பூரியும், பீட்ரூட் கூட்டும்.
முதலில் பூரி செய்வது எப்படி? என நான் விளக்கிக் கூறலாம் என நினைத்து வார்த்தைகளை தயார் செய்தபடி ஆரம்பிக்கும் போது, தீடிரென என்னைச்சுற்றி நிறைய பூரிக்கட்டைகள் பாய்ந்து பாய்ந்து அடிக்க வருவது போல் என் கண்களுக்கு தெரிந்தன. ஒரு வேளை மன பிரமையாக இருக்கலாம்.. இல்லை பூரிக்கட்டையை கழுவி துடைத்து, அதை வைத்து பத்து பதினைந்து பூரிகளுக்கு மேலாக உருட்டி, பூரிகளை ரெடி செய்து, அவைகளை கைப் பேசியில் சிறைப்பிடிப்பு செய்து என அந்த "உருட்டுக் கட்டைகளுடன்" இதுவரை சௌஜன்யமாக உறவாடியதில், அது கோபமடைந்து ஒரு "வில்ல"
மனப்பான்மையைை பெற்று விட்டதோ என அதை அன்புடன் பார்த்த போதும், அவைகள் சீற்றமுடன் தன் உருட்டும் விழியைக் கொண்டு, உறுமிக் கொண்டபடியே என்னை நோக்கி உருண்டு வர ஆரம்பித்தது.
அவசரமாக அவைகளை தடுத்து, 🤗 நிறுத்தி விசாரித்ததில், "எங்களை பயன்படுத்தி நீ நினைப்பதை விட அழகான பூரி செய்து, பூரிப்படைந்தவர்கள் இதுவரை உலகில் கோடி பேர் இருக்கிறார்கள். இதிலே நீ வேறு எங்களை வைத்து பிரபலம் தேட போகிறாயா?" எனகோபமாக சீறிப் பாய்ந்தது. அதிலே ஒருசில கனத்த பூரிக்கட்டைகள் "அது மட்டுமா? எங்களால் பல பேருக்கு அடிகள் வேறு விழுந்துள்ளன. அந்த விபரமெல்லாம் உனக்கும் அரசல் புரசலாக "மதுரை வாழ் தமிழர்களால்" தெரிந்திருக்கும்....! இல்லையென்றால், இப்போது ஒரு தடவை உன் தலையில் அடித்து நினைவூட்டவா?" என மிரட்டவும், "தலை த(உ)ப்புவது(ம்) இந்த தம்பிரான்களின் புண்ணியந்தான்.. " என்ற அவசர யோசனையில்," நான் எடுத்த உங்களின் படங்களை மட்டும் பகிர்ந்து விடுகிறேன். மற்றபடி நான் செய்த செய்முறை விளக்கமெல்லாம், என் செல்லிருப்பதை, செயலிலும் காட்டாது செயலிழந்து போகச் செய்து விடுகிறேன். "என்று வாக்குறுதி தந்ததும்," தலையில் அடித்துச்சொல்..." என்ற அதன் மிரட்டலுக்கு அதன் தலையை தேடி அடிக்கச் சென்றதும், "எங்கள் தலையில் அல்ல.. உன் தலையில்...." என்ற மறுபடி சீறிய வார்த்தை மிரட்டலுக்கு அடிபணிந்து அதை மெதுவாக பிடித்து என் தலையில் லேசாக வலிக்காமல் அ(இ)டித்துக் கொண்டதும், அத்தனை பூரிக்கட்டைகளும் கண்ணெதிரே நிமிடத்தில் மாயமாயின.
" அப்பாடா..! நிம்மதியா இருக்கு..! இனி படத்தை தவிர்த்து பூரி வந்து பிறந்த கதை யெல்லாம் உன்னால் அளக்க முடியுமோ?" என வந்த ஏகப்பட்ட மகிழ்ச்சி குரல்களுக்கிடையே..... (அட. ! அதில் உங்களனைவரின் குரலும் சேர்ந்து கேட்கிறதே. .) பூரி படங்களை மட்டும் பகிர்கிறேன்.
"அதற்காக படங்கள் எப்போதும் போல் இரண்டா? அநியாயமாக இருக்கிறதே..! என மறுபடியும் பூரிகட்டையின் உதவியை நாடி ஓடி விடாதீர்கள்.." இவை ஒன்று பார்த்தாலே ஒன்று இலவசம்" என்ற கணக்கை சார்ந்தவைகள். ஹா ஹா. ஹா.
நாம் அதற்குள் "இப்படி பேசி, பேசியே ரூட்டை மறந்து போகும் இவங்களை என்ன செய்தால் பரவாயில்லை.." என்ற முணுமுணுப்புடன், தன் ரூட்டை மாற்றப் போகும் எண்ணம் கொண்ட பீட்ரூட்டின் கோபத்தை சமாதான படுத்தலாமா ?
நன்கு கழுவி சுத்தப்படுத்திய ஒரு நான்கைந்து பீட்ரூட்டையும், அதே மாதிரி ந. க. சு. ப...ய உ. கி. (ஆமாம்.. கோவப்பட்டு ரூட் மாறி போக நினைத்த பீட்ரூட்டுக்கு கிடைத்த விவரணை நமக்கும் சொன்னால் என்னவாம்..! நாம் அப்போதே பிடித்து இவர்களுக்காக இங்கேயே ரூட்டெல்லாம் மாற்ற நினைக்காது "உருண்டு" கிடக்கிறோம் என உ. கி நொடித்துக் கொள்ள.... "நாமிருவரும் ஒரே மாதிரி மண்ணுக்குள்ளிருந்து பிறந்தாலும், அதுதான் உன் பெயர் "உருளைக்கிழங்கு." ஆனால் "என் ரூட்டே தனி..!" பெயரிலும், கலரிலும் என்னை "பீட்" அடிக்க முடியாது.." என பெருமையடித்துக் கொண்டது பீட் ரூட். ) நான்கையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கூடவே அதன் மேல் தட்டில் பா. பருப்பு பாதி டம்ளர் எடுத்து கழுவி, ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.
வெந்ததை எடுத்து நன்கு ஆறியதும், காய்களை ஒன்றிரண்டாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டு அத்துடன் பா. பருப்பு மசித்து கடாயில் கொதிக்க விடவும்.
ஒரு மூடி தேங்காய், ஐந்தாறு மி. வத்தல் (அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி கூடக்குறைய எடுத்துக் கொள்ளலாம் ) எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை இலைகள் (நான்கு ஆர்க்கு) சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் கொதிக்க விடவும்.
அது கொதித்துக் கொண்டிருக்கையில், அடுப்பை சிம்மில் வைத்தபடி, நான்கு பெல்லாரி வெங்காயம் பொடிதாக அரியவும். ஒரு கடாயில், கடுகு, உ. ப ஒரு பெரிய ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்து அதனுடன் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி அந்த கூட்டில் போட்டு ஒரு கொதி வந்ததும், கொஞ்சம் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், வெங்காயம் சேர்க்கும் போதே அரை ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட்டால் கெட்டியாகி சூடான பூரியுடன் தொட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
தோலுடன் குக்கரில் வைத்து வேக வைத்த பீட்ரூட் .
அதைப் போன்று வேக வைத்த உ. கிழங்கு.
அரிந்த வெங்காயம்..
வறுக்க தயாரான சாமான்கள்.
வேக வைத்த காய்கள் மஞ்சள் தூள் சேர்த்து இனி "உன் ரூட், என் ரூட்" எனப் பிரித்து பேச முடியாது எனப் புரிந்தபடி அடக்கமாக ஒற்றுமை தத்துவத்தை உணர்த்தியபடி சேர்ந்து இருக்கும் காட்சி..
அரைபட்ட விழுது.
வேக வைத்த பருப்பு வழித்தடங்கள் மாறாமல். பீட்ரூட் கூட்டணியுடன் இணைந்து விட தயாராக இருக்கிறது. ..
அரிந்த வெங்காயமும், வதங்கி கூட்டுடன் கலந்து தயாராகி...
இனி பூரியுடன் ஐக்கியமாவோம் என்ற பூரிப்புடன்...
அனைத்தும் ஒன்று கலந்து தன் மேலே அழகுக்காக ஒன்றிரண்டாக சேர்க்கப்பட்ட கறிவேப்பிலையுடன் காட்சியளிக்கிறது.
இனி என்ன..! பூரி கட்டைகளை தேடாமல், பூரிப்புடன், ரூட்மாறி விடுவேன் என பயமுறுத்தினாலும், மாறாமல் சமர்த்தாக வந்து கூட்டாக சேர்ந்து இருக்கும் கூட்டின் உதவியுடன் இந்த பூரிகளை அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கலாமே ...!
இவ்வளவு நேரம் பொறுமையாக பூரி, கூட்டின் கதை கேட்டு (எல்லோரும் பெரும்பான்மையாக இந்த பக்குவங்கள் அறிந்ததுதான்...! இருப்பினும் அரைத்த மாவாக இதை என் பதிவிலும்.... ) அதை எடுத்துக் கொண்ட உங்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. இனி இந்த தயாரிப்பு 👌இருக்கிறது என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன்.