Pages

Thursday, October 31, 2024

இருள் களையும் விழா. .

 


                            தீப ஒளித்திருநாள்

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம்  எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும்,  சத்திய வழியில் தவறாது செல்லவும்,  ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும்  வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள்  அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு  கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத  வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது. 

மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து  ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு  மாறினாலும் என்  மனதை விட்டு நீங்காத கதை. 

அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள். 

32 comments:

  1. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர் கேட்டு பண்டிகை அன்று செய்த பண்டங்களை அக்கம் பக்கம் , உறவினர்கள், இல்லாதவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வோம்.

    கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வரும் எனக்கும். இந்த கதையை நானும் பகிர்ந்து இருக்கிறேன். ஏழ்மை நிலையிலும் அந்த தாய் எங்கிருந்தோ வந்த சிறுவனுக்கு தன்னால் முடிந்ததை கொடுத்து மகிழும் தாய் , பணக்கார வீட்டு பையன் ''என்னிடம் சில்க் சட்டை இருக்கு உனக்கு இருக்கா" என்று கேட்கும் போது "எங்க வீட்டுக்கு ராஜா வந்து இருக்கிறார் உங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறாரா" ஏழை வீட்டு பையன் பெருமிதமாக கேட்பது காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.

    உங்கள் தீபாவளி பதிவு அருமை.

    நல்ல குணங்களின் ஒளியை ஏற்றி மனதில் உள்ள இருள் பகுதியை வெளியே விரட்ட சொன்னது அருமை.

    //இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏.//

    ஆமாம், பிராத்தனை செய்து கொள்வோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. தாங்கள் பதிவை ரசித்து படித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்திற்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

    வாழ்க பல்லாண்டு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இறைவன் அருள் புரிய வேண்டுமென இந்நன்னாளில் வேண்டிக் கொள்வோம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவரும் நலமாக வாழ இந்நன்னாளில் பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. எபியில்வந்ததன் மீள் பதிவா? தீபாவனி சிந்தனை சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. மகனின் தலைதீபாவளிக்கு ஊருக்கெல்லாம் போய் நலமுடன் திரும்பி வந்தாகி விட்டீர்களா?

      ஆம். இது எபியில் வந்ததுதான். எந்த வருடம் என நினைவில்லை. பார்த்தால் தெரியும். தங்களது நேரங்களின் பிஸியில் இங்கும் வந்து தந்த அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நீங்கள் சொல்லியிருக்கும் கு அ கதை நான் படித்ததில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நீங்களும் இதுவரை இந்தக் கதை படித்ததில்லை என்றது ஆச்சரியந்தான்.!

      படித்துப் பாருங்கள். அவர் எழுத்தின் நடையும், கதையின் கருவும் மனதை தொடும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தீபாவளி குறித்த விளக்கங்கள் நன்று.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்துப் படித்து தந்த கருத்திற்கு மிக்க நன்றி.

      தங்களது தீபாவளி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிதான தீபாவளி வாழ்த்துகள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கு அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையை படித்த ஞாபகம் இல்லை. அழியா சுடர்களில் கதை உள்ளது.
    தீபாவளி பற்றிய கட்டுரை நன்று. கட்டுரை எழுதுவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை எனலாம்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இதுவரை இந்தக் கதையை தாங்கள் படித்ததில்லை என்றது ஆச்சரியம்தான்.! ஆம் அழியா சுடரில் இந்தக்கதை உள்ளது. எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த 100 கதைகளில் இதுவும் ஒன்றென அடிக்கடி படித்துள்ளேன்.

      கட்டுரை நன்றாக உள்ளதென சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கம் மிகுந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே. எல்லாம் உங்கள் அனைவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். தங்கள் ஊக்கங்கள்தான் எனக்கு எப்போதும் வேண்டும். நன்றி. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நீங்கள் குறிப்பிட்ட ராஜா வந்திருக்கிறார் கதையை வாசித்தேன். கதை எழுதிய காலம் வேறு. இக்காலத்திற்கு பொருந்தாத கதை. ஆகவே சிறப்பு என்று சொல்வதிற்கில்லை. ஆனால் மனதில் படியும்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உடனே கதையை படித்து கருத்தை தந்ததில் மகிழ்ச்சியடைந்தேன். ஆம்.. கதை எழுதிய காலம் வேறுதான். ஆனால், அதில் வரும் ஏழ்மை தாயும், அந்த தாய்க்குள் இருக்கும், நல்ல சிந்தனைகளும் மனதை தொடும்படியாக இருப்பது எக்காலத்திற்கு பொருந்தும் அல்லவா?

      தாங்கள் சொல்வது போல் மனதில் படியும். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நேற்று குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டதால் உங்கள் அனைவருக்கும் தாமதமாக பதில் கருத்து அளிக்கிறேன். மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. தீபாவளியைக் குறித்த தங்களது விளக்க கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது.

    இனாறைய தலைமுறைகள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


    தாமதமான தீபாவளி வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

    பதிவை ரசித்து படித்து தந்த நல்லதொரு கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே.

    தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.

    நானும் தங்களுக்கு தாமதமாகத்தான் வாழ்த்துக்களை தந்து, பதில் கருத்துக்களும் தாமதமாகவே தருகிறேன். மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கமலாக்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்களது அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கும் என் மனம் மகிழ்வான நன்றி சகோதரி. தங்களுக்கும் என் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி முடிந்து சஷ்டி விரதம் வந்தாகி விட்டது. நீங்கள் வருடந்தோறும் விரதம் இருந்து சஷ்டியை கொண்டாடுகிறீர்களா? உங்களின் இந்த மன உறுதிக்கு இறைவன் என்றும் துணையாக இருப்பார். நாளை மறுநாளாகிய சஷ்டிக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரரி. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. நீங்கள் தீபாவளியில் ஆரம்பிச்சு கார்த்திகை தீபம் வரை சுட்டி விளக்கு ஏற்றி வைக்கும் வழக்கம் உண்டென எழுதியிருக்கிறீங்கள், புதுமையாக இருக்கெனக்கு. கார்த்திகை தீபம் ஊரில் வாழை வெட்டி அதனை நட்டு பந்தம் கொழுத்திக் கொழுத்தி அப்பா தருவார் நாங்கள் ஓடி ஓடி வளவெல்லாம் ஊன்றி வருவோம் அது நினைவு வந்தது.

    இங்கும் கார்த்திகை தீபத்தன்று சுட்டி விளக்குகள் ஏற்றுவேன். ஆனா சமீப காலமாக 3,4 வருடங்கள் ஏற்றுவதில்லை. காரணம்.
    நம் நாட்டுத் தமிழ்க் குடும்பம், இளம் தம்பதிகள் புதிதாக வீடு வாங்கினார்கள், இரு குழந்தைகள், இரண்டாவது குழந்தை டெலிவரிக்கும் வீடு குடிபுகுதலுக்கும் என பெண்ணின் தாயை ஊரிலிருந்து அழைத்திருக்கிறார்கள்[நாம் எந்த டெலிவரியானாலும் நம் நாட்டில் எங்கள் அம்மாவைத்தான் கூப்பிடுவோம்:).]

    டெலிவரி முடிஞ்சு சில மாதங்களில் தாய் ஊருக்கு திரும்ப உடுப்புக்கள் அடுக்கியிருக்கிறா மகளும் சேர்ந்து ஹெல்ப் பண்ணியிருக்குறா, நாளை பயணம் இன்று கார்த்திகை விளக்கீடு, புது வீடெல்லோ அப்போ ஆசையில் மாடிப்படியெல்லாம் சுட்டி விளக்கேத்தியிருக்கிறார்கள். [இங்கு வீட்டின் வெளியே எதுவும் விளக்கேத்த முடியாதெல்லோ]...

    சுட்டியை ஏத்தி விட்டு அறையில் மும்முரமாக பாக் அடுக்கும் வேலையில் இருந்தபோது, மாடிப்படி கார்பெட்டால், சுட்டி நெருப்பு கார்பெட்டில் பிடிச்சு எரியத்தொடங்கிவிட்டதாம், அறையிலிருந்து படியால இறங்கி ஓடிவர முடியவில்லை...

    கணவர் அப்போ வேலையில் இருந்தாராம், மனைவி போன் அடிச்சு கத்தியிருக்கிறா வீடு எரிகிறது காப்பாத்துங்கோ என.. அப்படியே தொடர்பு துண்டிச்சு, வீடும் எரிந்து குழந்தைகள் மனைவி மனைவியின் தாய் எல்லோரும் போய் விட்டனராம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன மாதிரியான விதி இது? கவனம் இல்லாமல் இருந்த இருவரையும் கோபிக்கத் தோன்றுகிறது. குத்துவிளக்கு ஏற்றியிருந்தால் அதன் அருகில் சரசரவென உடையுடன் செல்லக்கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் நெருப்பு, பட்டாசு, தண்ணீர் இந்த மூன்றிலும் நிறைந்த கவனம் வேண்டும், அத்துடன் காஸ்சிலிண்டர், அடுப்பு ஆகியவையின் மேலும். சிறிய தவறு, குடும்பத்தையே சிதிலமாக்கிவிட்டதே... (இது போல பிறந்த நாள் கொண்டாட்டம், அதில் அடிபட்ட இன்னொரு வீட்டுக் குழந்தை, வழக்கில் சொத்தெல்லாம் போனது.. என்ற சம்பவத்தை மகளிடம் சொல்லியிருக்கிறேன். இதையும் சொல்லணும். இரண்டு நாட்களுக்குமுன் ஸ்காட்டுக்கு அவங்க டிரைவ் பண்ணி வந்திருந்தார்கள், பிறந்த நாளைக் கொண்டாட)

      Delete
    2. ஆஅவ்வ்வ்வ் அப்படியா நெ தமிழன், ஸ்கொட்லாண்ட் எப்படி இருந்ததெனக் கேட்டுச் சொல்லுங்கோ..

      உண்மைதான் எப்பவும் கெயாலெஸ் ஆக இருந்திடவே கூடாது, இல்லை நாம் கொஞ்சம் மறதிக்காரர் எனில், இப்படியான வேலைகளில் இறங்கிடக் கூடாது.

      ஆனா அனைத்தையும் தாண்டி விதி என்ற ஒன்றிருக்கெல்லோ, அது நாம் எப்படிக் கவனமாக இருந்தாலும் நம் கண்ணை கட்டிப்போட்டு வென்றுவிடும், அதனாலதான் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ.. கும்பிடுகிறோம் விரதமிருக்கிறோம்...

      Delete
    3. வணக்கம் சகோதரி.

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நீங்கள் கூறிய உண்மை கதை மனதை மிகவும் வருத்தியது. எத்தனை கொடியதாக விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடி உள்ளது. அந்த நேரத்தில் அக்கம்பக்கம் எவருமே உதவிக்கு வரவில்லையா? கொடுமையான சம்பவம். அந்த கணவர் வந்த பின் நடந்ததை அறிந்து அந்த துயரத்தை எப்படித்தான் தாங்கினார்? நினைக்கவே நெஞ்சு பதறுகிறது.

      எங்கள் வழக்கம் அம்மா வீட்டிலிருந்து, தீபாவளி அமாவாசை அன்று முதல் கார்த்திகை மாதம் இறுதி நாள் வரை மாலையில் இரு அகல் விளக்குகளில் வாசற்படியோரத்தில் வைப்பது இன்றும் தொடர்கிறது. அம்மா வீட்டில் கல் படிகள்தாம். பெரிய மண் வாசல். வீட்டு வாசலில் கோவிலுக்காக நீங்கள் கூறியபடி சொக்கப்பானை திருவிழாவும் உண்டு. இன்றும் அம்மா வீட்டில் தவறாது செய்கிறார்கள்.

      அதன் பின் நாங்கள் (திருமணமான பின்) வசித்த வீடுகளிலும் கதவை திறந்தவுடன் இறங்கிச் செல்லும் படிகள்தாம். இருப்பினும் வாசல் நிலைப்படி யோரங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்கேற்றி விடுவேன்.கார்த்திகை தீபத்தன்று பெரிய விளக்குகள் அகல் விளக்குகளோடு
      இடம் பெறும்.

      மார்கழி முழுக்க காலையில் கோலம் போட்டதும் ஒரு மாதம் தொடர்ந்து ஏற்றுவார்கள். எப்படியோ இன்று வரை அது போலவே ஏற்றி வருகிறேன். இந்த வருடம் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஏற்ற வேண்டுமென நினைத்துள்ளேன். மருமகள்கள் வீட்டிலும் இதுபோல் பழக்கமில்லை எனக் கூறுவார்கள்.

      குழந்தைகளை வைத்துக் கொண்டு தீபங்கள் ஏற்றுவது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால், அதை மீறி விதியின் செயல் உங்கள் கருத்தைப் படிக்கையில் மனது விட்டுப் போயிற்று. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரர், மற்றும் அதிரா சகோதரி

      தங்கள் இருவரின் மீள் வருகைக்கும், மனம் திறந்த கருத்துகளுக்கும் நன்றி.

      அதிரா சகோதரி.. நேற்று இரவு படுக்கப் போகும் முன் தங்கள் கருத்தை படித்ததும் கலங்கி விட்டேன். படித்தவுடன் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் உடன் பதில் தர இயலவில்லை. விதியின் விளையாட்டுகள் ஒவ்வொருவரையும் எப்படி புரட்டிப் போடுகிறது. இது போன்ற விதியின் கைகளில் சிக்கிய அனுபவங்களால் பாதிக்கப்பட்ட பின் எதிலும் பயம் வருகிறது. இறைவன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      அதனால்தான் இப்போது கண்கவர் மின்சார விளக்குகளை (சீரிங்செட்) எல்லோர் வீட்டிலும், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வாங்கி வீட்டை அலங்கரிக்கிறாரகள். அதில் ஆபத்து இல்லை என்கிறார்கள். தீபாவளிக்கு என்றில்லாமல் பிறந்த நாள், மற்றைய விஷேடங்கள் என வீட்டையே ஜகத் ஜோதியாக ஆக்குகிறார்கள். .விதவிதமாக அவையும், புதிது புதிதான டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கடவுள் நம்பிக்கை, நம் பரம்பரைப் பழக்கம் எல்லாம் வேண்டும்தான், ஆனா பயமாகத்தான் இருக்குது.

    நானும் இங்கு நவராத்திரி தொடங்கி இப்போ வெள்ளிக்கிழமை வரவிருக்கும் பாரணை வரை காலையில் குளிச்சு விளக்கு சுவாமிக்கு ஏற்றினால் மாலையில்தான் அணைப்பது வழக்கம், மனதில ஒரு பயம் இருக்கும் ஆனாலௌம் மனசு கேட்பதில்லை அணைக்க...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கடவுள் நம்பிக்கை, நம் பரம்பரைப் பழக்கம் எல்லாம் வேண்டும்தான், ஆனா பயமாகத்தான் இருக்குது./

      கடவுள் நம்பிக்கைதான் நாம் செய்யும் சம்பிரதாயங்களுக்கு ஒரு காரணம். சிறு வயது முதல் பழக்கமானவைகளை எதற்காகவும் விட்டுத்தர இயலவில்லை. ஜாக்கிரதை உணர்வும் அவசியம். அதன் பின் நடப்பது இறைவன் செயலன்றோ..!

      /நானும் இங்கு நவராத்திரி தொடங்கி இப்போ வெள்ளிக்கிழமை வரவிருக்கும் பாரணை வரை காலையில் குளிச்சு விளக்கு சுவாமிக்கு ஏற்றினால் மாலையில்தான் அணைப்பது வழக்கம், மனதில ஒரு பயம் இருக்கும் ஆனாலௌம் மனசு கேட்பதில்லை அணைக்க.../

      நல்ல செயல். நானும் முக்கியமான விஷேட நாட்களில் இந்த மாதிரி வாடா விளக்கு என்று காலை முதல் இரவு வரை விளக்கு எரிய வேண்டுமென அவ்விதம் ஏற்றுவேன். இரவு படுக்கப் போகும் முன் மலரால் அமர்த்தி விட்டு படுப்பேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இன்னுமொன்று சொல்லோணும், நான் எப்போ எங்கு வந்து படிச்சாலும் கொமெண்ட் போட்டு விடுவேன், கொமெண்ட் போடாவில்லை எனில் அதனைப் படிக்கவில்லை என அர்த்தம், அப்படிக் கொமெண்ட் போட்டிருந்தால் அதற்கு வரும் பதில்களைப் படிக்கத் தவறுவதில்லை... அதனால மீண்டும் அதிராவைக் காணவில்லையே, கொடுத்த பதில்கள் படிக்கவில்லையோ என எப்பவும் கவலைப் பட்டிட வேண்டாம்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்களைப்பற்றி அறிவேன் சகோதரி. மேலும், உங்கள் பழக்கங்களை கருத்தில் விவரித்தமைக்கு மிக்க நன்றி.

      தாங்கள் எப்போதுமே பதிவுகளை ஆழ்ந்து படித்து விட்டு நல்லதொரு கருத்துக்களை முன் வைப்பீர்கள். மேலும் பதிவுக்கு வரும் கருத்துரைகளுக்கு உடனுக்குடன் உடனடியாக பதில் தராவிடினும்,, மறுளுக்குள்ளாவது பதில் கருத்து தந்து விட வேண்டுமென்பதை உங்களிடமிருந்துதான் கற்று கொண்டேன். .நம் பதிவுலக நட்புகள் போல உடனுக்குடன் பதில் தர என்னாலும் இயலவில்லை. ஏதேதோ வேலைகள் வந்து கைப்பேசியை எடுக்க விடாமல் குறுக்கிட்டு விடுகின்றன. மன்னிக்கவும்.

      அது சிறந்த வழிமுறை.. நம் பதிவுலக நட்புகள் அப்படித்தான் பதில்கள் தருகிறார்கள். அவர்களை இச்சமயம் வணங்கிக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. தீபாவளி விளக்கங்கள் நல்லாருக்கு கமலாக்கா. தீபாவளி எல்லாம் முடிந்த பிறகு வருகிறேன். அன்றெல்லாம் நான் வரவில்லை வலைப்பக்கம். தீபாவளிக் கொண்டாட்டம் என்று எதுவும் நம் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை சும்மா பிரார்த்தனைதான். வேறு எதுவும் இல்லை ஆரோக்கியம் முக்கியமாச்சே!!..ஹிஹிஹி

    எபியில் வந்த பதிவு என்பதும் நோட்டட்!! நான் அங்கு பார்க்கலையோ இல்லைனா எனக்குப் பெரும்பாலும் நினைவிருக்குமே!

    //கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" //

    வாசித்திருக்கிறேன். இணையத்தில்தான். ஆனால் இப்போதைய காலகட்டத்திற்குப் பொருந்திப் போகாது என்றாலும் எழுத்தை ரசிக்கலாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கு என் மகிழ்வான நன்றி சகோதரி. பதிவு என்றுமேஇங்கிருக்கும் போது எப்போதும் வேண்டுமானாலும் வரலாம். வாழ்த்துகளை பரிமாற்றமும் செய்து கொள்ளலாம். தப்பில்லை..

      அன்று தங்கள் மகனுக்கு தலை தீபாவளியென அறிந்தேன். ஒரு வேளை ஊரிலிருந்து அவர்களின் வருகையாக இருக்கும்.. அதனால்தான் தாங்கள் பிஸியாக இருக்கிறீர்கள் எனவும் நினைத்தேன். எபியிலும் உங்கள் மகன், மருமகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தேன். இப்போது வந்து பதிவை படித்தமைக்கு நன்றி சகோதரி.

      ராஜா வந்திருக்கிறார் கதை தாங்களும் படித்துள்ளீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சியடைகிறேன். கதைகள் காலங்களுக்கு ஏற்ப மாறும் இயல்புடையதுதானே..! ஆனால், அவரின்( கதாசியரின்) எழுத்து நடை என்னை கவர்கிறது. அதில் வரும் தாயின் கருணை உள்ளம் பிடித்துப் போனது. வேறு ஒன்றுமில்லை.பழைய பதிவு தானே என நினையாமல் தாங்கள் வந்து தந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete