Pages

Tuesday, December 24, 2024

மறக்க முடியாத பாடல்கள்.

டிசம்பர் 24. 

தமிழக முன்னாள் முதல்வராகவும், மக்கள் திலகமுமாக திரையுலகிலும் கொடிக்கட்டி பறந்த திரு. எம். ஜி ராமச்சந்திரன் அவர்கள் இந்த உலகை விட்டு  மறைந்த நாள். இது நம்மால் எளிதில் மறக்க முடியாத நாளும் கூட. இரண்டு இடங்களிலும் தன் திறமையை பறைசாற்றிய அவரின் புகழ் அவர் மறைந்தும் என்றும் நீடித்து நிற்கும். / நிற்கிறது. அதுபோலவே நல்ல கருத்துள்ள மறக்க முடியாத பல பாடல்கள் திரைப்படங்களில் இவருக்கெனவே உருவானவை. அந்த வரிசையில் இன்று நான் பகிர்ந்த இந்த பாடல்கள். 

பிரபல பாடகர் திரு. டி. எம் சௌந்திரராஜன் இவருக்கெனவே பிறந்தது போல், நல்ல கம்பீரமான குரலுடன் இந்த நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதற்காகவே இறைவனால் நிர்ணயக்கப்பட்டவர். திரு. டி. எம் எஸ் அவர்கள் நிறைய பக்தி ரசமிக்க பாடல்களையும் இறைவன் அருளால் தந்துள்ளார். தவிரவும் மக்கள் திலகத்திற்கெனவே நிறைய பாடல்களைப் பாடி  இருவரின் வெற்றிகளையும் நிலை நிறுத்தி கொண்டவர். இவரின் புகழும் என்றும் நீடித்து நிற்கும். 

மேலும் இந்த பாடல்களை இயற்றி, அதற்கு இசையமைத்து மேலே குறிப்பிட்ட இருவரின் வெற்றிகளுக்கும் படிக்கல்லாக இருந்த பாடலாசிரியர்களுக்கும் இசையமைத்த இசை மேதைகளுக்கும் என் பணிவான வணக்கங்கள். நன்றிகள். 🙏. 

திருடாதே பாப்பா.. நல்ல அறிவுரைகளுடன் கூடிய ஒரு பாடல். 

திரைப்படம்: திருடாதே (1961)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்


தூங்காதே தம்பி தூங்காதே.. சோம்பலை விரட்டும் நல்ல பாடல். 

திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். இதுவும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பாடல். 

படம் : வேட்டைக்காரன்

இசை : K.v.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் :: T.M.செளந்தரராஜன்


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...! குழந்தைகளுக்கான அறிவுரை பாடல். 

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:  : K.v.மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்


இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. கண் போன போக்கிலே காலும்...! மனம் போன போக்கெல்லாம் மனிதனும் போகக்கூடாது என்பதை அறிவுறுத்தும் பாடல். 

பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ? 
படம் : பணம் படைத்தவன் ( 1965 )
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலி


நேற்று (23ஆம் தேதி. திங்கள்கிழமை) தேசிய விவசாயிகள் தினம். இது ஏதேச்சையாக இன்றைய முதல் நாளாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான இந்த அற்புதமான பாடலை நான் பகிர நினைத்தேன்.அதற்கு பொருத்தமாக இந்த (விவசாயிகள் தினம்.) நாளும் இணைந்து கொண்டது. இந்த படத்தில் நல்ல நடிப்புடன் அருமையான இந்தப்பாடலையும் திரு. எம்ஜிஆர் அவர்கள் விவசாயிகளை போற்றுபடி தந்திருக்கிறார்

படம்: விவசாயி 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

இயற்றியவர்: A.மருதகாசி

இசை: K.V. மகாதேவன்


கூகுளுக்கு நன்றி பாடல்கள் பகிர்வுக்கு

இன்னமும் பல பல பாடல்கள் நம் மனதை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன. இப்படிபட்ட  பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பதிவு நீண்டு விடும் என்பதால் மற்றதை நம் மனதோடு விட்டு, கூட்டுத் தொகையில் சிறந்த பாடலாக நான் நினைத்ததை மட்டும் (ஆ(றாக)ரமாக) பதிவிடடு உள்ளேன். மறக்காத இந்த பல பாடல்களை தந்த  இந்த அபூர்வ கலைஞர்களுக்கு நம் வணக்கங்களும் நன்றிகளும்🙏.

இந்த பதிவையும், பாடல்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 

32 comments:

  1. அடடே... எம் ஜி ஆர் நினைவு நாளை நினைவில் வைத்து அழகிய பாடல்களைக் கொடுத்துள்ளீர்கள். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது உடனடி வருகைக்கும், பதிவை ஒட்டிய பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இந்தப் பாடல்கள் அடிக்கடி என் மனதுக்குள் ஓடுவதுதான். இந்த வருடம் நினைவாக இதை பதிவிடலாமென்று ஏதோ எனக்குள் தோன்ற வைத்தது இறைவனின் விருப்பம். கட்டளையென்றும் கூறலாம். .

      பழைய பாடல்கள் என்றுமே மனதை விட்டு அகலாமல், அதிலுள்ள சில வார்த்தைகளை வீட்டில், வெளியில் யாராவது என்னுடன் பயன்படுத்தி பேசும் போது அந்தப்பாடலையே நினைவுக்குள் கொண்டு வந்து விடும் சிறப்புடையது. பழைய பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம் எபியில் கூட எத்தனை பழைய பாடல்களை கேட்டு மகிழ்வடைகிறேன் தெரியுமா? அதற்கே உங்களுக்கு பல முறைகள் நன்றி சொல்ல வேண்டும். தங்களுடைய இந்த பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. முன்பு நான் ரகவாரியாக கேசெட் வைத்திருந்தேன்.  டி எம் எஸ் எம் ஜி ஆர் தத்துவ அறிவுரைப் பாடல்கள் லிஸ்ட்டில் இவை இடம்பெற்றிருந்தன. 

    உன்னை அறிந்தால் பாடலை குழந்தைப் பருவத்தில் என் பெரியவன் 'உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உன்னை வச்சு காப்பாத்தலாம்' என்று பாடுவான்! 

    அந்தப் பாடலில் சாவித்ரியின் நடையும், எம் ஜி ஆரின் நடையும் ரசிக்கத்தகுந்தவை,  குதிரையும் பின்தொடரும்.  குதிரை சாவித்ரியின் தோளுக்காய் வரும்போது எம் ஜி ஆர் அதை நாசூக்காய் விலக்கி விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      எங்கள் அண்ணாவும், இதுபோல் நிறைய ஆடியோ வீடியோ கேசட்களை தொகுத்து வைத்திருந்தார். ஒரு ஸ்டீல் பீரோ நிறைய உள்ளது. அவரும் ஒரு நல்ல தரமான பழைய பாடல்களின் ரசிகர். இப்போது நினைத்தால் யூடியூபில் கேட்டு விடலாம் என்ற அளவிற்கு விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்து விட்டன.

      /உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உன்னை வச்சு காப்பாத்தலாம்' என்று பாடுவான்! /

      தங்கள் மகனின் கற்பனா சக்தி அருமை. நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார். நம்மை நாமே அறிந்து கொண்டால் என்றுமே நல்லதுதான்.

      /அந்தப்பாடல் சாவித்ரியின் நடையும், எம் ஜி ஆரின் நடையும் ரசிக்கத்தகுந்தவை, குதிரையும் பின்தொடரும். குதிரை சாவித்ரியின் தோளுக்காய் வரும்போது எம் ஜி ஆர் அதை நாசூக்காய் விலக்கி விடுவார்./

      ஆம். நானும் அந்த இடங்களை கவனித்து ரசித்திருக்கிறேன். என்னதான் எடிட்டிங் என்ற ஒன்று இருந்தாலும், நடிகை சாவித்திரியும் குதிரை அருகில் வரும் போது ஏற்படும் ஒரு பதட்டத்தை வெளிக்காட்டாமல் நடித்திருப்பார். அவர்கள் இருவரின் அருமையான முகபாவங்கள் அந்த பாடல்களோடு இணைந்து வருபவை.நான் இந்த மாதிரி பழைய பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிப்பேன். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கண்போன போக்கிலே பாடல் நான் என்றும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.  இப்போதும் அடிக்கடி ஒளிபரப்பாகும் பாடல். 

    அதில் 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வரிகளை ஒவ்வொரு வருடமும் என் டைரியில் முதல் பக்கத்தில் பெரிதாக எழுதி வைத்திருப்பேன்!  என்ன ஒரு பாடல்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இந்தப் பாடலில் அந்த இசைக்கு நடுவிலும் வரும் அந்த அமைதியான வரிகள் எனக்கு மிகவும் (எத்தனை முறை இந்த "மிக"வை போட வேண்டுமென தெரியவில்லை. :)) )
      பிடித்தமானவை.

      எவ்வளவு அழகான வரிகள். அதிலும் எம்ஜிஆர் அவர்களின் முக பாவங்களுடன், அதற்கு தகுந்தாற்போல, டி. எம் எஸ் அவர்களின் இழைந்தோடும் குரலோடு.... (அடாடா.. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...!) நிறைய முறைகள் கேட்டு, பார்த்து ரசிக்க வைப்பவை. அதனால்தான் "ஆறில்" ஒன்றாக இதையும் தேர்ந்தெடுத்தேன்.

      இப்பாடலைக் குறித்த தங்களின் ரசிப்புக்கும் மிக்க மகிழ்வுடனான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. விவசாயி பாடல் எனக்குப் பிடிக்காது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஏன் அப்படி? நான் முதலில் இந்த இடத்தில் கடமையை வலியுறுத்தும் பாடலைத்தான் எடுத்துப் போட்டேன். ("பதவி வரும் போது பணிவு வர வேண்டும்" என்ற வரிகளுடன் அமைந்த பாடல்.) பிறகு நேற்று தேசிய விவசாயிகள் தினம் என படித்தவுடன் அதற்கு பொருத்தமாக இந்தப்பாடலை தேர்ந்தெடுத்தேன். இதிலும் பல கருத்துள்ள வேறு பாடல்கள் இருக்கின்றன. (நல்ல நல்ல நிலம் பார்த்து.) தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அன்னமிட்டகை பாடலை நேற்று மதியம் பெரியவன் யதேச்சையாக  முணுமுணுத்தான்.  எனக்கு அதன் சரணங்கள் ரொம்பப் பிடிக்கும்.  உடனே கேட்கவேண்டும் என்று தோன்றி கேட்டேவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /அன்னமிட்டகை பாடலை நேற்று மதியம் பெரியவன் யதேச்சையாக முணுமுணுத்தான். எனக்கு அதன் சரணங்கள் ரொம்பப் பிடிக்கும். உடனே கேட்கவேண்டும் என்று தோன்றி கேட்டேவிட்டேன்!/

      ஆகா..! நமக்குள் என்ன ஒற்றுமை..! நானும் கடந்த இருநாட்களாக எம்ஜிஆர் அவர்களின் சிறந்த இந்த பாடல்களை கேட்ட வண்ணம் இருந்தேன். எனக்கும் அந்தப்பாடல் மிகவும் பிடிக்கும். பெற்றோர்களை மதிக்குமாறு வரும் இரு வரிகள் அவரது தனிப்பட்ட பாடல்களில் எப்படியாவது முதலில் வந்து விடும் அந்த பாசமிகு பிணைப்புகளால் அவரது தனிப்பாடல்கள் அப்போது தனியளவில் வெற்றியடைந்தன.

      "ஆறும்" நிறைந்ததால் இந்தப்பாடலை இணைக்க இயலவில்லை. ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும் இல்லையா..?(பதிவைச் சொல்கிறேன்.) ஆனாலும் இவரின் சிறப்பான பாடல்களுக்கு அளவேது? தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நல்லபேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே பாடலில் குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் குழந்தைகள்!  இது ராஜேஷ் கன்னா ஹிந்தியில் நடித்த அப்னாதேஷ் படத்தின் தழுவல்.  ஆர் டி பர்மன் இசையில் அதன் பாடல்களும் நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம் சின்ன குழந்தைகளாக இருக்கும் போதே இவர்கள் இருவரும் நங்கள் நடிப்பை திரையுலகில் முத்திரை பதித்தவர்கள். மறக்க முடியுமா?

      /இது ராஜேஷ் கன்னா ஹிந்தியில் நடித்த அப்னாதேஷ் படத்தின் தழுவல். ஆர் டி பர்மன் இசையில் அதன் பாடல்களும் நன்றாய் இருக்கும்./

      இதுவும் பாடலை தேடும் போது கண்டு கொண்டேன். ஆனால் இத்தனை தெளிவாக தாங்கள் சொன்னமைக்கு என் அன்பான நன்றி. நீங்கள் பல பாடல்களில் மூழ்கி முத்தெடுத்தவர். உங்களுக்கு இணை நிகர் நீங்கள் ஒருவர்தான். எல்லாப் பாடல்களின் விபரங்களும், உங்கள் விரல் நுனியில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே..!

      நீங்களும் இன்றைய என பதிவுக்கு அளவுடன் "ஆறு" கருத்துக்களை தந்திருப்பதுடன் பதிவை ரசித்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

  7. ​எம் ஜி ஆரை மறந்து இருக்கும் சமயத்தில் அவர் நினைவாக பாடல்களை தந்து "மறக்க முடியாது" என்று நினைவூட்டினீர்கள். நன்று.

    எனக்கு ஒரு சந்தேகம். முன்பெல்லாம் இது சிவாஜி பாடல், இது எம்ஜிஆர் பாடல் என்று குறிப்பிடுவார்கள். இளையராஜா வந்ததின் பின் இது இளையராஜா பாடல், இது ரஹ்மான் பாடல் என்று மாறியது., தற்போது பாடல்களை பற்றி ஒன்றும் சொல்வதிற்க்கில்லை. அப்படியே ஒன்றிரண்டு ஹிட் ஆனாலும் பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ, அல்லது பாடியவர் பெயரையோ குறிப்பிட்டுக் கூறுகிறோம். ஏன் இந்த மாற்றம்?

    நான் சொல்ல வந்தது என்னவென்றால் தற்போது பாடல்களுக்கும் படத்தின் காட்சிகள், கதை என்ற இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது.
    ​இது ஏன்?

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

    /எம் ஜி ஆரை மறந்து இருக்கும் சமயத்தில் அவர் நினைவாக பாடல்களை தந்து "மறக்க முடியாது" என்று நினைவூட்டினீர்கள். நன்று./

    அவரை மறக்க முடியுமா? நம்மை போல பழைய பாடல்களை விரும்புகிறவர்களுக்கு பழைய கருத்து நிறைந்த பாடல்கள் அவரை என்றுமே நினைவு கொள்ளச் செய்யுமே..! தங்களின் மனமுவந்த பாராட்டிற்கு மிக்க நன்றி.

    நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான். இப்போதுள்ளவர்கள் இசையமைத்தவர்களின் பாடல் இல்லை பாடல்களின் வரிகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். காரணம் தாங்கள் கூறுவது போல் அந்த காலத்திய பாடல்கள் அந்த படத்தின் கதையை சார்ந்து (ஆடலுடன் பாடலை கேட்டு.....ரசிப்பதிலே ஒரு .சுகம்...சுகம்.. இதுவும் மக்கள்திலகத்தின் பாடலாகவே வந்து விட்டது. :)) ) இருந்தது. அதனால் நடிப்பவர்களின் பெயரிலேயே பாடலை நினைவுபடுத்தினோம். /நினைவிலேயும் கொண்டோம்.

    இப்போது படங்களை நடிப்பவர்களின் நிலை வேறாகி விட்டது. அவர்களுகேற்ப இசையும், பாடலும், ஆடலும் மாறி வர ஆரம்பித்து விட்டன. எனினும், பழமையை விடாது ரசிப்பவர்களும், புதுமையை ரசிக்கும் பழமைவாதிகளும் இருக்கின்றனர். அவர்களுக்காக பல மாற்றங்கள் வருவதும் சகஜந்தானே..! தங்களது யோசிக்க வைக்கும் அன்பான கருத்திற்கு என் அன்பான நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. இன்று எம்.ஜி. ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படம் பார்த்தேன். நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். திரையில் நல்ல கருத்துக்களை பகிர்ந்தார். பாடல்கள், காட்சிகள் அதற்கு ஏற்றார் போல அமைந்தன.
    டி.எம். எஸ் அவர்களுக்கு எம்.ஜி ஆருக்கு மிக அருமையாக பாடினார். சிவாஜிக்கு சிவாஜி போலவும், எம்.ஜி ஆருக்கு அவர் குரல் போலவும் பாடினார்.
    நல்ல கருத்துள்ள பாடல்கள். மாயவரத்தில் வசிக்கும் போது எங்கள் பக்கத்து வீட்டு வாத்தியார் எம்.ஜி ஆர் ரசிகர் அவர் எம்.ஜி. ஆர் மறைந்த அன்று அப்படி அழுதார். இன்னும் நினைவு இருக்கிறது. அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் அவர் பாடிய தத்துவ பாடல்களை தொகுத்து வைத்து இருந்தார் கேஸட்டில் அதை தினம் கேட்பார்.
    தன்னிடம் படிக்கும் பையன்களுக்கு அவர் பாடிய நல்ல பாடல்களை உதாரணமாக சொல்வார்.

    நீங்கள் சொன்னது போல மறக்க முடியாத காலத்தால் அழியாத பாடல்களை தந்த பாடகர்கள், இசை அமைத்தவர்கள், பாடல் எழுதியவர்களுக்கு வணக்கங்கள்.
    நல்ல பாடல்களை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களைத்தான் காணவில்லையே என எதிர்பார்த்து காத்திருந்தேன் சென்ற பதிவுக்கும் உங்களை காணவில்லையே என நினைத்திருந்தேன். ஏதோ வெளியில் செல்லும் வேலைகள், இல்லை உறவின் விஷேடங்கள் எனவும் நினைத்திருந்தேன். தங்களின் கால்வலி எப்படி உள்ளது.. குறைந்திருக்கிறதா ? மருத்துவரிடம் சென்று வந்தீர்களா?

      இப்போதுதான் உங்கள் பதிவை கண்டு ரசித்து கருத்து தெரிவித்து விட்டு வந்து பார்த்தால், நீங்களும் இன்றைய என் பதிவுக்கு வந்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.

      தாங்கள் தந்த விபரங்களும் நன்று. திரு. எம் ஜி ஆர் மீது அன்பு வைத்தவர்கள் அனைவருமே அன்று கதறியதை மறக்க இயலாது. நாங்களும் அன்று டி. வியில் பார்த்து அழுதோம். நல்ல மனிதர். "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" என்று அவர் பாடிய பாடலை போலவே இன்றும் அவர் பேர் நிலைத்துத்தான் நிற்கிறது.

      தாங்களும் நினைவாக அவரது படம் பார்த்தமைக்கு மகிழ்ச்சி. அந்த கால படங்களும், பாடல்களும் என்றுமே மனதிற்கு அமைதியை தரும் இனிமை.

      நல்ல பாடல்களை நீங்களும் பகிர்ந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கண் போன பாதையில் கால் போகலாமா பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். "ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நானொரு தொழிலாளி" இந்த பாடலும் மிகவும் பிடிக்கும், புதிய வானம், புதிய பூமி பாடலும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      "கண் போன போக்கிலே" பாடல் நிறைய நல்ல கருத்துக்களை கொண்டது. அனைவருக்கும் அந்த இசையும், பாடலும் மிகவும் பிடித்தமானதுதான். நீங்கள் சொன்ன பாடல்களும் அருமையான வை. அவர் படங்களில் பாடல்கள்தான் முதலில் பயங்கர ஹிட்டாகும். பிறகு நல்ல கதை அம்சமாக இருக்கும். தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு என் அன்பான நன்றி சகோதரி. தங்களுக்கு முடியும் போது சென்ற பதிவையும் பார்க்க வாருங்கள் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அனைத்தும் அருமையான பாடல்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? எப்படி இருக்கிறீர்கள்.? நீண்ட மாதங்கள் கழிந்த பின் தங்களது பதிவுலக வருகை கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். நான்கைந்து நாட்களுக்கு மேலாக நாங்கள் பயணத்தில் இருந்ததால் தங்களுக்கு உடன் பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

      தங்களின் நல்லதொரு கருத்தை கண்டு மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அனைத்தும் கேட்பொலியாக பயன்படுத்தி உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். அப்போ து தொலைக்காட்சியை அடுத்து கேட்பொலிதானே முக்கியமாக இருந்தது. அவரின் தத்துவ பாடல்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  13. மிக அருமையான பாடல்களைக் கோர்த்துள்ளீர்கள்.

    உன்னை அறிந்தால் பாடலில் நீ. வராதே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கு மிக்க மகிழ்வடைந்தேன்.

      /உன்னை அறிந்தால் பாடலில் நீ. வராதே!

      வருகிறதே. பாடலைக் கேட்டபின்தான் பதிவிலும் எழுதினேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அப்போ டிஎம்எஸ் சிவாஜிக்காகப் பிறக்கலையா? சிவாஜிக்காக எண்ணிலடங்காத சூப்பர் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கலையா? சோதனை மேல் சோதனை... ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /அப்போ டிஎம்எஸ் சிவாஜிக்காகப் பிறக்கலையா?/

      ஹா ஹா ஹா. அப்படியில்லை. அவர் இருவருக்காகவுமே நல்ல, நல்ல பாடல்களை பாடியுள்ளார். இது மக்கள் திலகத்தின் பதிவல்லவா? அதனால் அவருக்குண்டான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டேன். மற்றபடி திரு. சிவாஜிக்காக அவர் அவரது சிம்ம குரலிலேயே மறக்க முடியாத பல பாடல்களை பாடியுள்ளார். ஒருநாள் அதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட த்து பதிந்து விட்டால் ஆயிற்று.

      தங்களுக்கு தாமதமாக பதில் தந்தமைக்கு மன்னிக்கவும். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஓஹோ எம்ஜி ஆர் நினைவு நாள் பாடல்களா...

    அனைத்துப் பாடல்களும் அருமையான பாடல்கள் கமலாக்கா. பொதுவாக எம் ஜி ஆர் பாடல்களில் அறிவுரைகள் இருப்பதாக இருக்கும்.

    டி எம் எஸ் எம் ஜி ஆர் பாடலென்றால் குரலில் ஒரு வகையும் சிவாஜி பாடலென்றால் குரலில் ஒரு வகையாகப் பாடுவதிலிருந்தே கண்டுபிடிக்கலாம் கூடவே இசையும் வைத்து.

    நல்ல தொகுப்பு கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் நீங்கள் சொல்வது போல் அவரவர்களுக்கு ஏற்றபடி தன் குரல் மாற்றி பாடுவதில் டி. எம் எஸ் மிகச் சிறந்தவர். பாடல்களை ரசித்து நல்லதொரு கருத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தாமதமாக நான் பதில் கருத்து த தன்மைக்கு மன்னிக்கவும் சகோதரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்களது புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களுக்கும் என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      சூழ்நிலைகள் காரணமாக தாமதமாக உங்கள் கருத்துக்கு பதில் தந்தமைக்கு என்னை மன்னிக்கவும் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கமலாக்கா நலம்தானே... உங்களுக்கும் மற்றும் வீட்டில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்படியே நலமாகவும் மகிழ்வோடும் இன்னும் நிறையப் பாடல்கள் கேட்டு மகிழ்ந்துகொண்டும் இருக்க வாழ்த்துகிறேன்.

    என்னிடமும் தத்துவப் பாடல்கள் தொகுப்பு இருக்கு முன்பு அடிக்கடி கேட்பேன் பின்னர் அதில் சிலது சோகப்பாடல்களும் வரும் அதனால இப்போ கேட்பதில்லை. ஓல்ட் இஸ் கோல்ட் தான் எப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நான் நலமாகத்தான் உள்ளேன். தாங்கள் நலமா சகோதரி.?

      / உங்களுக்கும் மற்றும் வீட்டில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்படியே நலமாகவும் மகிழ்வோடும் இன்னும் நிறையப் பாடல்கள் கேட்டு மகிழ்ந்துகொண்டும் இருக்க வாழ்த்துகிறேன்./

      தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி இங்கு தீடிரென உண்டான தெய்வீக பயணங்களில் உங்கள் கருத்துக்கு உடன் பதில் அளிக்க இயலவில்லை சகோதரி. அதனால் என்னை மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் மகிழ்வுடனான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete