Pages

Saturday, July 3, 2021

தொடர் கதை.....

கதையின் 4 ம் பகுதி. 

 "அடாடா...சே... என்ன... இவன் இப்படியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்...? தெரிந்தவர்கள் குறை சொல்லும் போதெல்லாம் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு எடுத்து  கொடுத்து விட்டேன்...?  முகம் தெரியாத வேண்டாதவர்களுக்கா...? அவன் கூடப்  பிறந்த தங்கைக்கு, அவள் வாழ்க்கை  ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை வந்து விடாமலிருக்கவும், அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தையும் குறைக்கத்தானே கொடுத்தேன்... சொல்லபோனால் அவன் எப்பாடுபட்டாவது செய்ய வேண்டிய கடமையைதானே நான் செய்தேன்.... நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே....? " நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.

அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, "நான் எதுக்குப்பா...? நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள். நான் வரவில்லை... ." என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் தன்னை வைத்துக் கொண்டு ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது  அந்தக் கல்யாணத்தை பாதித்து விட்டால்... பாவம்.. . .!  அந்த பெண்....! என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் நண்பர் பாலுவுக்கு தெரியாது. இவரும் எதைப் பற்றியும் சொல்லாமல், வழக்கப்படி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி அடிக்கடி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயம் தந்த தயக்கத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் கூறவில்லை.

இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும் கொண்டு கொடுத்து விட்டு, "கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் மாமா" என்று ௬றி விட்டுச் சென்றாள்.

சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு, "சரி, சதா.... நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம் சொல்ல எனக்கு மட்டுமென்ன ஆசையா..? உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி,... நான் இன்னொன்றும் உன் நல்லதுக்காக மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ மறுபேச்சில்லாமல் சம்மதிக்காதே.... அவ்வளவுதான்..! என்னாலே சொல்ல முடியும். சரி...சரி.. நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ஓய்வு எடுத்துக்கோ... நா மறுபடியும் சாயங்காலம் வந்து பாக்கறேன்... " என்றபடி எழுந்தார்.

" சரி, போய்வா.. . "என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடை கொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக் கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன்...  "ஆமாப்பா... இது ஒரு நல்ல சான்ஸ்.. இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் இதைப் போல கிடைக்கவே கிடைக்காது. எப்படியாவது இந்த  பதவி உயர்வை  பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா  என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும். அதுக்காகவே நான் சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை,.. ..! இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே  கொஞ்ச மாதங்களாவது ஏதேனும் வாடகை வீடு பார்த்து செட்டிலாக வேண்டியதுதான்..... அங்கிருக்கும் என்  நண்பனிடம் சொல்லி அப்படி ஒரு நல்ல வீடு பார்க்க ஏற்பாடு  செய்ய சொல்லியிருக்கிறேன். " அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...

"சரி.... நீ சென்னைக்கு போய் சில மாதங்களாவது  செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்ததும் உன் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு செல்ல முடியுமா,? அப்போது இந்த வீடு இருந்தால், அவர்கள் இங்கு வந்து வசிக்க வசதியாக இருக்குமே... " என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, " இல்லை, இல்லை. .. வெளிநாட்டில் எப்படியும் சில வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டி வரும். அதனால் மனைவி, குழந்தையை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை..  அவரை கூடவே அழைத்து செல்லவும் முடியாது. அவர் உடம்புக்கும் அந்த ஊர் ஒத்துக்காது.  முடிந்தால் அவர் அங்கேயே தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.... " என்ற அவனின் அலட்சியமான பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொணடிருந்த போதுதான் அவர் நண்பர் பாலு அது பற்றி அவரிடம் விவாதித்தது  எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன் கடமை என்று உணராமல், சுயநலமாக மட்டும் திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.

தொடர்ந்து வரும்... 

33 comments:

  1. சென்னையிலும் இருக்க மாட்டாரா மகன்? வெளி நாடு செல்வது என்றால் அப்பா தன் சொந்த வீட்டில் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர் உதவியால் வாழ முடியும். பெரியவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்ப்போம் .

    //எப்படியாவது இந்த பதவி உயர்வை பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும்//

    இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது மகனுக்கு என்றால் அப்பாவே போய் வா என்று வாழ்த்தி தான் அனுப்புவார்.

    //ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.//

    இதையும் அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன்.



    முதியோர் இல்லங்களும் இப்போது பணம் படைத்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருகிறது. தங்கள் குழந்தைகள் வெளி நாட்டிலிருந்து வந்தால் தங்கும் அறைகளுடன் வசதியாக தங்கள் முதுமையை அனுபவித்து வாழும் இடமாக அமைத்துக் கொள்கிறார்கள் . தினம் மருத்துவ உதவி தேவை படுவோர்களுக்கு வசதி. அவர்களை கூட்டிப் போக ஆள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கு முதியோர் இல்லம் நல்லது. இப்போது ஓய்வு பெற்றவர்கள் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்கும் இடம் என்று ஆகி விட்டது. விளம்பரங்களில் அப்படித்தான் சொல்கிறார்கள். வயதாகி துணையோடு இருப்பவர்களும், துணையை இழந்து தனியாக இருப்பவர்களுக்கும். இப்போது பாதுகாப்பான இடம் என்று நினைக்கிறேன்.


    நடுத்தர குடும்பத்தினர்களுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கிறது.

    என்னை கேட்க போனால் பேச்சுத்துணை கிடைக்கும். சுயநலம் மிகுந்த மகனுக்கு முதியோர் இல்லம் சிறந்தது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தனியாக இருக்கப் பழகியவர்களுக்கு முதியோர் இல்லம் பிரச்சனையாகிவிடாது. ஆனாலும் எல்லா இடங்களிலும் மற்றவரை கடிந்து பேசாமல் (இல்லப் பணியாளர்கள்) எல்லோரிடமும் அன்பாக இருப்பது முக்கியம். இல்லாவிட்டால் எல்லா இடமும் நரகம்தான்.

      என்னதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாலும், அப்பா அம்மாவிற்கு கொஞ்சமாவது பணம் மாதாமாதம் கையில் கொடுக்கணும்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதலில் வந்து அருமையான கருத்துகள் தெரிவித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு என அன்பார்ந்த நன்றிகளும்.

      /இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது மகனுக்கு என்றால் அப்பாவே போய் வா என்று வாழ்த்தி தான் அனுப்புவார்/

      ஆமாம், ஆனால் இந்த விஷயம் பெரியவரிடம் அவன் சொன்னால்தானே...சென்னை வரைதான் கூறியுள்ளான். வெளிநாடு மாற்றலை சொன்னால் தந்தை தடுத்து விடுவாரோ என அதைச் சொல்லாமல் மறைத்துள்ளான். ஆனால் நீங்கள் சொன்னது போல் அவரிடம் கூறியிருந்தால் கதையே வேறு மாதிரி மாற்றியிருக்கலாம். உங்கள் ஊக்கத்தில் அப்படியும் வேறு மாதிரி கற்பனை வந்தால் ஆண்டவன் அருளால் வேறு எழுதப் பார்க்கிறேன்.

      /முதியோர் இல்லங்களும் இப்போது பணம் படைத்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருகிறது. தங்கள் குழந்தைகள் வெளி நாட்டிலிருந்து வந்தால் தங்கும் அறைகளுடன் வசதியாக தங்கள் முதுமையை அனுபவித்து வாழும் இடமாக அமைத்துக் கொள்கிறார்கள் /

      ஆமாம.. நீங்கள் சொல்வது போல் இப்போது நகரங்களில் முதியோர் இல்லத்தின் வசதிகள் பெருகி விட்டன. அப்போதைய தொடர்களிலே கூட இல்லத்தின் வசதிகளை சுட்டிக் காட்டி எடுத்தார்கள். இவர் கிராமம் போன்ற ஊரிலிருப்பவராக நான் கதையில் காட்டியுள்ளேன். சிறுகதை என்பதினால், இருக்கும் ஊர்கள், அவற்றின் வசதிகள் என எதையும் சொல்லாமல், அவரின் நிலை மட்டும் குறித்து எழுதியுள்ளேன். இந்த கதை ஏதோ என் மனதில் பட்டவையாக எழுதி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டன.

      நீங்கள் கதை சம்பந்தமாக எழுதிய கருத்துக்கும், முதியோர் இல்லத்தின் சிறப்பு, மற்றும் வசதிகளை சுட்டிக் காண்பித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வருகை தந்து கருத்துக்கள் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      நீங்கள் சொல்வதும் உண்மைதான். அங்கும் அக்கறையாக, பாசமாக கவனித்துக் கொள்ளும் ஆட்கள் சரிவர அமையவில்லையென்றால், இதுபோல் தனிமையாய் இருந்து பழக்கப்படாதவர்களின் நிலை அங்கு கொஞ்சம் பழகும் வரை கஸ்டந்தான். பிள்ளைகள் மாதந்தோறும் பணம் தந்தாலும், ஒருவரை விட்டு ஒருவர் இருக்கும் நிலையென்றால், ஒரு சமயத்தில் மனது வெறுத்துதான் போகும். நான் கூறுவது எல்லோருக்கும் அல்ல... முதுமையை, தனிமையை பொருட்படுத்தாது இருப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாமே மனம் உடல் சார்ந்ததுதான்...எப்படியோ காலங்கள் மாறித்தான் வருகிறது. நல்ல கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தொடருதா, முற்றுமா ன செக் பண்ணிடறேன்... நிச்சயம் படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கண்டிப்பாக கதையை முழுவதுமாக படிப்பீர்கள் எனத் தெரியும். நான் ஏதோ என் மனதில் தோன்றியவையாக எழுதி வருகிறேன். எல்லோருக்கும் எல்லாமுமே பிடித்துப் போகாது என்பது எனக்கும் தெரியும். இத்தனை வருடத்தில் அறிமுகமான இந்த வலை உறவுகளை என் உடன் பிறந்தவர்களாக நினைத்து என் அரைகுறை அறிவை வெளிப்படுத்தி காண்பிக்கிறேன். அதற்கும் நல்ல கருத்துக்கள் தந்து ஊக்கப்படுத்தும் நீங்களனைவருந்தான் என்னுடைய எழுத்துக்கலை சிற்பத்திற்கு சிற்பிகள். கதை முடிவுக்கு வந்ததும் படிக்கிறேன் என்றமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  3. நான் என்று தன்மையில்  சொல்வது யார்?  முன்னால் போய்ப் படிக்கணுமோ ..

    ஆனாலும் காசுக்குப் பின்னால் அலையும் மோசமான உலகம் இது..  பந்தங்களும் சொந்தங்களும் இவர்களுக்குப் பொருட்டில்லை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த "நான்" எங்கே திடீர்னு வந்தார்னு நானும் யோசித்தேன். :)

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வந்து கதையை படித்து தந்த கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.பந்தத்தையும். சொந்தத்தையும் விட பணத்தை விரும்புகிறவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள். இவர்களின் போலித்தனமான பாசம் பணம் கைமாறியதும் வெளிப்பட்டு விடும். "நான்"என்பதை முதல் பகுதியிலேயே குறிப்பிட்டிருந்தேனே ... தொடர்ந்து வந்து கதை பகுதிகளுக்கு கருத்துக்கள் அளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      "நான்" என்பது முதல் பகுதியிலேயே வந்திருக்கிறது. இடையிடையே இப்படி அவரும் வந்து பேச்சுக்களில் கலந்து கொள்வார் என்பதினால்தான் நான்-ஐ முதலிலேயே காண்பித்து விட்டேன். நிஜமாக "நான் அவளில்லை"..:) குழப்பி விட்டேனோ?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. எல்லா மகன்களும் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    பதிவை தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இது பெரும்பாலான வீடுகளில் அன்றிலிருந்து தொடரும் கதைதான். தெய்வாதீனமாக அமைந்து விடும் பாசம் மிகுந்த குடும்பங்களுக்கு என்றுமே பிரச்சனை இல்லை. பதிவை தொடர்ந்து வந்து படித்து நல்ல கருத்துக்களை தருவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வீட்டை விற்றாலும் பணம் முழுவதும் பாதுகாப்புக்காகவும், தன்னம்பிக்கைக்காவும் பெரியவரிடம் இருப்பதே சிறப்பு. தனக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படப்போகும் வெளிநாட்டு வாழ்வில் பெரியவரை இங்கே விட்டு விட்டு என்னதான் முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் அவர் கைகளில் பணம் இருக்க வேண்டும். அது தான் பாதுகாப்பு,கௌரவம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப் படித்து தங்கள் எண்ணங்களாக அருமையான கருத்துக்கள் தந்திருப்பது கண்டு மன மகிழ்ச்சி அடைந்தேன்.

      /என்னதான் முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் அவர் கைகளில் பணம் இருக்க வேண்டும். அது தான் பாதுகாப்பு,கௌரவம்./

      ஆமாம்.. அவர் கையில் பணம் இருந்தால், அவருக்கு நல்லதுதான்.. ஆனால் அவர் எதையும் விரும்பாதவராக மகனை சார்ந்தே இருக்க நினைக்கிறாரே.. இரண்டாவது மகனின் இந்த திட்டங்களைப்பற்றி அறியாதவராவும் இருக்கிறார். இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      தங்கள் ஊக்கமிகும் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. எனக்குத் தெரிந்த உறவினர், நண்பர்கள் கோவையின் முதியோர் இல்லங்களில் இருந்து விட்டுப் பிடிக்காமல் திரும்பி விட்டார்கள். அதில் ஒருவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுக் கடுமையாக அவதிப்பட்டு விரைவில் இறந்தும் விட்டார். ஆனாலும் நல்ல முதியோர் இல்லங்கள் இருப்பதாகவே சொல்கின்றனர். என்னவோ! இதை முழுசாக நம்பவும் முடியாது/நம்பாமல் இருக்கவும் முடியலை. ஏனெனில் எங்களுக்குமே முதியோர் இல்லம் போகலாமோ என்னும் எண்ணம் அவ்வப்போது வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களையெல்லாம் அங்க சேத்துக்க மாட்டாங்க. அதுக்கு அறுபது வயசாவது ஆயிருக்கணும் கீசா மேடம்.

      On a serious note, நீங்க முதியோர் இல்லம் சேருவதுன்னா பத்து நாள் அங்க தங்கி, மூணு வேளையும் சாப்பிட்டுப் பாருங்க. இப்போ பண்ணிக்கொள்ள தெம்பு இருந்தாலும், அவங்க சாப்பாட்டில்தான் இருக்கணைம்னு நினைவு வச்சுக்கோங்க (இன்னும் வயதாகும்போது)

      என்னடா இது தினமும் கோஸா, கத்தரிக்கூட்டுல புளி இல்லை, சாத்துமதுல புளியை கொதிக்க வைக்கலியே, இது என்ன முருங்கு உருளை கலந்த கறி என்றெல்லாம் யோசிக்க முடியாது.

      Delete
    2. பச்சை அப்பளாத்தை அடுப்பில் புரட்டிப் போட்டு சப்பாத்திங்கறாங்க. தால்ல பருப்பு ஒருபக்கம், தண்ணீர் ஒருபக்கம்னு மாமியார் மருமகளாட்டம் இருக்கே.. அப்போ ராஜஸ்தான்ல நாங்க இருந்தகோது, பஞ்சாப்ல கொடுப்பாங்க பாருங்க... என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போயிடும் சாத்தியக்கூறு அதிகம்

      Delete
    3. நெல்லை, சில நாட்கள் விருந்தினராகத் தங்கி இருக்கையில் நன்றாகவே கவனிக்கிறார்கள். மேலே சொன்ன உறவினர் இரு குடும்பம், அக்கா, தம்பி குடும்பங்கள் கோவை முதியோர் இல்லம் ஒன்றில் தங்கிப் பார்த்தபோது முருங்கைக்கீரை போட்டு அடை, சப்பாத்திக்குப் பாலக் பனீர் என்றெல்லாம் போட்டிருக்காங்க. சரினு அங்கே தங்கியது ஆறு மாதத்தில் தம்பி திரும்பி விட்டார். ஶ்ரீரங்கத்தில் தான் மனைவியுடன் இருந்தார். போன மாதம் வயிற்று நோயால் இறந்துவிட்டார். அவர் அக்காவும் சென்னை திரும்பும் உத்தேசத்துடன் இருக்கார். பணம் திருப்பிக் கொடுக்கக் கொஞ்சம் இழுத்தடிக்கிறாங்களாம். அதான் காத்திருக்கார் என்றனர். :(

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எனக்குத் தெரிந்த உறவினர், நண்பர்கள் கோவையின் முதியோர் இல்லங்களில் இருந்து விட்டுப் பிடிக்காமல் திரும்பி விட்டார்கள். அதில் ஒருவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுக் கடுமையாக அவதிப்பட்டு விரைவில் இறந்தும் விட்டார்./

      அடாடா.. கஸ்டந்தான். எங்கள் உறவுகளிலும் இது போல் ஒரிருவர் முதியோர் இல்லங்கள் சரியில்லையென திரும்பி விட்டனர். அதில் ஒருவருக்கு உணவு ஒத்துக் கொள்ளாமல் மூலத் தொந்தரவு ஏற்பட்டு அவதிப்பட்டார். எல்லோருக்குமே எல்லாமுமே சமயத்தில் ஒத்து வராது சில இல்லங்கள் நன்றாக இருப்பதாக நீங்கள் கூறும் விஷயங்களுக்கு நன்றி. எந்த இடத்திலும் பணந்தான் குறிப்பிட்ட விலையை, அதன் வசதியை நிர்ணயிக்கிறது.

      /எங்களுக்குமே முதியோர் இல்லம் போகலாமோ என்னும் எண்ணம் அவ்வப்போது வருகிறது./

      ஏன் அப்படி? நம் வீட்டில் இருப்பது போன்ற சுதந்திரம் அங்கு வருமா? அதில் சில பிரச்சனைகளும் உருவாகி விடக் கூடாதே...
      உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் அன்பான சகோதர, சகோதரி இருவருக்கும்.

      நிறைய கருத்துகள் முதியோர் பற்றியும், முதியோர் இல்லங்களைப் பற்றியும் உங்களால் தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமான உரையாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கதையின் போக்கும் சரி...
    கதைக்குத் தொடர்பான கருத்துரைகளும் சரி
    மனதைத் தவிக்க வைப்பனவாக இருக்கின்றன...

    நிதர்சனம் இப்படியும் இருக்கலாம் என்றாகிய பின் என்ன சொல்வது?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து நீங்கள் அதன் போக்கு மனதை வருத்தும்படியாக இருக்கிறது என்ற போது எனக்கும் வருத்தமாக உள்ளது.

      /நிதர்சனம் இப்படியும் இருக்கலாம் என்றாகிய பின் என்ன சொல்வது?/

      இது எதைப் பற்றியும் ஆராயாமல் கற்பனையில் உதித்த கதை என்றாலும், இது போல் சம்பவங்கள் எங்கேனும் நடந்திருக்கலாம். நிழலும் சமயத்தில் நிஜங்களின் சாயல்களுடன் வாழ ஆசைப்படுவது போல், கதைகளின் பிண்ணனியும் சில சமயம் பலர் வாழ்வோடு சம்பந்தபடலாம். இல்லை சிலர் வாழ்வே சிலசமயம் கொஞ்சம் மாறுபட்டு கதையாகலாம்.. தங்கள் மனதில் தோன்றிய அன்பான கருத்துகளை சொன்னதற்கு சந்தோஷமடைகிறேன். நல்லவை தீயவை இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை... தொடர்ந்து வருகை தந்து சிறப்பான கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இதற்கெல்லாம் மூல காரணம் என்னவாக இருக்கும்?...

    கீதாக்கா அவர்களும் கோமதிஅரசு அவர்களும் அன்புடன் விளக்கியருல வேண்டும்...

    மனித வாழ்வில் வழிவழியாய் வந்த பந்த பாசம் எனும் சங்கிலி எப்படி உடைந்தது?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மனித வாழ்வில் வழிவழியாய் வந்த பந்த பாசம் எனும் சங்கிலி எப்படி உடைந்தது?.
      இதற்கெல்லாம் மூல காரணம் என்னவாக இருக்கும்/

      வேறென்ன ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஆசைகள்தாம். இந்த ஆசை பந்த பாசத்தை அகற்றும் மற்ற குணங்களையும் கூடவே அழைத்துக் கொள்கிறது. தனக்கு கிடைப்பதை வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் இல்லத்தில் சந்தோஷம் அவர்களுடன் தலையா(கா)ட்டியபடி இருக்கிறது. "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்ற கவிஞர் வாக்கியங்கள் நினைவுக்கு வருகிறது. அப்படிபட்ட கண்ணோட்டத்தோடு திருப்தியாக வாழ்ந்தால், ஒரளவு நிம்மதி வரும்.. மாறாக "உனக்கும் மேலே உள்ளவர் கோடி" என்று பார்த்தால்,நிம்மதி பறிபோய் பந்த பாச சங்கிலிகளை எளிதில் உடைக்கும் சுத்தியல் ஆகிவிடுகிறது என நினைக்கிறேன். ஏதோ என் மனதில் பட்டதை எழுதியுள்ளேன்.

      சகோதரிகள் கீதா சாம்பசிவம், கோமதி அரசு இருவரும் வந்து அவர்களின் மனம் தந்த விடைகளை பகிர்ந்து,அதை நானும் படித்துணர ஆவல் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பெரியவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்...? ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தருவதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
      கதைக்கு தங்களின் தொடர் வருகைக்கும், இனியும் ஆவலுடன் மிகுதி கதையை எதிர் பார்க்கிறேன் என்றமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம் அனைவருக்கும்..

    அனைவரும் வந்து கதைக்கு கருத்துக்கள் தந்திருப்பது மகிழ்வாக உள்ளது. நேற்றும் இன்றுமாக கொஞ்சம் தலை வலி, பல் வலி என மாறி மாறி சிரமபட்டதில் தாமதமாக பதில் தருகிறேன். இதோ இன்றும் இப்போது சற்று பரவாயில்லையென வந்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நலம் பெறுவீர்கள்..
      இறைவன் துணை..

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      இப்போது சற்று பரவாயில்லை.. இப்படித்தான் இப்போதெல்லாம் ஏதேனும் ஒன்றாக உடல்நிலை அடிக்கடி படுத்துகிறது வலைத்தளம் வந்து ஏனைய பதிவுகளை பார்த்து படித்து கருத்திடுவதால் மன/உடல் உபாதைகள் சற்று விலகுகின்றன. உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றிகள்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அன்பின் கமலாமா,
    கதை கதி கலங்க வைக்கிறது. முதியோர் இல்லங்கள் பற்றி
    பலவேறு கருத்துகள். எங்கள் முதிய உறவினர்
    அங்கே சென்ற சில நாட்களிலேயே
    திரும்பிவிட்டார். வேட்டி கட்டக் கூடாது,
    லுங்கி கட்ட வேண்டும் என்றார்களாம்.
    இப்போது அவர் இல்லை. பெண் குழந்தைகள் வெளி நாட்டில் இருந்தனர்.
    மகனும் இல்லை.
    என்னவோ இறைவன் என்ன நினைத்து எல்லோரையும்
    கலங்க வைக்கிறானோ.
    கதை நல்ல படியாக முடிய வேண்டும் என்று தவிப்பாக
    இருக்கிறது. மன உறுதியும், பணக் கையிருப்பும் எல்லோருக்கும் அவசியம்.
    நலமுடன் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதைப் பற்றிய தங்கள் எண்ணங்களை அழகாக பகிர்ந்ததற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /முதியோர் இல்லங்கள் பற்றி
      பலவேறு கருத்துகள். எங்கள் முதிய உறவினர் அங்கே சென்ற சில நாட்களிலேயே திரும்பி விட்டார். வேட்டி கட்டக் கூடாது,லுங்கி கட்ட வேண்டும் என்றார்களாம்./

      என்னவெல்லாம் கெடுபிடிகள்... கேட்கவே மனதுக்கு கஸ்டமாக உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒரு சிலது ஒத்து வரும். அவர்கள் மனதை பொறுத்த விஷயம். ஆனாலும் கண்டிப்புகள் எரிச்சலை மட்டுமல்லாது கவலையையும் உண்டாகும்.

      இறைவன் அனைவருக்குமே அவரவர் பூர்வ ஜென்ம விதிப்படி அவ்வப்போது தீயனவற்றை தந்தாலும், அளந்து வைத்திருக்கும் அதிகப்படியான நன்மையைதான் தருவான் என நம்புவோம்.

      /மன உறுதியும், பணக் கையிருப்பும் எல்லோருக்கும் அவசியம்.
      நலமுடன் இருங்கள்./

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆறுதலான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. வேதனை. பல வீடுகளில் இந்த நிலை தான். கவனித்துக் கொள்ள முடியாது, முதியோர் இல்லத்தில் விட வேண்டியது தான் என சர்வ சாதாரணமாகச் சொல்லி விடுகிறார்கள். எல்லா முதியோர் இல்லங்களும் சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. கேள்விப்படும் வரை பணத்திற்காக செயல்படும் இடங்களாகவே இருக்கிறது.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். உண்மைதான். அத்தனை இல்லங்களுமே சரியாக இருக்குமென்று கூற முடியாது. பிள்ளைகளின் நிர்பந்தத்தில், இல்லை அவர்களின் இட மாற்றங்களினால் முதியோர் இல்லங்கள் செல்லும் முதியோர் அனைவருமே மகிழ்வுடன் இருக்கின்றனரா என்றால்,அதிலும் பல பேர் மனதில் குறையுடன் நிம்மதியில்லாமல்தான் வாழ்கின்றனர். மேலும் எங்கும் பணத்தினால் பிரச்சனைதான். தாங்கள் தொடர்ந்து வந்து நல்ல கருத்துகளை தந்தமைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete