பறங்கிக்காய் ..
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று சிகப்பு பூசணி
இதன் மருத்துவ குணங்கள்.
இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ.,ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
நன்றி ஆ. விகடன்.
இது நிறைய நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் உள்ளடக்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்திற்கும் நலம் பயக்கும் வண்ணம் இதன் பயன்கள் சிறந்து விளங்குகிறது.
இந்தப் பூசணியில் அந்தக்காலத்தில் தோல் நீக்கி, உள்ளிருக்கும் விதைகள்அடங்கிய பகுதியை நீக்கி, கெட்டியான காய் பகுதியை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அருகிலிருக்கும் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அற்புத உணவாக போகும். இல்லையென்றால் , குப்பைகளோடு மக்கி சிறந்த உரமாகிப் போகும்.
இந்த இடத்தில் அனைவருமே அறிந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தடவை விதுரர் இல்லத்திற்கு அவரைக் காண சென்ற போது, வந்த கிருஷ்ணரை அன்போடு வரவேற்று, அவருக்கு உண்ண வாழைப் பழங்களை விதுரர் உரித்து கொடுக்கலானார். கிருஷ்ணரின் அழகில், அவருடைய தேஜஸில் மெய்மறந்து அவருடன் பேசிக்கொண்டே உரித்தப் பழங்களை கீழே போட்டு விட்டு வெறும் தோலை மட்டும் கொடுக்க கிருஷ்ணரும் அதை அமிர்தமாய் உண்ணவே, ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து கண்ணீர் பெருகியோட விதுரர் மன்னிப்பு கேட்டதும், கிருஷ்ணர், "இதற்கெல்லாம் வருத்ப்படுகிறீர்களே..! கோகுலத்தில் வளர்ந்த போது, தாய் யசோதை பழங்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதன் தோல்களை எங்கள் ஆவினங்களுக்கு கொடுக்க, அது சுவைத்து உண்ணும் போது எனக்கும் அந்த தோல்களின்பால் மிகவும் ஆசை உண்டாயிற்று. ஒருநாளேனும் இப்படி தோல்களை மட்டும் சாப்பிடும் ஆசையை கட்டுக்குள் வைந்திருந்தேன். இன்றுதான் அந்த ஆசையும் உங்களால் நிறைவேறியது."என்றாராம்.
அப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தோல்களை சாப்பிட்டிருக்கும் போது, நாமெல்லாம் சாப்பிட கூடாதா என்ற எண்ணம் எவரோ ஒருவருக்கு வந்ததும் இந்த பூசணி தோல்களின் மகத்துவமும், அதனுள் இருக்கும். A. to. Z சக்திகளும், என் புத்தியிலும் பரவி விடவே அன்றிலிருந்து நானும் தோல்களை கால்நடைகளுக்கு தருவதில்லை. இரண்டாவதாக கால்நடைகளும், நான் சென்னை வந்த பின் வீட்டிற்கு அருகில் கூப்பிடு(ம்) தூரத்தில் கண்களுக்கு தென்படவுமில்லை.
அம்மா வீட்டில் இருந்த போது அருகில் ஒருவர் நிறைய ஆவினங்களை வளர்த்து வந்தார். அந்த ஆவினங்களுக்குதான், எங்கள் வீட்டிலிருந்து, தினமும் அரிசி அலம்பிய கழனி, சாதம் வடித்த கஞ்சி, சற்று சேதமாகும் பழங்கள்,காய்கறிகள், இந்த காய்கறிகளின் தோல்கள் என சத்துக்கள் பலவும் தானமாக போகும். பதிலுக்கு வாசல் தெளிக்க எச்சிலிட என பசுவின் சாணம் எங்களுக்கு பண்டமாற்றாக கிடைக்கும்..
சென்னை வந்த பின் வாடகைக்கு இருந்த ஒட்டு குடித்தனத்தில், ஆவினங்களை கண்ணில் காணாது, நீரிலிருந்து வடித்த சாதங்கள் என்று பிரிக்காமல், அரிசி வானெலி குக்கரில் கலவையாக சாதமாக, (அப்போதுதான் வெங்கலப்பானையில் சாதம் தவிர்த்து, வானெலி குக்கரில் சாதம் வைத்து சாப்பிட்டேன்.) அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில் கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.
அப்போது இந்த காய்கறிகளின் (சவ், சவ், சிகப்பு பூசணி பீர்க்கங்காய் ,) தோல்களும் , சுவையான உணவாகிப் போயின.( ஆனால் என்னைப் போன்றவர்களின் சேவைகளினால்தான் ஆவினங்கள் பிளாஸ்டிக் கவர்களின் மேல் நாட்டம் கொண்டு விட்டது என எவரேனும் குற்றம் கூறி விடாதீர்கள். ஹா. ஹா. ஹா.)
சரி.. நாம் இப்போது நம்மினங்களுக்கு இந்த பறங்கியின் முழு உபகாரத்தைப் பற்றி விளக்குகிறேன். இந்த காயை வாங்கி நன்றாக கழுவி, விட்டு, கொஞ்சம் தோலுடன் பட்டையாக எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் பகுதியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பாக்கியிருக்கும் கெட்டியான பகுதிகளை சிறு துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியான பாத்திரத்திலோ , இல்லை, கடாயிலோ சிம்மில் வைத்து சரியான பக்குவத்தில் வேக வைத்துக் கொள்ளவும். பூசணி நன்றாக வெந்து குழைந்து விட்டால் கூட்டு பார்ப்பதற்கு கூ(பா) ழாகி விடும். (அப்படியே பாழானாலும் விட மாட்டோம் அது வேறு விஷயம்...! ) அத்துடன் தேங்காய் துருவல், மி. வத்தல், சீரகம் ஒரு ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன், ஒரு ஈர்க்கு அலம்பிய கறிவேப்பிலை அத்தனையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும், அரை ஸ்பூன் அரிசி மாவு கலந்து விட்டு, மற்றொரு கொதி வந்ததும், ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கடுகு, உ. ப தாளித்து கூட்டாகிய அதில் கொட்டி இறக்கினால், அந்த கூட்டின் வாசனைக்கு, வானத்து தேவர்கள், (பொதுவாக வானத்தில்தான் தேவர்கள் உள்ளதாக எத்தனைப் படங்களில் தவறாது பார்த்திருக்கிறோம். :) ) "இங்குதான் நாம் விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை உணரலாம்.
பின் வேறு ஒரு கடாயில், மி. வத்தல் நான்கைந்து, ஒரு ஸ்பூன் கடுகு, தலா உ. ப, க. ப ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, கோலி அளவு புளி, தேவையான உப்புடன், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு நாம் மேலே ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும், பறங்கிக்காயின் தோல் +உள்ளிருக்கும் விதைகள் அடங்கியப் பகுதியையும் சேர்த்து அரைத்து எடுத்தால், பறங்கித்துவையல் தயார்.
சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த துவையலை கலந்து கொண்டு அந்தப் பறங்கி கூட்டையும் தொட்டுக்கொண்டபடி டூ இன் ஒன் பாணியில், சாப்பிடும் போது, இதற்கு நிகர் இதுவே எனத் தோன்றும்.
இந்த இடத்திலும் நாயன்மாரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதுவும் யாவரும் அறிந்த கதைதான்.
இளையான்குடி மாற நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர். செல்வந்தராக இருந்த போது தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்து பெருமகிழ்ச்சியடைந்த வந்த அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த எண்ணம் கொண்ட சிவனாரின் லீலைகளினால், அவர் வறுமைப் பிடியில், சிக்கியப்போதும், தினமும் ஒரு அடியார்காவது எப்படியோ உணவளித்து சிவத் தொண்டாற்றி வந்தார்.
அப்போது விடாது பெய்யும் ஒரு அடைமழை காலத்தில் ஒரு நாள் காலை தொடங்கி இரவு வரை சிவனடியார் எவரையும் காணாது. அதனால் தானும், தன் மனைவியும் எதுவும் உண்ணாது, விசனத்துடன் சிவநாமத்தைச் சொல்லி உறங்க எண்ணிய போது, சிவனே ஒரு அடியவர் கோலத்தில். மழையில் நனைந்தபடி, அவர் இல்லத்தை அணுகி, "பசிக்கிறது உணவு ஏதேனும் கொடு" என்றவுடன் பதறி எழுந்தார்.
அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து மாற்று உடுப்பு தந்து உபசரித்த பின், இரவில் அவர் பசி போக்க என்ன தயாரிப்பது என்ற கவலையில், மழையில் நனைந்தபடி ஓடி, தன் வயலில் அன்று மதியம் விதைத்த செந்நெல் விதைகளையும், வளர்ந்து மழையில் சாய்ந்திருந்த கீரைகளையும் சேறோடு மிதந்து கொண்டிருந்ததை திரட்டி/பறித்து வந்து தம் மனைவியிடம் தந்ததும், அந்த அம்மையார், பொறுமையாக அடுப்பெரிக்க விறகில்லாமலிருந்தும், வீட்டின் மேற்கூரையின் ஓலைகளை பிரித்தெடுத்து அதைக் கொண்டு அடுப்பெரித்து, தன் கணவர் கொண்டு வந்து தந்த நெல் விதைகளையும், நீரால் சுத்தம் செய்து உரலில் குத்தி அரிசியாக்கி, கீரைகளை ஆய்ந்து விதவிதமான வகைகளில், அறு சுவையோடு சமைத்தார். அத்தனையும் விரைவில் முடித்து அன்போடு சிவனடியாருக்கு உணவு படைத்தவுடன், அவர்களது அன்பைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் உமாதேவி சகிதம் காட்சி தந்து, இளையான்குடி மாற நாயனாரையும், அவர் மனைவியையும், தம்முடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார்.
இப்படி ஒரே காயை வைத்து பல விதமாக செய்யும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து வீட்டில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் முன்னதாக கூறிய சிவனடியார் கதையில் பலன் ஏதும் எதிர்பாராத அன்பு மட்டுந்தான் கலந்திருந்தது. நான் செய்வதில், சோம்பேறித்தனம் கஞ்சத்தனம், எப்படி உள்ளதென அனைவரும் சிலாகித்து பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் குணம் இப்படி பலதும் உள்ளதெனவும் கூறிக் கொள்வேன்.
இன்று உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு பூசணி பதிவையும் போட்டு விட்டேன். கண்டு, ரசித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏 .