Pages

Monday, July 4, 2022

பிடித்த பாடல்.

வணக்கம் அனைவருக்கும்

எல்லோரும் இப்போது வந்த புது படங்களை ரசிப்பார்கள். அதில் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அதை சிறப்பித்து கொண்டாடுவார்கள்.  இந்த படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. ஆனால் நான் இப்போதுதான் பார்த்தேன். இதைப்போலவே அன்னமைய்யா படமும் நடிகர் நாகர்ஜூனா அவர்களின் உருக்கமான பக்திபரவச நடிப்யில் மிகவும் மனதை உருக்கும் வண்ணம் வெற்றிப்படமாக அமைந்தது. அதையும் முன்பே பலமுறை தெலுங்கிலும், தமிழிலும் பார்த்துள்ளேன். அதில்  வந்த பாடல்களும் மிக பிரபலம். இதுவும்  அப்படித்தான் என நினைக்கிறேன். இந்தப் பாடல் இந்தப் படத்தில் முதல் தடவையாக கேட்டதிலிருந்து பிரதி தினமும் கேட்கிறேன். நாகர்ஜூனா அவர்களின் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் நடிப்பும், அனுஷ்கா அவர்களின் அழகு ததும்பும் அமைதியான நடிப்பும் இந்த படத்தையும் பல தடவை என்னை பார்க்க வைத்து விட்டது. மெய்சிலிர்க்க வைக்கும்  குரலில் பாடும் சரத் சந்தோஷ் அவர்களுக்கும் ஜானகி ஐயர் அவர்களுக்கும் (தெலுங்கு படத்தில் ஜானகி ஐயருக்கு  நிகராக பாடுவது பாடகி ஸ்ரீ நிதி அவர்கள்.) நன்றி. பாடலில் ஸ்ரீமன் நாராயணனை கண்ணெதிரில் நிற்க வைக்கும் இவர்களது (பாடகர்கள், நடிகர் நாகர்ஜூனா) திறமைகளுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன். இதில் ஸ்ரீபாலாஜியாக வருபவர் நாம் கண்ட இறுதியாக வந்த மகாபாரத தொடரில் ஸ்ரீ கிருஷ்ணராக வந்தவர். அப்படியே தெய்வீக களையுடன் இருக்கும் இவரைப் பார்க்கும் போது மனது நாராயணனின் மேல்  வைத்திருக்கும் பக்தியோடு ஒன்றிணைந்து சாட்சாத் அந்த இறைவனை காண்பது போல் திருப்தி கொண்டு விடுகிறது. இவரது அருள் சுரக்கும் அந்த தெய்வீக  நடிப்புக்கும் நன்றி 🙏. 

 

நன்றி கூகுள். 

இந்தப் பாடலை இப்போது எனக்காக கேட்கப் போகும் ( ஏற்கனவே இது நீங்கள் படம் பார்த்து பலமுறைகள்  கேட்டு ரசித்த  பாடலாகவும் இருக்கக் கூடும்.இருப்பினும் இப்போதும் கண்டிப்பாக கேட்பீர்கள் என நம்புகிறேன். )  உங்களனைவருக்கும் என் பணிவான நன்றி. 🙏. 

25 comments:

  1. பாடல்கள் கேட்டேன் ரசித்தேன்.  அப்புறம் விவரம் தேடியபோது படம் பெயர் வேறு போட்டிருந்தது.  அன்னமய்யா 97 ல் வெளி வந்திருக்கிறது.  அதில் அனுஷ் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்தமைக்கும் நல்லதொரு கருத்தை தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். அன்னமைய்யா அப்போது வெளி வந்ததுதான். இந்த படத்தின் பெயர் தமிழில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். தெலுங்கில் ஓம் நமோ வெங்கடேஸாயா. இதில்தான் அனுஷ்கா நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இரு மொழியிலும் பாடல்களுமே உள்ளம் உருக்குவதாக உள்ளது. படத்தின் பிற பாடல்களும் அருமையானவை. அதனால்தான் பகிர்ந்தேன். தங்கள் கருத்துக்கும் பாடல்களை கேட்டு ரசித்தமைக்கும் மீண்டும் என்னுடைய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பாடல்க்ளை ரசித்தேன் கமலாக்கா. இரண்டுமே ஒரே பாடல் வேறு வேறு சமயத்தில் வெளிவந்தவையோ?

    அன்னமயா பாடல்கள் எஸ்பிபி பாடி கேட்டதுண்டு. அதன் பின் மீண்டும் அப்படம் வந்ததா? முதல் காணொளி எஸ்பிபி..குரல் இல்லையா?

    இரண்டுமே ரசித்தேன் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். ஒரே படந்தான் முதலில் தெலுங்கிலும், பின் தமிழிலும் வந்திருக்கிறது. அதிலுள்ள பாடலும் ஒரே மாதிரிதான் ஒரே ராகத்தில் (மொழி வித்தியாசத்துடன்) உள்ளது.

      அன்னமாச்சாரியா என தெலுங்கில் வந்த படம் தமிழில் அதே நடிகர்களுடன் டப்பிங்காக அன்னமைய்யா என வந்தது. அதில் நிறைய பாடல்கள் எஸ். பி. பி அவர்கள் பாடியுள்ளார். அந்த பாடல்களும் மிகவும் பிரசித்தமானது. தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தப் படத்திலும் எஸ். பி.பி அவர்கள் இரு பாடல்கள் பாடியுள்ளார். இப்போது நான் பகிர்ந்த இந்த இரு மொழி பாடல்களிலும் சரத் சந்தோஷ் அவர்கள்தான் பாடியிருக்கிறார்.

      எனக்கு இந்தப்பாடல் படமும் மிகவும் பிடித்து விட்டது. நீங்களும் இரண்டையும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இன்றைக்கு என்னாச்சு... சுருக்கமான பதிவு? இன்றைக்கு பாடல்களைக் கேட்டுவிட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இன்றைக்கு என்னாச்சு... சுருக்கமான பதிவு? /

      ஹா.ஹா.ஹா. உங்களின் மன எண்ணங்களின் குரல் பாலாஜிக்கே கேட்டு விட்டது போலும். "அவனும்" நான் சுருக்கமான முறையில் பதிவை தர ஆணையிட்டு விட்டான். :) நானும் எழுதும் போதே உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். நல்ல விஷயம்தானே.. உடனே பாடல்களை கேட்டு விட்டு தந்த தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பாடல் பகிர்வுக்கு ரொம்பவே ஆச்சரியம் கலந்த நன்றி கமலா. இந்தப் படமோ/பாடலோ கேட்டதே இல்லை. நாகார்ஜுனா நடிச்சு அன்னமையா படம் தெலுங்கில் வந்திருந்தது என்பது மட்டும் தெரியும். பாடல்கள் கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பாடலை கேட்டு ரசித்து கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீங்களெல்லாம் முன்பே இந்தப்படத்தை ரசித்து, இதன் பாடல்களையும் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். அதனால் அதைப் பகிர கூட எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. அன்னமைய்யாவும், இந்த படமும் பார்க்கவே ரம்மியமாக பக்தி பூர்வமாக உள்ளது. முடிந்தால் யூடியூப்பில் பாருங்கள். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. //நீங்களெல்லாம் முன்பே இந்தப்படத்தை ரசித்து, இதன் பாடல்களையும் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். // திரைப்படம் போவதே அரிது. கூட்டுக்குடும்பத்தின் மூத்தமருமகள் ஆனதால் வீட்டில் எல்லா வேலைகளையும் நான் மட்டுமே செய்ய வேண்டும் என்னும் எழுதாத சட்டம் வேறே. இந்த அழகில் எங்கே இருந்து படங்கள் போவது? நாங்க படங்கள் திரை அரங்கில் பார்த்தவை மிகக் கு
      றைவு. பின்னாட்களில் ராணுவக் கன்டோன்மென்டில் ராணுவ வீரர்களுக்கு இலவசமாக வெள்ளி சனி ஞாயிறு நல்ல படங்கள் போடுவார்கள். அப்போ அநேகமா தினமும் பார்த்திருந்தாலும் எல்லாமும் ஹிந்தித் திரைப்படங்களே! ஓரிரு தமிழ்ப்படம்/தெலுங்கு/மலையாளப்படங்களும் அவ்வப்போது வரும். கன்னடப்படங்கள் வந்ததில்லை யாரும் கன்னடக்காரங்க இருந்திருக்க மாட்டாங்க போல! அதே போல் குஜராத்தியரும் அதிகம் ராணுவத்தில் கிடையாது. எல்லாருமே வியாபாரம் செய்வதில் தான் ஆர்வம்.

      Delete
    3. ஹிஹிஹி, படம் பார்த்ததில்லைனு சுருக்கமாச் சொல்ல வந்துட்டு வீட்டில் பேசிண்டு இருந்த விஷயங்களின் தாக்கமாக என்னென்னவோ சொல்லி இருக்கேன். இந்தப் படமெல்லாம் பார்த்தது இல்லை. அன்னமையா தெலுங்கில் வந்தது தெரியும். தமிழில் டப்பிங் செய்து வந்தது தெரியாது. தெரிஞ்சாலும் நான் எங்கே போய்ப் பார்த்திருக்கப் போறேன்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கு நன்றி.

      நாங்களும் திர்மணமானதிலிருந்தே அவ்வளவாக தியேட்டருக்கு சென்று படங்கள் பார்த்தது கிடையாது. என் கணவருக்கும் திரைப்படங்களின் மேல் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. நான் கடைசி எங்கள் வீட்டில் மருமகள் என்றாலும், குடும்பத்துக்கு மூத்த மருமகள் போலத்தான். எல்லா சுற்றங்களுக்கும் எங்களை பிடித்து போய் எங்கள் வீட்டுக்குத்தான் வரப்போக இருப்பார்கள். அதுவும் திருமணமான பத்து வருடங்களில் மூன்று குழந்தைகளும் பிறந்து விட்டமையால், குழந்தைகளை வளர்த்து, ஆளாக்குவதற்கே நேரம் சரியாக இருந்தது. நானும் அப்போதெல்லாம் தொலைக்காட்சியில்தான் ஞாயறன்று சில படங்களை பார்ப்பேன். பின் இந்த பத்து வருடங்களாக யூடியூப் மூலம் சில படங்களை பார்த்து ரசித்துள்ளேன். இப்போதும் வரும் எந்த புது படங்களை நான் பார்ப்பதே கிடையாது. அன்னமைய்யா படம் வந்த புதிதில் தெலுங்கு சேனலில் அடிக்கடி பார்த்துள்ளேன். அப்போது வந்த இராமாயண படம் (நயன்தாரா சீதையாக நடித்தது) அதுவும் நன்றாக இருக்குமென இரண்டு தடவைகள் பார்த்திருக்கிறேன். இந்த பதிவில் பகிர்ந்த படம் யூடியூப் பில் இப்போது ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் பார்த்தேன். அவ்வளவு நன்றாக பக்தி பரவசத்தோடு இருந்தது. அதை வீட்டில் சொன்னவுடன் "இந்தப் படம் வந்து ஐந்தாறு வருடங்கள் ஆகி விட்டனவே அம்மா... இப்போதுதான் நீ பார்க்கிறாயா? " என்கிறார்கள் குழந்தைகள். அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் நான் ஞானம் பெற்றவள். :) ) சமைப்பதும் சாப்பிடுவதிலுமே பொழுதுகள் போட்டி போட்டுக் கொண்டு பறக்கின்றன. இப்போது இந்த இணையத் தொடர்பினால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. அதை மட்டும் விடாமல் பிடித்தபடி உங்கள் அனைவருடனும் உலா வருகிறேன். தங்கள் கருத்துக்களையும் விபரமாக பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முதல் காணொளி சுற்றிக் கொண்டே இருக்கு. வரவே இல்லை. இரண்டாவது வந்தது. பாடல் கேட்டு ரசித்தேன். ரொம்ப நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இரு பாடல்களையும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. பாடல்களும், அதை எடுத்த விதமும் கேட்டு, பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. அதனால்தான் இரு மொழிகளிலும் உள்ள ஒரே பாடலை. தனித் தனியாக பகிர்ந்தேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இரண்டுமே ஒரே பாடல் அல்லவோ? முதல் காணொளியும் திறந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் இருபாடல்களும் ஒன்றேதான். தெலுங்கில் வந்த படந்தான் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
      முதல் காணொளி திறந்து அந்தப் பாடலையும் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பாடல்களை கேட்டு ரசித்தமைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்பவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பாடல்களை கேட்டு ரசித்து தந்த பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பாடல் நன்றாக இருக்கிறது. முதல் முறை கேட்கிறேன் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். பாடல் பக்தி பரவசம். மெய்யுருகி கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் கசிகிறது. அந்த அளவுக்கு நல்ல பாடல்.

      நீங்கள் இப்போதுதான் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கிறீர்களா? ஆச்சரியந்தான்.. இதற்கு முன்பே பல வருடங்களுக்கு முன்பே வந்த இந்தப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன். இங்கு பாடலை கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இந்த படம் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.
    பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
    அருமையான படம். பாடல்கள் நன்றாக இருக்கும்.
    இன்று மீண்டும் கேட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ. அப்படியா..ஆம்.. அருமையான படம். நீங்கள் பார்த்து ரசித்த படம், பாடல்கள் என்றாலும், இங்கு நான் பகிர்ந்ததை மீ்ண்டும் ரசித்து பார்த்து, கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அன்னமையா, பக்த ராம்தாஸ் இரண்டு படங்களிலும்
    நாகார்ஜூனா கொடி கட்டிப் பறந்திருப்பார்.. இரண்டையும் கலங்கிய கண்களுடன் தான் பார்த்தேன்..

    நாளைக்கு வருகின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் .. உண்மை. அவரது பக்தி படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பில் நம் மனதை கலங்க வைத்து விடுகின்றன. இந்த படமும் நம்மை கண்கலங்க வைக்கிறது.

      மீண்டும் வந்து கருத்துக்கள் தரப் போவதற்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இரண்டு பாடல்களும் சிறு மொழி வித்தியாசம் மட்டுமே ரசித்து கேட்டேன்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். மொழி வித்தியாசமே தவிர்த்து இரண்டுமே ராகங்களில், பக்தியில் ஒன்றே... . பாடல்கள் இரண்டையும் தாங்கள் ரசித்து கேட்டமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      இன்றுதான் தங்கள் கருத்துரையை பார்த்தேன். ஆகவே பதிலுரைக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete