க்குளியல் அதிரா!

      Delete
  8. நினைவுகள் நன்றாக இருக்கிறது.
    கூட்டுக்குடும்பம் இப்போது சாத்தியம் இல்லை.
    குடும்பத்தினர் அனைவரும் ஒரே தொழில் (கம்பெனி) வைத்து இருந்தால் ஒரு வேளை சாத்தியம். இப்போது படிப்பு, வேலை என்று தனியே பிரிந்து வாழும் காலம்.

    குடும்பவிழாக்களை எல்லோரும் சேர்ந்து கொண்டாடினோம் எங்கள் புகுந்தவீட்டில் இப்போது இரண்டு பெரியவர்களும்(அத்தை, மாமா) இறைவனடி சேர்ந்து விட்டார்கள் இனி அப்படி முடியுமா என்பது கேள்விக்குறி?

    என் குழந்தைகள் எங்களுக்கு கிடைத்த அளவு கூட கிடைக்கவில்லை.

    வெகு தொலைவில் இருக்கிறார்கள், வரும் போது என்ன பண்டிகை இருக்கோ அதில் கலந்து மகிழ்ந்து போகிறார்கள். அவ்வளவுதான் சாத்தியம்.

    எங்கள் ப்ளாக் குடும்பம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்துகிறது என்பது உண்மை.
    தினம் சந்தித்து கொள்வதால் பிணைப்பு இன்னும் கூடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

      /கூட்டுக்குடும்பம் இப்போது சாத்தியம் இல்லை.
      குடும்பத்தினர் அனைவரும் ஒரே தொழில் (கம்பெனி) வைத்து இருந்தால் ஒரு வேளை சாத்தியம். இப்போது படிப்பு, வேலை என்று தனியே பிரிந்து வாழும் காலம். /

      தாங்கள் கூறுவது உண்மைதான்.. நானும் ஆரம்பத்தில் அதைத்தான் எழுதியுள்ளேன். ஆனால் அந்த பெருங்குடும்பம் எப்படித்தான்
      சேர்ந்திருந்தார்களோ? ஆச்சரியம்
      இன்னமும். அகலவில்லை... பெரியவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டால், மேலும் பிரிவுகள் ஏற்பட்டு விடும். இதுவும் சகஜம்தான். நம் குழந்தைகளுக்கு இந்தளவிற்கு கூட சேர்ந்து வாழ முடியவில்லை.
      மிக மிக சரியான வார்த்தைகள்...

      /எங்கள் ப்ளாக் குடும்பம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்துகிறது என்பது உண்மை.தினம் சந்தித்து கொள்வதால் பிணைப்பு இன்னும் கூடுகிறது./

      அதைத்தான் நானும் இங்கு குறிப்பிட்டேன். ஒரு குடும்பமாக தினமும் சந்தித்துப் பேசி மனம் மகிழ்கிறோம். அதனால் மனம் சந்தோஷமடைகிறது.

      தங்கள் ஊக்கமிக் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஸ்ரீராம் சொன்னது போல் நகரத்தார் குடும்பத்தில் முன்பு இருந்தது பெரிய வீடு தனி தனி அறைகள், பொதுகூடம், ஒருத்ருக்கு ஒருவர் உதவி கொள்வது எல்லாம் இருந்தது. அப்போது வியபாரம் செய்தார்கள்.
    இப்போது கல்யாணம் என்றால் கூடுகிறார்கள்.

    என் அப்பா காலத்திலேயே (அவர்கள் கூட பிறந்தவர்கள் எட்டு பேர் ) வெவ்வேறு ஊரில் உத்தியோகநிமித்தமாய் இருந்தார்கள் தனி குடித்தனமாய்.

    என் பாட்டி தாத்தா இறந்த பின் எல்லோர் வீடுகளுக்கு வந்து போய் இருப்பார்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லோரும் போய் பார்த்து வருவார்கள். தாத்தா வாழ்ந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார்கள். என் மாமியாரும் அது போல் 94 வயது வரை வாழ்ந்து சென்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      என் அப்பா காலத்திலேயே (அவர்கள் கூட பிறந்தவர்கள் எட்டு பேர் ) வெவ்வேறு ஊரில் உத்தியோகநிமித்தமாய் இருந்தார்கள் தனி குடித்தனமாய்.

      /என் பாட்டி தாத்தா இறந்த பின் எல்லோர் வீடுகளுக்கு வந்து போய் இருப்பார்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லோரும் போய் பார்த்து வருவார்கள். தாத்தா வாழ்ந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார்கள். என் மாமியாரும் அது போல் 94 வயது வரை வாழ்ந்து சென்றார்கள்./

      என் பதிவு தங்களின் கடந்த கால நினைவுகளை உண்டாக்கி தந்தது போலும்.. வேலை நிமித்தம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருப்பது தவிர்க்க முடியாதது. அருகருகே வேலைகள் மேலும் நிலம் புலம் பார்த்துக் கொள்ளும் பணிகள் என இருக்கும் அண்ணன் தம்பிகள் சேர்ந்து இருப்பது கூடுமான வரை அந்த காலத்தில் இயல்பாக இருந்தது. நான் குறிப்பிட்ட குடும்பமும் இப்படிப்பட்ட முறைகளுடன் வாழ்ந்திருக்கலாம். மற்ற படி வெவ்வேறு இடங்களில் உத்தியோகம் என்ற பட்சத்தில் சேர்ந்திருப்பது கடினந்தான்.

      என் அப்பாவுடன் பிறந்தவர்கள் எட்டு பேர். ஆனால் துரதிருஷ்டவசமாக அனைவரும் சிறுவயதிலேயே தவறிப் போய், பாட்டியும் என் அப்பாவை தாத்தாவின் வசம் ஒப்படைத்து ஐம்பது வயதிற்குள் இறக்க, தாத்தா அப்பாவை அப்படி கண்ணுக்குள் வைத்து வளர்த்தாராம். இதை அப்பா சொல்லும் போது அவ்வளவு வருத்தமாக இருக்கும். அதனால்தான் கூட்டுக் குடும்ப சிந்தனை என் மனதில் ஆழமானதோ என்னவோ?


      தங்கள் பாட்டியையும், மாமியாரையும் நினைவு கூர்ந்து சொன்னது சிறப்பு.
      தங்களது அன்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் என் நன்றிகள் சகோதரி. இதைப் போல எழுதும் போதுதான் மனதின் வலிகள் இறங்கிப் போவதை உணர்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன். எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது..//



    நானும் அப்படி நினைப்பேன்.
    திருமதி .இராஜராஜேஸ்வரி என்ற தெய்வீக பதிவாளர் இறந்த போது அவர் மகன் அவர் வலைத்தளத்தில் அறிவித்தார்.

    கடைசி பாரா வரிகள் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்துள்ளன. அது எதற்கு இப்போது?//

    ஸ்ரீராம் சொன்னது சரிதான் இப்போது அது எதற்கு?
    குழந்தைகள், கண்வர் என்று கடமைகள் இருக்கே
    நலமாய் இருங்கள் பல்லாண்டு. வாழ்க வளமுடன்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நானும் அப்படி நினைப்பேன்.
      திருமதி .இராஜராஜேஸ்வரி என்ற தெய்வீக பதிவாளர் இறந்த போது அவர் மகன் அவர் வலைத்தளத்தில் அறிவித்தார். /

      தங்களுக்கும் என் சிந்தனை தாக்கங்களை கொடுத்திருப்பதை அறிந்து வருத்தமாக இருந்தது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் வரிகள் வந்துள்ளன என நீங்கள் சொன்னது எனக்குப் புரிகிறது.
      வலையுலகில் நாம் அனைவரும் நட்புடன் வலம் வந்து நாம் படைத்தவற்றையும், அனுபவங்களையும், பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசிக் கொள்கிறோம். இந்த நட்பின் உரிமையில், இந்த வரிகளும் என் சிந்தனையில் வந்து விட்டது. அவ்வளவுதான்.

      திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் குழந்தைகள் அவரின் இறப்புச் செய்தியை அவரது வலைத்தளத்தில் பகிர்ந்ததை நானும் பார்த்திருக்கிறேன். சிறந்த தெய்வீக வலைப்பதிவர் அவர்.
      அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

      தங்கள் வாழ்த்துக்களுக்கும், அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. நானும் பெரிய குடும்பங்களை கண்டால் மனதுக்குள் சந்தோஷப்படுவேன்.

    இறுதியில் ஏன் தற்போதைக்கு அவசியமற்ற விடயங்களை எழுதி வைத்து இருக்கின்றீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நானும் பெரிய குடும்பங்களை கண்டால் மனதுக்குள் சந்தோஷப்படுவேன்./

      உண்மை சகோதரரே. பெரிய குடும்பங்களும். அதன் ஒற்றுமைகளும் , மனதுக்கு சந்தோஷம் அளிப்பவைதான். மனதுக்குள் அன்று இருந்த சந்தோஷம் இன்று பதிவாக வெளி வந்தது.

      தேவையற்ற விடயங்கள்தான்.. ஆனால் என் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டுமென தோன்றியதால் எழுதி விட்டேன். நெருப்பென்றால் வாய் சுடாது என்பது மாதிரி. ஆனால் உலகில் அனைத்துப் பிறவிகளுக்கும் மரணம் என்றேனும் ஒருநாள் நிச்சயந்தானே...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அதிசயம், ஆனால் உண்மை! ஸ்ரீராம் சொன்னது போன்றே கனவுகள், எனக்கும் இருந்தன, கல்யாணம் முடிந்து, 2 குழந்தைகள் பிறக்கும் வரை! ஆனால் அப்புறம் ? தரையில் இறங்கிய விமானம்தான்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அதிசயம், ஆனால் உண்மை! ஸ்ரீராம் சொன்னது போன்றே கனவுகள், எனக்கும் இருந்தன, கல்யாணம் முடிந்து, 2 குழந்தைகள் பிறக்கும் வரை! ஆனால் அப்புறம் ? தரையில் இறங்கிய விமானம்தான்!/

      ஆகா.. தங்களுக்குமா? என் கனவும் அதுவேதான்.. ஆனால் பலித்தல் மட்டும் இல்லை. தூக்கம்தான் அனைவருக்கும் ஒன்றெனினும், கனவுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறதே.. உண்மையிலேயே அதிசயம்தான்..நாம் அனைவருமே சூழ்நிலைகளினால், தரையில் இறக்கி வைக்கப்பட்ட விமானங்கள்தான் போலும்...

      தங்கள் ஊக்கமிகு கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கூட்டுக்குடும்ப சிந்தனை உங்கள் வரிகளில் அழகாக வந்திருக்கின்றது. குடும்பம் என்பதே சேர்க்கை. கூட்டுக்குடும்பம் என்பது சிறப்பானதொரு சேர்க்கை. சிலருக்காவது, சிலகாலமாவது வாய்த்ததே, இறைவனுக்கு நன்றி.

    உங்களது பதிவின் கடைசி பாரா:
    சில நாட்களுக்குமுன் என் மனம் இந்த ரீதியில் சிந்தித்திருந்தது. இப்போது திடீரென கண்முன்னே உங்கள் வார்த்தைகள்.

    ஒருவேளை, எல்லா மனங்களும் ஒன்றுதானோ.. அல்லது ஒரு கண்காணா மெல்லிழை எல்லாவற்றையும் இணைத்து நகர்கிறதோ..?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /குடும்பம் என்பதே சேர்க்கை. கூட்டுக்குடும்பம் என்பது சிறப்பானதொரு சேர்க்கை. சிலருக்காவது, சிலகாலமாவது வாய்த்ததே, இறைவனுக்கு நன்றி/

      உண்மையான வார்த்தைகள். மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அக்குடுமபத்தை பற்றி பல முறை சிந்திக்கும் போதெல்லாம், இதைப் போல இன்னும் எத்தனை குடும்பங்கள் இருக்கின்றனவோ எனத்தோன்றும். மற்றும் மதங்கள் வெவ்வேறாயினும் மனம் ஒத்த இரு நண்பர்கள் கூட்டுக் குடும்பமாக நிறைய வருடங்கள் சேர்ந்திருப்பதாக எங்கோ படித்தேன். சிறப்பாக ஒருமித்த மனத்தோடு இருக்கும் இவர்களுக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

      /ஒருவேளை, எல்லா மனங்களும் ஒன்றுதானோ.. அல்லது ஒரு கண்காணா மெல்லிழை எல்லாவற்றையும் இணைத்து நகர்கிறதோ..?/

      முடியும் வரை எழுத வேண்டும் என்பது என் அவா.. இறப்பு என்பது இந்தப்பிறவியை முடிந்தாலும். அடுத்த பிறவியில் பிறவியிலேயே நன்கு எழுதும் ஆற்றலோடு ஜனிக்க வேண்டும் என அடிக்கடி சொல்வேன்.. எழுதிக் கொண்டிருக்கையில் ஏதோ தோன்றியது. அதளால் அந்த வாசகங்களையும் சேர்த்தெழுதி விட்டேன்.

      தங்கள் மனதிலும் இச்சிந்தனை உதித்தது ஆச்சரியந்தான்..கண்காணா மெல்லிழைகளால் இணைக்கப்பட்ட சிந்தனை என்ற தங்களின் உவமானங்கள் சிறப்பு..

      தங்களின் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இப்போ பார்த்தீங்கனா, பொதுகாக, மனநிலைக் கோளாரு உள்ளவர்கள், குடிகாரர்கள் எல்லாம் அதிகமாயிட்டாங்க. டைவோர்ஸ் அதிகமாகிறது. இல்லீகல் அஃபைர்ஸ்ம் அதிகமாகிவிட்டது. ப்ரி மாரிட்டல் செக்ஸ் அதிகமாகிவிட்டது. என்னைக்கேட்டால் இதெல்லாம் தனிக்குடித்தனத்தால் வந்த விளைவுதான்.

    க்ரிஸ்டியானிட்டில சொல்லுவாங்க, நாம் தனியாக இருக்கும்போதுதான் நிறைய தவறு செய்வோம். அதனால் தனியாக இருக்கும் போது கடவுள் நம்கமுடன் இருப்பதுபோல் நினைத்தால், நாம் தவறு செய்ய மாட்டோம் என்று. இதை நீங்க கூட்டுக்குடும்பம் தனிக்குடித்தனம் சூழலுக்கும் "அப்ளை" செய்யலாம். நம்மைச் சுற்றி நாலு பேர் எப்போதும் இருந்தால் நாம் அதிகம் தவறு செய்யமாட்டோம்.

    கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றால் "ப்ளேம்" பண்ண மாமியார், நாத்தனார், ஓரகத்தினு பலர் இருப்பாங்க. அது ஒரு வகையில் கணவன் மனைவி உறவை உடைக்காமல் இருக்க உதவியது, ஏன் பலப்படுத்தியதுனுகூட சொல்லலாம். இப்போ என்னனா கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்க வேண்டியதுதான். ப்ளேம் பண்ண வேற ஆள் கிடையாது. அதனால் இவர்கள் உறவு எளிதில் உடைகிறது. விவாகரத்துனு வந்து நிற்கிறது.

    கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பெரியவர்கள் உதவியாக இருப்பார்கள். விளையாடுவதற்கு "கசின்" இருப்பாங்க. இப்போ மூன்றாம்வரிடம் குழந்தையை விட வேண்டியிருக்கிறது, வேறு குழந்தைகளோட விளையாட வேண்டிய கட்டாயம். அவர்கள் "தரம்" நம் குடும்பத்தார் தரம் போலில்லாமல் இருக்கலாம்- அவர்கள் குடும்ப சூழல் பொறுத்து.

    மாற்றம் (தனிக்குடித்தனம்) என்பது முன்னேற்றமாக இருக்கணும்னு சொல்ல முடியாது, பின்னேற்றமாகவும் இருக்கலாம் என்பது பலருக்குப் புரிவதில்லை.

    என் பார்வையில் தனிக் குடித்தனம் நம் தரத்தை குறைத்துள்ளது என்பதே.

    கூட்டுக்குடும்பம் என்றால் எஅன்க்கு ஞாபகம் வருவது சிவாஜி, ரங்காராவ் நடித்த படிக்காத மேதை படம்தான். :)

    ReplyDelete
    Replies
    1. //கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றால் "ப்ளேம்" பண்ண மாமியார், நாத்தனார், ஓரகத்தினு பலர் இருப்பாங்க. அது ஒரு வகையில் கணவன் மனைவி உறவை உடைக்காமல் இருக்க உதவியது, ஏன் பலப்படுத்தியதுனுகூட சொல்லலாம். இப்போ என்னனா கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்க வேண்டியதுதான். ப்ளேம் பண்ண வேற ஆள் கிடையாது. அதனால் இவர்கள் உறவு எளிதில் உடைகிறது. விவாகரத்துனு வந்து நிற்கிறது. //

      நல்ல பாயிண்ட்.

      Delete
    2. வணக்கம் வருண் சகோதரரே

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தாங்கள் கூறியிருப்பதெல்லாம் உண்மை. மிக அழகாக விபரமாக கூறியுள்ளீர்கள்.

      கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றால் "ப்ளேம்" பண்ண மாமியார், நாத்தனார், ஓரகத்தினு பலர் இருப்பாங்க. அது ஒரு வகையில் கணவன் மனைவி உறவை உடைக்காமல் இருக்க உதவியது, ஏன் பலப்படுத்தியதுனுகூட சொல்லலாம். இப்போ என்னனா கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்க வேண்டியதுதான். ப்ளேம் பண்ண வேற ஆள் கிடையாது. அதனால் இவர்கள் உறவு எளிதில் உடைகிறது. விவாகரத்துனு வந்து நிற்கிறது. /

      பேசி தீர்த்து கொள்ள சில உறவுகள் நம்மை சுற்றி இருந்தால் எந்த குறைகளும், பிரச்சனை என்ற ஒன்றை சந்திக்காமல் விலகிப் போகும். நீங்கள் சொல்வது போல் கணவன் மளைவி ஒருவரையொருவர் அவர்தம் குறைகளைப்பற்றியே பேசினால், அவர்களின் உறவு கூட உடையும் சிக்கல் வந்து சேரும். எளிதான முறையில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
      சகோதரர் ஸ்ரீராம் ஆமோதித்து இருப்பதும் சரிதான். அவருக்கும் நன்றிகள்.

      எனக்கும் அந்த படிக்காத மேதை படம் மிகவும் பிடிக்கும். கூட்டு குடும்பங்களின் மேன்மையையும், அவை உடைபட்டு போகும் போது ஏற்படும் இழப்புகளையும் உணர்த்திய படம்.

      தங்களது விரிவாக அலசிய கருத்துரைகளுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் உண்மையான பெரியவர்களாகப் பெருந்தன்மையுடன் இருந்தாலே அதில் நிம்மதி கிடைக்கும். இல்லை எனில் ஒருவரே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே தலைமை தாங்கும் பெரியோர் திடமாக உறுதியாக எல்லா முடிவுகளையும் பாரபட்சமில்லாமல் எடுக்கும்படி இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் உண்மையான பெரியவர்களாகப் பெருந்தன்மையுடன் இருந்தாலே அதில் நிம்மதி கிடைக்கும். இல்லை எனில் ஒருவரே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே தலைமை தாங்கும் பெரியோர் திடமாக உறுதியாக எல்லா முடிவுகளையும் பாரபட்சமில்லாமல் எடுக்கும்படி இருக்க வேண்டும்./

      உண்மை. அழகாக விபரமாக கூறியுள்ளீர்கள். தலைமை சரியில்லையேல் கூட்டுக் குடும்பங்களுக்குள் ஒருவருக்கொருவர் அனாவசியமாக பேசி, வீண் சந்தேகங்களை வளர்த்தி, பிரச்சனைகளை பெரிதாக்கி, பின் தனிக்குடித்தனம் என்ற யோசனையில் கொண்டு விட்டு விடும். ஆகவே கூட்டுக் குடும்பத்தின் அஸ்திவாரம் அதனை தலைமை தாங்கி நடத்தி செல்லும் பெரியவர்கள் (அது ஆணாயினும்சரி சரி, பெண்னாயினும் சரி) கையில்தான் உள்ளது. சின்னவர்களும் சரி அவர்கள் நம் நல்லதுக்குதான் சொல்கிறார்கள். நாம் அதன் படி கேட்டு நடப்போம் என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் மொத்ததில் குடும்பங்கள் சிறக்கும்.

      தங்கள் அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. உங்கள் பதிவின் கடைசிப் பத்தி. நானும் நினைப்பேன். ஆனால் எங்க வீட்டில் நானே சொன்னால் தான் உண்டு! :)))) எல்லோரையும் பத்தித் தெரியும்னாலும் கணினியில் தெரிவிக்கும்படி யாருக்கும் அதில் பழக்கம் இல்லை. குழந்தைகள் எங்கோ இருக்காங்க! அவங்களுக்கே யார் தெரிவிப்பது என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கும்! :)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /உங்கள் பதிவின் கடைசிப் பத்தி. நானும் நினைப்பேன். ஆனால் எங்க வீட்டில் நானே சொன்னால் தான் உண்டு! :)))) எல்லோரையும் பத்தித் தெரியும்னாலும் கணினியில் தெரிவிக்கும்படி யாருக்கும் அதில் பழக்கம் இல்லை. குழந்தைகள் எங்கோ இருக்காங்க! அவங்களுக்கே யார் தெரிவிப்பது என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கும்! :)))))/

      உங்களுக்கும் இதே சிந்தனையா? ஆனாலும் உங்கள நகைச்சுவையை ரசித்தேன். சகோதரர் ஏகாந்தன் அவர்கள சொன்னது போல், "எல்லா மனங்களும் ஒன்றுதானோ.. அல்லது ஒரு கண்காணா மெல்லிழை எல்லாவற்றையும் இணைத்து நகர்கிறதோ..?" என்ற அவரின் வார்த்தைகள் உண்மைதானோ? அவர் எழுதிய அந்த வரிகளையும் மிகவும் ரசித்தேன்.

      அனைத்துமே ஆண்டவன் செயல்.. நாம் ஏதோ மனம் விட்டு பேசிக்கொள்கிறோம். நம்மிடம் பேசாமலே முடிவு எடுப்பவன் அவன் அல்லவா? அனைத்தும் நலமேயாக பிராத்திக்கிறேன்.
      தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கூட்டுக் குடும்பத்தைப் பெருமைப்படுத்தி இருக்கின்றீர்கள்...

    என் தந்தையின் இளமை கூட்டுக் குடும்பத்தில்..

    வேலை கல்யாணம் பிற ஊர்களில் வேலை என்றானதும்
    திரும்ப யாரும் ஒன்று சேரவே இல்லை..

    ஆனாலும் நான் தம்பி தங்கைகளுடன் வளர்ந்தேன்..
    என் பிள்ளைகளுக்கு அம்மாதிரியான சூழல் அமையவில்லை...

    அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
    ஆடிடும் மானிடர் வாழ்விலே
    எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
    எங்கே முடியும் யாரறிவார்?..

    - என்பார் கவியரசர்...

    மற்றபடி - கடைசி பாராவின் கருத்துகளை நானும் மனதுள் பதிந்து வைத்திருக்கிறேன்..

    பிள்ளைகளிடம் சொன்னால் -
    மிகவும் கலவரப்பட்டு விடுவார்கள்...

    எல்லாம் எம்பெருமான் செயல்!...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் வாழ்ந்த கூட்டுக் குடும்பம் பற்றி கூறி அதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

      /அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
      ஆடிடும் மானிடர் வாழ்விலே
      எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
      எங்கே முடியும் யாரறிவார்?./
      அருமையான கருத்து மிகுந்த கவியரசரின்பாடல்.

      உண்மைதான். எது எப்போது எப்படி நடக்கும் என யாருக்குத்தான் தெரியும்.
      ஆட்டுபவனின் கை பொம்மையாக நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

      /மற்றபடி - கடைசி பாராவின் கருத்துகளை நானும் மனதுள் பதிந்து வைத்திருக்கிறேன்..

      பிள்ளைகளிடம் சொன்னால் -
      மிகவும் கலவரப்பட்டு விடுவார்கள்...

      எல்லாம் எம்பெருமான் செயல்!/

      தங்கள் மனதிலும் இப்படி ஒரு சின்னையா? என்ன ஒரு ஒற்றுமை...ஆனால் குழந்தைகள் கலங்கித்தான் போவார்கள்.. ஏதோ என் மனதில் உதித்ததையும் சேர்த்து எழுதி விட்டேன். எதுவுமே நம் கையில் இல்லை. ஆண்டவன் நினைப்பதை தடுப்பதென்பதும் நம் வசமில்லை.

      தங்கள் வளமான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. சிந்தனையா? என்று வருவதற்கு பதில் வார்த்தைப் பிழை வந்து விட்டது. வருந்துகிறேன்.

      Delete
    3. தங்களன்பிற்கு மிக்க நன்றி...

      வாழ்க நலம்...

      Delete
  18. கூட்டுக் குடும்பம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தங்களின் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
      தங்களது கருத்துக்கள் என் எழுத்தை மென்மேலும் செம்மையாக்கும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. கூட்டுக் குடும்பம் இப்போது குறைந்து விட்டது....

    அழகாக சொல்லி இருக்கீங்க...கமலா...

    மீண்டும் இப்போது தான் வந்தேன்.....அன்று முயன்று திரும்பிவிட்டேன்.
    இன்று கருத்து வெளியிட முடிகிறது....

    நன்றி

    ReplyDelete
  20. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    அன்று என் தளம் வந்து கருத்தளிக்க இயலாமல் போனாலும். இன்று மீண்டும் எனக்காக வந்து நல்லதொரு கருத்தினை சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  21. நீங்கள் எபி பற்றி சொல்லியிருப்பது அப்படியே உண்மை!!! அருமை சகோதரி. எல்லோருக்கும் அதே ஃபீல் ...என் மகனிடமும் சொல்வதுண்டு....எபியிலும் ஸ்ரீராம் இதைச் சொல்லியிருந்தாரே!!! ஹைஃபைவ் சகோ!!! நீங்கள் என்னைவிட பெரியவர் என்றே தோன்றுகிறது 1976 கல்லூரி சமயம் என்றால்...எனவே இனி நீங்கள் எனக்கு கமலாக்கா....ஓகேயா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      எனக்கு முன்னையே எ. பியை பற்றி அனைவரும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தது அறிந்ததே சகோதரி. நானும் என பங்குக்கு என மனதில் பட்டதை சொன்னேன். ஆக அனைவரும் ஒரே கருத்தைத்தான் கருத்தைத்தான் ஆமோதித்திருக்கிறோம். அதற்கு ஒரு ஹைஃபைவ் சகோ. 1976 கல்லூரி சமயம்.. யாருக்கு? என்னை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு ஓ.கே த்தான். ஆனால்,
      எனக்கு எப்படியும் நீங்கள் சகோதரிதான் ஒ. கேவா?அதில் ஆட்சேபனை ஏதுமில்லையே? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete