Pages

Sunday, October 30, 2022

குருவே சரணம். குகனே சரணம்.

கந்தா சரணம். 

கதிர்வேலா சரணம். 

கடம்பா சரணம். 

கார்த்திகை மைந்தா சரணம்.

இன்று கந்த சஷ்டி பெருவிழா கண்டு கொண்டிருக்கும்  அனைவருக்கும் வணக்கம். 

கந்தனருள் எங்கும் பரிபூரண ஒளி வீசி, மனங்குளிர மணம் பரப்பி அகிலமெல்லாம் தழைத்தோங்க மனமாற அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

அவ்வாறு மனங்குளிரும் பொழுதான இன்று  மனம் நிறையும்படியான எனக்கு மிகவும் பிடித்த சில முருகன் பக்திப் பாடல்களை அவனருளால் பகிர்ந்துள்ளேன். இந்தப் பாடல்கள் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் கேட்கும போது, அருள் சுரக்கும் முகத்தோடு நமக்கு அத்தனை அருளையும் வாரி வழங்கும் கந்தனை, அருகிலிருந்தே கண்டு அவனை நம் மனதோடு  ஒருமுகப்படுத்தி மெய்யுருக நாமும் பாடுவது போன்ற ஒரு மன நிறைவைத் தரும். ஏனென்றால் நம்  "உள்ளமெனும் கோவிலில் உறைபவன் அவன்தானே.." என்னுடனே இதை அவ்வாறே கேட்டு ரசிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  


நம் வினைகள் யாவையுமே தன் கை வேல் கொண்டு களைபவன் முருகன். அதனால்தான் "வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்க பயமுமில்லை." என்று அவனைப்பாடித் தொழுகிறோம். எந்த நாளும் அவனை பணிந்து தொழும்  பணிவொன்றையே அவன் நமக்கு தந்தருள வேண்டும். "உனைப் பாடும் பணிவொன்று போதும்."என்ற  இந்தப்பாடலில் அவனை எந்நாளும் பணிவதையே  வேண்டுகிறோம்.🙏. 


இந்தப்பாடலில் "எங்கெல்லாம் தேடுவதோ"எனும் போது மனமுருகிப் போகும். நிலையற்ற இந்த வாழ்வில் மாறி மாறி வரும் நிரந்தரமான ஆசைகளுடன் வாழும் முறை தெரிந்த நாம் இறைவனை தேடிக் கொண்டேதானிருக்கிறோம். நம்முடைய தேடுதலின் தவிப்பறிந்து அதற்கான ஒரு நேரத்தை வகுத்துக் கொடு இறைவா..! என வேண்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.அந்த வேண்டும் மனப்பான்மையை இந்தப்பிறவியிலேயே தந்து விடு என்பதுதான் நம் ஆசை கலந்த வேண்டுதலாக இருக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. 


இன்று நாங்கள் இங்கு அடிக்கடி சென்று வந்த சண்முகா கோவில் புகைப்படங்களை போட்டு இன்றைய நன்னாளில் பதிவாக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், "அவன்" நினைப்பு இன்று அவனைத் தொழும் அழகான பாடலாக இருக்க வேண்டுமென்பதுதான்..! என்றும் நம்மை ஆட்டுவிப்பவன் "அவன்தானே".. "அவன்" நினைப்புதான் என்றும் சந்தேகமற வெற்றிக் கொள்ளும். அதனால் இந்த அழகான பாடல்கள் கொண்ட அவசர பதிவு. 

இந்தப்பாடல் "மயிலாக நான் மாறவேண்டும். உன்னைத் தொழ உன் அடியார்கள் ஏறி வருகின்ற படிகளாக நான் மாற வேண்டும்." என்று வருகிறது. நம் விருப்பங்களை உளம் உருக நம்பிக்கையுடன் கேட்டால் அவன் நிச்சயம் தந்து விடுவான். 🙏. 
இதோ பாடல். முருகனின் அருகிலேயே  நாம் என்னவெல்லாமாக பிறந்து இருக்க வேண்டும் என்ற ஆசை கலந்த வேண்டுதலைக் கொண்ட பாடல். 🙏. 


வீடியோ பாடல்கள் நன்றி கூகுள். 

அழகான பாடல்களை கேட்டு ரசித்து அவனருள் பெற்ற அனைவருக்கும் மனம் நிறைவான நன்றிகள். 🙏.

18 comments:

 1. உங்களுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல்.
  அனைத்து பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள்.
  சண்முகா கோயில் படங்கள் இரண்டு இடம் பெற்று இருக்கிறதா?

  //வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்க பயமுமில்லை." என்று அவனைப்பாடித் தொழுகிறோம். எந்த நாளும் அவனை பணிந்து தொழும் பணிவொன்றையே அவன் நமக்கு தந்தருள வேண்டும். "உனைப் பாடும் பணிவொன்று போதும்."என்ற இந்தப்பாடலில் அவனை எந்நாளும் பணிவதையே வேண்டுகிறோம்.🙏. //

  உனை பாடும் பணி ஒன்று போதும், வினை வந்து எவ்வாறு மோதும்!

  வேலும், மயிலும் துணையாக வர வேண்டும்.
  முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
  குருவாக வழிகாட்ட வேண்டும்.

  நல்ல பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்களது உடனடி வருகைக்கும், ஊக்கம் மிகுந்த கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   இந்தப் பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருப்பது கண்டு மகிழ்சச்சியடைந்தேன். எல்லோரும் அறிந்த பாடல்கள்தான். இருப்பினும் நல்ல கருத்துள்ள பாடல்கள். அதனால்தான் இங்கும் பகிர்ந்தேன்.

   ஆம்.. சண்முகா கோவில் படங்கள்தான்.. இன்று மாலையும் அந்த கோவிலுக்கு சென்று இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன் . அதனால்தான் உங்கள் அனைவருக்கும் உடன் பதில் தர இயலவில்லை.

   /வேலும், மயிலும் துணையாக வர வேண்டும்.
   முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
   குருவாக வழிகாட்ட வேண்டும்./

   அவன்தான் குருவாக நின்று நமக்கு நல்லதான பாடங்கற்பிக்க வேண்டும். பாடல்களை ரசித்து நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. எங்கெல்லாம் தேடுவதோ என்ற பாடலில் உள்ள உருக்கம் நம்மை உருக வைக்கும். உள்ளமெனும் கோயிலில் உறைக்கின்றான் குமரன் .பாடல் திகட்டாத தேன்தான்.
  அல்லும் பகலும் அவன் நினைவாய் இருக்க அருளினால் போதும்.
  கந்தா, கடம்பா, கதிர்வேலா கார்த்திகை மைந்தா சரணம் சரணம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம்.. உண்மை.. இந்தப்பாடல்களின் கருத்தும், இசையும் நாம் தெய்வத்தை நேரிலேயே காண்பது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

   /அல்லும் பகலும் அவன் நினைவாய் இருக்க அருளினால் போதும்./

   ஆம். அது போதும். அவன் நினைவுகள் நம்மை விட்டு அகலாதிருக்க முருகனின் பாதம் பணிவோம். அவன் கண்டிப்பாக அந்த அருளை தருவான். அவன் இன்று அழைத்தான். அதனால் அவனருளால் கோவிலுக்கு சென்று வந்தோம்.

   கந்தா... கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 3. கந்தா சரணம்... முருகா சரணம்... காத்தருள் கந்தவேளே..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பாடல்களை ரசித்து கேட்டதற்கு என் மனம் மகிழ்வடைகிறது.

   கண்டிப்பாக காத்தருள் வான் கந்தவேள்.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. ஆகா...! மனம் கவர்ந்த பாடல்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களுக்கும் பிடித்தமான பாடல்களாக அமைந்து விட்டது கண்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. பாடல்கள் மனதை என்னவோ செய்யும் பாடல்கள். மிகவும் பிடித்தவை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம்.. இவை மனதை அப்படியே உருகச் செய்யும் பாடல்கள். கேட்கும் போதே என் கண்கள் கலங்கி இறைவனோடு ஒன்றி விட மனம் தவிக்கும்.

   தங்களுக்கும் அனைத்துப்பாடல்களும் பிடித்தமானவை என அறிந்து மனம் மகிழ்ந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. எல்லாமே சிறப்பான பாடல்கள்.. சொல்ல நினைப்பது எல்லாம் அன்பின் கருத்துரைகளாக ஜொலிக்கின்றன..

  வேலுண்டு வினையில்லை..
  மயிலுண்டு
  பயமில்லை..

  குகனுண்டு
  குறைவில்லை மனமே..
  குகனுண்டு
  குறைவில்லை மனமே..

  மகிழ்ச்சி.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவில் பகிர்ந்த பாடல்களை ரசித்து தந்த தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   ஆம்.. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு. ஜெயமும் உண்டு. நல்ல கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியும் சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. தாமதமாக வந்தமைக்கு பொறுத்துக் கொள்ளவும்..

  வாழிய நலம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாமதமெல்லாம் ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து பாடல்களை கேட்கலாம். தங்களின் பணிகளுக்கு நடுவே வந்து கருத்தினை தந்து பாடல்களை கேட்டதற்கு நான்தான் நன்றிக் கூற வேண்டும். எங்கும் நலமே விளைக... அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. அனைத்தும் சிறப்பான முருகன் பாடல்கள் வெகு காலத்திற்கு பிறகு கேட்க வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அத்தனைப் பாடல்களையும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் நல்லதொரு கருத்துரைக்கு ம் மகிழ்வுடன் கூடிய நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. இப்போத்தான் இந்தப் பதிவைக் கவனித்தேன். உங்கள் பதிவில் முதல் மூன்று வீடியோக்கள் எனக்கு வரலை. மற்றவை அருமையான பாடல்கள். நன்கு ரசனையுடன் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். கந்த சஷ்டி அன்று முருகனைப் பார்த்துட்டும் வந்திருக்கீங்க. எனக்கெல்லாம் தொலைக்காட்சி தரிசனம் தான். :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் வந்து பாடல்களை கேட்டு, பதிவை ரசித்தமைக்கு நன்றி. ஆனால் வீடியோவுடன் கூடிய முதல் மூன்று பாடலை கேட்க முடியவில்லை என்றதுந்தான் நானும் பதிவைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சரியாக இருந்தது. இன்று இப்படி ஏன் ஆகிவிட்டதென தெரியவில்லை.. சரி செய்யப் பார்க்கிறேன். இருப்பினும் தாங்கள் பதிவை ரசித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   அன்று என்னவோ முருகன் அவனைக்காண என்னை அழைத்து விட்டான். நடப்பது எல்லாமே அவனனருள்தானே..! அனைவருக்கும் நல்லதே நடக்க பிரார்த்தித்து விட்டு வரச் செய்தான். 🙏
   மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete