Pages

Saturday, October 22, 2022

சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி.

இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 

1. ஆம் பகுதி சுட்டி

2. ஆம் பகுதி சுட்டி

ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய  மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு  நீ  ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே...  மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு.  என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி  சோபாவில் சாய்வாக  அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக. 

"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன  சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள். 

ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால்  குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..! 

" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது. 

"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது. 

தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன்.  போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன். 

"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது. 

தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன்  பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது. 

திருமணமண்டபம்  கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும்  வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். 

"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக  தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம்  புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

"தம்பி. . .நீ நூறு வயது  உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள்,  "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள். 

"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக  அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக  நான் உனக்கு  என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து  வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.

தொடர்ந்து வரும். 

18 comments:

  1. எப்படியோ தம்பி விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொண்டது சிறப்பு.

    அக்காவுக்கு கொடுக்கப் போகும் பரிசு என்னவென்று அறிய தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      கதையை படித்ததும் தங்களின் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் தொடர்ந்து வந்து கதையை படிப்பதற்கும், நல்லதொரு கருத்துக்கும் மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி. தாங்கள் தொடர்ந்து வந்து கதையை படிப்பதாக கூறுவதற்கும் மனம் நிறைந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கதை அருமை. தம்பி என்ன பரிசு கொடுக்கபோகிறார் என்று தெரிந்து விட்டது. என் யூகம் சரிதானா என்று அடுத்த பகுதியில் தெரிந்து விடும்.
    இதற்கு முந்திய பதிவில் உண்மை காதல் இணையும் என்றேன். அடுத்த உண்மை காதலும் இணையும் தம்பி இணைத்து வைப்பார் என்று நினைக்கிறேன்.
    நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.
    எல்லோரும் சேர்ந்து தலைத்தீபாவளியை கொண்டாடி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை அருமையாக உள்ளதென கூறியதற்கு மிக்க மன மகிழ்வு அடைகிறேன்.

      கதையைப் பற்றிய தங்கள் கருத்தும், தங்களது ஊகமும் மன நிறைவை தருகிறது.

      /எல்லோரும் சேர்ந்து தலைத்தீபாவளியை கொண்டாடி இருக்கலாம்./

      அப்படித்தான் தீபாவளிக்கு முன் நிறைவு பகுதியோடு வெளியிட்டு விடலாமென நினைத்தேன். ஆனால் அந்த மொத்தப்பகுதியின் நீளம் கருதி மீண்டும் ஒரு தொடரும் இடையில் வந்து விட்டது.

      தாங்கள் தொடர்ந்து வந்து உற்சாகமாக கருத்துகள் தருவதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. //சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும் வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். //

    மனம் நன்றாக இருந்தால் உடல் மகிழ்ச்சிக்கு ஒத்துழைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மனம் நன்றாக இருந்தால் உடல் மகிழ்ச்சிக்கு ஒத்துழைக்கும்.

      ஆம். உண்மை. அதுதான் மனோபலம் என்போம். அதற்கு மனதின் பக்குவமும் உறுதுணையாக உடன் வர வேண்டும். அப்போது உடல் உபாதைகள் கூட தூசியாகத் தெரியும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. முதல் பகுதியைப் படித்துக் கொண்டு வந்து, திருமணத்துக்கு ஏன் சம்மதித்தாள் என்று யூகித்து வைத்திருக்கும் கற்பனை தம்பியின் வேண்டுகோளின் முறிந்து விழுகிறது. அப்போ இப்போ நான் நினைத்திருப்பதும் தப்பா? காத்திருந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      கதையை படித்து அதைப்பற்றி தங்களுக்குள் வரும் ஊகங்களை வெளிப்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காத்திருந்து படிக்கிறேன் என்றதற்கு மிக்க நன்றி சகோதரரே.கதையின் பகுதிகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு கருத்துக்கள் தருவதற்கும் மிக்க நன்றி. நான் தாமதமாக பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முதலில் திருமணத்துக்கு மறுத்தவள் பின் ஏன் சம்மதித்தாள்? இப்போது தம்பி கொடுக்கப் போகும் பரிசு எல்லாம் யூகம் செய்ய முடிகிறது. முடிவுக்குக் காத்திருக்கேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கதையைப் படித்து தாங்களும் தங்கள் மனதில் வந்த ஊகங்களை தெரிவித்து ரசிப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் எனக்கு மேலும் கதைகள் பல எழுத தூண்டுகோலாக உள்ளது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நான் தாமதமாக உங்கள் அனைவருக்கும் பதில் தருவதற்கு மன்னிக்கவும். கைப்பேசியை எடுக்கக்கூட நேரமில்லாமல். என்னவோ வேலைகள்.. இத்தனைக்கும் நடுவில் தினமும் எல்லோரின் பதிவுகளுக்கும் எப்படியோ வந்து விடுகிறேன். அது வரைக்கும் நல்லது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முதலில் மறுத்த சிவகாமி அம்மா எழுதி வைத்திருந்த, நடராஜன் எழுதியிருந்த கடிதத்தைப் படித்ததும் மனது மாறியிருக்கிறது என்று தெரிகிறது.

    சரி இப்ப தம்பி கொடுக்கப்போகும் பரிசு நடராஜனாகத்தான் இருக்கும் என்று மனம் ஊகிக்கிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆம்.. தாயின் கடிதத்தைப் பார்த்த பின்தான் சிவகாமியும் தன் மனதை மாற்றிக் கொண்டாள். கதையை படித்து தந்த கருத்துக்கள் என் மனதில் மகிழ்வை தருகிறது. தங்கள் ஊகத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கமலாக்க உங்க கதை எனக்குக் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது.....வசனங்கள்!!!!! அதாவது வசனங்கள் என்றால்....அதன் ஸ்டைல்....!!! அப்படியான எழுத்தாளர்களையும் நினைவுபடுத்துகிறது...!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /கமலாக்க உங்க கதை எனக்குக் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது/

      ஹா ஹா ஹா. நான் இன்னமும் கலர்புல்லாக ஜொலிக்க ஆரம்பிக்கவில்லையா?:))

      எனக்கு கறுப்பு வெள்ளை படங்களின் கதைகள் இன்றும் பிடிக்கும். குடும்ப கதைகளை விளம்பி படிப்பேன். அதன் தாக்கம் என் எழுத்திலும் பிரதி பலிக்கிறது. இப்போது வரும் படங்களில் எடுத்தவுடனே வன்முறை, வக்கிரங்கள் என உள்ளது. நான் பார்ப்பது அரிதுதான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையைரசித்துப்படித்துதொடர்ந்து கதைப் பகுதிகளுக்கு வந்து ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துக்கள் தருவதற்கு தங்களுக்கு மிக்க நன்றி. என் தாமத பதிலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எப்படியோ கல்யாணம் நல்லபடியாக நடந்தது..


    தம்பி விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொண்டது சிறப்பு.

    அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை தொடர்ந்து படித்து தரும் தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே.
      இனியும் தொடர்ந்து வந்து கதைக்கு நல்லதொரு கருத்துக்களை தாருங்கள்.

      தங்கள் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete