Pages

Tuesday, January 26, 2021

கடன் வாங்கியாவது..

அப்பாடா.. எப்படியோ  வந்து விட்டேன்..  இந்த நம்பிக்கை பாலம்  ஒன்றுதானே எப்போதும் எந்த காலத்திலும் நம் பலம்... நெட் பிரச்சனை காரணமாகவும்,   (தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... தை பிறந்தவுடன் எனக்கும், இணைய தொடர்பு வழிகளுக்குமான வழிகள்  மூடிக்கொள்ள வேண்டுமா? அதுதான் கொடுமை. . ) வேறு சில பல சொந்த காரணங்களுக்காகவும் என் வலையுலக பிரவேசத்திற்கு தடை போட்ட விதியும்,  அதன் சதியும்  சற்றே அசந்து போய் இருந்த இடைப்பட்ட நேரத்தில் புகுந்து எப்படியும் வந்துருவோம்ல.....! (இங்குதான் என் பதிவை  படிப்பவர்களின் விதியும், (எனக்காக வந்து படிப்பதைதான்  கூறுகிறேன்.) சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.:) ) 

சரி..  எப்படியோ வந்தாச்சு.. ஏதேனும் எழுதி கிழிக்காமல் போவதா? என ஒரு மனம் தேவையில்லாமல்  இடிக்க, பதிலுக்கு "உன் தொல்லையில்லாமல் அனைவரையும் நிம்மதியாக இருக்க கொஞ்ச நாட்கள் சும்மாவேனும் இரேன்" என இன்னொரு மனம் (நமக்குத்தான் இந்த இரண்டு மனங்களை நாம் கேட்காமலேயே இறைவன் தந்திருக்கின்றானே ....) கிண்டலடித்து சந்தோஷம் அடைந்தது.

இதை கேட்டதும் எதாவது இரண்டு வரிகளை எழுதியேத்தான் ஆக வேண்டுமென கை விரல்கள் சும்மாயிராமல் பிடிவாதம் பிடிக்க, சரி... " கடன் வாங்கி கழித்தல்" முறையிலாவது வந்து விடலாமென முயன்றேன். (அதாவது என்னைத் தவிர்த்து கைபேசிக்கு மொபைல் டேட்டா வைத்திருக்கும் என் குழந்தைகளிடம்  நெட் கடன் வாங்குவதன் மூலம்..  )  ஆனால், அதுவும் ஏனோ இத்தனை நாட்களாக சரியாக வரவில்லை. ( இந்த கடன் வாங்கி களித்தல் என்பது எனக்கு மட்டுந்தான் ராசியில்லை போலும்.....! என மன சமாதானமும் என்னால்  அடைய முடியவில்லை. ஆனால், எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்படும் பணப் பற்றாக்குறையை  சரி செய்ய நிறையவே பிறரிடம் கடன் வாங்கி உடனடியாக அதை கழிக்க மறந்தவர்களாய் தினமும் மனம் போனபடி களித்திருக்கிறார்கள்... களித்து கொண்டுமிருக்கிறார்கள்.....:) அதுவும் உண்மையிலேயே அவரவர்கள் யோகங்களை பொறுத்ததுதான் அமையும் போலும்... :)  ) 

எப்போதும் எங்கள் வீட்டில், Wi-Fi வசதி தடையற இருந்ததினால், என்னுடைய  கைபேசியில் இதுவரை வேறு எந்த பிற வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு.  ஆனால் இங்கும் எப்போதும் தடையற இருக்கும் இணைய தொடர்பு  கொஞ்சமும் தாட்சண்யமின்றி, காலை வாரி விட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் என்னால் முன்பு மாதிரி  எல்லோரின் வலைத்தளங்களுக்கு சரளமாக வர இயலவில்லை...ஆனாலும், இப்போது எனக்கு வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரின் பதிவுகளை பார்த்து மகிழ்ந்து, கருத்துக்கள் இடும் அடக்க முடியாத அபரிமிதமான ஆவலில், என் கைப்பேசிக்கும் சிறிது நெட் இணைப்பு தந்து வருகை தந்துள்ளேன். இதிலும்  மிக தாமதமாகத்தான் எல்லா  இணைய தொடர்புகள்  வருகின்றன. இருந்தாலும், பழையபடி முன்பிருந்த  இணைய தொடர்பு எளிதாக கிடைக்கும் வரை அவ்வப்போது இயன்ற வரையில் வரலாம் இல்லையா? இப்போது இந்த நெட் வகைகள் எவ்வளவோ வந்து விட்டது. எதை. எப்படி எடுப்பது என்பதில்தான் ஏகமான குழப்பங்கள்.. தாமதங்கள்.. தடுமாற்றங்கள்.. எப்படியோ நட்புறவுகள் அனைவருடனும் இன்று மனம் விட்டு பேச வைத்த இந்த மொபைல் டேட்டாவுக்கும் நன்றி. எப்போதும் என்னை மறக்காத  அன்புள்ள சகோதர சகோதரிகளான உங்களனைவருக்கும்  என் நன்றி. 

பின்பு  சும்மாவேனும் வந்து விட்டு போனால். நன்றாக இருக்காது என்பதினால்,  நான்  படித்த சும்மா பதிவு ஒன்றுறையும் பகிர்ந்துள்ளேன். "நாங்களும் சும்மாயிருக்கிற நேரத்தில் இதை படித்துள்ளோம்.. எதற்கு இப்படி சும்மா.. சும்மாவென்று எங்களை சும்மா தொந்தரவு செய்கிறீர்கள்" என கேட்காது சும்மா இதையும் இன்னொரு தடவை படித்து விட்டோம் என  ரசிக்கும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான. 🙏. 

இதோ அந்த ப (பி) டித்த பதிவு..... 

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

அது சரி *சும்மா* என்றால் என்ன? 

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*

*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றன, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..

எதற்கும் *சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள.. நன்றி... 

இந்த பதிவை படித்து விட்டீர்களா? எப்படியோ என் இணைய பிரச்சனை நடுவிலும் ஒரு பதிவை தேற்றி வந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி. பதிவைப் படித்து எப்படி  உள்ளதென  கூறும் உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும்  நன்றி. 🙏..

34 comments:

  1. இணையப் பிரச்சனை இருந்தால் பதிவு போடமாட்டார்கள், இணையத்துக்கு வருவதும் குறைந்துவிடும் எனத் தெரிந்துகொண்டேன்.

    அதுவும் சும்மாவே தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      முதல் வருகை தந்து நல்லதொரு கருத்து தெரிவித்திருப்பதற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      /அதுவும் சும்மாவே தெரிந்துகொண்டேன்/

      ஹா.ஹா.ஹா.சும்மாவே தெரிந்து, புரிந்து கொண்டதற்கு நன்றி... "அதுவும் சும்மாவே என" நீங்கள் "என" சேர்த்திருந்தால், அர்த்தமே மாறியிருக்கும். பிறகு நிஜமாகவே இணைய பிரச்சனை இருந்தால் பதிவுகளுக்கு வர இயலாது என எங்கு சென்று வாதிடுவது? ஹா.ஹா.ஹா. கொஞ்ச நாட்களுக்கு சும்மா, இப்படி சும்மாவே சுற்றி வரட்டும். (எனக்கும் இப்போதைய என் நெட் தொடர்பு ஒவ்வொரு கருத்துக்கும் சும்மாவே நீண்ட நேரம் சுற்றி வந்துதான் வெளியிடுகிறது.) தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. இணையப் பிரச்சனைனா குட்டி குட்டி (அதாவது சிறிய சிறிய) பதிவுகளாகப் போடுங்கள். தொடர்ந்து இணையத்தில் எழுதுங்கள்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தொடர்ந்து இணையத்தில் எழுதுங்கள்./

      ஆம்.. தங்கள் சொல்படி அவ்விதமாகவாவது எழுத வேண்டும். உங்கள் அன்பான ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இணைய சிரமங்களை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    //இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு//


    இடமாற்றம் அலைபேசியிலா?

    நல்லது நடக்கட்டும்.

    படித்ததில் பிடித்தது என்று பகிர்வு நன்றாக இருக்கிறது.
    சும்மா என்றதும் சும்மா என்ற தன் வலைத்தளத்திற்கு பெயர் வைத்து இருக்கும் தேனம்மை நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இடமாற்றம் அலைபேசியிலா?/

      இல்லை சகோதரி.. அதில்தான் எப்போதும் போல் எழுதி வருகிறேன். தற்சமயம் என் இளைய மகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.அதைதான் இடமாற்றம் என்றேன்.

      பகிர்வு நன்றாக உள்ளதென்று பதிவை ரசித்து தந்த கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      /சும்மா என்றதும் சும்மா என்ற தன் வலைத்தளத்திற்கு பெயர் வைத்து இருக்கும் தேனம்மை நினைவுக்கு வந்தார்/

      ஆமாம். இந்த சும்மா பதிவை படிக்கும் போதும், பகிரும் போதும் எனக்கும் அவர் நினைவுதான் வந்தது. உங்களுக்கும் அவர் நினைவுக்கு சரியே.. எனக்குத்தான் உங்களனைவருக்கும் பதில் தர தாமதமாகிறது. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஹா...    ஹா...   சும்மாவின் சிறப்பை இன்று காலை எழுந்த உடனே வாட்ஸாப்பில் படித்தேன்.   யாருக்காவது பார்வேர்ட் செய்யலாம் என்று கூட நினைத்தேன்.  ஆரம்ப வரிகளில் சும்மாவைப் பார்த்தவுடனேயே அதேதானிது என்றும் தெரிந்து கொண்டேன்!  நானும் இபப்டி ஒரு சும்மா பதிவு எழுதி இருக்கிறேன் தெரியுமோ!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. நீங்களும் இன்றுதான் இந்த சும்மா பதிவை வாட்சப்பில் படித்தீர்களா? எனக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன. உடனே பகிர்வும் நானும் நினைத்தேன். இணைய தடையினால் எதுவும் எழுத இயலவில்லை.

      நீங்களும் ஒரு பதிவு இதேப் போல் எழுதி உள்ளீர்களா? கண்டிப்பாக பார்க்கிறேன். ஒருவேள அதேதான் இப்படி சும்மாயிராமல் சுற்றி வருகிறதோ?:) உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இணையச் சிரமங்கள் எல்லோருக்கும் அவ்வப்போது வருபவைதான்.  மீண்டு வந்ததில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இணையச் சிரமங்கள் எல்லோருக்கும் அவ்வப்போது வருபவைதான்./

      ஆமாம்.. எனக்கு இது இப்படி முற்றிலும் துண்டித்தது புதிது. எப்படியோ வலைத்தளத்திற்குள் மீண்டும் வந்து விட்டேன். ஆனால் பதிவுக்கு வந்த கருத்துரைகளுக்கு உடனே பதில் கருத்திட முடியாமல் கொஞ்சம் தாமதமாகி விடுகிறது. பழையபடி Wi-Fi தொடர்பு சீக்கிரம் கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போதிருக்கும் இதில் பதில் டைப்பிங் செய்து வெளியிடும் போது சரியாக நெட்வொர்க் காணாமல் போவதில், இரண்டு மூன்று தடவைகள் அதையே நினைவுபடுத்தி இம்போஸிஷன் மாதிரி அடித்துக் கொண்டிருக்கிறேன்.ஹா.ஹா. நன்றி...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. எங்கள் சும்மா பதிவின் சுட்டியையும் இணைத்திருக்கிறேன்!
    https://engalblog.blogspot.com/2009/09/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் சும்மா பதிவின் சுட்டியை இணைத்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.
      கண்டிப்பாக சென்று பார்க்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அன்பு கமலாமா,
    இடம் மாறி எங்கே வந்துள்ளீர்கள்.
    தடையில்லாத இணையம் கிடைக்கட்டும்.

    உடல் சும்மா இருந்தாலும் மனம் சும்மா இருக்குமா.
    அது கிடந்து அல்லாடிக் கொண்டுதான்
    இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தற்சமயம் என் இளைய மகன் வீட்டுக்கு வந்திருக்கிறோம். இங்கிருந்த நெட் தொடர்புதான் கிடைக்கவில்லை. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      /உடல் சும்மா இருந்தாலும் மனம் சும்மா இருக்குமா.
      அது கிடந்து அல்லாடிக் கொண்டுதான்
      இருக்கிறது./

      ஆமாம். இதேதான் பிரச்சனை. மனதின் எந்த நினைவுகளையும் அழிக்கவே இயலவில்லை. அது தரும் வேதனைகள் உடம்பையும் படுத்தித்தான் பார்க்கிறது. தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி. இணைய படுத்தல் காரணமாக அனைவருக்கும் தாமதமாக பதில் தருகிறேன். அனைவரும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இணையப் பிரச்சனை - பல சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது.

    சும்மா - தகவல்கள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இணையப் பிரச்சனை - பல சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது. /
      ஆம்.. இதனால் வாட்சப்பில் உறவுகளுக்கும் எந்த தகவலும் அனுப்ப இயலாமல் போகிறது.

      சும்மா தகவல்களை ரசித்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சும்மா தகவல்கள் ஒரு வாரமாக முகநூலிலும் புலனத்திலும் சும்மா விளையாடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்படியா? எனக்கும் மூன்று வாரங்களுக்கு முன் வாட்சப்பில் வந்ததுதான். பதிவை ரசித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. சும்மாவானும் பதில் எழுத ஆரம்பிச்சால் அந்த மடிக்கணினி சும்மா இருக்காமல் சார்ஜ் தீர்ந்து போய்த் தானே லாக் ஆகிவிட்டது. என்னத்தைச் சொல்ல! உங்கள் சும்மாப் பிரயோகம் பத்தி நிறைய எழுதி இருந்தேன். சேமிக்கமுடியலை. பாதி எழுதும்போதே கணினி மூடிக் கொண்டு விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. நாம் ஒரு வேலையை அதன் மூலம் ஆரம்பிக்க போவதை தெரிந்து வைத்திருக்கும் கணினியும் சும்மா இவர்கள் நம்மை தொந்தரவு செய்கிறார்கள் என சார்ஜ் மேல் பழி போட்டு அதுவாகவே லாக் ஆகி கொண்டு விட்டதா?:) ஆனால், அது கூட பரவாயில்லை.. நீங்கள் இந்த சும்மா பற்றி நிறைய எழுதியிருந்ததை நான் பார்க்க இயலாமல் போகி விட்டதே என்றுதான் எனக்கு வருத்தம்.ஆனாலும் மறுபடியும் நீங்கள் பதிவுக்கு வந்து எனக்காக பல கருத்துக்களை தந்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. மொபைல் டாட்டாவெல்லாம் கடன் வாங்கிச் செலவு செய்யலாம் என்னும் விஷயமே எனக்குப் புதுசு. என்னிடம் இருக்கும் மொபைல் டாட்டாவை எங்கேனும் வெளியே போனால் தான் பயன்படுத்துவேன். வீட்டில் இருந்தால் வைஃபை தான். இப்போ எங்கேயுமே போகிறதில்லையா? மொபைல் டாட்டாவை மின்சாரம் இல்லைனா இணைப்பேன். சில சமயம் வருது; பல சமயம் வரதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மொபைல் டாட்டாவெல்லாம் கடன் வாங்கிச் செலவு செய்யலாம் என்னும் விஷயமே எனக்குப் புதுசு./

      எனக்கும் புதிதுதான். நான் வலைத்தளம் வந்து அனைவரின் பதிவுகளை படிக்க இயலாமல் தவிப்பதை கண்டு என் மகள்தான் அதற்கு உதவினாள். ஆனால் அது அவள் வேலைகளுக்கு தொந்தரவு தரவே என் கைபேசியில் அந்த வசதிக்கு ஏற்பாடு செய்தாள் அதுவும் நீங்கள் சொல்வது போல் தான். சில சமயம் வருது; பல சமயம் வதில்லை. பழைய நெட்வொர்க் வசதி (வைஃபை) கூடிய விரைவில் வந்தால் நல்லது. தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இடமாற்றத்தினால் வர முடியலையா? மெதுவா வாங்க. ஆனால் அங்கேயும் வேலைகள் என்பது தான் மனதுக்கு வருத்தமா இருக்கு. போகட்டும் நேரம் கிடைக்கையில் வாங்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நமக்கு எங்கு சென்றாலும் வேலைதான். அதுவும் இந்த கரண்டி ஆபீஸ் வேலை அது பாட்டுக்கு ஓய்வில்லாமல் இருந்து கொண்டே இருக்கும். மாற்றம் தந்த எக்ஸ்ட்ரா வேலைகள் வேறு.. இன்னமும் முடியவில்லை. அதனால்தான் நெட்டும் கை கொடுக்கும் போது அவ்வப்போது வந்து பதில் கருத்து தாமதாக தருகிறேன். நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  12. சும்மா இந்தப்பக்கம் வந்தேன் சும்மா சொல்லக்கூடாது பதிவு அசத்தல் விசயங்களும் சும்மா நச்சுனு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து சும்மாவாக இல்லாமல்,நிஜமாகவே மனமாற பாராட்டியதற்கும் மிக மன மகிழ்ச்சியடைந்தேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.. பதிவில் குறிப்பிட்டுள்ள பிரச்சனை காரணமாக சற்று தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அருமையான சும்மா ஒரு சும்மா பதிவு. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை ரசித்து தந்த நல்லதொரு பாராட்டிற்கு என் மனம் நிறைந்த பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. சும்மா இரு சொல்லற என்றலும்
    அம் மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!..
    - என்கின்றார் அருணகிரிநாதர்...

    அப்படி இருக்கச் சொல்ல
    நாம என்னத்தைக் கண்டோம் நாராயணா!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. அருமையான பாடலுடன் வந்து தந்த கருத்துகளுக்கு பெருமையடைகிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றியும் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. சின்னச்ச் சின்ன சொல்லாடல்களுடன்
    பிரச்னையைப் பதிவு செய்திருப்பது அழகு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை படித்து ரசித்து தந்த மனமுவந்த பாராட்டிற்கு என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. சும்மா சும்மா வந்து என் பதிவுகளுக்கு அன்பு கருத்துரை இடும் கமலா அக்கா சும்மா சும்மா வர இயலாததால் ...

    என் பதிவுகளுக்கும் சும்மாவே உள்ளன அக்கா ...

    சும்மா ஜாலி யா ...


    சும்மா பற்றிய தகவல்கள் வெகு சுவை ...

    4 மாதம் ஊரில் இருந்த பொழுது மொபைல் டேட்டா தான் எங்களுக்கு கை கொடுத்தது ...ஒருவர் போன் மாற்றி ஒருவர் என உபயோகித்துக் கொள்வோம் ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. இந்த சும்மா வார்த்தை எப்படியெல்லாம் நமக்குள் புகுந்து விளையாடுகிறது... தங்கள் கருத்துரையை மிகவும் ரசித்தேன். வாய் விட்டு நகைத்தேன். இந்த மாதிரி பதிவுகள் இட்டால்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. இந்த இணைய இணைப்பு இல்லாததால் எந்த பதிவுக்கு வர இயலவில்லை. இந்த மொபைல் டேட்டாவினால் இப்போதுதான் அனைவரின் பதிவுகளுக்கு விஜயம் மேற்கொள்கிறேன். இதோ உங்கள் வீட்டு கதவும் இனி என்னால் அடிக்கடி தட்டப்படும். ஹா.ஹா.ஹா. தங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete