Pages

Sunday, February 16, 2020

மலரும் நினைவுகள்...

அவள் தன் இரண்டாவது பிரசவத்திற்கு தாய் வீடு வந்திருந்தாள். வந்த ஒரு மாதத்தில் தன் அண்ணனின் குழந்தைகளுடன், தன் மூன்றே வயதான மூத்த குழந்தையும் சேர்ந்து விளையாடி மனம் ஒத்து இருப்பதை பார்க்க அவளுக்கு  மகிழ்வாக இருந்தது.

பிறந்ததிலிருந்து தன்னை விட்டு  ஒரு நிமிடம் கூட அகலாது இருந்த குழந்தையவன்...!  தான் பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை விட்டு எப்படி தனித்திருக்கப் போகிறான் என்று கவலைப்பட்டே நாட்களை கழித்தது  இப்போது  கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது. இப்போது அவர்களுடன் உணவு உண்டு, விளையாடி, படுத்துறங்கி பார்க்கும்  போது, அந்த உற்சாகத்தில் தன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்திருக்க சம்மதிப்பான் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது.

ஒரு நாள் அன்று குடும்பத்தில் அனைவரும்  மாலைக்கு மேல் இரவு சூழ்ந்த ஒரு நேரத்தில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், பல வித பேச்சின் நடுவே இனிப்புக்களைப் பற்றியும் பேச்சு வந்தது. அவளுக்கு திருமணமான இந்த ஐந்து வருடத்தில் புகுந்த  வீட்டில்,  இரண்டு மூன்று தடவைகளுக்கு மேலாகவே தனக்கு அழகாக சுவையாக செய்ய வந்த, மைசூர்பாகின் நினைவு வர, அதைப்பற்றி பேச்சு திரும்பியது.

"அம்மா, நான் இப்போதே இந்த ஸ்வீட் செய்து உங்கள் எல்லோருக்கும் தருகிறேன். நான் இங்கிருக்கும் போதும் சரி....,, அங்கே போன பின்பும்,, என் கைப்பட செய்து  அதை செய்து உங்களுக்கெல்லாம் தர நேரமே வாய்த்ததேயில்லையே...  இப்போதுதான் அதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன்." என்றதும் முதலில் எதிர்ப்பு அம்மாவிடத்திலிருந்துதான்  வந்தது.

"இப்போதா? போடி போ.. பிள்ளைதாச்சி பொண்ணு. அடுப்பாங்கரையிலே போய் நின்னுகிட்டு.. வேறே வேலையில்லையா ? அப்படி ஆசைபட்டாலும், குழந்தை பிறந்த பின் பார்த்துக் கொள்ளலாம்.." என்றார் அம்மா.

" இப்ப என்ன அவசரம்? அதுவும் இந்த இரவு நேரத்தில்..! . அம்மா சொல்வதை கேள்.. நீ நல்லபடியா குழந்தை பெத்து வந்தவுடன் நீ  உன் புகுந்த வீட்டுக்கு திரும்பி போறதுகுள்ளே பண்ணிண்டா போச்சு..! நிறை மாசமா வாயும் வயிறுமா இருக்கறச்சே இப்ப  போய் இதுக்கெல்லாம் ஆசைப்படாதே..! என்று உடன், அம்மாவை பெற்ற பாட்டியும் சேர்ந்து கொண்டார்.

"ஒரு செயலை செய்வதற்கு பிறர்  உதவியாக இருந்தால், அந்த செயல் அந்த பிறரின் தூண்டுதலினாலும், இறைவன் அருளாலும்  நன்றாக  வெற்றிகரமாக உடனே நடக்கும். ஆனால் வேண்டாமென தடுக்கும் போது செய்ய வேண்டுமென்ற ஒரு விதமான வறட்டுப் பிடிவாதம் மனதுக்குள் உறுதிப்படுவது மனித சுபாவங்களில் ஒன்று... "  என்பது அவள்  அறிந்திருந்தாலும்,  அவள் மனதிலும் அந்த எண்ணம் ஏனோ சற்று கூடுதலாகவே நின்று வலுப்பெற்றது.

அவள் பொதுவாகவே தன்னுடைய கோபதாபம், வருத்தங்கள், பிறரைப்பற்றிய கருத்துக்கள், எதையும் வெளிக்காட்டாதபடி பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றபடி. அவர்கள் பேச்சை தட்டாமல் மரியாதையாக, பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, வாழ்ந்து/வாழ பழக்கப்பட்டவள். (அவ்வளவு நல்லவளா இவள் என ஆச்சரியப்பட்டு விட்டு கதை முடிவில் கோபப்பட்டும் விடாதீர்கள். அப்புறம் " ரொம்ப நல்லவங்கன்னு  என்னை சொல்லிட்டாங்களேன்னு" வடிவேலுக்கு இணையாக  அவளும் அழுது விடுவாள்.) ஏதோ சுமாரான வகையில் தான் நல்லவள் என்ற மனத்திருப்தியை அடைபவள்.

" பாட்டி.. அதுதான் ஆசைப்படுகிறேன் என்று புரிந்து கொண்டாயே? இந்த மாதிரி நேரத்தில் ஆசைப்படுவதை நிறைவேற்றவில்லையென்றால், பிறக்கும் குழந்தையின் காதில் சீழ் வடியும் என கூறியிருக்கிறாயே..! என குழந்தைக்கு அப்படியொரு நிகழ்வு வரவேண்டுமா? அதனால் அந்த ஸ்வீட்ஸை இப்பவே செய்யத்தான்  போகிறேன். இப்போது இன்னமும் இரவு வரவில்லை. ஏழு மணிதானே ஆகிறது. ஒரு அரைமணியில் செய்து விடலாம்."  அவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.

இப்போது இடையில் அங்கிருந்து அவர்கள் பேச்சுக்களை கேட்டவாறு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த அவளுடைய மன்னி "நீதான்  அம்மா சொல்வதை கேளேன்.... உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறார்கள். இதோ சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. உன் உடம்பு இருக்கும் நிலையில் இப்போ எதுக்கு வேலையை இழுத்து வச்சிகிட்டு...! உனக்கு வாய்க்கு இனிப்பு சாப்பிட வேண்டும் போல் இருந்தால், நாளை காலையில் நாங்கள் செய்து தருகிறோம்.  உங்கள் அம்மா இதைச் செய்வதில் நிறைய அனுபவஸ்தர் என்று உனக்குத் தெரியாதா? ஏன்...உன் அண்ணா நினைத்தால், உன் அண்ணாவே காலையில் எழுந்தவுடன் செய்து முடித்து தான் செய்த இந்த இனிப்புடன்தான் உன்னையே எழுப்புவார்....அவ்வளவு சீக்கிரமாக உனக்கு வேண்டியது கிடைக்கும். நீயே ஏன் கஷடப்படனுமின்னு நினைக்கிறே?...என தன் பங்குக்கு அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தார்.

"இல்லை மன்னி.. நான் கற்று கொண்டதை நானே தனியாக செய்து, உங்கள் அனைவருக்கும் கொடுத்து அதை நீங்கள் பாராட்ட வேண்டுமென ரொம்ப நாட்களாக ஆசைபட்டுக் கொண்டிருந்தேன். புகுந்த வீட்டிலிருந்து வரும் போது எதையும் செய்து எடுத்து வர முடியாத சூழ்நிலைகள்.  இன்று என்னவோ இந்தப் பேச்சு வந்ததும் உடனே செய்யலாம் என்று தோன்றியது. நாளை குழந்தை பிறந்து விட்டால், பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு ஏன் இந்த வேலை எனக் கேட்பீர்கள். அப்புறம் நான குழந்தைகளோடு ஊருக்கு சென்று விட்டால் என நினைவுகளில் இது எப்போதும் தங்கி விடும். மறுபடியும் நான் எப்போ இங்கு வருவேனோ? உணர்ச்சியுடன் பேசியதில் குரல் கம்மியது அவளுக்கு.

இந்த வாக்குவாதங்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் அண்ணன் "என்ன இப்போ.. நீ செய்ய வேண்டும் அவ்வளவுதானே...!  இந்த கடலைமாவு, நெய் வீட்டில் போதுமானவை இல்லை என நினைக்கிறேன். இதோ நான் சென்று கடையில் வாங்கி வருகிறேன் என கடைத்தெருவுக்கு கிளம்ப அவள் கண்களில் நீர் தளும்பியது.  இருந்தாலும் சமாளித்துக்கொண்டு" நான் செய்யும் போது என்னிடமிருக்கும் பணத்தைப் போட்டு சாமான் வாங்கினால்தான் நான் செஞ்ச மாதிரி எனக்கும் திருப்தியாக இருக்கும்." என்றபடி தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவள் அவசரமாக அண்ணனிடம் தரப் போக, "இப்போ நான் வாங்கி வரவா....  இல்லை, உன்னிடமிருக்கும் பணத்தைக் கொண்டு நாளைக் காலையிலேயே வாங்கலாமா?" என அண்ணன் சிரிப்புடன் வேண்டுமென்றே  மிரட்ட, அவளும், மன்னியும் சிரித்தார்கள்.

அந்த சிற்றூரில் பலசரக்கு கடைகள் அப்போதெல்லாம் இரவு எட்டு மணிக்குள்  அடைத்து விடுவார்கள். அனேகமாக இரவு பத்து மணிக்குள் ஆள் நடமாட்டங்கள் அடங்கி விடும்.

பிரசவம் பார்க்க டவுனில் இருக்கும்  டாக்டரிடரின் மருத்துவ மனைக்கு செல்லக்கூட அந்த நேரத்தில் உள்ளூரிலிருக்கும் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் டவுனுக்கு சென்று ஆட்டோவோ, டாக்ஸியோ  பிடித்து கொண்டு வந்து அதில் ஏறிச் செல்ல வேண்டும். பகல் நேரத்தில்தான் குழந்தை பிறக்க  வலி வர வேண்டுமென நாங்கள் வேண்டாத தெய்வமில்லை என்று கூடச் சொல்லலாம்.

ஒரு வழியாக அந்த சின்ன ஊரிலிருந்து "மைசூருக்கு" சுற்றுலா செல்ல சிரமப்பட்டு டிக்கெட் எடுப்பது போல், மைசூர்பாகு என்ற அந்த இனிப்புக்கும், பல விவாதங்களுக்கு பின்அதன் பொருத்தமான சாமான்கள் வர, அவள் ஆர்வத்துடன் செய்ய தயாரானாள் .

மறுபடியும் தடை போட்டது அம்மாவன் குரல்.
"சொல்றதை கேளடி.  . நாளை காலை எழுந்தவுடன் பண்ணு. இப்போ ராத்திரி நேரம் தீடிரென கரண்ட் போகும். வரும். ஏன் இப்படி சிரமபடுறே." என அன்போடு மறுபடியும் எச்சரிக்க..."

"போம்மா..! அதற்குள் குழந்தை பிறந்து விட்டால் நான் எப்படி செய்வதாம்?  இப்படி எல்லாமும் கையருகே வந்தும் தடை போட்டால் எப்படிம்மா!..? என்று அவள் தன் ஆதங்கத்தை காட்ட... "

" அதற்குள் ஒன்றும பிறக்காது.. இன்னும் நாள் இருக்கு. .. என் கணக்குப்படியே நாள் இந்த மாதம் கடைசி வரைப் போகும்... டாக்டர் சொன்ன கணக்கும் அடுத்த வாரத்துக்கு மேல்தான்...  ... என்று அம்மா விடாமல் பேச..."

கடைசியில் அனைவரின் விருப்பப்படி அம்மாதான் வென்றார். இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு பெரிய கூடத்தில், அனைவரும் படுக்க ஆரம்பித்தனர். அவளும் நாளை காலையில் எழுந்ததும் இனிப்பை செய்ய வேண்டுமென மனதுக்குள் ஒத்திகை பார்த்த வண்ணம் உறங்க யத்தனித்தாள்.

இரவு இரண்டு மணிக்கு யாரோ இடுப்பில் சாட்டையால் அடிப்பது போன்ற உணர்வு வர விழித்தவள், மேற்கொண்டு வந்து விழுந்த அடிகளில் எழுந்து அமர்ந்தாள். நன்றாக அயர்ந்து தூங்கும் அம்மா, பாட்டியை எழுப்ப மனம் வரவில்லை. ஆனாலும், அவள் மனதுக்குள் வலியையும் மீறி அவள் மனதில்  இப்படி ஒரு எண்ணம்  தலை தூக்கியது. "எப்படி நினைத்ததை முடிக்கப் போகிறோம்?" 

"நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் வேறொன்றை நினைக்கும்." என்ற பழமொழி மாதிரி, ஆகி விட்டதே...! அனைவரும் எழுந்து விட்டால், அக்கம் பக்கமும் விழித்து விட்டால், "ஸ்வீட் பண்ணுவதற்கு இதுவா நேரம்? " என்ற கண்டிப்பு காட்டி, டவுனுக்குச் சென்று ஆட்டோ அழைத்து வந்து மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுவார்களே...   அப்புறம் எப்போது  செய்வது?  நேற்று மாலையெல்லாம்் பேசிய மாதிரியே ஆகிவிட்டதே என மனம் கலங்கிய போது வலிகள் வேறு தாக்க ஆரம்பித்தது.

மெதுவாக பாட்டியை எழுப்பி சொன்னவுடன் பதற்றத்துடன் எழுந்து, சீரக கஷாயம் போட்டுக் கொடுத்தார்கள். அது பொய் வலி என்றால் காட்டிக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை வயதில் பெரியவர்களுக்கு உண்டு. ஆனால் திருப்பியும். ஒரு மணி நேரத்தில். "தான் உண்மை வலிகள்தான்" என்று வந்த வலிகள் மெய்பித்தன.

அதற்குள் அம்மாவும் உறக்கம் கலைந்த எழ விபரம் அறிந்து சமையல் வேலைகளை ஆரம்பித்தார்கள். ஆறு மணியானதும்  அண்ணா சென்று  ஆட்டோ அழைத்து வந்து எட்டு மணிக்குள் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என அம்மாவும், பாட்டியும் பேசிக் கொண்டார்கள். அவள் மெதுவாக "அம்மா... எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. பிள்ளை பிறப்பு மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு சதாரண இனிப்புத்தான்.  ஆனால் அதைக்கூட நினைத்ததை செய்யாமல், போகிறோனோ எனத் தோன்றுகிறது. மறுபடி நாமெல்லோரும் ஒரே குடும்பமாக பிறப்போமா? என்ற போது  மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அம்மா சட்டென ஒரு முடிவுடன், "சரி..! இப்போ என்ன..!   இடுப்பு வலிதானே ஆரம்பித்திருக்கிறது. நீ சட்டென ஒரு வெந்நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு உன் விருப்பப்படி ஸ்வீடை பண்ணு. அண்ணா, மன்னி எழுந்து விட்டால் வேண்டாம்.. .! கூடாது.. ! என தடுத்து விடுவார்கள்.... சீக்கிரம் ஆரம்பி....! என உத்தரவு கொடுக்க பாட்டி பாசத்தில் பதறிப்போய் வேண்டாம் என தடுக்க,

அவள் மடமடவென அம்மாவின் உத்தரவு கிடைத்ததை ஆண்டவனின் உத்தரவாக  எடுத்துக்கொண்டு, வலிகளின் நடுவே குளித்து, ஆண்டவனை தொழுது விட்டு இனிப்பை அரைமணியில் அவள் விருப்பப்படியே செய்ய ஆரம்பித்தாள். நடுநடுவே வலிகளின் தாக்கம்  அதிகரிக்க, சமையல் மேடையை இறுக பிடித்தபடி அவள் நின்றதை பார்த்த பாட்டி "என்னவோ போ...! இப்படி ஒரு பிடிவாத குழந்தையா? உன் அம்மாவும் உனக்கு இப்படி சிபாரிசு செய்கிறாளே ..! என்னால் பார்க்க கூட முடியவில்லையே...!" என புலம்பி தவிக்க,

அவள் வெற்றிகரமாக மைசூர் பாகை கிண்டி தட்டில் கொட்டி, வெட்டி துண்டுகளாக்கி, கடவுளுக்கு படைத்து விட்டு காடாயில்  ஒட்டிக் கொண்டிருந்த பொடிகளை சுரண்டி எடுத்துவைத்து விட்டு" பாட்டி நீ ஒரு துண்டு வாயில் போட்டு பார்.. இனிப்பு சரியாக  வந்திருக்கிறதா என்று சொல்.லு.." என்று அவள் தந்த போது அவள் முகத்தில் தெரிந்த வலிகளின் களைப்பை உணர்ந்த பாட்டிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது. "என் கண்ணே... எத்தனை மன உரம், எதையும் தாங்கும் தைரியம், உனக்கு..! ஆண்டவன்  உன்னை நல்லா வைத்திருப்பான்.. " என்று ஆசிகூறியபடி கண்ணீர் மல்கியபடி அவளை அரவணைத்துக் கொண்டாள்.

அம்மாவும் அழுதபடி அவளைக் கட்டிக் கொண்டார். "இவள் சொன்ன ஒரு வார்த்தைக்குத்தான் நான் இந்த நிலைமையில், அடுப்படியில் நிற்க சம்மதித்தேன். நேற்றே அவள் செய்ய  விடாமல் நான் தடுத்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை அவ்வாறு சம்மதிக்க வைத்தது...! நான் நினைத்தது ஒன்று.. அதற்குள் இப்படி வலி வருமென நினைத்தோமா? மழைப் பேறும், பிள்ளை பேறும் மகேசனுக்குத்தான் தெரியும் என்பது போல இன்றைக்கே வலி வந்து விட்டதே....! எனப் பாட்டியிடம் கூறியபடி கண்கலங்க,

 அவள் "எப்படியோ என் ஆசையை உங்களால் நிறைவேத்தி விட்டேன். "என நன்றியோடு தழுதழுக்க,

பேச்சு குரல்கள் கேட்டு ஐந்து மணியளவில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த அண்ணா, மன்னி, அப்பா அனைவரும் எப்படி இத்தனை வலிகளை தாங்கி கொண்டு, இப்படி ஒரு செயல் அவசியமா? என கோபப்பட, இல்லை.. ஆச்சரியப்பட, இல்லை,.. அம்மா பாட்டியைப் போல அனுதாபபடக் கூட அன்றைய அவசர காலம் அனுமதிக்கவில்லை..

பிறகு அவசரமாக ஆட்டோ வசதியைப் பெற்று வலியில் அவஸ்தை படும் அவளை மருத்துவ மனையில் சேர்க்கும் போது மணி ஒன்பது. அன்று பகல் ஒரு மணிக்கு அழகான ஆண் குழந்தை அவளுக்கு பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன், நான்கைந்து மணி நேரத்தில்,அவளை  நலம் விசாரிக்க அவளிருந்த அறைக்குள் வந்த அண்ணா, மன்னி, அப்பாவிடம், "ஸ்வீட் சாப்பிட்டீர்களா? எப்படி இருந்தது.? என்றுதான் முதலில் கேட்டாள். "நாங்கள் சாப்பிட்டோம்.... நீதான் சிறிதும்  சுவைக்க  கூட முடியாமல் உடனே இங்கு வர வேண்டியதாயிற்று... என அண்ணா, மன்னி அங்கலாயித்தனர் . அனைவரும்  கொஞ்ச நாள் வரை அந்த குழந்தையை" ஸ்வீட் பேபி" என்றுதான் அழைத்தாரகள்.

நிறைய வருடங்கள் அந்த நிகழ்வு அவள் தாய் வீட்டில் அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இப்போதும் பேசப்படுகிறது. வரும் போதே அம்மா மூலமாக ஸ்வீட் தந்து கொண்டே பிறந்தவன் என்று சொல்லி மகிழ்ந்தார்கள் .

இந்த அவள் வேறு யாருமல்ல.. சாட்சாத் நானேதான்....! இன்று பிப்ரவரி பதினாறாம் நாளாகிய  (16) இன்று பிறந்த நாள் காணும் என் இரண்டாவது மகனுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள் மட்டுமின்றிி வலைத்தள உறவுகளும் வாழ்த்த வேண்டுமென்பதற்காக, அவர் பிறந்த அன்று நடந்த நிகழ்வினை எங்கள் குடும்பத்தில், இப்போதும் நாங்களும் அடிக்கடி பேசி மகிழும் நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். 

அன்று என் அம்மா மட்டும் துணிச்சலாக என்னை "இனிப்பை செய்" என சொல்லவில்லையென்றால் இந்த மலரும் நினைவுகள் என் வாழ்வில் இடமே பிடித்திருக்காது.... அவர்களுக்கு என் வாழ்நாள் உள்ளவரை நன்றிகளை கூறிக் கொண்டேயிருப்பேன். 🙏. 

 தன் அம்மா இனிப்பை செய்து விடவேண்டி காத்திருந்து பிறந்த என் மகனுக்கு  இனிப்பென்றால் அவ்வளவு கொள்ளை பிரியம். நானும் வருடந்தோறும் அவர் பிறந்த நாளுக்கு ஏதாவது  இனிப்பு செய்து விடுவேன். பாயாசம் தவறாது வைத்து விடுவேன். இல்லை... கடையிலிருந்தாவது ஏதாவது ஸ்வீட்ஸ் வாங்கி விடுவோம். இந்த தடவை அதை மிஸ் செய்கிறேன். 

இந்த தடவை அவர் இங்கில்லாமல், வெளிநாட்டிலிருப்பதால், எங்கள் அன்பான வாழ்த்துக்களுடன், இந்தப் பதிவும், இதைப் படித்து  மனமாற வாழ்த்துரைக்கும் உங்களது வாழ்த்துக்களுந்தான்  அவருக்கு என் சார்பில் மாபெரும் தின்ன தின்ன திகட்டாத இனிப்புக்கள்... 

இது அப்போது பண்ணியதும் அல்ல.... 
இப்போதும் பண்ணியதும் அல்ல......
இடையில் எப்போதோ பண்ணியது.
இனிப்பான ஒரு படத்துக்காக இங்கு 
பங்கேற்க வந்துள்ளது.. 


இது என் மகனின்  மனைவி  (என் மருமகள்) என் மகனுக்கு பிடித்தமான அவர் இன்று விரும்பி கேட்ட இந்த  வெல்லச்சீடையை இன்று அவர் பிறந்த நாளுக்காக செய்ததை எங்களுக்கும்  அனுப்பியிருக்கிறார். (படமாக) நீங்களும் கை நிறைய சீடைகளை எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்துங்கள் என அன்போடு  கேட்டுக் கொள்கிறேன். 


இதைப் படிக்கும் அனைவருக்கும் என் சார்பிலும் என மகன், மருமகள் சார்பிலும் நன்றி..... நன்றி....நன்றி.... 🙏. 🙏. 🙏. 



53 comments:

  1. ஆரம்பத்திலேயே அந்தப் பெண் நீங்கள் தான் எனப் புரிந்து விட்டது. இக்காலப் பெண்களுக்கு உங்களுடைய இந்த மனோ பலம் பார்ப்பதற்கும்/கேட்பதற்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கும். ஆனால் 40 வருடங்கள் முன் வரை கூடப் பெண்கள் மனோபலத்துடன், உடல்பலமும் கூடி எதையும் தாங்கும் சக்தியுடன் இருந்தார்கள். இப்போதைய பெண்களால் இதை எல்லாம் நம்புவதோ, நினைத்துப் பார்ப்பதோ கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதலில் உடனடியாக தந்த வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
      தங்கள் கருத்துகள் உண்மைதான். நமக்கும் முந்தைய காலத்தில் நம் அம்மா, பாட்டி என அவர்கள் குடும்பத்துக்கு கொடுத்த உழைப்பை நம்மால் தர இயலவில்லை. அவர்கள் இன்னமும் மன திடத்துடன், உடல் பலத்துடன் இருந்தார்கள். ஆனால் இப்போதைய காலகட்ட பெண்களும் படித்து வேலைக்கு அதிகம் செல்வதால் வெளியுலக பிரச்சனைகளை மதிநுட்பத்துடன் சிறப்பாக செயலாற்ற மிகவும் மன தைரியம் பெற்றவர்கள். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. உங்கள் இளைய மகனுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். விரைவில் அவர் உங்களையும் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லுவது போல் அமையட்டும். மருமகள் வெல்லச்சீடைகள் அருமையாகச் செய்திருக்கிறார். இந்தக் காலத்துப் பெண்ணாக இருந்தாலும் பாரம்பரிய இனிப்பு நன்றாகச் செய்ய வருகிறது என்பது அதிசயமே. அவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் மகனுக்கு தாங்கள் அளித்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
      தங்கள் வாக்கும் விரைவில் பலிக்கட்டும். மருமகள் செய்த வெல்லச்சீடைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டியமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். அவர் நன்கு சமையல் செய்ய தெரிந்தவர்தான். அவர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் உடனே வந்து தந்த அருமையான கருத்துக்களுக்கு மிகுந்த் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நமஸ்காரம். அழகான நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி. இந்தக்கதையில் மிகவும் பிடித்தது உங்களது வைராக்கியம் �� மற்றும் அந்த ஸ்வீட் பாய் ��
    இப்படிக்கு உங்கள் ஆசை மருமகள் ��

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். வாங்க.. வாங்க

      என்னுடைய அன்பான ஆசிர்வாதங்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு. என்னுடைய பதிவுக்கு வந்த பதிவில் என்னை பாராட்டியமைக்கு மிக்க நன்றி. மேலும் "ஸ்வீட் பாயை" உங்களுக்கு மிகவும் பிடித்ததினால்தான் என்னுடைய ஆசை மருமகள் பட்டமும் உங்களுக்கு கிடைத்தது. சரியா? ஹா. ஹா. ஹா.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பெயர் கொடுக்காமல் தொடங்கியபோதே சந்தேகம் வந்து விட்டது.   நீங்கள்தான் அது என்று தெரிந்த உடன் ஒருஇனிய மகிழ்ச்சி.  உங்கள் இளைய மகனுக்கு எங்கள் வாழ்த்துகள்.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      முதலிலிருந்தே பெயர் கொடுக்காமலே பதிவை எழுதியும் தங்களுக்கு சந்தேகம் வந்து விட்டதா? ஆச்சரியமாக உள்ளது. நான் மிகவும் திறமையாக எழுதுகிறேன் என்றல்லவா நினைத்தேன். ஹா. ஹா. ஹா. ஆனால் கண்டு பிடித்த தங்கள் திறமைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

      என் இளைய மகனுக்கு நீங்கள் தந்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவரிடம் தங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அந்தக் காலத்தில் வண்டி கிடைப்பது மிகவும் சிரமம் என்பது தெரிந்தும் ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள்.  சாதித்தும் விட்டீர்கள். அன்பான அண்ணன், அண்ணி. அம்மா, பாட்டி வாய்த்திருக்கிறார்கள் உங்களுக்கு.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. அந்த காலத்தில் இப்போது போல் செளகரியங்கள் நிறையவே குறைவு. இப்போது உள்ளங்கைகளின் உபயோகத்தினால் நம் சொந்த வண்டிகள் மட்டுமில்லாது நாம் அழைக்கும் இதர வண்டிகளும் ஒடுகின்றன. அப்போது ஃபோன்களும் நம் நடுத்தர குடும்பங்களில் அவ்வளவாக பிரசித்தமாகவில்லை. ஆனால் குடும்ப ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் துணை என்ற பக்க பலமும் நம்மை வழி நடத்திச் சென்றன.

      அன்பான உறவுகள் எனக்கு கிடைத்திருப்பதில்,அப்போதும் சரி, இப்போதும் சரி நான் மிகவும் ஆனந்தப்படுகிறேன். நன்றி என்னைப் படைத்த இறைவனுக்கும். தங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. என் இளைய மகன் பிறந்த நேரம் இரவு பனிரெண்டுமணிக்கு பாஸுக்கு வலி வந்தது. அப்படி அந்த நேரத்தில் வலி வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தபோதும்!  இரவு அலைந்து திரிந்து ஆட்டோ பிடித்தோம்.  அந்த நினைவு வந்தது!

    ReplyDelete
    Replies
    1. அங்க ப்ப்ளிஷ் பண்ணாமல் சஞ்சாரம் ஏனோ?

      Delete
    2. இன்னும் இரண்டு நிமிடங்களில்....!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /என் இளைய மகன் பிறந்த நேரம் இரவு பனிரெண்டுமணிக்கு பாஸுக்கு வலி வந்தது. அப்படி அந்த நேரத்தில் வலி வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தபோதும்! /

      அந்த நேரத்தில் வலி கண்டது கஸ்டமாகத்தான் இருக்கும். அவர்களுக்கும், உங்களுக்கும் ஒரு வித பதற்றம் வேறு வரும் போது, ஆட்டோவும் கிடைக்கவில்லையென்றால் கடினந்தான். ஆஸ்பத்திரியில் சேர்த்து நல்லபடியாக குழந்தை பிறந்த சேதி கேட்டதும் தான் மனதிற்கு நிம்மதி வரும்.
      என் பதிவு தங்கள் மலரும் நினைவுகளையும் கொண்டு வந்தது குறித்து மகிழ்ச்சி. கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் டயத்தை கவனித்துக் கொண்டேதான் சஞ்சாரங்களில் உள்ளார். தாங்களும் அவர் சஞ்சாரத்துடன் அவரருகிலேயே இருந்து என் பதிவுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதெல்லாமே அந்த ஐந்து முப்பதை அவர் தவற விட்டதேயில்லை. சேர்ந்தே வந்த இருவருக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நல்ல ஒரு மலரும் நினைவு. இரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    உங்கள் மகனுக்கு வாழ்த்துகள். இன்னும் சீரும் சிறப்புமாக வாழட்டும்.

    வெல்லச்சீடை எனக்கு ஶ்ரீஜெயந்தி நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      பதிவை ரசனையுடன் படித்துப் பார்த்து தந்த கருத்துக்களுக்கு மன மகிழ்ச்சி அடைந்தேன்.
      என் மகனுக்கு தந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /வெல்லச்சீடை எனக்கு ஶ்ரீஜெயந்தி நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது./

      ஹா. ஹா. ஹா. நானும் அதைத்தான் என் மகனிடம் சொன்னேன். கிருஷ்ணன் பிறந்த நாளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டாயேயென்று...ஆனால் அவர் சாட்சாத் பகவான் கிருஷ்ணனின் பிரியமான சீடர்.. அதனால் தன பிறந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமானதை செய்து நிவேதனம் செய்திருக்கிறார். அவ்வளவுதான்..! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வணக்கம் அனைவருக்கும்.

    நீங்கள் அனைவரும் வந்து என் மகனை வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்கும், என் மனமார்ந்த நன்றிகள். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தனித்தனியாக பதில் தருகிறேன். விடியலில் எழுந்தது அதி விரைவு அல்ல என்பதினால், வேலைகள் கூவி அழைக்கின்றன. கொஞ்சம் முடித்துக் கொண்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. இனிப்பு புராணம் இனிப்பாகவே இருந்தது.
    தங்களது இரண்டாவது மகனுக்கு எமது வாழ்த்துகளும்... பல்லாண்டு காலம் வாழ்க வளர்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      பதிவை படித்து ரசித்து அருமையான கருத்துக்கள் தந்ததற்கு மனமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் என மனமகிழ்வுடன், மனம் நிறைந்த நன்றிகளும். என் மகனிடமும் தங்கள் வாழ்த்தை கூறி விடுகிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. இரண்டாவது மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... வாழ்க வளத்துடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து, என் இளைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் என் மனமகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான வலிமை வாய்ந்த பதிவு. அப்போதிருந்த மனத்திடம் இப்போது உள்ளதா
    என்றால் சந்தேகமே.
    உங்கள் இளைய மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.
    தங்கள் மருமகள் செய்த வெல்லச் சீடை மிக அருமை.

    என்றும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் கூறியதற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி

      தங்களது கருத்துக்கள் என் எழுதும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கிறது.

      என் மகனுக்கு தாங்கள் மனமுவந்து தந்த வாழ்த்துகளுக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

      மருமகள் செய்த சீடையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள். அவர்களிடமும், தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் . தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மீண்டும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அருமையான மலரும் நினைவுகள். சொன்னவிதம் மிக அருமை.
    மகன் பிறக்கும் முன் "இனிப்பு எடு கொண்டாடு" என்று பிறந்து விட்டார் எல்லோருக்கும் இனிமையை கொடுக்க.
    உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
    மருமகள் செய்த வெல்லச் சீடை மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த அருமையான கருத்துக்களுக்கு என் மனம் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      மகன் பிறக்கும் முன் "இனிப்பு எடு கொண்டாடு" என்று பிறந்து விட்டார் எல்லோருக்கும் இனிமையை கொடுக்க.

      ஆமாம் சகோதரி. அந்த விளம்பரம் மாதிரிதான் என் வாழ்விலும் அமைந்து விட்டது. வரும் போதே ஸ்வீட்டுடன் வந்து இனிமையான எண்ணங்களை தந்த படி பிறந்து விட்டார்.

      என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் என் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்
      அவரிடமும். மருமகளிடம். தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.

      மருமகள் செய்த வெல்லச்சீடை நன்றாக உள்ளதென்றதற்கு என் உளமார்ந்த நன்றிகள் சகோதரி தாங்கள் வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. வணக்கம் சகோதர சகோதரிகளே

    இந்தப் பதிவுக்கு வந்து பதிலளித்து என் மகனுக்கு வாழ்த்துகள் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள். 🙏. காலையில் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொன்ன எனக்கு இன்று முழுவதும் வெளியே செல்லும் வேலைகள் வந்து விட்டதினால் யாருக்கும் பதிலளிக்க முடியவில்லை.எனவே நாளை அனைவருக்கும் பதில் தருகிறேன். தயவு செய்து அனைவரும் என்னை மன்னிக்கவும். பத்து மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வந்தேன். எல்லோருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துக்களை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஆஆவ்வ்வ்வ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... பின்பு வருகிறேன்... மொத்தமாக படிக்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க.. வாங்க.. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      மெதுவா வாங்க.. வந்து படித்து நல்லதொரு கருத்தை தர வேண்டுகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. ஒரு படம் பார்த்த நிறைவு கமலா அக்கா😊😊😊...

    உங்க எழுத்து அப்படி இழுக்குது... நானெல்லாம் நீங்க ன்னு கண்டுபிடிக்க ல.....

    ஆனாலும் நல்ல மன உரம் 💪💪...இதற்கு நீங்கள் மட்டும் அல்ல...உங்கள் அன்பான குடும்பமே காரணம் என்பது என் எண்ணம்....

    மிக மகிழ்ச்சி...தம்பிக்கு வாழ்த்துக்களும்💐💐💐💐🍡

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து அருமையான கருத்துகளை பகிர்ந்தது மட்டுமின்றி விளக்கமாக ஒரு படம் பார்த்த நிறைவாக இருந்தது என்றது என் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

      ஆமாம் என் பிறந்த வீட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் தந்த அன்பினாலேயே அன்று என் மனம் உரமாக இருந்தது.

      தம்பிக்கு வாழ்த்துக்கள் என நீங்கள் கூறியது மகிழ்வாக உள்ளது. மனமார்ந்த நன்றிகள். உங்கள் தம்பியுடமும், இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன்.தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. ஆஹா.... எத்தனை மன உறுதி உங்களுக்கு. படிக்கும்போதே வியப்பும் ஆச்சர்யமும்.

    உங்கள் மகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - சற்றே தாமதமாக!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும் என் மகனுக்கு தந்த பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      தாமதமான வாழ்த்துக்கள் என்றில்லை. நீங்கள் என் வலைத்தளம் வந்து அன்புடன் கருத்துக்கள் தெரிவித்தமைக்கும் என மனம் மிகுந்த மகிழ்வடைகிறது. என் மகனிடமும் உங்கள் வாழ்த்தை கூறி விடுகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. Followers Widget அல்லது Follow by email வசதியைச் சேர்த்தால் உங்கள் புதிய பதிவு வெளியாகும்போது தொடர்பவர்களுக்கு வசதியாக இருக்கும். முடிந்தால் சேர்த்து விடுங்கள். உதவி தேவையெனில் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் கூறியபடி சேர்த்து விடுகிறேன். என் குழந்தைகள் உதவியுடன் முன்பு சேர்த்திருந்தேன் இப்போது அதைக் காணவில்லை. எனக்கு கணினி அறிவு கம்மி. இப்போதும் குழந்தைகளிடம் சொல்லிக் பார்க்கிறேன். தங்களிடம் தேவையெனில் உதவியை பெறுகிறேன். தாங்கள் உதவி செய்கிறேன் என்றதற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சி. நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. உங்கள் இளைய மகனுக்கு சற்று தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். படிக்க ஆரமிபித் பொழுதே உங்களின் சொந்த கதையாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. உங்களின் மனா உறுதியையும், உங்கள் தாயாரின் ஊக்கத்தையும் பாராட்டுகிறேன். 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் மகனுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறலாம். தினம்,தினம் நாம் புதிதாகத்தானே பிறக்கிறோம். படிக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கும் தெரிந்து விட்டதா? அட கடவுளே.! எனக்கும் என் அம்மாவுக்கும் தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள். தங்கள் வந்து தந்த நல்லதொரு கருத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  20. ஆஆஆவ்வ் இன்று எப்படியாவது போஸ்ட் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிட வேண்டுமென வந்தேன். இப்போதுதான் ஒழுங்காகப் படிச்சேன்ன்.. பிறந்தநாள் கமலாக்காவுக்கு என நினைச்சே அவசரமாக வாழ்த்தைப் போட்டுவிட்டு ஓடினேன் ஹா ஹா ஹா பிறந்தநாள் மகனுக்கோ?..

    மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் சுவீட் செய்த கதைபோல அவர் வாழ்வில் எப்பவும் இனிப்பு.. இனிமை பொங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை முழுமையாக படித்து என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். மதங்கள் வாழ்த்தை என் மகனிடமும் தெரிவித்து விடுகிறேன்.

      நீங்கள் பதிவை படிக்காமல் அவசரப்பட்டு ஓடினீர்கள். அதற்கு நேர்மாறாக நானும் அவசரமேயில்லாமல் தாமதமாகத்தான் பதில் தர வேண்டியதாய் போயிற்று. ஹா. ஹா. ஹா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. ///இந்த அவள் வேறு யாருமல்ல.. சாட்சாத் நானேதான்....//

    ம்ஹூம்ம்.. சொல்லாட்டில் அதிரா கண்டு பிடிக்க மாட்டேனாக்கும் ஹா ஹா ஹா.. ஆரம்பமே ஊகித்துக் கொண்டேன்..

    அழகிய நினைவுகள், இருப்பினும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி, குழந்தை கிடைக்கப் போகிறது எனில் மனதில் வேறு எந்த நினைவும் எழாது, ஆனால் உங்களுக்கு எப்படிப் பிறக்குமோ.. எப்படியிருக்குமோ வலிக்குமோ என்ற பயமெல்லாம் இல்லாமல் சுவீட் செய்யோணும் எனக் கங்கணம் கட்டி இருந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அக்காலம் போல இக்காலம் இல்லை, குழந்தை பிறப்பதென்பது கணவன் மற்றும் பெற்றோர் என இருக்கிறது, ஆனா ஊரிகளில் இப்பவும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எனில் இப்படி எல்லோரும் சேர்ந்து அமளிப்படுவார்கள்.. படிக்க இனிமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் ஆரம்பத்திலேயே ஊகித்து விட்டீர்களா? நான்தான் திறமையுடன் எழுதுவதாக நினைத்து வடிகட்டிய முட்டாளாக்கி இருக்கிறேனா..ஹா.ஹா. ஹா.

      எனக்குள்ளும் அந்த பயங்கள் நிறைய இருந்தது. ஆனாலும், முதல் நாள் மனதில் நினைத்ததை முடிக்காமல், அன்று சென்றிருந்தால், (மருத்துவமனைக்குத்தான்) இன்று வரை வருத்தங்கள் மட்டுந்தான் மிகுந்திருக்கும். இன்றைய பெண்கள் எல்லாவற்றிலும் கோலோச்சி திறமையுடன் ஜெயித்து வருகிறார்கள். அவர்களுக்கு முன் இந்த தைரியம் ஒரு தூசி போன்றது. ஏதோ இத்தனை காலம் என் மகனின் பிறந்த நாள்தோறும் இந்த நினைவும் வந்து கொண்டேயிருக்கும். இந்த தடவை வலை உறவுகளுக்கும் அதை பகிர்ந்து கொண்டுள்ளேன். நீங்கள் அனைவருமே படித்து ரசித்து கருத்துக்கள் தந்தது அன்றைய நாளின் மகிழ்ச்சியை விட பன்மடங்கு சந்தோஷத்தை தருகிறது.

      அந்த காலத்தில் உறவுகளின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. அந்த மாதிரி இப்போது எவருமே நினைப்பதில்லை. என் வழி தனி வழி என்றுதான் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கத்தான் பிரியபடுகிறார்கள். பதிவை குறித்த உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
      உங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  22. அது வெல்ல சீடையோ.. அப்போ இனிப்புப் பதார்த்தம், எனக்குப் பார்க்க மரக்கறி கட்லட் என நினைச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவா... வெல்லச் சீடையைத் தெரியாதவர்களும் இந்த உலகத்தில் இருப்பார்கள். ஆனால் அந்த அருமையான சீடையை, மரக்கறி கட்லெட் என்று நினைப்பவர்கள் ஈரேழு பதினாலு லோகங்களிலும் ஒருவர்தான் உண்டு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. ஹா ஹா ஹா ஒருவேளை அதுக்கு நம் நாட்டில் வேறு பெயர் இருக்குமோ தெரியவில்லை நெ தமிழன், எனக்கு வெல்ல சீடை சத்தியமாக தெரியாது... பார்க்க அச்சு அசலாக பொரிச்செடுத்த கட்லெட் போலவே இருக்குது அது.. ஹா ஹா ஹா..

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      அது வெல்லச்சீடைதான். உப்புச்சீடை மாதிரி வறுத்தெடுத்த அரிசி மாவில் சிறிதளவு ஏலக்காய் பொடித்து, ஒரு கரண்டி எள்ளு சேர்த்து தேவையான வெல்லப்பாகு கலந்து உருண்டை பிடித்து எண்ணெயில் போட்டு எடுத்தால் வெல்லச்சீடை ரெடி... இந்த சீடைகள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானவை. கிருஷ்ண ஜெயந்திக்கு நிவேத்தியங்களில் இந்த பலகாரங்கள் இல்லாமல் இருப்பதே இல்லை. உங்களுக்கு கட்லெட் மாதிரி தெரிந்து விட்டது. போலும்.. வெல்லம் சேர்ப்பதால் இந்த சீடைகள் இந்த கலரில்தான் இருக்கும். கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  23. கமலாக்கா உடல் நலம்தானே? ஏன் இவ்ளோ பிஸியோ?:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் அன்புடன் விசாரித்தமைக்கும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் நலமாகத்தான் உள்ளேன். என் கைப்பேசிக்கு அவ்வப்போது சற்று ஓய்வு தருகிறேன். நேற்றெல்லாம் அதை டைப்பிங் செய்து செய்து துன்புறுத்தினேன். அது நான் நேற்று அடித்த கமெண்ட்ஸை அடிக்கடி முழுங்கி ஸ்வாகா பண்ணி விட்டு ஸ்விட்ச் ஆஃப்பும் ஆகி விட்டது. அதனால், அதை கவனமாக கையாளுகிறேன். வேறு ஒன்றுமில்லை. தங்கள் கருத்துகளுக்கு நன்றி தெரிவித்து பதிலளிக்கத்தான் வந்து கொண்டிருந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  24. கதை (அனுபவம்அருமை.)

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் “மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்” பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      விபரம் அறிந்து கொண்டேன். தங்கள் பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் . தங்கள் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் சிறந்த முறையிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  25. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள். மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    மருமகளின் வெல்ல சீடையும் சுவை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது ஊக்கந்தரும் கருத்துரைகள் என்னுள் மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. தங்கள் பாராட்டுகளுக்கும், என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி. மருமகள் செய்த வெல்லச்சீடையை மனமாற பாராட்டியதற்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி. அவர்களுக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர்களும் மிகவும் சந்தோஷமடைவார்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete