Pages

Friday, December 11, 2020

மஹாகவி பாரதியின் பிறந்த நாள்.

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள்.

இன்று மலைகளின் சர்வதேச நாளும் கூட... இயற்கையில் உதித்த இந்த மலைகளின்  அழகு எப்போதுமே கவரக் கூடியவை. மலைகளின் வண்ண மாற்றங்கள் கண்களுக்கு விருந்தளிப்பவை.  மனதிற்கு இதமளிப்பவை. 

சுப்பிரமணிய பாரதியும் சிறு வயதிலேயே இயற்கையாய் அமைந்த தம்முடைய அறிவாற்றலினாலும், பிறவியிலிருந்தே  சட்டென கவிகள் பாடும் திறமையாலும், ஆழ்ந்த தேசப்பற்றினாலும், சாதரண மனிதர்களை விட மலையென உயர்ந்து அனைவரின் மனதிலும் தங்கியவர். / இன்னமும் நிரந்தரமாக தங்கி வாசம் கொண்டிருப்பவர். அவர் புகழ் என்றும் மணக்கும் தேவலோக பாரிஜாத மலர்களுக்கு ஒப்பானது. இன்றைய தினம் பூவோடு சேர்ந்த நாரும்  போல மலைகளின்  தினத்தையும் கொண்டாடுவது சிறப்பிற்குரியது.
 வாழ்க மஹாகவியின் புகழ். 
. வாழ்க சர்வதேச மலைகளின் சிறப்பும். 


மஹாகவியின் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.... 

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

முத்து குளிப்பதொரு தென்கடலிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

அந்நாளைய இப்படத்தின் பாடல்களும் மறக்க முடியாதவை. இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் அருமையானவை. எப்போதுமே கேட்கத் திகட்டாதவை. அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏. 

18 comments:

  1. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பானதாக இருக்கும்.  நெஞ்சில் உரமுமின்றி பாடல் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. உண்மைதான். இந்தப் படத்தில் அத்தனை பாடல்களுமே நன்றாக இருக்கும். அத்தனையும் பாரதியார் இயற்றிய பாடல்கள். படமும் இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும். தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நல்ல பாடலுடன் கூடிய அருமையான பகிர்வு. பாரதியின் நினைவைப் போற்றுவோம். எனக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரொம்பப் பிடிக்கும். முன்னெல்லாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தவையும் கூட. படம் மட்டும் சென்னைத் தொலைக்காட்சி தயவில் தான் பார்க்க நேரிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். பாரதியாரின் நினைவை எந்நாளும் போற்றுவோம். உங்களுக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடித்தமானது என அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்."காற்று வெளியிடை கண்ணம்மா" பாடலும், பி.பி.ஸ்ரீநிவாசன் குரலில் படு அமர்க்களமாக இருக்கும். நானும் தொலைக்காட்சியில்தான் இந்தப்படம் பார்த்தேன். அப்போது,தொலைக்காட்சி
      வந்த புதிதில், சுதந்திர தினம்,குடியரசு தினமென்றால் இந்த மாதிரி படங்கள்தான் போடுவார்கள். உடனடி வருகை தந்து பதிவை ரசித்ததில் மகிழ்வடைகிறேன். மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நல்லதொரு பதிவு..

    தேசத்தின் மீது மகாகவி கொண்டிருந்த ஆழமான பக்தி இப்பாடலில் வெளிப்பட்டிருக்கின்றதை தெள்ளத் தெளிவாக அறியலாம்...

    மகாகவியின் புகழ் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்... இந்தப் பாடலின் வரிகள் தேசபக்தியை தெளிவு படுத்துகின்றன.அவரின் தேசப்பற்று
      உணர்ச்சிகரமான பல பாடல்களையும் நமக்கு தந்தது. அந்த மகாகவியின் நினைவுகள் நம்மோடு இணைந்து போனவை. என்றும் அவர் புகழ் பாடி அவர். நினைவுகளை மறக்காமல் வைத்திருக்க வேண்டும். அது ஒன்றே நாம் அவருக்கு தரும் பரிசாகும். உங்களின் வருகைக்கும், அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அவரது நினைவைப் போற்றிய அருமையான பகிர்வு நல்லதொரு பாடலோடு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து பாரதியாரின் நினைவுகளை போற்றியமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ. தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துக்களுக்கும், பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஆஹா அற்புதமான பாடல்...

    வளர்க கவியின் புகழ் என்றும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்தப் பதிவை ரசித்து, பாடலை சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி அடைந்தேன். ஆம், மகாகவியின் புகழ் என்றுமே சிறந்து நிலைத்திருக்க வேண்டுவோம். அவரைப் போற்றுவோம். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நல்ல பாடல்.... பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை.

    /வீட்டின் அருகிலுள்ள இரட்டை வெள்ளிமலை/ - முதலில் படித்தபோது உங்களுக்குச் சொந்தமாக இந்த இரட்டை மலையையும் வைத்திருக்கீங்களோ என்று பார்த்தேன். இது எந்த ஏரியா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      /முதலில் படித்தபோது உங்களுக்குச் சொந்தமாக இந்த இரட்டை மலையையும் வைத்திருக்கீங்களோ என்று பார்த்தேன்./

      ஹா.ஹா.ஹா.நடிகர் வடிவேலு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன். (மலையிலிருந்து அல்ல...) இந்த மலை வீட்டின் மிக அருகில் இல்லை. ஆனால் கண்களுக்கு தெரியும் வண்ணம் உள்ளது. மேகங்களுக்கு ஏற்ப அதன் மாறுபடும் வண்ணம் எனக்குப் பார்க்கப் பிடிக்கும். தொலைவில் இருப்பதை அன்றொரு நாள் கைப்பேசியில் யதேச்சையாய், குளோசப்பில் படமெடுத்து வைத்திருந்தேன். இந்தப் பதிவுக்கு தோதாக இருக்கவே அதையும் உடன் பகிர்ந்தேன். இது எங்க ஏரியாவில்தான் இருக்குமென நானும் நினைக்கிறேன். ஹா.ஹா ஹா. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அன்பு கமலாமா,
    பாரதியும் ஒரு இமயம் தான். மலைகள்
    என்றும் அழியாமல் இருக்கட்டும்.
    மஹாகவியின் புகழும் அழியாது.

    கப்பலோட்டிய தமிழன் படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
    அதுவும் சுப்பையா அவர்கள் பாரதியாகவே மாறி உருட்டி விழிப்பது
    இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.
    எத்தனை மகத்தான் பாடல்கள்.

    உயிர் வாழும் ஒவ்வொரு நெஞ்சமும் மனதில் உறுதி பெற வந்த அந்த கவிதைகள்
    நாம் மறக்கக் கூடியவை அல்ல.
    மிக மிக நன்றி மா. என்றும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதாக கருத்துக்கள் இட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஆம். பாரதியும் ஒரு இமயந்தான்.அவர் கவிகள் மாமலை. காடுகள், மரங்களை வெட்டி மனிதன் ஆக்கிரமிப்பு செய்கிறான். மலைகளையும் முற்றிலும் அழிக்காமல் இருக்க வேண்டுவோம். மகாகவியின் புகழும், மலைகளும், அதன் அழகும் இந்த மண்ணுள்ள வரை அழியாமல் நீடித்து இருக்கட்டும்.

      பாடலை ரசித்தமைக்கு மிக நன்றி சகோதரி. எனக்கும் பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் பாரதியாரின் தீர்க்கமான வரிகளுடன் அமைந்த பாடல்கள்... நாம் என்றும் அவரை மறக்காமல் நினைவு கூர்வோம். அதுதான் அவருக்கு, காலங்காலமாய் வாழும் அவர் அற்புத கவித்திறனுக்கு செலுத்தும் காணிக்கை. தங்கள் அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பாரதியை மலையோடு ஒப்பிட்ட உங்கள் திறமைக்கு ஒரு வணக்கம். ஆமாம், பாரதி அசைக்க முடியாத மலைதான். கப்பலோட்டிய தமிழன் படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். எஸ்.வி.சுப்பையா பாரதியாக பிரமாதமாக நடித்திருப்பார். 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த கருத்துரைகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      ஆம். பாரதியார் ஒரு மாமலைதான். அவர் கவிகளும், தைரியமான மனப்பான்மையும் காலத்தால் அழிக்க முடியாதது.

      இந்தப் படமும், இதில் வரும் பாடல்களும் மிக ஆழமாக நம் மனதில் பதிந்தவை. ஆமாம்... உண்மைதான்.. நடிகர் சுப்பையா அவர்கள் இந்தப் படத்தில் பாரதியாராகவே மாறி நன்றாக நடித்திருப்பார். நாம் காணாத பாரதியை அவர் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார். தங்கள் அருமையான கருத்துகளுக்கும். பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஓ வெள்ளிப்பனிமலையின் மீது பாடல் பாரதியார் பாடலோ? ஆவ்வ்வ்வ் நான் சினிமாப் பாட்டு என்றெல்லோ நினைச்சேன்.. ஆராவது அடிக்கப்போகினம் என்னை:))..

    எல்லோரும் பாரதியாரின் நினைவுநாள் பிறந்தநாளை எல்லாம் கொண்டாடுறீங்கள் ஆனா அருகிலிருக்கும் அதிராவினுடையதை மறந்து போய் விடுறீங்கள் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ச்ச்ச்சும்மா ஜொள்ளிப் பார்த்தேன்..:))..

    இந்தக் கொமெண்ட் இங்கு எழுதி இப்போ 24 மணி நேரம் ஆகிவிட்டது கமலாக்கா, ஆனா எழுதி முடிச்சு பப்ளிஸ் பட்டினைத் தட்டமுன் கோல் வந்துது ஓடிவிட்டேன் நேற்று, கொம்பியூட்டர் அப்படியே இருந்தது, இன்று இப்போ வந்து திறந்து பார்க்கிறேன், கொமெண்ட் பொக்ஸில் அப்படியே கொமெண்ட் இருக்குதே ஹா ஹா ஹா... இதோ பட்டினைத் தட்டி விடுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      வாங்க.. வாங்க. தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான கருத்துக்களுடன் கூடிய வருகை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
      எல்லோருக்குமே எல்லாமே தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு தெரிந்தவற்றில் பாதி எனக்கும் தெரியாது.

      உங்களை மறக்க முடியுமா சகோதரி. யார் மறந்தாலும், நாங்கள் மறக்க மாட்டோம். எனக்காக கமெண்டை பத்திரப்படுத்தி வைத்து,அனுப்பியதற்கு மிக்க நன்றி. உங்கள் கணினியில் நீங்கள் மட்டும் பயன்படுத்துவதால் மாறாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது போலும்... என் கை பேசியில், கருத்துக்கள் அடிக்கும் போது சிலசமயம யாராவது கால் பண்ணினால் எடுத்து பேசும் போது நம் கைபட்டோ, எப்படியோ அடித்து வைத்த கருத்துக்கள் ஓடி விடும். மறுபடியும் அதே போல் நினைவுபடுத்தி அடிக்கவும் முடியாது.புதிதாக யோசிப்பதற்குள் வேறு வேலைகள் வந்து என்னை கையோடு அழைத்து சென்று விடும். So அதனால் பதிவுகளுக்கு வருவதில் தாமதம் உண்டாகி விடும். தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete