Pages

Tuesday, October 4, 2022

இனிய பாடல்

 வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா..

அனைவருக்கும், இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இந்த இனிய பாடல்கள் நம் வேண்டுதலுக்கு துணையாக இருக்கட்டும். நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவிற்கு தன் இனிய குரலால் உருக்கும் பி. சுசீலா அவர்களின் இனிய கானம் கேட்க கேட்க திகட்டாத தேன். அள்ள அள்ள குறையாத ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருளுடன், எனக்குப் பிடித்தமான இந்த பாடல்களையும் கேட்டு மகிழ்வோம். 




          பாடல்கள் பகிர்வு கூகுள். நன்றி. 

இனிய இப்பாடல்களை கேட்டு
மகிழ்ந்தற்கு மிக்க நன்றிகள். 🙏. 

20 comments:

  1. இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் சகோ.
    இரண்டும் அருமையான பாடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்து தங்கள் கருத்தை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      பாடல்களை கேட்டு ரசித்தமைக்கும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி. தங்களுக்கும் என் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்... நல்ல கருத்துள்ள பக்திப்பாடல்கள். கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சரஸ்வதி பூஜை , வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
    இரண்டு பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள்.
    சரஸ்வதி பூஜை சமயம் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் பாடல்.

    கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      ஆம்.. பி. சுசீலா அவர்களின் அம்மன் பாடல்கள் அனைத்துமே நவராத்திரிக்கு உகந்ததான பாடல்கள். அதிலும் கலைவாணியின் மேல் பாடியிருக்கும் சில பாடல்கள் எப்போதுமே மனதை கவர்பவை.

      நீங்கள் சொல்வது போல் இவை எங்கும் ஒலிக்கும் பாடல்கள். நீங்கள் இங்கும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி.

      தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இரண்டாவது பாடலில் கூத்தனூர் சரஸ்வதி கோவில் காட்டுகிறார்கள். நாங்கள் அந்த கோவிலுக்கு போய் இருக்கிறோம் அடிக்கடி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். சரஸ்வதி எப்போதும் அருள் பாலித்தபடி கொலுவிருக்கும் கோவில். குழந்தைகளை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க விஜயதசமியன்று இங்கு அழைத்துச்சென்று பால பாடம் கற்பித்து வழிபட வைப்பார்கள் எனவும் கேள்விபட்டுள்ளேன். இக் கோவிலுக்கு நான் இதுவரை சென்றதில்லை. தொலைக் காட்சிகளில் இக் கோவிலைப் பார்த்துள்ளேன்.

      தாங்கள் இங்கு அடிக்கடி சென்று வந்திருப்பது படித்து மிக்க மகிழ்வடைந்தேன். இன்று விஜய தசமி வேலைகளில் உங்கள் அனைவருக்குமே தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும்.

      தங்களுக்கும் அன்பான விஜயதசமி வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வணக்கம் சகோ !

    அனைவருக்கும் இனிய
    இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்!
    பாடல்கள் அருமை
    நாமளும் நம்ம கணனிக்கும் கைப்பேசிக்கும் ஆயுத பூஜையைப் போட்டிட வேண்டியதுதான் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் இப்பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.

      உங்களுக்கும் சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

      ஆம். தங்கள் கருத்து. சரிதான்.. நாமும் நமக்கு அன்புடன் கூடிய நல்லதொரு இணைய நட்புறவுகளை பெற்றுத் தந்து நம் எழுத்தார்வத்திற்கு உறுதுணையாக இருக்கும் கணினிக்கும், கைப்பேசிக்கும் இந்நன்னாளில் பூஜைகள் செய்வோம். அன்பான கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனிய பாடல்கள் இரண்டினை இன்று எங்களுக்காக வழங்கி இருப்பதற்கு நன்றி.  விஜயதசமி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமாக உள்ளீர்களா? தாங்களும் இங்கு பதிந்த இனிமையான பாடல்களை கேட்டு ரசித்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி. தங்களுக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள். தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இனிய விஜயதசமி வாழ்த்துக்கள். பாடல்கள் கேட்க, பள்ளியில் படித்த காலங்கள் நினைவுக்கு வருது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

      ஆம்.. இவை எப்போதும் பழமை காலம் தொட்டே நாம் கேட்டு ரசிக்கும் பாடல்கள். இப்போது இங்கு மறுபடியும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!..

    இன்றைய பாடல்கள்
    இரண்டும் மிகவும் இனிமையான பாடல்கள்.

    சரஸ்வதி பூஜையினை இனிமையாக்கும் பாடல்கள்..

    பதிவில் வைத்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.

      ஆம்.. பூஜையினை இனிமையாக்கும் பாடல்கள். பாடல்கள் நன்றாக உள்ளதென ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வாழ்த்துகளும் பாராட்டுகளும் தாமதமாக.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமாக உள்ளீர்களா? தங்கள் வரவு மகிழ்வைத் தருகிறது. தாமதமெல்லாம் ஒன்றுமில்லை... நமக்குள் வாழ்த்தையும், பாராட்டுகளையும் எப்போது வேண்டுமானாலும் தந்து பெற்றுக் கொள்ளலாம். தங்கள் உடல் நிலை பூரணமாக குணமாகி தாங்கள் பழையபடி பதிவுகளுக்கு வந்தாலே மகிழ்ச்சிதான். இப்போது எப்படி இருக்கிறீர்கள். ? தாங்கள் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா நேற்றே பாடல்கள் கேட்டுவிட்டேன்....இது வரை கேட்டிராத பாடல்கள். நன்றாக இருக்கின்றன.

    அக்கா நலம்தானே....நானும் இணையம் பக்கம் நேற்றுதான் வந்தேன்...ரொம்ப வேலைப் பளு. மனமும் ஒரு நிலையில் இல்லை. நேற்று மதியம் 2 மணிக்கு மேல் மாலை 6 மணி வரை ஏர்டெல் நெட்வொர்க் முழுவதும் போய்விட்டது அழைப்புகள் வரவில்லை, கூப்பிடவும் இயலவில்லை.....6 மணிக்கும் மேல் சரியானாலும் நெட்வொர்க் சரியாக இல்லை. கருத்தும் போகவில்லை இதோ இப்போதுதான் நன்றாக இயங்குகிறது.

    தாமதமான வாழ்த்துகள் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் நலமா? நான் நலமாகத்தான் உள்ளேன். உங்களுக்கு வேலை பளு என்று அறிவேன். அதனால்தான் எவரின் பதிவுகளுக்கும் வர இயலவில்லை என்பதையும் அவ்வப்போது எபியில் நம் நட்புகள் கூற தெரிந்து கொண்டேன்.

      தாமதமெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியும் வந்த நாளே நெட்வொர்க் இல்லாத இவ்வளவு சிரமத்திலும் தாங்கள் என் பதிவுக்கு வந்து பாடல்களை ரசித்து கேட்டு கருத்து சொல்லியிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. நீங்கள் இதுவரை இந்தப்பாடல்களை கேட்காதது ஆச்சரியம்தான்.! இப்போது கேட்டதற்கும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

      தங்கள் வேலைகள் சுலபமாக நடந்து முடிவதற்கும், மன உபாதைகள் நீங்கி, நலமுடன் இயல்பாக இருக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete