Pages

Thursday, December 31, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

இன்று புதிதாக சற்று நேரத்தில் பிறக்கப் போகும் புத்தாண்டு நல்ல பலன்களை உலக மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு முழுவதும் கலக்கங்கள், வருந்தங்கள், இழப்புக்கள் என சந்தித்து விட்டோம்.  ஒவ்வொரு நொடிகளும் இனம்புரியாத பயங்கள் வேறு.... இப்போது இந்த ஆண்டு புதிதாக பிறந்துதிக்கும் நொடி அமைதியானதாக இனிய பொழுதாக பிற(பிறந்திரு)க்கும் என நம்புகிறோம். ஆண்டவன் உலக வாழ் மக்களின் அனைத்து உள்ளங்களிலும் அந்த நம்பிக்கை வேரை பரப்பி ஆணிவேராக அவனருளையும் அமையச்செய்து எல்லோர் மனதிலும்  சந்தோஷ கனிகளை மட்டும் காய்க்க விட வேண்டுமென அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையாக பிரார்த்தித்துக்  கொள்வோம். 🙏🙏🙏🙏🙏. 

இது பழைய பாடல்தான். ஆனால் இதன் வரிகளின் அர்த்தங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானது. 

உதாரணமாக.... 

திருமதி வாணி ஜெயராமின் இனிமையான குரலில் வாழ்வின் நிதர்சனத்தை அழகாய் காட்டும் வரிகள்.... 

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க : அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க.: வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க:  எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல.... 

இந்த வரிகள் இ(எ)ப்போதைய சூழலுக்கும் உகந்தவை. எனவே நம்புவோம்... நன்றி. 👍. 👍. 👍. 

பி. கு.. இந்தப் பதிவு மிகச் சின்னதாக முடித்து விட்டதால், (புது வருடத்தன்று எவரையும் சிரமபடுத்த வேண்டாமென்று  நல்ல எண்ணம்தான்... :)  ) இதற்கு முந்தைய பதிவை படிக்க தவற விட்டவர்கள் படிக்கலாம்.......  படித்து பார்த்தவர்களும் மறுபடி படிப்பதில் தவறில்லை... :))

இதுவும் இந்த புத்தாண்டில் ஒரு புது விதமான விளம்பரந்தான்..  

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்....:)) உண்மைதானே...! 

நன்றி... 

24 comments:

  1. நன்றி.  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    மிக நல்ல பாடல்.  எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 
    வரிகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் கமலாக்கா.

    அழகிய எனக்கு மிக மிகப் பிடிச்ச பாட்டு.. பல முறைகள் சிடியில் ரிப்பீட்டில் போட்டுக் கேட்ட பாட்டு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      பாட்டை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கவியரசரின் அற்புதமான வரிகளுடன் இன்றைய பதிவு...

    எங்கும் மகிழ்ச்சியே நிறைவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எத்தனை ஆண்டுகள் போனாலும், கவியரசரை மறக்க முடியுமா?
      ஆம்.. அன்றாடம் எங்கும் மகிழ்ச்சியே பொங்கித் ததும்ப வேண்டிக் கொள்வோம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களுக்கும் என இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா ...

    இந்த ஆண்டு மிக நிறைவாக , மகிழ்வுடன் அமைய அன்பு வாழ்த்துக்கள் அக்கா .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. தாமதமான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மன்னிக்கவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அழகான பதிவு. சிக்கென்று முடித்துவிட்டீர்கள். கூடவே கொடுத்திருக்கும் விளம்பரமும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துக்கள் தாமதமெல்லாம் இல்லை இன்று வருடம் பிறந்து இரண்டாம் நாள்தானே ஓடுகிறது. மேலும் தினமும் வாழ்த்துகளை பறிமாறிக் கொள்ளலாம். தவறேயில்லை.

      உங்கள் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் மகன் வீட்டிலும், மகள் வீட்டிலும் அனைவரும் நலமாக உள்ளார்களா? அனைவரையும் கேட்டதாகவும் எங்கள் வாழ்த்துக்களையும் கூறவும்.

      /சிக்கென்று முடித்துவிட்டீர்கள். கூடவே கொடுத்திருக்கும் விளம்பரமும் அழகு./

      ஹா. ஹா. ஹா. நீங்கள் கவனித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அன்பு கமலா,
    தாமத வருகைக்கு மன்னிக்கணும்.
    ஏதோ காரணம் வரமுடியவில்லை.
    இனிய புத்தாண்டில் அனைவரும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக
    இருக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வருகை தாமதமெல்லாம் இல்லை. ஏன் மன்னிப்பு எல்லாம் கோரிக் கொண்டு... உங்களுக்கு எப்போது செளகரியபடுகிறதோ,அப்போது தாராளமாக வரலாம். உங்கள் அன்பான வருகை எனக்கு என்றுமே மகிழ்ச்சியை தரும்..

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள். உங்களுக்கும் என்னுடைய அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அனைத்து வளங்களையும் இந்த ஆண்டு அனைவருக்கும் தர வேண்டுமாய் நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரியப்படுத்துங்கள். நன்றிமா..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அபூர்வ ராகங்கள் பாடல் எப்பொழுதும் ரசிக்க முடியும்.
    சின்னப் பதிவுகள் அருமை. மிக நீளமாக இருந்தால்
    கண்களுக்கு வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. ஆபூர்வ ராகங்களில் வரும் பாடல்கள் எந்த காலத்திலும் ரசிக்க முடியும்.

      /சின்னப் பதிவுகள் அருமை. மிக நீளமாக இருந்தால்
      கண்களுக்கு வருத்தம்./

      ஹா ஹா ஹா. உண்மை.. சென்ற பதிவு அதென்னவோ மிகவும் நீளமாகி விட்டது. முடியும் போது படியுங்கள். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தாமதமாக வந்து வாழ்த்து சொன்னதற்கு மன்னியுங்கள்.
    ' ஏழு ஸ்வரங்களுக்குள் ' பாடல் மிகவும் பொருத்தம்! அதுவும் பாடலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கடைசி வரிகள் மிக மிகப்பொருத்தம்!
    அது போலவே சென்ற வருடத்தின் வேதனைகள் மாறி வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்வோம்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் வருகையும் தாமதமில்லை. நானும் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் உங்களுக்கு எப்போது செளகரியபடுகிறதோ அப்போது வந்து படிக்கலாம். நீங்கள் என் பதிவுக்கு வருவதே எனக்கு மகிழ்வாக உள்ளது.

      பாடலை ரசித்து பதிவுக்கு கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றிகள். ஆம்.. நம் வேதனைகள் தீர்ந்து இந்த ஆண்டு முதல் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல பலன்களை தர அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்வோம். தங்கள் அழகான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பல பதிவுகளை மிஸ் செய்துவிட்டேன் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நீங்கள் வேலை மும்மரத்தில் பிஸியாக இருக்கிறீர்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனாலும், வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete