அருள் மிகும் நெல்லையப்பர்.
ஓம் நமசிவாய...
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
இன்றைய தேரோட்ட நிகழ்வு.
நெல்லையப்பர் ஸ்தல வரலாறு, தன் பக்தருக்காக நெல்வேலி அமைத்து நெல்லையப்பர் பெயர் வர காரணமாக ஈசன் நடத்திய திருவிளையாடல்கள் என அனைத்துமே நாம் அனைவருமே அறிந்ததுதான்.
இன்று நெல்லையப்பர் ஆனி தேரோட்ட விழா அமர்க்களமாக நடந்துள்ளது. இன்று இருக்கும் இடத்திலிருந்து தேராட்ட விழாவை கண்டு ரசித்த போதும், சிறு வயதில் தேரோட்டத்திற்கு சென்று ஓடும் தேரையும், நெல்லையப்பரையும், காந்திமதி தாயாரையும் சேவித்தது மலரும் நினைவுகளாக மலர்கிறது. அதன் பின் எத்தனையோ முறை நெல்லை சென்ற போதெல்லாம் அம்மையப்பன் தரிசனம் கண்டிருந்தாலும், தேரோடும் நேரத்தில் நான் அங்கு ஓடாத நேரங்கள் வருத்தத்தை தந்துள்ளது.
சென்ற வருடம் தேர்த் திருவிழா முடிந்த ஒரு வார காலத்திற்குள் சில வேலைகளுக்காக நாங்கள் நெல்லை பயணம் செல்ல வேண்டிய "நிலை." அப்போது கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த போது, கோவில் வாசலில் ஓடிக் களைத்திருந்தாலும் "நிலை" வந்து சேர்ந்த பெருமையுடன், என்றும் "நிலையான" புகழுடன் நின்றிருந்த தேரையும் அதன் அழகையும் கண்டு வணங்கி வந்தேன். அந்த நினைவுகள் இன்றும் மனதில் மணம் வீசும் பூக்களாக பூத்தன.
அன்று எடுத்த சில புகைப்படங்கள்...
இன்று ஒரு வருடங்கள் கழித்து இன்று நெல்லையப்பர், காந்திமதி அருளினால் என பதிவை அலங்கரிக்கின்றன.
கண்டுகந்த அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றிகளும். 🙏.

அழகிய படங்கள் எங்களையும் கண்டு ரசிக்க வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteதொடர்ந்து பதிவு எழுதிக் கொண்டு வரவும் சகோ.
வணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் முதலில்,வந்த வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அழகிய படங்கள் என ரசித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் ஊக்கமிகும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
எனக்குத்தான் அனைவருக்கும் பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக நன்றி சகோதரி கமலா.
ReplyDeleteஉங்களுக்கும் நெல்லையா.
எத்தனை அழகாக இருக்கிறது நெல்லைத்தேர்.
காந்திமதி அம்மை உங்களை அழைத்தது போல என்னையும் அழைத்தால் நன்றாக இருக்கும்.
கோவிலும் பிரகாரமும் மிகச் சுத்தமாகப்
பராமரிக்கப் படுகிறது என்று நம்புகிறேன்.
பார்வைக்கு அத்தனை அருமையாக இருக்கிறது.
வணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் சகோதரி என் பிறந்து வளர்ந்த ஊர் நெல்லைதான்.
தேர் அழகாக உள்ளதென கூறியமைக்கு நன்றி சகோதரி. காந்திமதி அம்மை தங்களுக்கும் அருள் தந்து விரைவில் தன் கோவிலை காண வைப்பார்.
ஒவ்வொரு பிரகாரங்களும் மிகப் பெரிது. கோவிலும் மிகப் பெரிது. அருமையாக உள்ளதென கூறியமைக்கு நன்றி.
என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
காலை வணக்கம் கமலா அக்கா..
ReplyDeleteநெல்லை காந்திமதி அம்மன் கோவில் இதுவரையிலும் நான் பார்த்ததில்லை. நல்ல பெரிய கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கவேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது.
நமச்சிவாய வாழ்க என்று நீங்கள் போட்டிருக்கும் வரிகள் சொல்லமங்கலம் சகோதரிகள் பாடிய சிவபுராணம் பாடலை என் மனதில் ஓடவிடுகின்றன - அவர் குரலில்.
படங்கள் யாவும் பார்த்துமகிழ்ந்தேன். விரைவில் நேரிலும் சென்று தரிசிக்க வேண்டும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் நெல்லை கோவில் பெரிய கோவில்தான். 850 அடி நீளமும்,756 அடி அகலமும் உடையது. தாங்களும் சென்று பார்க்க இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
படங்கள் நன்றாக இருப்பதென சொன்னதற்கு மிக்க நன்றி. ஆனால் என்னை பொறுத்த வரை என் கைபேசியில் எடுக்கப்பட்டவை அன்றைய தினம் சுமாராகத்தான் வந்துள்ளன. அதுவும் மாலை ஆறு மணிக்கு அவசரமாக சென்றோம். காலையில் சென்று நிதானமாக பார்த்திருந்தால் படங்களும் நன்றாக வந்திருக்கும்.
அதற்கும் நேரம் அமைய வேண்டு்மே .!
கருத்துக்கு நன்றி. என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லையப்பர் கோவில் படமும், தேர் படங்களும் அழகு.
ReplyDeleteநெல்லையப்பர், காந்திமதி அருளால் எல்லா நலங்களும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.
//நிலை" வந்து சேர்ந்த பெருமையுடன், என்றும் "நிலையான" புகழுடன் நின்றிருந்த தேரையும் அதன் அழகையும் கண்டு வணங்கி வந்தேன். அந்த நினைவுகள் இன்றும் மனதில் மணம் வீசும் பூக்களாக பூத்தன.//
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
முடிந்த போது பதிவு எழுதுங்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நெல்லையப்பர் கோவில் படங்களும், தேரின் படங்களும் நன்றாக உள்ளதென கூறியமைக்கு நன்றி.
தாங்கள் எடுக்கும் கோவில் புகைப்படங்கள், அழகான சமணர் மலைகள் என அத்தனைக்கும் முன் என் கைபேசியில் அவசரமாக எடுத்த இந்த படங்கள் வெகு சாதாரணமானவை. அன்று அவசரமாக கோவில் பார்க்கச் சென்றதில் சரியாக எடுக்கவில்லை. உடன் பகிரவும் இயலவில்லை. நேற்றைய தோரோட்டத்திற்கும் விபரமாக
ஏதும் எழுத தோன்றாததில், இந்தப் படங்களை பகிர்ந்தேன். ஆனால், தங்கள் நல்ல மனத்தால் அம்மையப்பன் அருள் கிடைக்கட்டும் என வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி.
பாராட்டிற்கும், ஊக்க மிகுந்த வார்த்தைகளுக்கும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பதிவுக்கு நன்றி. நெல்லையப்பர் தேரோட்டமும் தேரில் வீற்றிருக்கும் நெல்லையப்பரையும் கண்ணாரக் கண்டோம். எல்லாத் தொலைக்காட்சிகளும் புண்ணியம் கட்டிக் கொண்டன. படங்கள் எல்லாமும் அருமையாக வந்திருக்கின்றன. மிக அழகாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் தேரோட்டம் குறித்தும் தேர் குறித்தும் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டியதாய் போயிற்று. போன வருடம் தேர் திருவிழா முடிந்த ஒரு வாரத்துக்குள் தி.லி க்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது. அதன் நினைவுகள் பதிவாய் உருப் பெற்றது.
பாராட்க்கு நன்றி சகோதரி. என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லையப்பர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து தாங்கள் கருத்துரை தருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தங்களை போன்ற பதிவர்கள் எனக்கு ஊக்கமனிப்பது என் எழுத்தை சீராக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி.
என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான காட்சிகள் ...
ReplyDeleteஓடி களைத்த தேரின் காட்சிகள் எங்கும் காண இயலாது ...அற்புதம்
8வது படம் மிக அழகு ...
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
தேர் படங்களை ரசித்தமைக்கும், முழுத்தேரின் படத்தை குறிப்பிட்டு மிக நன்றாக உள்ளதென கூறியமைக்கும் என் மனம நிறைந்த நன்றிகள்.
சற்று தாமதமாக பதில் தந்ததற்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
என் பதிவுகளுக்கு, தொடர்ந்து வந்து ஆதரவு தருவதற்கும், படங்கள் அருமையென பாராட்டியமைக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.
தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றன. அதுவும் அந்த பிராகாரம் வாவ்! நான் பல முறை சென்றிருக்கிறேன் நெல்லையப்பர் கோயில் மிகவும் பெரிய கோயில். ஆனால் படங்கள் எடுத்ததில்லை. அப்போதெல்லாம் கேமராவும் இல்லை மொபைலும் இல்லை..
ReplyDeleteஅங்கு சிற்பங்கள் வெகு அழகாக இருக்கும். பிராகாரத்துக்கு முந்தைய படமும் அழகு...ரொம்பவே...ரசித்தோம் கமலாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நீங்களும் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
உண்மையிலேயே அந்த நீளமான பெரிய பிரகாரம் வந்ததுமே மனதுள் ஒரு சந்தோஷம் பிறக்கும். அன்று படம் எடுக்கும் போது இரவு ஆகி விட்டதால் மக்கள் யாரையும் காணோம்.
அங்குள்ள தூண்களில் சிற்பங்கள் ஒவ்வொன்றையும் பல முறை ரசித்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் பார்க்கும் போதும் புதிதாகவே தோன்றும். கோவில் பெரிய கோவில். அப்போதெல்லாம் ஏது கேமரா? இந்த தடவைதான் கோவிலுக்கு சென்றதில் கைப்பேசியில் எடுத்துள்ளேன்.எடுத்தது ஒரு சந்தோஸந்தான். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.
கொஞ்சம் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான கோயில் உலா.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அருமையான கோவில் உலா என பாராட்டியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கள் என் எழுத்தை செம்மையாக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களும் பகிர்வும் அருமை. தேர் கம்பீரமாக உள்ளது. சிறுவயதில் தேரோட்டம் பார்த்ததே. பிறகு அதற்கென செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.
ReplyDeleteநெல்லையப்பர் கோவில் படங்களைப் பல வருடங்களுக்கு முன் என் சிறிய கேமராவில் பதிவாக்கிப் பகிர்ந்த நினைவுக்கு வருகிறது.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாங்களும் நெல்லையா சகோதரி?
தாங்கள் முதன் முதலில் என் தளத்திற்கு வந்து அருள்மிகும் நெல்லையப்பர் அம்மை காந்திமதி தேரோட்ட படங்களைப்பார்த்து கருத்து தெரிவித்திருப்பது என்னை பெருமையுடன் மகிழ்வும் கொள்ளச் செய்தது. தங்களைப் போன்ற பதிவர்களின் வருகையால் என் எழுத்துக்கள் சிறப்புறும் என நம்புகிறேன். இந்த படங்களும் என் கைப்பேசியில் எடுத்ததுதான். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லையப்பர் கோவில் ஒரே ஒரு முறை சென்றதுண்டு. உங்கள் வழி தேர் படங்களும் காண முடிந்தது. மகிழ்ச்சி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்படியா? நெல்லையப்பரை ஒருமுறை தரிசித்து உள்ளீர்களா? நெல்லையில் தேரோடும் சமயத்திலும் அங்கு சென்று தாங்கள் தரிசிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தேர் படங்களை கண்டு ரசித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.